..... Patients, Problems, Routine Practices, Stories, Gossips, Camps, Campaigns, Outbreaks, Innovations and what not !!! ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்
Thursday, December 25, 2008
சார். .. குளுக்கோஸ் போடுங்க....
புலிப் பாண்டி நேராக மருத்துவர் அறைக்குச் சென்றார். அவர் வரிசையில் எல்லாம் நிற்கவில்லை. நேராகச் சென்றார். வழிவிடுவதற்கு யாரும் தயாராக இல்லாத சூழ்நிலையிலும் தடுக்கவும் யாரும் தயாராக இல்லை. அவருக்குப் பின்னால் அவரது நண்பர் குலாமும் வந்து சேர்ந்தது. மருத்துவரைப் பார்த்ததும் அந்தக் கேள்வியைக் கேட்டார்.
சார், குளுக்கோஸ் போடுங்க...
சரி போட்டுடுவோம் இது மருத்துவர்,
குடுங்க சார், சீட்டை எனக்கு நேரமாச்சு, இது புலிப் பாண்டி
நோயாளியக் காட்டுங்க . ஓ.பி, சீட்டு பதிவு பண்ணிட்டு வாங்க, மீண்டும் மருத்துவர்.
டாக்டர் அவசரம் புரியாம பேசாதீங்க, எனக்கு நெறைய வேலை இருக்கு.
மருத்துவர் சற்று எரிச்சல் அடைந்தார்.
அப்ப வேலையை முடிச்சிட்டு வாங்க,
வரும்போது நோயாளியக் கூட்டிட்டு வாங்க்..........
புலிப் பாண்டி அதற்குமேல் கோபம் அடைந்தார்.
சார், எனக்குத்தான் குளுக்கோஸ் போடனும்..
நல்லத்தான இருக்கீங்க.....
என்ன டாக்டர், நக்கலா... நல்லாயிருக்கரவங்க ஆஸ்பத்திரிக்கு வருவாங்க.. எனக்குத்தான் உடம்பு சரியில்லை...
அப்படியா உங்களுக்கு என்ன?
பக்கத்தில் இருக்கும் பாதுகாவலர் [உள்ளூர் பாஷையில் அல்லக்கை] அதுதான் அண்ணன் உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டே இருக்காருல்ல.. மொதல்ல குளுக்கோஸ் போடு சாரு...
மருத்துவருக்கு ஓரளவு நிலைமை புரிந்து விட்டது. இப்போதைய தேவை ஒரு குளுக்கோஸ் அதற்காக கதை அளக்கத் தொடங்கிவிட்டனர்.
உடம்பு முடியல அப்படின்னா.. உங்களுக்கு என்ன கஷ்டம் அதை சொல்லுங்க...
டாகடர், சீக்கிரம் அனுப்புங்க எனக்கு டைம் ஆச்சு...
குளுக்கோஸ் எல்லாம் போடமுடியாதுங்க.. அது ரொம்ப முடியாதவங்களுக்கு போடறது, நீங்க நல்லாத்தானே இருக்கீங்க.. இது மருத்துவர்.
டாக்டர் அண்ணன் ரொம்ப சோர்வா இருக்காஅர், அதுக்கு ஒரு குளுக்கோஸ் போடுங்க.. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், நாங்க முடியாமத்தான் வந்திருக்கோம் சீக்கிரம் போடுங்க...
மருத்துவரின் மூளை வேகமாக வேலை செய்கிறது, [பின்னே.. அவருக்கு தடயவியல் மருத்துவத்திலும் சேர்த்துத்தானே படிக்கச் சொல்லி பயிர்ச்சி அளித்து அனுப்பி இருக்கிறார்கள்]
இந்தாங்க.. போய் ரத்த டெஸ்ட் எடுத்திட்டு வாங்க..
டாக்டர். அந்த டெஸ்ட் நான் மூணு மாசத்துக்கு ஒருமுறை பண்ணிட்டேதான் இருக்கிறேன். இப்ப அவசரத்துக்கு ப் பருங்கள்
அது எச்,ஐ,வி, டெஸ்ட் டுப்பா. இப்ப செய்யறது சர்க்கரை இருக்கான்னு பார்க்குற டெஸ்ட்.
டாக்டர், உங்களுக்கு மூளை கீளை அவிஞ்சு போச்சா... என் வயசுக்கு சர்க்கரை எல்லாம் எப்படி வரும். நீங்க பாட்டுக்கு ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்லரீங்க.
அதுக்குத்தான் இந்த பரிசோதனையே.. உங்களோட சோர்வுக்கு அது கூட காரணமாய் இருக்கலாம்.
டாக்டர் எனக்கு வேலை அதிகம், அதுனாலதான் சோர்வு, எனக்கு ஒரு குளுக்கோஸ் போடுங்க.
அப்படியெல்லாம் போடமுடியாது. நீங்க பரிசோதனை செய்து வந்தால் மட்டுமே அதனடிப்படையில் குளுக்கோஸ் போடமுடியும். மருத்துவர் திட்டவட்டமாக சொல்லிவிட்டு மற்ற நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
புலிப்பாண்டி நேராக ரத்த ப்ரிசோதனைக்குப் போனார். அங்கு பணிபுரியும் ஆய்வகர் பெரிய ஊசியுடன்[அது சராசரியாக பயன்படுத்தப் படும் சாதாரண ஊசிதான்] புலிப் பாண்டியை நெருங்கினர்ர். ஊசியைப்பார்த்த புலிப் பாண்டி நாலைக்கு செய்துக் கொள்கிறேன் என்று சொல்லி தன் அவசர வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.
மறுநாள் காலை
மருத்துவர் வரும் நேரம்
சுகாதார நிலையத்தின் முன் ஒரே கூட்டம், அனைவரும் புலிப் பாண்டியின் ஆட்கள். கோபத்தில் தங்களுக்குள் காச்மூச் என்று கத்திக் கொண்டிருந்தனர்.
எல்லாம் உங்களால்தான் டாக்டர். புலிப் பாண்டிக்கு இப்படி ஆகிவிட்டது. வழக்கமாய் ரணகளமாக மாறுமே.. இவ்வளவு அமைதியாக பேசுகிறார்களே..
மருத்துவர் குழப்பத்துடன் உள்ளே சென்றார்.
உள்ளே புலிப் பாண்டி தலையில் பெரிய காயத்துடன் உட்கார்ந்திருந்தார். அந்த ஊரில் கபடிபோட்டி நடத்தியிருக்கிறார்கள். அதற்காகத்தான் புலிப்பாண்டி குளுக்கோஸ் கேட்டிருக்கிறார். குளுக்கோஸ் போடாமல் ஆடியதில் அவருக்கு மண்டை உடைந்து போனது. இன்று நிஜமாக நோயாளியாக நின்று கொண்டிருந்தார்.
பின்குறிப்பு:-
வழக்கம்போல் பச்சை நிறத்தில் இருப்பவை மருத்துவர் பேசுவது.
சிவப்பு நிறத்தில் இருப்பது பிறதிவாதி பேசுவது
Wednesday, December 10, 2008
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -3
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -1மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2மார்பகப் புற்று நோய்க்கு மருத்துவம் எது ? | |
|
அறுவை மருத்துவத்தின் வகைகள்:- ஆ. மாஸ்டெக்லொமி (Mastectomy) சாதாரண மாஸ்டெக்டமி (Simple mastectomy)
| |
மருத்துவ மனையில் என்ன நடக்கும்? | |
|
அனுமதி பெறும் நாளில்
அறுவை பெறும் நாள் அறுவை மருத்துவத்திற்கு முன்னர்
அறுவை மருத்துவத்திப் பின்னால்
அறுவை மருத்துவம் நடந்து முடிந்த 1-6 நாட்களில்
மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பும் நாள்
குறிப்பு: மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4நன்றி:- CHANGI GENERAL HOSPITAL |
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -1மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -3 | |
|
இந்தச் சிக்கல்களைச் சமாளிக்க உதவும். சில கருத்துரைகள் கீழே தரப்பட்டுள்ளன: a. யாரோடாவது பேசுங்கள் உங்கள் உணர்ச்சி காலப்போக்கில் தணியும். உங்கள் உணர்ச்சிகளை உங்களுடைய கணவர், குடும்ப உறுப்பினர் அல்லது நெருங்கிய நண்பரிடம் பேசித் தீருங்கள்.
