Monday, August 9, 2010

ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் நடைமுறை குறிப்புகள் 1. மனித வள நிர்வாகம்

உங்க வயசு பசங்களுக்கு அட்வைசும் புடிக்காது, அத சொல்ரவங்களையும் புடிக்காது. இது அட்வைஸ் இல்ல, அக்கறை
- பாலகுமாரன்
(நாவல் அல்ல, திரைப்படம் !!
எந்த படம் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு பாராட்டுக்கள்
)


ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக பணியில் சேரும் மருத்துவ அலுவலர்களுக்கான மனித வள நிர்வாகம் குறித்து (Human Resources Management or simply Man Management) சில அறிவுரைகள்
  1. மருத்துவ அலுவலரே தான் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைவர் - the boss of the PHC.
  2. புற நோயாளி சிகிச்சை மட்டும் பார்த்தால் போதாது. அங்கு பணிபுரியும் அனைவரும் தத்தமது வேலைகளை ஒழுங்காக செய்கிறார்களா என்பதையும் அவர் கண்காணிக்க வேண்டும்
  3. மருத்துவ அலுவலருக்கு இரு கடமைகள் 1. மருத்துவர் 2. அலுவலர். உங்களுக்கு மருத்துவர் பணி தவிர அலுவலர் பணியும் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள தவறாதீர்கள்
  4. உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் செய்வதற்கும் செய்யாததற்கும் நீங்கள் தான் பொறுப்பு. உங்கள் மேலதிகாரிகள் உங்களைத்தான் கேட்பார்கள்
  5. நீங்கள் உங்கள் கீழ் பணிபுரிபவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். ஆனால் நீங்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில் நீங்கள் முடிவெடுங்கள். உங்கள் பணியாளர்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில் தலையிடாதீர்கள்.
  6. நீங்கள் அமர்ந்திருப்பது மருத்துவ அலுவலரின் நாற்காலியில் தானே தவிர துனை இயக்குனரின் நாற்காலியிலோ அல்லது மருந்தாளுனரின் நாற்காலியிலோ அல்ல என்பதை நீங்கள் மறக்காதீர்கள்
  7. உங்கள் பணி உங்களுக்கு அரசிடம் இருந்து / இயக்குனரிடமிருந்து / துனை இயக்குனரிடமிருந்து வரும் உத்தரவுகளை நிறைவேற்றுவது. அது தொடர்பாக உங்கள் கீழுள்ளவர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்பதை கண்காணிப்பது
  8. உங்கள் பணியாளர்களின் ஆலோசனைகளை / வேண்டுகோள்களை / உத்தரவுகளை !! அப்படியே நிறைவேற்ற வேண்டுமென்பதில்லை
  9. நீங்கள் செய்ய வேண்டிய செயல் ஒன்றில் நீங்கள் உங்கள் பணியாளர்களின் அறிவுரைகளின் படி செயல்பட்டால் கூட நீங்கள் செய்ய வேண்டிய அந்த செயலுக்கு முழு பொறுப்பும் நீங்கள் தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்
  10. இதை மறுமுறை வாசித்து கொள்ளுங்கள்
  11. ஆரம்ப சுகாதார நிலையத்தில் அண்ணா / அக்கா / தங்கச்சி போன்ற பாசமலர் உறவுகளை தவிர்ப்பது அனைவருக்கும் நல்லது (உங்கள் கல்லூரி காலங்களில் இது போன்ற பாசமலர்கள் எங்கு சென்று முடிந்தது என்பது தெரியும் தானே !!)
  12. ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் தேவையில்லாத பாச பரிமாற்றங்களினால் உங்களுக்கும் பிரச்சனை, மற்றவர்களுக்கும் பிரச்சனையே
  13. யாரையும் முழுவதும் நம்ப வேண்டாம். யாரையும் முழுவதும் உதாசீனப்படுத்த வேண்டாம்
  14. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் (எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு)
  15. நீங்கள் அதிகாரி என்பதால் குற்றம் கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை.
  16. யாராவது ஏதாவது தவறு செய்திருந்தாலும் பொது இடத்தில் வைத்து அதை சுட்டிக்காட்டாதீர்கள். மற்றவர்கள் முன் நீங்கள் ஹீரோவாக வேண்டும் என்பதற்காக அடுத்தவரின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்
  17. பணியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட நேரும் போது “இதை இப்படி செய்வதற்கு பதில் இப்படி செய்ய வேண்டும்” என்றே கூற வேண்டும் “நீ செய்தது தவறு” என்று முகத்தில் அடித்தது போல் கூறுவது நன்றன்று. உங்கள் கீழ் பணிபுரிபவர்களில் ஏறத்தாழ அனைவரும் உங்களை விட வயதில் பெரியவர்கள் என்பதை மறக்க வேண்டாம்
  18. வார ஆய்வு பதிவேட்டிலும், வார ஆய்வு கூட்ட குறிப்பு புத்தகத்திலும் தேவைப்படும் மாற்றங்களை எழுதி அனைவரிடமும் கையொப்பம் வாங்குவது எளிய வழி
  19. எதிர்பாலின ஊழியர் ஒருவருடன் அறையில் தனியாக பேச வேண்டாம். ஒன்று மூன்றாம் நபர் உடனிருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். அல்லது பொது இடத்தில் பேசவும்
  20. உங்கள் அறையில் தேவையில்லாமல் யாரும் அமர வேண்டாம்
  21. அனைவரையும் உட்கார வைத்து பேசுங்கள். நிற்க வைத்து பேச வேண்டாம்
  22. உங்கள் தனிப்பட்ட வேலைகளை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் அளிக்காதீர்கள்
  23. பிற மருத்துவ அலுவலர்களை பற்றியோ, துனை இயக்குனரை பற்றியோ யாராவது பேசினால் ஊக்குவிக்க வேண்டாம்
  24. உங்களுடம் பணிபுரியும் மருத்துவ அலுவலருடன் கருத்து வேறுபாடு என்றால் நேரடியாக பேசி சுமூக தீர்வு காண முயலுங்கள்
  25. அப்படியும் சரி வரவில்லை என்றால் சங்க நிர்வாகிகள் மூலம் பேசலாம். நீங்கள் இருவரும் ஒரே கல்லூரி என்றால் கல்லூரியில் உங்களிருவருக்கும் தெரிந்த மூத்த மருத்துவர் மூலம் தீர்வு காண முயலுங்கள்.
  26. உங்களுடம் பணிபுரியும் மருத்துவ அலுவலருடன் கருத்து வேறுபாடு பிரச்சனையை துனை இயக்குனரிடமோ, அல்லது உங்கள் கீழ் பணி புரிபவரிடமோ கொண்டு செல்ல வேண்டாம்

