கருத்தரங்குத் துளிகள்
மேலும் இடுகைகள் தொடரும்
தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும் Read more...
..... Patients, Problems, Routine Practices, Stories, Gossips, Camps, Campaigns, Outbreaks, Innovations and what not !!! ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும், கொள்ளைநோய்களும், குடும்ப கட்டுப்பாடும், பல்ஸ் போலியோவும், வரும் முன் காப்போம் திட்டமும்
ஒரு மருத்துவரை மணந்து கொள்ள அருமையான சில காரணங்கள்
மார்பகம் என்றால் என்ன? | |||||||||
| மார்பக புற்று நோய் என்றால் என்ன? | |||||||||
மார்பக புற்று நோய் என்றால், மார்பகத்தில் உள்ள சில செல்கள் அளவுக்கதிகமாக வளர்வதாகும். புற்று நோய் செல்கள் மற்ற செல்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள திசுக்களை ஆக்கிரமிக்கும் | |||||||||
| மார்பக புற்று நோயின் அறிகுறிகள் என்ன? | |||||||||
துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் அறிகுறியும் இருக்காது. புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும். 1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும். 2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும் 3. முலைக் காம்பிலிருந்த இரத்தமோ வேறு திரவமோ கசியும். 4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்) 5. சமீப காலமாக முலைக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும். மேற்கண்ட மாறுதல்களில் ஏதேனும் தென்பட்டால் உடஉனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள். | |||||||||
| எவ்வாறு மார்பகப் புற்றுநோய் கண்டறியப் படுகிறது? | |||||||||
மார்பகப் புற்றுநோயைக் கீழ்க்கண்ட முறைகளில் கண்டறியலாம். மருத்துவ வரலாறு:- உங்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவ வரலாறு உதவும். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்ததா? இருக்கிறதா என்று கேட்டறிவார். உங்களுடைய மாத விலக்கு விவரங்கள், உங்கள் மார்பகக் கட்டியின் புறத் தன்மைகள் குறித்து உங்களிடம் கேட்பார்.மார்பகக் கட்டியைத் தொட்டுப் பார்த்தல்:- உங்கள் மருத்துவர் உங்கள் மார்பகத்தைத் தொட்டுப் பரிசீலனை செய்து மார்பகக் கட்டியின் இருப்பிடம், அளவு, மார்பக லிம்ப் மற்றும் லிம்ப நோட்ஸ்களின் பொதுத்தன்மையைக் கண்டறிவார். மம்மோ கிராம் (mammo gram) உங்கள் மருத்துவர் மம்மோகிராம் சோதனையைச் செய்து கொள்ளுமாறு உங்களிடம் கூறலாம். மார்பகக் கட்டிகளை, அதிலும் மிகச் சிறியவற்றைக் கண்டு பிடிக்க உதவும் ஒருவகை பயன்மிக்க மார்பகத்தை எக்ஸ்ரே பிடிக்கும் தொழில் நுட்பமாகும் இது. ஒரு தட்டு போன்ற கருவியால் உங்கள் மார்பகத்தைத் தட்டையாக அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும். உங்கள் மார்பகக் கட்டியின் முக்கிய விவரங்களை மம்மோகிராம் உங்கள் மருத்துவருக்கு அளிக்கம். மம்மோ கிராமில் ஏதேனும் ஒரு பகுதியில் ஐயம் உண்டாக்கினாலும், தெளிவாக இல்லாவிட்டாலும் மற்றொரு எக்ஸ்-ரே எடுக்க வேண்டியிருக்கும்.அதிரொலி (Ultra sound) அதிர்ரொலி என்பது அதிக அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்ப்கத்தின் மீது செலுத்தி மார்பகத்தின் கட்டி கெட்டியாக (திடமாக) உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா என்று கண்டறியலாம். மம்மோ கிராபியுடனும் இந்தப் பரிசீலனையைச் செய்யலாம்.நீடில் பயோப்சி (Needle Biopsy) உங்கள் மருத்துவர் ஒரு மெல்லிய ஊசியால் உங்கள் மார்பகக் கட்டியிலிருந்து ஒரு சில செல்களை எடுத்து நுண்ணோக்கியில் பரிசீலித்து மார்பக புற்றுநோய் உள்ளதா இல்லையா என்று கண்டறிவார். சில சமயங்களில் ஒரு பெரிய ஊசியை கெட்டியான கட்டியின் மைய செல்களை எடுக்கப் பயன் படுத்துவார்.மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2 நன்றி:- CHANGI GENERAL HOSPITAL இது மீள் பதிவு, மிக ஆரம்ப கட்டத்தில் நான் இட்டது. தமிழீஷில் இன்றுதான் சேர்த்துள்ளேன். எனவே தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள். தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள். | |||||||||
சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது என்றால் உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது
சில ஆரம்ப சுகாதார நிலையங்களின் தளங்களை பார்க்கவும்
தோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்
**
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம்
**
அ.ஆ.சுகாதார நிலையம் அமரபூண்டி
--
ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசேரியன் கூட நடைபெறுகிறது
பத்திரிகை செய்தி 1 : மதுரை
**
பத்திரிகை செய்தி 1 : திருச்சி
'இது உங்கள் மருத்துவமனை. சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்...' - அரசு மருத்துவமனை சுவர்களில் வழக்கமாகத் தென்படும் வாசகம் இது! இதை நிஜமாகவே படுசீரியஸாகப் பின்பற்றும் ஓர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கோவை மாவட்டம் துடியலூரில் இருப்பது சந்தோஷமான விஷயம்! தனியார் மருத்துவமனைகளுக்கு சவால் விடும் வகையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருக்கும் இந்த ஆரம்ப சுகாதர நிலையம்தான், தமிழகத்திலேயே 'தி பெஸ்ட்' என அடித்துச் சொல்லுகிறார்கள் சுகாதாரத் துறையினர். சமீபத்தில், இந்த மருத்துவமனைக்கு விசிட் அடித்துச் சென்ற சுகாதாரத் துறைச் செயலாளரான சுப்புராஜ், சுத்தம் மற்றும் பணியாளர்களின் சுறுசுறுப்பைப் பாராட்டி கடிதம் அனுப்பி இருக்கிறார். மருத்துவமனையில் பிரசவத்துக்காக அட்மிட் ஆகியுள்ள அம்பிகா என்ற பெண்மணியிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது, ''எங்களுக்கு வசதி, வாய்ப்பு எதுவும் இல்லீங்க. தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்க முடியாது. இங்க நல்லா பிரசவம் பார்க்குறதா பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி தெரிஞ்சுக்கிட்டேன். உண்மையிலே என்னை தங்கமா பார்த்துக்குறாங்க சார். எதுக்குமே பணம் கேட்காத இந்த இடத்துக்கு கடவுளா பார்த்துதான் என்னைய அனுப்பியிருக்கான்!'' என்றார் நெகிழ்ச்சியோடு. அத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் என்று சுட்டிக்கட்டப்படும் பெரியநாயக்கன்பாளையம் வட்டார மருத்துவ அலுவலரான (பொறுப்பு) உமா மகேஸ்வரியை சந்தித்தோம். ''இன்னிக்கு இருக்குற தலைமுறையில் சுத்தம், சுகாதாரத்துக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக் குறாங்க. அதுக்கு ஏத்த மாதிரி நாமளும் மாறித்தானே ஆகணும்! துடியலூர் சுகாதார நிலையத்துல முந்தி குப்பையாத்தான் இருந்துச்சு. அந்த ஏரியாவையே மாத்திக்காட்டணும்னு முடிவு பண்ணேன். போன வருஷம் அந்த சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கி இருந்த 1.75 லட்சம் ரூபாயை வெச்சுக்கிட்டு, டாக்டர்கிட்ட, நோயாளிங்க மனம்விட்டு ரிலாக்ஸா பேசுறதுக்காக, தனியார் மருத்துவமனையில கேபின் அமைச்சிருப்பாங்க. அதுமாதிரி, எங்க டாக்டர்களுக்கும் தனித்தனி கேபின் அமைச்சுக் கொடுத்தோம். மருந்து, மாத்திரைகளை தனித்தனியா பிரிச்சு வைக்குறதுக்காக பார்மஸியையும் மேம்படுத்தினோம். இங்கே ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்தான் பிரசவத்துக்கு அதிகளவுல வர்றாங்க. அவங்க கொண்டு வர்ற