அந்த நாள். இப்படித்தான் அமையப் போகிறது என்று யார்தான் நினைத்துப் பார்த்திருக்க முடியும்.
ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வட்டார சு. நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. (கிராமங்களில் உள்ள மருத்துவ மனையை தமிழகத்தில் ஆ.சு.நி. என்று அழைப்பார்கள்)
சார். இங்க ஒரே கலாட்டாவா இருக்கு. கத்தி, குண்டாந்தடியோட நாலஞ்சு பேர் ஆசுபத்திரியை சுத்தி வந்து மிரட்டராங்க ஏதாச்சும் பண்ணுங்க சார்.
செவிலியர் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார்,
மீண்டும் முயற்சி செய்ததில் லைன் கிடைக்கவில்லை. கைபேசிகளும் எடுக்க வில்லை. வட்டார சுகாதார மேற்பார்வையாளரையும்., அந்த பகுதியில் அதிகமாக இருக்கும் சமுதாயத்தைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளரையும் கூட்டிக் கொண்டு ஜீப் பில் கிளம்பினார் வட்டார மருத்துவ அலுவலர்.
செல்லும்வழியில் மீண்டும் ஒரு அழைப்பு.
என்னம்மா.. பிரச்சனை...?
சார்.. பத்தாங்கிளாஸ் படிக்கற பொண்ணு விஷம் சாப்பிட்டிருச்சு சார்.. அதுக்கு நாமதான் காரணம்னு சொல்லிட்டு எல்லாம் கத்தி கட்டையோடு வந்திருக்காணுக சார்.
என்னடா இது வம்பா போச்சு. யார் என்னடா பண்ணுனது? சும்மா ஓ.பி. டோக்கன் போட லேட் ஆனாலே தட்டி கட்டி வாய்கிளிய பேசற பசங்க. இப்ப எவன் என்னடா பண்ணுணீங்க
... வார்த்தைகள் சரமாரியாக வந்துகொண்டிருந்தது.
பொண்ணு எப்படிம்மா இருக்கு? பொண்ணு நல்லாஇருக்கு சார்...
அப்பா.. ஒரு தொல்லை முடிஞ்சது...................
என்ன பிரச்சனை சிஸ்டர்.. நீங்க வாங்க சார். விரிவா சொல்ரேன்.
யார் பெரிய அதிகாரின்னே தெரியல வ.ம.அ. புலம்பிக்கொண்டே பயண்த்தை தொடர்ந்தார். வழியில் தென்பட்ட காவலர் ஒருவரையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்.
ஆரம்ப சுகாதார நிலையத்தை வண்டி நெருங்கியது. சு. ஆ. சொன்னார். இவங்க எங்க ஆளுக இல்லை சார்
சரி. இன்னைக்கு டரியல்தான். முகத்தில் எதையும் காட்டாமல் வ.ம.அ.வும், வ.சு.மே.வும் உள்ளே சென்றனர். கூட்டத்தினர் அவரை நன்கு அடையாளம் கண்டுகொண்டனர். பின்னே அவர்தானே கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகைக்கு கையெழுத்து இடுகிறார்.
சார். வாங்க சார்.. உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம்.
இது என்னடா.. நாம வர்ரது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிட்டு வந்தோம்.
குழந்தை எப்படிங்க இருக்கு.
புள்ளைக்கு ஒன்னும் இல்லீங்க. இந்த டாக்டர் பண்ணுனது தான் சரியில்லைங்க.....
ஒரு நிமிஷம் இருங்க நான் பாப்பாவை பார்த்திட்டு வந்து விடுகிறேன்.சன்னமாக கூட்டத்தை ஒதுக்கிவிட்டு உள்நோயாளியைப் பார்க்கப் போனார்.
நோயாளியிடம்
என்னம்மா சாப்பிட்ட.
உடனே செவிலியர் குறுக்கிட்டு
சார் புள்ள ஒண்ணுமே சாப்புடுல.. பத்தாங்கிளாஸ் பரீட்சை எழுத ஸ்கூல்ல விட மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம், அதுனாலே வீட்ல திட்டியிருக்காங்க...
என்ன இந்த டாக்டர் பண்ணிணார், தேர்வுக்கு அனுமதிக்க மறுக்கும் அளவுக்கு
வ.ம.அ. குழம்பியபடியே அந்தப் பெண்ணைப் பார்த்தார்.
அந்தப் பெண்
சார், எங்கப்பாகிட்ட போனவாரமே சொன்னேன், அவர் கண்டு கொள்ளவே இல்லை. இப்ப தேர்வுக்கு அனுப்ப முடியாதுன்னு சொன்னபிறகு அடிக்க ஆரம்பிச்சார், அதுதான் விஷம் சாப்பிடலாம்னு எடுத்தேன் தட்டி விட்டுவிட்டு இங்கே கூட்டிடு வந்து இவ்வளவு ரகளை,
பத்தாம்வகுப்பு மாணவி ரொம்ப தெளிவாக பேசினார்.
என்ன என்னமோ பிரச்சனைகளை மனதில் போட்டு குழம்பிய வ.ம.அ.
அங்கிருந்த மருத்துவரின் அறைக்குச் சென்றார். யாருமே சரியான செய்திகளை கொடுக்காத சூழ்நிலையில் அவர் பெரிய கற்பனைகளை கொண்டிருந்ததாலும் அதனை பொது இடத்தில் கேட்க தயங்கினார்.
நேராக மருத்துவரின் அறைக்கு அவர் சென்றபிறகு
என்னப்பா பண்ணின...
மருத்துவர் வாயை திறக்க .... கதவைத் திறந்து கொண்டு கூட்டம் உள்ளே நுழைந்தது. காவலர் இருந்ததால் ஓரளவு சமாளிக்க முடிந்தது என்றே சொல்லலாம்.
பெண்ணின் அப்பா. பேச ஆரம்பித்தார்.
சார் நேத்தே வந்தேனுங்க. இந்த ஆளு (மருத்துவர்தான்) தொரத்தி விட்டுட்டாரு. அதுனாலதாங்க நாம்பெத்தபச்ச மண்ணு இன்னைக்கு இப்படி நிக்குது.
இங்க பாருங்க இப்படியெல்லாம் பேசுனா.. வேலைக்கு ஆகாது ரெண்டுபேர் மட்டும் வாங்க பேசிமுடிவு பண்ணுவோம். காவலரின் உதவி மிகவும் உதவிகரமாக இருந்தது.
இப்போது அறையில் மருத்துவர், வ.ம.அ, வ.சு.மே, காவலர். ஊர்காரர்கள் ரெண்டுபேர்,
மருத்துவர் சொன்னார்.
சார் இவங்க சொல்றதெல்லாம் நாம கேட்க முடியுமா சார்... நீங்கதான சொன்னீங்க்..
எதையோ தூக்கி தந்தலையில் பழிபோட்டாலும் மருத்துவர் தைரியமாக பேசியது அவர் ஏதும் தப்பு செய்யவில்லை என்பதைக் காட்டியதால் வ.மருத்துவர் சற்று தைரியம் அடைந்தார்.
என்ன பிரச்சனை முதல் இருந்து சொல்லுப்பா...
சார் இவங்க பொண்ணு போன இரெண்டு மாசமா ஸ்கூலுக்கு போகல.. ஸ்கூல்ல் மருத்துவ விடுப்பு மட்டும்தான் தர முடியும் அப்படின்னு சொல்லீட்டாங்க
இவர் வந்து என்னிடம் மருத்துவ சான்றிதழ் கேட்டார். நோயாளியையே பார்க்காத நான் எப்படி மருத்துவ சான்றிதழ் கொடுக்க முடியும்
. மருத்துவர் சொல்லி முடித்ததும்
பாருங்க சார் நீங்க சொல்லியும் இந்த பையன் (டாக்டர்தான்) கேட்க மாட்டேங்கறத. இல்லாத ஏழைபாழைகளுக்கு தான சார் ஆசுபத்திரி கட்டி வைச்சிருக்காங்க. இவன் என்புள்ள படிப்பையே கெடுத்துருவான் போல இருக்கே
இப்ப கையெழுத்து போடல.. வகுந்துடுவொம். நீங்க இருக்கீங்கலேன்னு பாக்கறேன்.
ஏ
ம்ப்பா உம்புள்ள பள்ளிக் கூடம் போகில...
அதெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க. இப்ப கையெழுத்து போட முடியுமா? முடியாதா?( மருத்துவ சான்றிதழைத்தான் அப்படிக்கேட்கிறார்) இல்லாத பட்டவன்னு நினைக்காதீங்க.. கலெக்டர் வரைக்கும் கொண்டு போயிருவேன்
இல்லப்பா, கையெழுத்து போடறதுக்கு முன்னாடி என்ன ஏதுண்ணு எழுதனுமில்ல அதுக்குத்தான் கேட்கறது....
அப்படி வாங்க வழிக்கு. இதோட அக்கா குழந்தை எடுத்திருந்ததுங்க அதுக்கு கூடமாட வேலை ஒத்தாசை பண்ணிட்டு இருந்ததுங்க.. பிரசவம் கூட இங்கதாங்க ஆச்சு. அதோ அந்த ரூமுலதான்..
இங்க பாருப்பா.. அக்கா குழந்தை எடுத்ததுக்கெல்லாம் தங்கச்சிக்கு லீவு தரமுடியாதுப்பா...
ஏங்க நான் என்ன உங்களையா லீவு கேக்கறேன்.. லீவு வாத்தியார் தரேனுட்டார்ங்க். நீங்க கையெழுத்து போட்டா போதும்ங்க.
மருத்துவமனை ஊழியர்கள் இமை திறக்காமல் நின்று கொண்டிருந்த போது காவலர்தான் உதவி செய்தார்.
இங்க பாருங்கப்பா... பாய்சன் சாப்பிட்டது போலீஸ் கேசு.. நாளைக்கு ஸ்டேசன் வந்துரு.. ஆஸ்பத்திரிக்குள்ள கத்தி கட்டையோட நின்னுட்டு இருந்திருக்க ஆஸ்பத்திரி ஆட்கள் போட்டோ எடுத்திட்டாங்க.. நீ பேசாமல் எடத்த காலிபண்ணிடு . இல்லேண்ணா உனக்கு உம்புள்ளைக்கு எல்லாருக்கும் ஜெயில்தான். ஏதாவது ரகளை பண்ணினே எப்ப பண்ணுனாலும் உனக்கு பிரச்சனைதான்...
ஒருவழியாய் ......... சுபம்
Read more...