16 comments:

மதன் August 9, 2010 at 11:57 AM  

Oh... ivlo visayam irukkutha?
imm..useful post.

ராம்ஜி_யாஹூ August 9, 2010 at 12:23 PM  

ஜெண்டில்மான் படம், அர்ஜுன் சுபஸ்ரீ

பொன்மாறன் August 10, 2010 at 11:15 PM  

இது ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மட்டுமா? பொதுவா எல்லா அலுவலகத்துக்கும் பொருந்தி வரும் போல இருக்கே..

Bruno August 11, 2010 at 10:24 AM  

// இது ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மட்டுமா? பொதுவா எல்லா அலுவலகத்துக்கும் பொருந்தி வரும் போல இருக்கே..
//

உண்மைதான்

மனிதவள மேலாண்மை என்பது அனைத்து மேலாளர்களுக்கும் பொதுவானது தான்

சே.வேங்கடசுப்ரமணியன் August 14, 2010 at 9:27 AM  

கூடுதலாக சில குறிப்புகள்.
1.பணிக்காலத்தில் முழுமையாக பணியில் இருங்கள்.
2.ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் பகுதியிலேயே தங்கி பணிபுரியுங்கள்.
3.இரவுப் பணியில் வீட்டில் இருந்து கொண்டு அவசியம் எனில் செல்பேசியில் கூப்பிடச் சொல்லாதீர்கள்.
4.கடைநிலை ஊழியராக இருந்தாலும் அவரது இல்ல விழாக்களுக்கு முறையான அழைப்பு இருப்பின் குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள்.
5.அதிகாரம் இருக்கும் போது அடக்கமாக இருங்கள்( எப்போது வேண்டுமானாலும் பதவி பரிபோகலாம்)