மாற்றுத் துணிகளைப் பத்திரப்படுத்தி வைக்கிறதுக்கு இடமே இல்ல. அதுக்காக தனித்தனி லாக்கர் வசதி செஞ்சு கொடுத்தோம். ஏழைப் பெண்களால கைக்குழந்தைக்கு போட்டுவிடுறதுக்கு டிரஸ் வாங்ககூட முடியாத நிலைமை இருக்கு. ரொம்பப் பேரோட வீடுகளோட நிலைமையும் மோசமா இருக்கு. அதனால, எங்க ஆரம்ப சுகாதார நிலையத்துல ஆண் குழந்தை பொறந்தா நீல நிறத்துல இருக்குற மெத்தையும் , பெண் குழந்தைன்னா பிங்க் கலர் மெத்தையும் இலவசமா கொடுக்குறோம். அந்த மெத்தைக்குள்ளே ஒரு செட் துணியும் இருக்கும். அந்த பச்சிளம் குழந்தைகளுக்காக கரூர்ல இருந்து ஆர்டர் பண்ணி மெத்தையை வாங்கிக் கொடுக்குறோம். பெண்கள் கருவுற்ற 25 வாரம் முதல் 30 வாரத்துக்குள்ள ஸ்கேன் செஞ்சு பாத்துடுறது நல்லது. அப்போத்தான் குழந்தை என்ன நிலையில வயித்துக்குள்ள இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியும். எங்ககிட்ட இருக்குறது 'ரெசல்யூஷன்' குறைவான ஸ்கேன் இயந்திரம். இதுல அத்தனை துல்லியமான ரிப்போர்ட் கிடைக்காது. அதுக்காக கோவை ஆர்.எஸ்.புரத்துல இருக்குற ஒரு தனியார் ஸ்கேன் சென்டர்ல உதவி கேட்டோம். அவங்களும் தயங்காம இலவசமா ஸ்கேன் எடுத்துக் கொடுக்குறாங்க. இதுவரைக்கும் ஆயிரத்து 300 ஸ்கேன் எடுத்துக் வாரந்தோறும் புதன்கிழமை குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கிட்டு இருக்கோம். குழந்தைகளைக் கொண்டு வர்ற பெற்றோருக்கு, தடுப்பூசி போடுற மையத்துல உட்கார்றதுக்குக்கூட இடவசதி இல்லாம இருந்துச்சு. அந்த இடத்துல இப்போ 30 பேரு உட்கார்ற அளவுக்கு இட வசதியை உருவாக்கிட்டோம். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் புறநோயாளிகள் 400 பேருக்கு மேல வர்றாங்க. அவங்க யாருமே வரிசையா வராததால, ஒரே தள்ளுமுள்ளு நிலைமை இருந்துச்சு. அந்தப் பிரச்னையை சரிசெய்யுறதுக்காக டோக்கன் சிஸ்டத்தை கொண்டு வந்திருக்கோம். புற நோயாளிகள் வந்தா, அவங்க கையில டோக்கனை கொடுத்துடுவோம். டோக்கன் நம்பரைக் கூப்பிட்டா மட்டும் டாக்டரைப் பார்க்குறதுக்கு அவங்க உள்ளே போவாங்க. இந்த முறையால தள்ளுமுள்ளு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைச்சது. தனியார் மருத்துவமனையில வேலைபார்க்குற நர்ஸ்களுக்கு தனி யூனிஃபார்ம் கொடுத்திருப்பாங்க. அதுமாதிரி, எங்களோட நர்ஸ்களுக்கு தனி யூனிஃபார்ம் கொடுத்திருக்கோம். தனியார் மருத்துவமனைக்கு நிகரா உள்கட்டமைப்பு வசதியை செய்யுறதுக்கு 4.50 லட்சம் ரூபாய்தான் செலவானது. சிசேரியன் மூலமா பிரசவம் பார்க்குறதுக்கு தேவையான ஆபரேஷன் தியேட்டர் மட்டும் இங்க இல்ல. இப்போ, அதுக்கும் நிதி ஒதுக்கீடு செஞ்சிருக்காங்க. கிராமங்கள்ல இருக்குற பெண்களுக்கு நல்ல மருத்துவ வசதியைக் கொடுக்கணும்ங்கிறதுதான் எங்களோட நோக்கம். நல்ல உள்ளங்களோட கரங்கள் எங்களோட இணைஞ்சா, கிராமப்புறங்கள்ல இன்னும் ஏராளமா மருத்துவ வசதியை எங்களால செஞ்சு கொடுக்க முடியும்!'' என்றார் நம்பிக்கையுடன். நல்ல உதாரணங்கள் எளிதில் பின்பற்றக் கூடியவை. ஆனால், அவற்றைச் செயல்படுத்த நல்ல மனிதர்களும் வேண்டுமேஅடடே' அரசு மருத்துவமனை! அசுத்தம் இல்லை... அமுக்கல் இல்லை...
--உள்கட்டமைப்புகளை முழுசா மாத்தி அமைக்குற வேலையை ஆரம்பிச்சோம். இதைப் பாத்துட்டு, 'சூப்பர்'னு பாராட்டுன பொது சுகாதாரத் துறை உயரதிகாரிங்க, தேவையான அளவுக்கு பணம் ஒதுக்கீடு பண்ணினாங்க.
கொடுத்திருக்காங்கன்னா பாருங்களேன். அதோட மதிப்பு மட்டும் 14 லட்சம் ரூபாய். இந்த மாதிரி நல்லவங்க உதவியும் சேர்ந்திருப்பதால்தான், தரமான சிகிச்சையை ஏழைகளுக்கும் கொடுக்க முடியுது.
நன்றி : ஜூனியர் விகடன்
© Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008
Back to TOP