| |
அடிக்கடி கேட்க்ப்படும் வினாக்கள் | |
|
2. எனக்கு மாஸ்டெக்டமி நடைபெற்ற பிறகு அடுத்த மார்பகத்தில் புற்று நோய் வரும் வாய்ப்புள்ளதா ? ஆமாம். அடுத்தடுத்த நீங்கள் மருத்துவரை சந்திக்கும் போது வழக்கமான பரிசோதனைகளும், மம்மோகிரம் களும் நடத்தப்படும். மாதந்தோறும் நீங்களே சுயமாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். இரு புறங்களையும் உற்றுப் பாருங்கள். மாதத்திற்கு மாதம் ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள். 3. அறுவை நடைபெற்ற கை மரத்துப்போதலோ, வலியையோ வீக்கமோ இருப்பதை உணர்ந்தாலோ, மூன்று நாட்கள் காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலோ நானென்ன செய்ய வேண்டும் ? இயன்ற விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள். நன்றி:- CHANGI GENERAL HOSPITAL |
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2
| மார்பகப் புற்று நோயின் வகைகள்:- | |
|
1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome) 2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome) 3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
| |
| மார்பகப் புற்றுநோயின் படி நிலைகள் (stages) | |
|
1. முதல் படி நிலை:- முதல்படிநிலை என்றால் புற்று நோய் அணுக்கள் இன்னம் மார்பகத்தைத் தவிர வேறெங்கும் பரவில்லை என்றம், கட்டியின் சுற்றளவு 2,5 செ,மீட்டரைக் காட்டிலும் அதிகமில்லை என்று பொருள். 2. இரண்டாம் படி நிலை:- அக்குளின் கீழேயுள்ள நெரிக்கட்டி (நிணநீர்கட்டி) களில் புற்று நோய் பரவி விட்டது என்றம் மார்பகக் கட்டியின் சற்றளவு 2..5 செ.மீட்டரைக் கடந்து விட்டது என்றும் பொருள். 3. மூன்றாம் படி நிலை:- பொதுவாக மூன்றாம் படிநிலையை முதிர்ந்த புற்றுநோய் என்பார்கள். மார்பகக் கட்டியின் சுற்றளவு 5 செ.மீட்டரை கடந்து விட்டது என்றும் மார்பகச் சுவர் அல்லது மேல் தோலில் இதில் ஈடுபட்டுள்ளது என்றம் பொருள். இந்நிலையில் அக்குளின் கீழே உள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவி விடும். 4. நான்காம் படி நிலை:- இந்த நான்காம் படி நிலை முற்றிலும் பரவி விட்ட புற்றுநோயாகும். புற்றுநோநய் மார்பகத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களான நுரையீரல், ஈரல், மூளை, எலும்புகள் மற்ற எல்லா லிம்ப் நோட்(நெரிகட்டிகள்)கள் அனைத்திலும் பரவி விட்டது என்று பொருள். மீண்டும் வரும் புற்றுநோய் என்றால் துவக்க மருத்துவத்திற்குப் பின்னரும் மீண்டு வரும் நோயாகும். மார்பகத்தில் உள்ள கட்டி முற்றிலும் அறுத்து அகற்றப் பட்ட பின்னரும் அல்லது அழிக்கப் பட்ட பின்னரும் சில நேரங்களில் கண்டு பிடிக்க முடியாத சில சிறு புற்றுநோயணுக்கள் மருத்துவத்திற்குப் பின்னரும் உடலில் விடுபட்டு இருந்தால் அல்லது மருத்துவத்திற்கு முன்னரே புற்றுநோய் பரவி விட்டிருந்தால் புற்றுநோய் மீண்டும் வரும்.
| |
| அறுவை மருத்துவம் என்றால் என்ன? | |
|
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4 நன்றி:- CHANGI GENERAL HOSPITAL
|
Monday, December 1, 2008
Monday, November 17, 2008
HIV பற்றி சில தகவல்கள்
2. தமிழகத்தின் மொத்த மக்கள்தொகை 2002ல் 558.59 லட்சங்கள். அதில் 22,826 பேருக்கு எய்ட்ஸ் இருப்பதாக அறியப் படுகிறது.
3.ஒருவருக்கு பால் வியாதி இருந்தால் அவருக்கு எய்ட்ஸ் வருமா?
படக்காட்சிக்கு இங்கு சுட்டவும்
4. HIVஆல் பாதிக்கப்பட்ட என் நண்பனுக்கு எவ்வாறு உதவுவது?
படக்காட்சிக்கு இங்கு சுட்டவும்
5.HIV எவ்வாறு பரவுகிறது?
படக்காட்சிக்கு இங்கு சுட்டவும்
6.HIV பாதிக்கப்பட்டவருடன் நட்பாக இருப்பதால் HIV வருமா?
படக்காட்சிக்கு இங்கு சுட்டவும்
7. எய்ட்ஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் அமைப்புகள்
படக்காட்சிக்கு சுட்டவும்
8.ஒருவரைப் பார்த்த உடன் ஒருவருக்கு HIV இருப்பதை அறிய முடியுமா?
படக்காட்சிக்கு சுட்டவும்
HIV பற்றி சில தகவல்கள் ஆங்கிலத்தில் அறிய இங்கு சுட்டவும்
Sunday, November 2, 2008
மலேரியா என்றால் என்ன?
பயணிகள் மலேரியாவால் பீடிக்கப்படும் அபாயம், பெரும்பாலும் கீழ்க்கண்டவற்றின் மீது ஆதாரப்பட்டிருக்கும்.
குறிப்பிடப்பட்ட அபாயத்தன்மை. உதாரணமாக கிராமப் புறப் பயணம், இரவுநேர மறைப்பற்ற நிலை, மறைப்பு ஏற்பாடுகளற்ற குடியிருப்புகள்.
அழிப்பு மருந்தின் எதிர்ப்புச் சக்தியைப் பெற்ற மலேரியா கிருமிகள் உள்ள இடங்களில் பயணம்.
பயணமாகும் காலம் (அதிக, அல்லது குறைந்த நோய் பரப்புப் பருவம்)
குறிப்பு :ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் நகரங்கள் மலேரியா அற்ற நகரங்கள் அல்ல. கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் மலேரியா பரவுவது மிகவும் அரிது.
மலேரியாவின் நோய் அறிகுறிகள்:
தொற்று நோய் வாய்ப்பட்ட 'அனாபிளஸ்' எனும் ஒரு வகை பெண் கொசுவினால், ஒரு மனிதனைக் கடித்து அவனது இரத்தத்திற்குள் மலேரியாவை உண்டுசெய்யும் ஒட்டுண்ணியைச் செலுத்தும்போது அவனுக்கு மலேரியா நோய் உண்டாகிறது. நான்கு வகை மலேரியா ஒட்டுண்ணிகள் மனிதனுக்குள் மலேரியாவைப் பரப்பவல்லது. (பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபரும், பி. விவாக்ஸ், பி.ஒவேல் மற்றும் பி. மலேரியா) பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபரும் உண்டாக்கும் தொற்று நோய் மிக வேகமாகப் பரவி உயிருக்கே ஊறு விளைவிக்கும். ஃபால்ஸ்பரும் மலேரியாவால் பீடிக்கப்படும் நோயாளிகளில் ஏறத்தாழ 1 %-2% மக்கள் மரணமடைகின்றனர்.
மலேரியாவின் நோய்அறிகுறிகள்:-காய்ச்சல், குளிர் எடுத்தல் , வியர்த்துக் கொட்டுதல், தசை வலிகள், தலைவலி, சில நேரங்களில் வாந்தியும் பேதியுமாதல் ஃபால்ஸிபரும் மலேரியா நோயாளிகளுக்குச் சிறு நீரகம் செயலிழத்தல், வலிப்பு, உணர்ச் சி இழந்த ஆழ்ந்தஉறக்க நிலை(கோமா) ஏற்படக்கூடும். பி. விவாக்ஸ், பி. ஒவேல் நோய்க் கிருமிகள் ஈரலில் (Liver) பல மாதங்கள், ஆண்டுகள் செயலற்று இருக்க வல்லவை. இதனால் பல மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நோய் அறிகுறிகள் மீண்டும் ஏற்படக்கூடும்.
கொசு கடிப்புக்கும், மலேரியா நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடையே பொதுவாக 7-முதல் 21 நாட்கள் இடைவெளி இருக்கும். ஆனால் முழுமையான, தேவையான அளவு மலேரியா தடுப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாத பயணிகளில் இந்தக் கால இடைவெளி இன்னும் சற்று அதிகமாக இருக்கும்.
மலேரியா உள்ள இடங்களில் பயணம் செய்யும் போதும், பயணம் செய்த பின்னரும் ஒரு பயணிக்குக் காய்ச்சல் வந்தால் அதற்குக் காரணம் மலேரியாதானா? என்று தெரிந்துகொள்ள உடனே மருத்துவ உதவியை நாடவேண்டும். மலேரியா ஒட்டுண்ணிகள் உள்ளனவா? என்று ஆராய்ந்து பார்க்க இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மலேரியாவின் தடுப்பு முறைகள்:
கொசுக்களைத் தடுக்கும் ஏற்பாடுகளையும், மலேரியாவைத் தடுக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்வதின் மூலம் பயணிகள் மலேரியாவிலிருந்து தங்களைச் காப்பற்றிக் கொள்ள இயலும்.
1. கொசுக்கடியைத் தவிர்த்தல்: மாலை, இரவு நேரங்களில் மறைப்பற்று இருந்து அனாபிளஸ் பெண் கொசுக்களின் கடிக்கு உட்படாத முயற்சிகளும், செயல்பாடுகளும் மலேரியா வருவதைத் தடை செய்ய வல்ல சிறந்த வழிபாடுகளாகும்.
கீழ்க்கண்ட முறைகள் சொசுக்கடியிலிருந்து நம்மைத் தடுக்கவல்லன:
இரவு நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் நீண்ட, கைகளுள்ள ஆடைகளையும், பெரிய முழுகாற் சட்டையையும் அணிதல் வேண்டும்.
வெளியே தென்படும் தோலின் மீது கொசுக்களை விரட்டியடிக்கவல்ல மருந்துகளை தடவிக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய அறை காற்று வறையருக்கப்பட்டதாக இல்லாதிருப்பினும் தக்க தடுப்பு வசதியற்றதாக இல்லாதிருப்பினும், உங்கள் படுக்கையைச் சுற்றிலும் கொசு வலையைப் பயன் படுத்த வேண்டும். கூடுதல் பாதுகாப்பிற்காக பெர்மித்ரின் எனும் பூச்சிக் கொல்லி மருந்தைக்கொசு வலையின்மீது பூசவேண்டும்.
பெர்மித்ரின் அல்லது அதுபோன்ற பூச்சிகொல்லி மருந்தை உங்கள் வீட்டின் பெரிய முகப்பு அறை அல்லது படுக்கும் அறையில் தெளிக்கலாம். அல்லது 'பைரித்ரம்' வெளிப்படுத்தும் கொசுவத்தியை ஏற்றி வைக்கலாம்.
2. மலேரியாதடுப்பு மருந்துகளைப் பயண்படுத்துதல்:
மலேரியா உள்ள பகுதிகளுக்குப் பயணம் செல்ல நேரிடும் பயணிகள் புறப்படுவதற்கு முன்னர் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். அத்தகையபயணிகளுக்கு மலேரியா தடுப்பு மருந்துகள் வழக்கமாகப் பரிந்துரைக்கப் படும். தேவையான பாதுகாப்பு அளவை உறுதிப்படுத்த பயணம் செய்யும் சரியான வழியைத் (route)தெரிந்து கொள்ளது மிகவும் இன்றியமையாததாகும்.
செம்மையான நோய்தடுப்புக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்து அளவையையும், உண்ண வேண்டிய காலத்தையும் கண்டிப்பாகப் பின்பற்றுவது மிகவும் இன்றியமையாததாகும்.
ஒவ்வொரு வாரமும் அதே குறிப்பிட்டகிழமைகளில் அல்லது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
உணவுக்குப் பின்னர் மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டும்.
பயணம் மேற்கொள்வதற்கு 1-2 வாரங்களுக்கு முன்பும் பயணம் மேற்கொள்ளும் சமயத்திலும், மலேரியா பீடித்துள்ள பகுதிகளில் பயணம் செய்து முடித்த பின் 4 வாரங்கள் வரையிலும் பரிந்துரைக்கப்பட்ட அளவு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
வீடு திரும்பிய உடனே மாத்திரைகளை உட்கொள்வதை நிறுத்திவிடக்கூடாது. முழு அளவு மருந்துகளையும் உண்டு முடிப்பது இன்றியமையாததாகும்.
மலேரியா தடுப்பு மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள்: எல்லா மருந்துகளுமே பக்க விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. லேசான குமட்டல், அவ்வப்போது வாந்தி, தலைச்சுற்றல் முதலிய காரணங்களைக் கொண்டு மலேரியா தடுப்பு மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தி விடக்கூடாது. மலேரியாவின் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள தற்காலிக பக்கவிளைவுகளைப் பொறுத்துதான் தீர வேண்டும். எனினும் பக்க விளைவுகள் மிகவும் அதிகமாக ஏற்பட்டால், உடனடியாக மருத்துவர் உதவியை நாட வேண்டும். மலேரியா தடுப்பு மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தி விட வேண்டும்
டெங்கு (Dengue) என்றால் என்ன ?
டெங்கு என்பது கொசுக்களால் உண்டாகும் ஒரு வகை நச்சுத் தன்மை சார்பான (Viral)நோயாகும். டெங்கு காய்ச்சல் இளஞ்சிறார்களையும், பெரிய குழுந்தைகளையும், பெரியவர்களையும் தாக்கும் ஒரு கடுமையான, 'ப்ளூ காய்ச்சல்'போன்ற நோயாகும். அரிதாக இது மரணத்தை உண்டு பண்ணும். 'டெங்கு'இரண்டு கொடிய வகைகளாவன:(1) டெங்கு ஹேமோர்ரஜிக் காய்ச்சல் (Dengue haemorrhagic Fever - DHF)(2) டெங்கு ஷாக் ஸிண்ட்ரோம் (Dengue Shock Syndrome - DSS).
இது எவ்வாறு பரவுகிறது ?
இந்த டெங்கு 'வைரஸ்' ஸானது ஏடெஸ் (Aedes) எனும் பெண் கொசுக்களின் கடியால் மனிதர்களில் பரவுகிறது. இந்தக் கொசுக்கள் தொற்று நோயால் பீடிக்கப்பட்ட மனிதனின் இரத்தத்தை உறிஞ்சுவதின் மூலம் இந்த வைரஸ்களைப் பொதுவாகப் பெறுகிறது. அவற்றால் பாதிக்கப்பட்டதும் அந்தக் கொசு தனது மீதி வாழ் நாள் முழுவதும் அந்த 'வைரஸ்' களை மற்ற, மனிதர்களுக்குப் பரப்ப வல்லது. இந்த டெங்குவைரஸ், தாக்கப்பட்ட மனிதனின் இரத்ததில் 3-4 நாட்கள் (பெதுவாக 4-6 நாட்கள்) சுற்றி வரும். அந்த மனிதன் உடனே, இனம் புரியாத நோயறிகுறிகளுடன் கூடிய, கடுமையான காய்ச்சலால் தாக்கப்பட்ட உணர்வினைப் பெறுவான்.
டெங்கு நோய் அறிகுறிகள் என்னென்ன ?
டெங்கு காய்ச்சலின் அடையாளங்களும் நோயின் அறிகுறிகளும், நோயாளியின் வயதுக்கேற்ப வேறுபடும். .
இளஞ்சிறார்கள், குழந்தைகள் :
இளஞ்சிறார்களுக்கும், சற்றுப்பெரிய குழந்தைகளுக்கு காய்ச்சலும் சூடு கட்டிகளும் உண்டாகும்.
பரிய குழந்தைகள், பெரியவர்கள் :
பெரிய குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் லேசான காய்ச்சலோ அல்லது திடீரென கடுமையான அதிக காய்ச்சலோ ஏற்படும். தீவிர தலைவலி, கண்களுக்குக் கீழே வலி, கைகால் மூட்டுக்களிலும், தசையிலும் வலி சலிப்பு, சூடுகட்டிகள் உண்டாகும்.
டெங்கு ஹோமோர்ரஜிக் காய்ச்சல் மற்றும் டெங்கு ஷாக் ஸிண்ட் ரோம் இடையே வேறுபாடுகள்.
டெங்குஹோமோர்ரஜிக் பீவர் (DHF)மற்றும் டெங்கு ஷாக் ஸிண்ட்ரோம் (DSS) இரண்டுக்குமே, இனந்தெரியாத அடையாளங்களும் நோயறிகுறிகளுடன் திடீர் கடுங் காய்ச்சல் வந்து 2-7 நாட்கள் வரை இருப்பது தனிச் சிறப்பாகும். 'டெங்' கின் கடுமையான காலகட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கும் DHF/DSS க்கும் பிற நச்சத்
தன்மை சார்ந்த நோய்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளைப் பிரித்துப் பார்ப்பது கடினம். உடல் வெப்ப நிலை வழக்கமாக இருப்பதைக் காட்டிலும் குறைந்து போகும் நிலைக்கு 24 மணி நேரத்திற்கு முன்பும் 24 மணி நேரத்திற்குப் பிறகும் இடையேயுள்ள காலகட்டத்தில் DHF/DSSஇன் நெருக்கடி நிலை அடிக்கடி ஏற்படும்.
DHF-நோயறிகுறிகள்
காய்ச்சல்
தீவிர தலைவலி
கண்களுககுக் கீழே வலி
கைகால் மூட்டுவலி மற்றும் உடலில் வலி
குமட்டல், வாந்தி
தோல் வெடிப்புகள், சூடுகட்டிகள் பெரும்பாலும் நோயுற்ற 2-6 நாட்களுக் கிடையே தோன்றும்.
சாதாரணமாக இந்த நோயாளிகள் ஏழு நாட்கள் வரை நோயுற்று இருப்பார்கள். அதன் பின்னர் பல வாரங்கள் மிகவும் பலவீனமாக இருப்பார்கள். நோயுற்ற 2-8 நாட்களுக்கிடையே இரத்த அணுக்களின்எண்ணிக்கை 1,00,000/mm3 க்கும் குறைவாகக் காணப்படும். DHF காய்ச்சல், இருமல், தலைவலி, வாந்தி, வயிற்று வலி முதலியவற்றை உண்டு பண்ணும். இவை 2-4 நாட்கள் இருக்கும். இரத்த உறைவுச் சிக்கல் ஏற்பட்டு உள்ளூர ரத்தக் கசிவும் மரணமும் ஏற்படக்கூடும். DHF குணப்படுத்தா விட்டால் அது DSS--க மாறக்கூடும்.
தீவிர DHF அல்லது DSS மற்றும் காயச்சலும், இனம் காணமுடியாத அடையாளங்களும் நோயறிகுறிகளும் சில நாட்கள் உள்ள நோயாளியின் நிலைமை திடீரென்று படு மோசமடையும். நோயாளி முதலில் சோர்வாகக்காணப்பட்டு பின்னர் அமைதி குன்றி, வேகமாக, அதிர்ச்சியான மிக நெருக்கடி நிலையை அடையலாம். வழக்கமான, அதற்கும் குறைவாக உடல் வெப்ப நிலை வீழ்ந்து விடுவதைத் தொடர்ந்த 24 மணி நேரத்திற்குள் அடிக்கடி DHF/DSS - யின் நெருக்கடி நிலை ஏற்படலாம். இரத்தக் குழாய்களிலிருந்து இரத்த வெளிப்பாடு ஏற்படும். இரத்த ஒட்டம் நின்று விடுவதற்கான அறிகுறிகள் தோன்றக்கூடும். தோலுக்கு அடியில் இரத்தம் கசிவதும், (petechiae) மற்றும் தோலின்மேல் ஊதா நிறப் புள்ளிகள் தோன்றும் purpura எனும் நோயும் உண்டாகும் பல்லீறு களிலிருந்து இரத்தம் கசிவதும், மூக்கிலிருந்தும் அடிவயிற்றுக் குடல் குழாயிலும் இரத்தம் ஒழுகுவதும், மாத விடாய் பெருகுவதும் உட்பட்ட இரத்தக் குழாய்களிலிருந்து இரத்த வெளிப்பாடு சாதாரணமாக நிகழும். அதிர்ச்சியின் கடுந்தாக்குதலுக்குச் சற்று முன்னர் அவர்கள் அடிக்கடி கடும் வயிற்று வலியை அனுபவிப்பார்கள்.
ஆழ்ந்த மறைவு (வீஸீநீuதீணீtவீஷீஸீ) நிலை : (கொசுக்கடிக்கும் நோயறிகுறி கடுந்தாக்கம் காலத்திற்கும் இடைப்பட்டகாலம்)
டெங்கு ஹேமோர்ரிஜிக் காய்ச்சலின் ஆழ்ந்த துயில் நிலை/மறைவு நிலை 3-14
நாட்கள் வரை இருக்கும். சராசரி ஆழ்ந்த மறைவு காலம் 4-6 நாட்களாகும்.
நோயுற்ற மனிதன் ஒருவன், நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னரே வைரஸ்களைப் பிறருக்குப் பரப்ப இயலுமா ?
டெங்கு வைரஸ்கள் பரப்ப முடியாதவை ஆதலால் ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவனிடம் இவை பரவாது.
இது டெங்கு காய்ச்சல் தானா என்று எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது ?
டெங்கு வைரஸ்களைப் பிரித்தாய்ந்தும், நோயாளியின் நிணநீரில் உள்ள நோய் எதிர்ப்புப் பொருளைக் கண்டு பிடித்தும், பரிசோதனை சாலையில் டெங்கு தொற்று நோய் நோயுறுதி செய்யப்படுகிறது. நோய் எதிர்ப்புப் பொருளைப் பரிசோதிக்க, தேவையான இரத்தத்தை, தீவிர நோயறிகுறிகள் தோன்றிய உடனே, கூடிய விரைவில் அந்த நோயாளியிடமிருந்து எடுக்க வேண்டும். தேவையானால் இந்தப் பரிசோதனையை 2-3 வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் செய்ய வேண்டும். நிணநிரின் ஒரே மாதிரியின் (Sample)ஆதாரப்பட்ட பல்வேறு துரித பரிதோதனை கருவிப் பெட்டிகள் (Kit) வணிக அளவில் கிடைத்தபோதிலும் அவை மரபு வழி நிணநீர் பரிசோதனையைக் காட்டிலும் குறைந்த ஏற்பை உடையன போலும்.
டெங்கு காய்ச்சலுக்கு எத்தகைய மருத்துவம் கிடைக்கிறது ?
டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்த நச்சு நுண்ம எதிர்ப்பு (anti viral) மருந்து ஏதுமில்லை பெரும்பாலும் நோயறிகுறிகளை அடக்குவதின் மூலமும் தீவிர DHF மற்றும் DSS இவற்றால் தோன்றும் சிக்கல்களைத் தீர்ப்பதின் மூலமும் மருத்துவம் செய்யப்படுகிறது. இரத்த அணுக்களின் (Platelets) எண்ணிக்கையைத் தினமும் கூர்ந்து கவனித்து எச்சரிக்கை செய்வதை ஆதாரப்பட்டு முன்கூட்டிய செயலாட்சி இருக்கும். இதனால் தேவையானால் நோயாளிக்கு நிண நீர் மாற்றமும் இரத்த அணுக்களை ஏற்றுதலும் இயலும்.
உங்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக நினைத்தால், உடனே ஒரு மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். அல்லது உங்களுக்கு அருகாமையிலிருக்கும் மருத்துவ மனையிலுள்ள விபத்து மற்றும் நெருக்கடி (A & E)துறைக்குச் செல்லுங்கள். நோயறிகுறிகளை துவக்கத்திலேயே கண்டு கொண்டு மருத்துவம் செய்துகொள்ளுவது உயிரைக்காப்பாற்ற வல்லது.
மருத்துவர் டெங்கு ஹேமோர்ரஜிக் காயச்சல் இருப்பதாக ஐயுற்றால், நீங்கள் மருத்துவ மனையில் சேர்த்துக்கொள்ள படுவீர்கள். உங்களுடைய இரத்த அழுத்தமும், இரத்த அளவும் கூர்ந்து கவனித்து எச்சரிக்கை விடப்படும்.
நோயறிகுறிகள் கடுமையாகத் தோன்றிய பின்னர் தொற்று நோயாக எவ்வளவு காலம் பிடிக்கும் ?
நேரடி தொடர்பின் மூலம் ஒரு நோயுற்ற மனிதன் பிறர்க்கு நோயைப் பரப்ப மாட்டான். எனினும் டெங்கு காய்ச்சலின் துவக்க கால கட்டத்தில் நோயுற்ற மனிதனை ஒரு கொசு கடித்தால், அக்கொசு தொற்று நோயுற்ற அடுத்த மனிதனை கடிக்கும்போது டெங்கு வைரஸ்களை அவனுக்குப் பரப்புகிறது.
ஏற்கனவே ' டெங்கு ' தொற்று நோயால் பீடிக்கப்பட்டவனுக்கு மீண்டும் அது திரும்ப வரக் கூடுமா ?
டெங்கு வைரஸ§க்கு நான்கு மரபுக்கூறுகள் (Strains) உள்ளன. ஒரு மரபுக்கூறின் பீடிப்பு மற்ற மரபுக்கூறு களுக்கு எதிராக நீண்டகாலம் பாதுகாப்பைத் தரமாட்டாது. ஒரு மரபுக்கூறினால் ஏற்கனவே பீடிக்கப்பட்டவர்களுக்கு DHF/DSS வரக்கூடிய அபாயம் அதிகம் உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் :
நான் எவ்வாறு டெங்குவால் பீடிக்கப்படுவதைத் தவிர்க்க இயலும்?
ஏடெஸ் கொசுவால் கடிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்வதுதான் டெங்கு வராமல் தவிர்க்கும் சிறந்த வழியாகும். வீட்டினுள்ளும் வீட்டைச் சுற்றிலும் டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் வாழ்ந்து வளருகின்றன. எங்கெல்லாம் நீர் நிலையாகக் தேங்கி நிற்கிறதோ அங்கெல்லாம் இக்கொசுக்கள் உற்பத்தியாகின்றன. உதாரனம்:சிறு கொள்கலங்கள், பூந்தொட்டிகள்.
இவ்வைரஸ்களால் பீடிக்கப்பட்டுள்ள வெளி நாட்டவர்களாலும் டெங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. டெங்கு-நோயால் பீடிக்கப்பட்ட நாடுகளிலிருந்து நாடு திரும்பும் மக்களும் இதனால் பீடிக்கப்படுவர். இத்தகைய அதிக அபாயமுள்ள பகுதிகளில் கொசுக்களால் கடிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும். காற்று வரைகாப்புடைய (Air-Condition) மற்றும் மறைப்புடைய அறைகளில் தங்குவது, வீட்டினிலுள்ள கொசுக்களை மருந்தடங்கிய புகையின் மூலம் பெரிய கொசுக்களைக் கொல்வது, பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது முதலான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது. நீங்கள் பயணம் மேற்கொள்ள உள்ள நாட்டில் ஏதேனும் தொற்று நோய் பரவிவருகிறதா ?என்பதை எப்போதும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
' டெங்கு 'வுக்கு எதிராக தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள முடியுமா ?
டெங்குவை எதிர்க்கவல்ல எந்தத் திறமையான, பாதுகாப்பான தடுப்பூசியும் இல்லை. பீடிக்கப்பட்ட கொசுக்களின் கடியினைத் தவிர்க்க, தக்க முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொள்வதே சிறந்தது. டெங்குக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிக்க தற்போது தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
நாம் எவ்வாறு ' டெங்கு ' வை தடுத்து அடக்க இயலும் ?
தங்கள் வீட்டினுள்ளும், வீட்டைச் சுற்றிலும் ஆடெத் கொசுக்கள் வளர வாய்ப்புள்ள நீர் தேங்குமிடங்களையும், தாவரங்களையும், வழக்கமான பாதுகாப்பு முறைகளைப்
பயன்படுத்திப் பாதுகாத்து, தங்கள் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள மக்களுக்குத் தொடர்ந்து நினைவூட்ட வேண்டும். நீர்த்தேங்கும் இடங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளையும், குளிகைகளையும் போட வேண்டும்
வீடுகளில் வாழ்பவர்களைக் குறைபாடுகளுடைய கூரை வடிகால்களைப் பழுதுபார்க்கவோ அல்லது அகற்றவோ செய்து அவற்றிற்கும், பூந்தொட்டிகளுக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகள் அடங்கிய வண்ணப் பூச்சைப் பூசுமாறு கருத்துரை கூறவேண்டும்.
Thursday, October 30, 2008
உடல் தானம். உடல் உறுப்புகள் தானம்
| GO No. and Date. | Abstract |
| G.O.(Ms.) No. 296 Dated: 16.9.2008 | Cadaver Transplant Program – Designation of Dr.J.Amalorpavanathan, Reader in Vascular Surgery, Madras Medical College and Vascular Surgeon, Government General Hospital, Chennai as Convenor, Cadaver Transplant Program, Tamil Nadu – Orders – Issued. |
| G.O.(Ms.) No. 289 Dated: 5.9.2008 | Health and Family Welfare Department - Non-Transplant centers - Criteria for non-transplant centers to retrieve organs from brain dead persons - Detailed instructions - Orders issued |
| G.O.(Ms.) No. 288 Dated: 5.9.2008 | Health and Family Welfare Department - Organ Transplant - Responsibilities of Transplant centers in hospitals - Detailed instructions - Orders issued. |
| G.O.(Ms.) No. 287 Dated: 5.9.2008 | Health & Family Welfare Department – Organ Transplant – Cadaver Organ Transplant Program - Procedure to be adopted for cadaver transplant by the Government and Private Hospitals approved for organ transplant by the Appropriate Authority – orders issued. |
| G.O.(Ms.) No. 175 Dated: 6.6.2008 | Health & Family Welfare Department - Organ Transplant – Authorization Committee Procedures – Additional responsibilities – Detailed instructions – orders issued. |
| G.O.(Ms.) No. 137 Dated: 5.5.2008 | Tamil Nadu Health Systems Project – Establishment of Emergency Management Services for various types of emergency cases, accident victims, etc., by Emergency Management Research Institute, Hyderabad – Orders issued. |
| G.O.(Ms.) No. 90 Dated: 17.3.2008 | Grievance Redressal System in the State Introduction of grievances redressal system in Government Hospitals - Utilizing the existing Control Room with 4 digit toll free number 1056 in the Districts - orders - Issued. |
| G.O.(Ms.) No. 75 Dated: 3.3.2008 | Brain death – Declaration of brain death made mandatory in Government Medical College Hospitals in Chennai – Procedure for declaration of brain death – orders issued. |
Wednesday, October 29, 2008
Tuesday, October 28, 2008
அரசு ஆணைகள்
சுட்டி கிராம சுகாதார நீர் மற்றும் சுகாதார குழு
நன்றி; திரு. சே.வேங்கடசுப்ரமணியம். கண்காணிப்பாளர்
Monday, October 27, 2008
நன்றி மங்கை
Sunday, October 26, 2008
தனியார் மருத்துவ முகாம்கள்
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவ நிலையங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவ னங்கள் மாவட்டத்தில் மருத் துவ முகாம்கள், தடுப்பூசி முகாம்கள் போன்ற முகாம் களை நடத்துவதற்கு முன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முறையாக விண்ணப்பித்து அவரிடமிருந்து அனுமதி பெற்ற பின்னர்தான் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என் றும் மாவட்ட ஆட்சியர் அளிக்கும் அனுமதியின் நகல் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மற்ற துணை இயக்குநருக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அரசாணை (நிலை) எண். 164 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, நாள் 31-8-2006 இல் ஆணைகள் வெளியிடப்பட் டுள்ளன.
தனியார் மருத்துவ நிலை யங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒரு மாவட்டத் திற்கு மேல் பல மாவட்டங் களில் இத்தகைய முகாம்களை நடத்த முடிவு செய்தால், அவர்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநருக்கு விண்ணப்பம் செய்து அவரிடமிருந்து முன் அனுமதி பெற்று முகாம்களை நடத்த வேண்டும் என்றும் மேற்கண்ட அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட் டுள்ளது. ஆனால் பல தன்னார் வத் தொண்டு நிறுவனங்கள் மேற்கண்ட அரசாணையின் படி மாவட்ட ஆட்சித் தலை வர், பொது சுகாதாரத் துறை இயக்குநரிடமிருந்து முன் அனுமதி பெறாமல் மருத்துவ முகாம்கள் நடத்துகிறார்கள்.
இனி வரும் காலங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த மாவட்ட ஆட்சித் தலைவரிட மிருந்தும் பல மாவட்டங்களில் முகாம்கள் நடத்த பொது சுகாதாரத்துறை இயக்குநரிட மிருந்தும் முன் அனுமதி பெற் றுத் தான் முகாம்கள் நடத் தப்பட வேண்டும். அவ் வாறு அனுமதி பெறாமல் நடத்தப் பட்டால், அத்தகைய மருத்துவ நிலையங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்
பிரசவகால துணை
இதற்கான பயிற்சி அ.ஆ.சு.நிலையத்தில் உள்ளே நுழைந்த உடனே தொடங்குகிறது. கர்ப்பிணியின் நம்பிக்கைக்குரிய பெண்தோழி ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவர் ஓரளவு எழுதுப் படிக்கத்தெரிந்தவராகவும் ஓரளவு உலக அனுபவம் படைத்தவராகவும் இருத்தல் அவசியம்.அவர் குழந்தை பெற்றவராய் இருத்தல் அவசியம். பெரும்பாலும் அக்கா, அத்தை அல்லது பக்கத்து வீட்டுப் பெண் அமைகிறார். இவருக்கு அடையளா அட்டை கூட வழங்கப்படுகிறது.
மருத்துவ அலுவலர், ச.சு.செ.,ப.சு.செ.,கி.சு.செ.மற்றும் இருப்பிட செவிலியர்களால் இந்தப் பயிற்சி வழங்கப் படுகிறது.
இது பிரசவ நேரத்தில் கர்ப்பிணியின் மன அழுத்தத்தை பெரிதும் குறைக்கிறது. ஆ.சு.நி.பணியாளர்களின் சுமையும் பெரிதும் குறைகிறது. பிரசவ அறையில் என்ன ந்டக்கிறது என்பதை தோழி உடனிருந்து பார்ப்பதால் பலவிதமான தவறான புரிதல்கள் தவிர்க்கப் படுகின்றன.
இவருக்கு பயிற்சி என்பது வீட்டில் இருப்பவர்கள் எப்படி பராமரிப்பது. என்ன உடற்பயிற்சி (வீட்டு வேலை?) செய்யலாம் எப்படி மாத்திரைகள் விழுங்குவது, அதன் பயன்கள் என்ன என்பது பற்றியும் மருத்துவர் கூறும் அறிவுரைகள் எப்படி பின்பற்றுவது என்பது, பிரசவம் பற்றிய பயம் நீக்குவது பற்றியும் அமைகிறது.
இந்த ஒரு நபர் அ.ஆ.சு.நி.யில் சிலரின் வேலை சுமையை குறைப்பதோடு, கர்ப்பிணிக்கு ஆயிரம் பேர்களின் பலத்தை கொடுக்கிறார் என்பதே உண்மை.
Wednesday, October 22, 2008
ஆத்தா, மகமாயி
லட்சுமி 15 நாட்களுக்கு முன் குழந்தை பெற்ற பெண்மணி. மொத்தமே 25 கிலோ எடை மட்டுமே இருப்பார். ரத்தக்குறைபாடு காரணமாக குழந்தை பிறந்த உடன் 2யூனிட் ரத்தம் போட்டு இப்போது தான் வீடு திரும்பியவர். அவர் ஏன் ஓடி வர வேண்டும்? அவரது அன்பான கணவனுக்கு என்ன நேர்ந்தது.
இப்போது லட்சுமியின் மயக்கம் தெளிவிக்கப் பட்டிருந்தது. லட்சுமி உச்ச ஸ்தாயில் கதற ஆரம்பித்தார்." அக்கா என் புருசனை ஒன்னும் பன்னிடாதிங்க" "உங்க காலுக்கு செருப்பா இருப்பேன். அவர விட்டுடுங்க. என் உயிர காப்பத்தின நீங்களே என் வாழ்க்கைய கெடுக்க பார்க்கறீங்களே. எஞ்சாமி ஒரு பாவமும் பண்ணலயே. இப்படி குடும்பத்த வேரருக்க பார்க்கறீங்களே. ஆத்தா உனக்கு மொட்டையடிச்சு கெடாவெட்டி பூக்குழி இறங்குறேன்" எல்லா வகையான வேண்டுதலையும் சொல்லிவிட்டு மயங்கி சாய்ந்தார் லட்சுமி.
அப்படி என்னதான் நேர்ந்தது லட்சுமியின் கணவனுக்கு. ஏன் இப்படி? அவன் லட்சுமியின் உயிரையே வைத்திருந்தான். பிரசவத்தின் போது மிகவும் கஷ்டப்பட்டு லட்சுமியைக் காப்பாற்றிய போது இவனும் செத்துதான் பிழைத்தான். அப்போதுதான் அந்தப்பகுதி சுகாதார செவிலியர் சொன்னார் "லட்சுமி இன்னொருமுறை கருத்தறித்தால் அவள் உயிருக்கு ஆபத்து. அவளுக்கு கு.க.செய்யக்கூட உடல் நிலை ஒத்துக்காது".
அ.ஆ.சு.நி.ல் உள்ள வட்டார விரிவாக்க கல்வியாளர், வ.சு. புள்ளியாளர், ப.சு.செ. கி.சு.செ., சு.ஆ. ஆகியோர் நவீன ஆண் குடும்பநல சிகிச்சை முறை பற்றிச்சொல்லி அவனை சம்மதிக்க வைத்து அழைத்துச் சென்றபோது நடந்த சம்பவம்தான் இது. லட்சுமி கண்விழித்த உடன் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தார். "லட்சுமிட்ட சொன்னா சம்மதிக்க மாட்டா, அதுனால நான் அவகிட்ட சொல்லல"வாய் திறந்தார் லட்சுமியின் கணவர்.
நடந்த சம்பவங்களில் நாங்கள் உறைந்துவிட்டோம். சில வயதான பணியாளர்கள் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டனர். லட்சுமி சம்மதித்த பின் கு.ந.சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று அவர்களை வீட்டில் விட்டுவிட்டு திரும்பினோம்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நாங்கள் எங்கள் பிரச்சாரத்தை திருமணமான பெண்களீடமே ஆரம்பிக்கிறோம். நமது பெண்கள் கணவர் வீரியம் குறைந்தவர்(ஆண்மை நிறைந்திருந்தாலும்) என்பதை ஏற்றுக் கொள்ள தயங்குவதே ஆண் கு.ந. சிகிச்சை பரவாலாவதற்கு தடையாய் இருக்கிறது என்பதும் ஒரு உண்மைதான்
பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)
பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்)
தன்னலம் அற்ற தூய மனதுடன், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் பணியை மனதார முழு அற்பணிப்போடு செய்யும் ஒரு குழந்தை வடிவத்தில் தெய்வம் .
கொஞ்சம் பெரிய பதிவு...சிரமம் பார்க்காமல் தயவு செய்து முழுவதும் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..
எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் மரணப்படுக்கையில்.. அவரைப் பார்த்துக் கொள்வது அவருடைய பத்து வயது மகள்.
சம்பந்தப் பட்ட குழந்தையின் நலன் கருதி, பெயரோ, அடையாளமோ கொடுக்கப்படவில்லை.

எத்தன நாளா அம்மா இப்படி இருக்காங்க?
ஒரு வருஷமா அம்மாக்கு உடம்பு சரியில்லை. அவங்க ஒரு ஹோட்டல்ல வேலை செய்துட்டு இருந்தாங்க. அங்க யாருடனோ ஏற்பட்ட தொடர்பால் தங்கச்சி பாப்பா பிறந்தா. அப்ப இருந்து அம்மாக்கு உடம்பு சரியில்லை. அம்மாக்கு எய்ட்ஸ் வியாதின்னு சொன்னாங்க. அம்மா ரொம்ப நாளா எங்க கிட்ட சொல்லலை...லேட்டா தான் வெளியே சொன்னாங்க.. முதல்ல எல்லாம் ரொம்ப அழுவேன். இப்ப எனக்கு தைரியம் வந்துடுச்சு. சொந்தக்காரர் ஒருத்தர் தைரியமா இருக்க சொன்னதுனால அம்மாவ நல்லா பார்த்துக்குறேன்.
அம்மாக்கு என்ன எல்லாம் நீ செய்வே.. எப்படி பார்த்துப்பே?
அம்மா உடம்ப தொடச்சி விடனும். வாயில் நீர் வழிஞ்சுட்டே இருக்கும். அதை தொடர்ந்து தொடைக்கனும். துணி மாத்தி விடனும். தினமும் படுக்கை மாற்றனும். பவுடர் போடனும். அவங்க டாய்லெட் போனா கழுவி விடனும்.
உனக்கு இது எல்லாம் செய்ய கஷ்டமா இல்லையா?
( நம் கண்களுக்குள் ஊடுறுவிப் பார்த்துட்டு)
என் அம்மாதானே, நான் தானே செய்யனும்...
அம்மாவ மட்டும் இல்லை.... தங்கச்சி பாப்பாவையும் நான் தான் பார்த்துப்பேன். அவ ரொம்ப குறும்பு ( சிரித்துக் கொண்டே).. சில சமயம் அம்மாவ கவனிச்சுட்டு இருக்கும் போது அவளை கவனிக்கலைன்னு அழுவா... கோவம் வந்துடும் அவளுக்கு..(ஹா ஹா என்று சிரிப்பு)
அப்பா?
அவர் எங்கள விட்டுட்டு போய் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டார்
அம்மா இப்படி பண்ணிட்டாங்களேன்னு உனக்கு கோவம் வந்திருக்கா?
இல்லை..ஆனா ரொம்ப வருத்தமா இருக்கு... அம்மாவ முழுவதும் குணப்படுத்த முடியலைன்னு.. எத்தன நாளைக்கு அம்மா இப்படியே இருப்பாங்கன்னு தெரியலையே..ஆனா அம்மா தான் எனக்கு விஷம் குடு விஷம் குடுன்னு கேட்டுட்டே இருப்பாங்க....நான் எப்படி குடுப்பேன்..நான் அம்மாவ நல்லா பார்த்துப்பேன்.
பேசிக்கொண்டு இருக்கும் போதே தங்கச்சிப்பாப்பா துறு துறு என்று இவள் பக்கம் தவழ்ந்து வர..அவளை அள்ளிக் கொள்கிறாள்..
குட்டிப்பாப்பாவ தூக்கணும், பார்த்துக்கணும், அதுனால உனக்கு களைப்பா இல்லையா?
(சிரித்துக்கொண்டே வெகுளியாக)..கைவலிச்சா அவள அடுத்த கைக்கு மாத்திக்குவேன்.. ஆனா அவ ரொம்ப சேட்டை..பாருங்க என் முடிய பிடிச்சு இழுக்கறா. என் கன்னத்தை கிள்ளி வச்சுட்டே இருப்பா..நேத்து என்னை பளார்னு அறஞ்சுட்டா.. ஆனா குட்டிப்பாப்பாதானே அவளுக்கு தெரியாதில்ல.. ரொம்ப குறும்பு பண்ணா, " பேசாம இரு..இல்லன்னா பேச மாட்டேன்னு சொல்லுவேனா..அப்புறம் சிரிப்பா..பேசாம இருப்பா". (குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே)
பாப்பாவ கீழ போட்டற மாட்டியே..?..நல்லா பிடிச்சுக்கோ
அதெல்லாம் போடமாட்டேன்..கெட்டியா பிடிச்சுப்பேன்..இப்படி (கெட்டியாக நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள்).
(குட்டிப்பாப்பா இந்த பத்து வயது சிறுமியை அம்மா என்று தான் அழைக்கிறாள்).
குட்டிப்பாப்பா உன்னை அம்மான்னு கூப்பிடறாளே?.. உங்க வீட்ல உங்க அம்மா, பாட்டி எல்லாம் இருக்காங்க..அவங்களையும் அம்மான்னு தான் கூப்பிடுவாளா?
இல்லை...என்னை மட்டும் தான் அம்மான்னு கூப்பிடிவா...ஏன்னு தெரியலை.. ஆனா அவ அப்படி கூப்பிடும் போது எனக்கு நல்லா இருக்கும் ... என்னை மட்டும் தான் அப்படி கூப்பிடுவா என் குட்டி (என்று மீண்டும் பாப்பாவுக்கு முத்தம் கொடுக்கிறாள்)
நீ ஸ்கூலுக்கு போறதில்லையா?
நான் ஸ்கூலுக்கு போனா அம்மாவையும், குட்டிப் பாப்பாவையும் யாரு பார்த்துப்பா?
தங்கச்சி பாப்பாவ யாராவது எடுத்து வளர்க்க முன் வந்தா நீ சரி சொல்லுவியா?
அவ நல்லா படிக்கனும்.. எனக்கு அவள நல்லா பார்த்துக்கனும்னு ஆசை.. ஆனா நான் என்ன வேலை பார்க்குறதுன்னு தெரியலை... அவ வசதியான இடத்துக்கு போனா சந்தோஷம் தான்.. ஆனா நான் எப்படி அவள விட்டுட்டு இருப்பேன்...(மிகுந்த சோகத்துடன்)
உனக்கு எய்ட்ஸ் பத்தி என்ன தெரியும்?
(கைகள் இரண்டையும் இருக்கமாக கட்டிக் கொண்டு)
ஐயோ யாருக்கும் அது வரக்கூடாது.
எய்ட்ஸ் எப்படி வருதுன்னு உனக்கு தெரியுமா?
ஆணுறை உபயோகிச்சா வராதாம்.
உனக்கு யாரு சொன்னா ?
ஒரு விளம்பரத்துல படிச்சேன்.. எச்ஐவி ல் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள ஆணுறை உபயோகிங்கள் என்று. (ம்ம்ம்.. என்ன சொல்ல)
அம்மா மாதிரி எச்ஐவியால பாதிக்கப்பட்டவங்க கிட்ட நீ என்ன சொல்லுவே?
அம்மா மாதிரி லேட்டா சொன்னா, என் மாதிரி குழந்தைங்க என்ன பண்ணுவாங்க...அதுனால தெரிஞ்ச உடனே டாக்டர் கிட்ட போனா கஷ்டப்பட வேண்டியது இல்லை...லேட்டா சொல்லி அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நம்மளால தாங்க முடியுமா?..வீட்ல இருக்குறவுங்களும் அவங்கள நல்லா பார்த்துக்கனும் ( இதை விட ஒரு சிறந்த விழிப்புணர்வு செய்தி இருக்க முடியுமா..ம்ம்ம்)
நீ ஏதாவது கேட்க விரும்பறியா?
அம்மாக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் எங்க இருப்பேன்?...என்ன பண்ண? ( மனதை பிழியவில்லை?..ம்ம்ம்)
நீ எங்க போக விரும்பறே?
தெரியலை....என்ன என்னமோ சொல்றாங்க... தனியா இருந்தா யாராவது தப்பா நடந்துப்பாங்களாம்...கடத்திட்டுப் போய் வித்துடுவாங்களாம்...ரேப் பண்ணிடுவாங்களாம். (கடவுளே!!!)
நீ சாமிய பார்த்தா என்ன கேட்பே?
எல்லாரும் எந்த நோயும் இல்லாம ஆரோக்கியமா இருக்கனும்.
உனக்காக ஒன்னும் கேட்க மாட்டியா?
கண்டிப்பா கேட்பேன்..என் அம்மாக்கு சீக்கிறம் நல்லாகனும்.. குட்டிப்பாப்பா நல்லா இருக்கனும்...( சுயநலம் இல்லாத இந்த அன்பான மனதை வணங்கத் தோன்றுகிறதல்லவா?ம்ம்)
தற்பொழுது அம்மா மருத்துவமனையில்..
அம்மாவ பார்க்க போறியா? ..நான் கூப்டுட்டு போறேன்..
அம்மாவ பார்க்கனும் போல இருக்கு.. ஆனா நான் போன அப்புறம் ஏதாவது.......................................... (குட்டிப்பாப்பாவை அனைத்துக் கொண்டு அழுகிறாள்..)
இது போல எத்தனையோ குழந்தைகள் படித்து, விளையாடி மகிழ வேண்டிய வயதில் குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.
இயலாமையை நினைத்து நினைத்துத் துவண்டு விடுகிறது என் மனம்.
நன்றி: மங்கை
Sunday, October 19, 2008
பணிகள்
- அனைவருக்கும் தெரிந்த புறநோயாளிகள் பிரிவு.
- இப்போது ஓரளவு மக்களுக்கு தெரிந்து வரும் பிரசவ பிரிவு. தற்போது அனைத்து அ.ஆ.சு.நிலையங்களும் 24மணிநேர பிரசவ மையங்களாகி விட்டன.
- அனைத்து கர்ப்பிணிகளுக்கும் Hb. சர்க்கரை, உப்பு, ரத்த வகையறிதல்,கொழுப்பு பரிசோதனைகள் செய்ய படுகின்றன.
- TANSAC ஆலோசகர் ஆய்வகர் HIV பரிசோத்னைகள் செய்கிறார்கள்.
- அனைத்து அ.ஆ.சு.நி.களும் காசநோய் அலகுடன் இணைக்கப்பட்டு நோயாளிகளுக்கு குறுகிய கால சிகிச்சை நேரடி பார்வையில் வழங்கப்படுகின்றது.
- தொழுநோய் சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
- சர்க்கரை. ரத்த அழுத்த நோய்களுக்கு சிகிச்சை தர படுகிறது.
- scan பரிசோதனை செய்யப்படுகிறது.
- அ.ஆ.சு.நி. உட்பட்ட பகுதிகளில் சுற்று சுகாதாரம் எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் சரிசெய்யும் வழிமுறைகளை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்குகின்றனர். மலேரியா, சிகுன்குனியா, டெங்கு நோய்கள் வராமல் தடுப்பது முக்கிய பணியாக அமைகிறது.
- வளரிளம் பெண்கள் ரத்தச்சோகை தடுப்புப் பணிகளும், அதைப்பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
- கர்ப்பிணிகளை தேடிப் பிடித்து பதிவு செய்து குறைந்தபட்சம் 5முறையாவது பரிசோதனைக்கு வரவக்க படாதபாடு படுபவர்களும் இவர்கள்தான்.
- எத்தனையோ தவிர்க்கப் பட கூடிய பிரசவ சிக்கல்களை தவிர்க்க பாடுபடுபவர்கள் இவர்கள்.
- தடுப்பூசிகளை சரியான இடைவெளிகளில் வழங்குபவர்கள் இவர்கள்.
- தடுப்பூசியின்சக்தியினை காக்கும் cold chain இங்குதான் மிகச்சிறப்பாக பேணப்படுகிறது.
- pulse polio போன்ற ஒரே நேரத்தில் அனைவருக்கும் வழங்கும் பணி அ.ஆ.சு.நி. மூலமாகவே நடைபெறுகிறது.
- இளம்சிறார் இருத்ய பாதுகாப்புத்திட்டத்தில் அறுவை சிகிச்சைகள் செய்விக்கப்பட்டதில் இவர்களின் பங்கு மிக அதிகம்.
- அனைத்து வியாழன்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகள்க்குச் சென்று மாணவர்கள்க்கு சிகிச்சை மற்றும் அடிப்படை பரிசோதனைகள் செய்து பெரிய பிணியினை முதலிலேயே தடுத்து விடுவதும் இவர்களே.
- ஆண்பெண் சமத்துவம் பற்றிய கருத்தரங்களும் அ.ஆ.சு.நி. மூலமாக நடத்தப் படுகின்றன.
- small pox விரட்டியக்கப் பட்டதும் polio கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதிலும் இவர்களால்தான்.
- 2006ல் கோரத்தாண்டவம் ஆடிய சிகுன்குனியா, 2007, 2008ல் ஒளிந்துகொண்டதும் இவர்களால்தான். (இதைப் பற்றி தனியே எழுதுகிறேன்)
- இது வெறும் முன்னுரை மட்டுமே. மேலும் தொடர்ந்து எழுதுகிறேன்.

Thursday, October 16, 2008
Wednesday, October 15, 2008
திருவள்ளூர் மாவட்டம்

ஆரம்ப சுகாதார நிலையங்கள்ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகின்றன
சிகிச்சை பெற்ற கிராம மக்கள் கருத்து
சென்னை, டிச.5-
"ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகிறது'' என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணைசுகாதார மையமும், 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையமும் உள்ளன. சுகாதார மையங்களில் உள்ள செயல்பாடுகளை நேரில் கண்டறிவதற்காக பத்திரிகையாளர்களை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அரசு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
செங்குன்றம் வட்டார ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று பார்த்தபோது நோயாளிகள் ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர். 3 பெண் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை பார்க்க முடிந்தது.
டாக்டர்கள் கூறியதாவது:-
கடந்த வருடம் இங்கு 410 பெண்கள் குழந்தை பெற்றனர். இந்த வருடம் இதுவரை 539 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. சராசரியாக தினமும் 2 பேருக்கு பிரசவம் பார்க்கிறோம். கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாதம் தோறும் பரிசோதனைக்கு வரச்செய்து உரிய ஆலோசனைகளை கூறுகிறோம். எச்.ஐ.வி. உள்ளிட்ட பால்வினை நோய் உள்ளதா? என்றும் ரத்த பரிசோதனை செய்கிறோம்.
பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை தேவைப்படின், முன்னதாக அவர்களை ஆம்புலன்ஸ் வேன் மூலம் பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம்.
24 மணிநேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு அவர்கள் அழைத்தால் உடனே ஆம்புலன்ஸ் வேனை அனுப்பி அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறோம்.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏழைகளின் ஆஸ்பத்திரி
அங்கு அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்றுள்ள தாய்கள் கூறியதாவது:-
தனியார் ஆஸ்பத்திரி போல நன்றாக எங்களை டாக்டர்களும், நர்சுகளும் கவனிக்கிறார்கள். அதுமட்டும் அல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திட்டத்தில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் ஜனனி சுரக்ஷா யோகாஜனம் திட்டத்தில் குழந்தை பெற்று வீடு திரும்பும் முன் எங்களிடம் ரூ.700 தருகிறார்கள். எனவே, இப்போது பல முன்னேற்றங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காண முடிகிறது. ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விளங்குகின்றன.
இவ்வாறு பெண்கள் தெரிவித்தனர்.
சத்துள்ள உணவு
பூதூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று மதியம் கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது. அவர்கள் வாழை இலையில் சோறு, சாம்பார், ரசம், மோர், முருங்கை இலை பொறியல், கூட்டு, அவித்த முட்டை, அவித்த கொண்டைக்கடலை ஆகியவற்றுடன் சாப்பிடுவதை பார்க்க முடிந்தது. வாரம் தோறும் இந்த சாப்பாடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் மாதம் ஒரு நாள் சாப்பிடுகிறார்கள். சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த சாப்பாடு வழங்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், "ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் டாக்டர்களையும், கூடுதல் நர்சுகளையும் நியமிக்கவேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.
மாநில சுகாதார கழக மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் முருகன், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சம்பத் ஆகியோர் கூறியதாவது:-
தன்னிறைவு
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த மத்திய அரசுக்கு ரூ.431 கோடிக்கு திட்டம் அனுப்பினோம். அதற்கு ரூ.380 கோடி அனுமதிக்கப்பட்டது. அதில் ரூ.284 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களை, மத்திய அரசு நிர்ணயித்துள்ள சுகாதார தரத்திற்கு ஏற்ப தன்னிறைவு பெற்ற தரமானதாக மாற்ற முயற்சி நடக்கிறது. இந்த திட்டத்தில் முதல் பகுதியாக 30 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2009-ம் ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்றுவிடும். படிப்படியாக திட்டம் செயல்படுத்தப்பட்டு, போதிய கட்டிட வசதிகள்,போதிய கருவிகள் அனைத்தும் வாங்கப்பட்டு தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 2012-ம் ஆண்டுஇறுதிக்குள் இந்திய சுகாதார தரஅளவு பெற்ற தன்னிறைவு பெற்றவைகளாக விளங்கும்.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகின்றன
சிகிச்சை பெற்ற கிராம மக்கள் கருத்து
"ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகிறது'' என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணைசுகாதார மையமும், 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையமும் உள்ளன. சுகாதார மையங்களில் உள்ள செயல்பாடுகளை நேரில் கண்டறிவதற்காக பத்திரிகையாளர்களை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அரசு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
செங்குன்றம் வட்டார ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று பார்த்தபோது நோயாளிகள் ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர். 3 பெண் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை பார்க்க முடிந்தது.
டாக்டர்கள் கூறியதாவது:-
கடந்த வருடம் இங்கு 410 பெண்கள் குழந்தை பெற்றனர். இந்த வருடம் இதுவரை 539 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. சராசரியாக தினமும் 2 பேருக்கு பிரசவம் பார்க்கிறோம். கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாதம் தோறும் பரிசோதனைக்கு வரச்செய்து உரிய ஆலோசனைகளை கூறுகிறோம். எச்.ஐ.வி. உள்ளிட்ட பால்வினை நோய் உள்ளதா? என்றும் ரத்த பரிசோதனை செய்கிறோம்.
பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை தேவைப்படின், முன்னதாக அவர்களை ஆம்புலன்ஸ் வேன் மூலம் பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம்.
24 மணிநேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு அவர்கள் அழைத்தால் உடனே ஆம்புலன்ஸ் வேனை அனுப்பி அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறோம்.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏழைகளின் ஆஸ்பத்திரி
அங்கு அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்றுள்ள தாய்கள் கூறியதாவது:-
தனியார் ஆஸ்பத்திரி போல நன்றாக எங்களை டாக்டர்களும், நர்சுகளும் கவனிக்கிறார்கள். அதுமட்டும் அல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திட்டத்தில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் ஜனனி சுரக்ஷா யோகாஜனம் திட்டத்தில் குழந்தை பெற்று வீடு திரும்பும் முன் எங்களிடம் ரூ.700 தருகிறார்கள். எனவே, இப்போது பல முன்னேற்றங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காண முடிகிறது. ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விளங்குகின்றன.
இவ்வாறு பெண்கள் தெரிவித்தனர்.
சத்துள்ள உணவு
பூதூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று மதியம் கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது. அவர்கள் வாழை இலையில் சோறு, சாம்பார், ரசம், மோர், முருங்கை இலை பொறியல், கூட்டு, அவித்த முட்டை, அவித்த கொண்டைக்கடலை ஆகியவற்றுடன் சாப்பிடுவதை பார்க்க முடிந்தது. வாரம் தோறும் இந்த சாப்பாடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் மாதம் ஒரு நாள் சாப்பிடுகிறார்கள். சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த சாப்பாடு வழங்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், "ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் டாக்டர்களையும், கூடுதல் நர்சுகளையும் நியமிக்கவேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.
மாநில சுகாதார கழக மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் முருகன், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சம்பத் ஆகியோர் கூறியதாவது:-
தன்னிறைவு
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த மத்திய அரசுக்கு ரூ.431 கோடிக்கு திட்டம் அனுப்பினோம். அதற்கு ரூ.380 கோடி அனுமதிக்கப்பட்டது. அதில் ரூ.284 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களை, மத்திய அரசு நிர்ணயித்துள்ள சுகாதார தரத்திற்கு ஏற்ப தன்னிறைவு பெற்ற தரமானதாக மாற்ற முயற்சி நடக்கிறது. இந்த திட்டத்தில் முதல் பகுதியாக 30 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2009-ம் ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்றுவிடும். படிப்படியாக திட்டம் செயல்படுத்தப்பட்டு, போதிய கட்டிட வசதிகள்,போதிய கருவிகள் அனைத்தும் வாங்கப்பட்டு தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 2012-ம் ஆண்டுஇறுதிக்குள் இந்திய சுகாதார தரஅளவு பெற்ற தன்னிறைவு பெற்றவைகளாக விளங்கும்.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
நன்றி: பொட்டல்புதூர்.காம்