புருனோ Bruno August 15, 2010 at 5:52 AM  

//கூடுதலாக சில குறிப்புகள்.
1.பணிக்காலத்தில் முழுமையாக பணியில் இருங்கள்.
2.ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் பகுதியிலேயே தங்கி பணிபுரியுங்கள்.
3.இரவுப் பணியில் வீட்டில் இருந்து கொண்டு அவசியம் எனில் செல்பேசியில் கூப்பிடச் சொல்லாதீர்கள்.
4.கடைநிலை ஊழியராக இருந்தாலும் அவரது இல்ல விழாக்களுக்கு முறையான அழைப்பு இருப்பின் குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள்.
5.அதிகாரம் இருக்கும் போது அடக்கமாக இருங்கள்( எப்போது வேண்டுமானாலும் பதவி பரிபோகலாம்)
//

நன்றி சார்

அடுத்ததாக

தடுப்பு மருந்து
நாய்க்கடி
முகாம்
பண்டகங்கள்
பணி
அலுவலக நடைமுறை
தேசிய திட்டங்கள்

என்று ஒவ்வொரு வேலைக்கும் தனி தனி இடுகைகள் வரும் !!

உங்கள் அறிவுரைகளையும் கூறவும்

சே.வேங்கடசுப்ரமணியன் August 16, 2010 at 9:15 AM  

//என்று ஒவ்வொரு வேலைக்கும் தனி தனி இடுகைகள் வரும் !!

உங்கள் அறிவுரைகளையும் கூறவும்// கண்டிப்பாக சார்.நமக்குத் தெரிந்ததை நமக்குள் கலந்து நம்மை மேம்படுத்திக் கொள்வோம்.
//தனி இடுகைகள் வரும் !!// இந்த வரிகளை ஆள்காட்டி விரலை அசைத்துக் கொண்டே நீங்கள் கூறுவது போல் எனக்குள் ஒரு பிம்பம் தோன்றி மறைகிறது..ஏதேனும் தவறாக எழுதிவிட்டேனா சார்.தவறு இருந்தால் மன்னிக்கவும்.

புருனோ Bruno August 16, 2010 at 10:27 AM  

////தனி இடுகைகள் வரும் !!// இந்த வரிகளை ஆள்காட்டி விரலை அசைத்துக் கொண்டே நீங்கள் கூறுவது போல் எனக்குள் ஒரு பிம்பம் தோன்றி மறைகிறது..//

ஹி ஹி ஹி

எந்திரன் எபெக்டு !!

தமிழ் குரல் August 16, 2010 at 11:53 AM  

தமிழ் நாட்டின் தென் கடைகோடி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் அலுவராக இருக்கும் என் நண்பர் சொன்ன செய்தி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது...

அவருக்கு கீழ் பணி புரியும் கடைநிலை ஊழியர் ஒருவர் பார்ப்பனராம்... எந்த வேலையும் செய்ய மாட்டாராம்... துணை இயக்குனர் பார்ப்பனர் என்றால் நேராக அவரிடமே பேசி... சுகாதார நிலைய அலுவலரை மதிக்க மாட்டாராம்... அந்த மனிதரின் கெட்ட நேரம்... மேல் அதிகாரிகள் பார்ப்பனர் யாரும் இல்லை... எங்கள் நண்பர் சுகாதார அலுவலர்... தோட்டத்தில் செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டும் என்பதற்கு செடிகளை எல்லாம் பிடுங்கி எறிந்து விடுவாராம் ஊழியர்... கடைசியில் அலுவலர் செடிகளை போட்டோ எடுத்து வைத்து... ஊழியரிடம் காட்டி வேலை வாங்கி வருவதாக சொன்னார்...

Mahi_Granny August 16, 2010 at 12:14 PM  

எழுதுங்க எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்

drnrkmd September 10, 2011 at 6:03 AM  

i think it is from the movie <"boyz">

drnrkmd September 10, 2011 at 6:11 AM  

UNMAIYIL ANAITHU THARAPINARUKKUM UDHAVUM INDHA KOTPAADUGAL...MIGA NANDRU...

chicha.in June 4, 2012 at 12:09 AM  

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

siva counselling clinic November 7, 2013 at 7:36 AM  

Never get emotionally too much involved in work or with other workers problem.observe with clarity and decide

அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP