Sunday, May 16, 2010

உங்கள் மகனை /ளை மருத்துவராக்கப் போகிறீர்களா?

//“செய்யும் தொழிலே தெய்வம்; அதில் ஏற்றத் தாழ்வு கிடையாது; தொழிலை வைத்து மனிதரை எடைபோடுவது தவறு” என்பதெல்லாம் மேலுக்குப் பேசப்படும் நிஜமான நீதி என்றாலும் தனி மனித அனுபவங்களும் புழுக்கங்களும் அவரவர் மாத்திரமே அறிந்தவை.


//

தொடர்ந்து படிக்க இங்கே செல்லுங்கள்

=====================================================

விவாதங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் இந்த வலைப்பூவையும் வலம்வாருங்கள். ஒரு முடிவு எடுங்கள்

Read more...

Saturday, May 1, 2010

கூட்டு உழைப்பு - இருதயக் குறைபாடு - தொடர் சிகிச்சை










சென்ற ஆண்டில் திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் சத்தம் இல்லாமல் ஒரு புரட்சி நடந்தது.  அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அங்குள்ள மருத்துவகுழுவினர் ஆய்வு செய்து  அங்குள்ள பள்ளிக்குழந்தைகளில் பிறவி இருதய நோயால் பாதிக்கப் பட்டவர்கள்., மற்றும் ருமாட்டிக் இருதய நோயால் பாதிக்கப் பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப் பட்டது, இதில் கிடைத்த முடிவானது ஏறக்குறைய அங்கீரம் பெற்ற முக்கியப் பாடப் புத்தகங்களில் உள்ள சராசரியை ஒத்து வந்திருப்பதால் அவர்கள் மிகச் சரியான வழிவகைகளைப் பின்பற்றி இந்தச் சாதனையை செய்ததாகச் சொல்லலாம்.

பள்ளிக் குழந்தைகளுக்கான வாழ்வொளித் திட்டம்:-  இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள மருத்துவ குழுவினர் வியாழக் கிழமைகளிலில் தங்கள் பகுதியைச் சேர்ந்த பள்ளிகளை பார்வையிட்டு குழந்தைகளின் சிறுவியாதிகளுக்கு மருத்துவம் பார்த்தல், மற்றும் பெரிய வியாதிகளை முளையிலேயே கிள்ளி எரிதல் மற்றும் சுகாதார கல்வியினை வழங்குவார்கள்.  இது அனைத்து வியாழக்கிழமைகளிலும் நடைபெறும்.  மே மாதத்தில் வரும் வியாழன்கள் தவிர அனைத்து வியாழன்களிலும் மருத்துவக் குழுவினர் பள்ளிக் குழந்தைகளை ஆய்வு செய்து கொண்டு இருப்பார்கள்.   இதற்கான முன்பயணத்திட்டம் அந்த அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தாரால் தயாரிக்கப் பட்டு அதன் ஒரு பிரதி  அந்த மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அவர்களுக்கும்,. பள்ளிக் கல்வி அலுவலர் அவர்களுக்கும் அனுப்பப்படும்.  அந்த முன் பயணத்திட்டம் எந்த இடர்பாடுகள் வந்தாலும் கண்டிப்பாக நிறைவேற்றப் படும். அப்படித்தான் நடந்து வருகிறது.

சில பள்ளிகளில் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் இருப்பார்கள். வெகுசில பள்ளிகளில் சில ஆயிரம் மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரின் இதயத்தையும் ஸ்டெத்தாஸ் கோப் வைத்துப் பார்ப்பது என்பது முழு அர்பணிப்பு உள்ளவர்களாலேயே முடியும்.  காதில் அந்த ''கிளிப்'' பகுதியை வைத்து எடுத்து வைத்து எடுத்து கொஞ்சம் அந்த சிரமத்தை யோசித்துப் பாருங்கள்.  வேகமாகவும் செய்ய வேண்டும். அதே நேரத்தில்  எந்த குழந்தையையும் தவரவிடுதல் கூடாது.  இது கம்பிமேல் நடப்பது மாதிரி என்று சொன்னாலும் என்னைக் கேட்டால் கம்பி மேல் ஓடுவது போன்ற ஒரு செயல். 


முதல்நாளே பள்ளித் தலைமை ஆசிரியரின் நினைவு படுத்திவிட்டு உயரம் எடை பார்த்துவைத்து மறுநாள் பள்ளிகளில் அனைத்துக் குழந்தைகளையும் பரிசோதனை செய்ய வேண்டும். பல கிராமப் புறப்பள்ளிகளில் சரியான அறைவசதி இருக்காது, பெண்களை மறைவிடத்தில் வைத்து செய்ய வேண்டிய பரிசோதனைக்கும், வளரிளம் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய சுகாதார கல்விக்கும் தனியறையை கொடுத்துவிட்டு பெரும்பாலும் மரத்தடியில்தான் மருத்துவர்கள் அமர்ந்து தங்கள் பணியைச் செய்ய வேண்டிய சூழல் இருக்கும்.  அதிலும் சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இதற்கு வசதி ஏற்படுத்தித் தருவதில் பெரிய சிரத்தை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சிலர் செய்ய நினைத்தாலும் அங்கு வசதிகள் இருக்காது.  அதையும் தாண்டித்தான் பரிசோதனைகள் செய்து வருகிறார்கள்.


இது தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தார் மூலமாக நடைபெறுகிறது. நகரங்களில் குழந்தைகள் நலத்திற்கு தனி மருத்துவர் இருப்பார். ஆரம்ப சுகாதார நிலையங்களில்  அங்குள்ள மருத்துவரே இந்தப் பணியையும்  அந்தப் பகுதிக்கு உட்பட்ட பள்ளிக்கு நேரிடையாகச் சென்று செய்வார்.  சில பள்ளிகள் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வெகுதூரத்தில் இருப்பதுண்டு, பேருந்து வசதிகளும் சொல்லிக் கொள்ளும் வகையில் இருக்காது, புற நோயாளிகள் பிரிவினைப் பார்த்து விட்டு பள்ளிக்குச் செல்வார் மருத்துவர்.

எல்லாப் பகுதிகளிலும் செய்திருந்தாலும் திண்டுக்கல்லில் செய்தது மிகவும் திட்டமிட்டு ஒரு குழந்தையைக் கூட தவற விடாவண்ணம் மிக அழகாகச் செய்து முடிக்கப் பட்ட செயல் . 2,24,089 குழந்தைகளை பரிசோதனை செய்ததில்
495 குழந்தைகள் பிறவி இருதயக் கோளாறுகளால் பாதிக்கப் பட்டு இருப்பது தெரிய வந்தது.

அந்த பரிசோதனையில் முடிவில் கண்டறியப் பட்ட குழந்தைகள் அனைவரையும் தகுந்த மேல் பரிசோதனைக்கு அனுப்பி அறுவைச் சிகிச்சை தேவைப்படும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இளஞ்சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம் மூலமாகவும் விடுபட்ட சில குழந்தைகளுக்கு கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மூலமாகவும் சிறிதும் செலவில்லாமல் அறுவை சிகிச்சைகள் செய்யப் பட்டுவிட்டன.  மருத்துவ சிகிச்சை மட்டும் தேவைப் படும் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகள் மூலம் தொடர் சிகிச்சை தரப் பட்டு வருகிறது.


ஒவ்வொரு மாதாந்திர ஆய்வுக் கூட்டத்திலும்  ஆரம்ப சுகாதார நிலைய அளவிலும் வட்டார அளவிலலும் இந்தக் குழந்தைகளின் உடல் நிலை ப் பற்றிய தகவலகள் விவாதிக்கப் படுகின்றன. களப் பணியாளர்கள் அந்தக் குழந்தைகள் குடியிருக்கும் பகுதிகளுக்குச் செல்லும்போது சிறப்புக் கவனத்தினை அந்தக் குழந்தைகளுக்கு வழங்கி வருகின்றனர். இடைப்பட்ட காலத்தில் எந்தத் தொந்தரவு ஏற்பட்டாலும் தொலைபேசி வழியிலும், நேரடியாகவும்  அந்தக் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை எளிதில் அணுகும் வகையில் வசதி ஏற்படுத்தப் பட்டிருக்கிறது,. இந்த வசதியாகப் பட்டது தமிழக அளவில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதாரநிலையங்கள் மூலமாகவும் நடைபெற்று வருகிறது.


இந்த வசதிகளை மிகத் துல்லியமாக செய்து வருகின்ற திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தினைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுதல்களை தெரிவியுங்களேன்.  தமிழக சுகாதார அமைப்பின் மூலம் நடைபெற்ற கருத்தரங்கில் வெளியிட்ட மலரில் திண்டுக்கல் துணை இயக்குநரின் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் மேலே தரப் பட்டுள்ளது. அந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் அவரது கட்டுரை முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்

Read more...

Saturday, April 24, 2010

கருத்தரங்குத் துளிகள்

ஏபரல்9 மற்றும் 10 தினங்களில் ஏலகிரியில் தமிழ்நாடு சுகாதார அமைப்பின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்களில் சில காட்சிகள். தொடர்புடைய இடுகை இங்கே

மேலும் இடுகைகள் தொடரும்

தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்

Read more...

Thursday, April 22, 2010

மருத்துவரை மணந்து கொள்ள பத்துக் காரணங்கள்

ஒரு மருத்துவரை மணந்து கொள்ள அருமையான சில காரணங்கள்

Read more...

Thursday, April 15, 2010

தமிழகத்தில் முதன் முறையாக..,

 
 தமிழ் நாடு சுகாதார அமைப்பின் சார்பில் ஏலகிரி யில்  ஏப்ரல் 9, 10 ல் நடைபெற்ற கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப் பட்ட சில நிகழ்வுகள். ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமீபக காலத்தில் நிகழ்த்தப் பட்ட சாதனைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் இங்கு விவாதிக்கப் பட்டன.

 அந்த நிகழ்வுகளின் சுருக்கங்கள் சில புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்தக் கருத்தரங்கு மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்பசுகாதார நிலையங்களுக்கும் அந்தசாதனைகள் விஸ்தரிப்பு செய்வது பற்றியும் ஆலோசிக்கப் பட்டது.  படத்தின் மீது அழுத்தி பெரிது படுத்திப் பாருங்கள்.

தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்

இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கு பற்றிய இடுகைகள் தொடரும்.

Read more...

Monday, March 29, 2010

குழந்தையும் குலதெய்வமும்

ஒரு சுபயோக சுபதினத்தில் முருகனின் பொற்பாதத்தில் அமைந்துள்ள அ.ஆ.சு.நி.இல் பிறந்த ஒரு சுட்டிக்குழந்தையின் முதல் நாள் வாழ்க்கையிது. கலாச்சாரமும் தெய்வபக்தியும் நிறைந்த தந்தையும், பதிபக்தி நிறைந்த தாயும், மண்ணின் மணம் நிறைந்த தாத்தா, பாட்டியும் வாய்க்கப்பட்டவன் இவன்.

குழந்தைபிறந்த உடன் தாயின் அருகில் குழந்தையை கிடத்திவிட்டு செவிலியர் அடுத்த பிணியாளரை பார்க்கப் போன சைக்கிள் சந்தில் நடந்த கதை.
ஐந்து நிமிடம் கழித்து வந்த செவிலியர் தாயை பரிசோதித்தார். அடுத்து சேயை.............. ஐயோ, சேயைக்காணவில்லை.

செய்தி பரபரப்பானது. ஒரு கிராமத்தில், ஆஸ்பத்திரியில் அதுவும் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை காணவில்லை என்றால் நினைத்துப்பாருங்கள். அபூர்வ சகோதரர்கள் மனோரமா ஆச்சியிலிருந்து சூரிய வம்சம் சரத்குமார் வரை அனைவரும் ஆஜர்.

பலபல வதந்திகள். ஆஸ்பத்திரி ஊழியர் விற்றுவிட்டார் என்று ஒரு கூட்டம். பில்லி சூனியக் காரர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர் என்று ஒரு கூட்டம்.ஆண்குழந்தை அல்லவா! பங்காளிகள் சண்டையாம்.

அ.ஆ.சு.நி.ஊழியர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கின்றார்கள். போலிசுக்கு தகவல் சென்றது. விசாரணையும் தொடர்ந்தது.
நமது மனோரமா பாட்டி மீண்டும் டென்சன் ஏற்றினார். அய்யய்யோ, அய்யோ, இப்பத்தான் வந்துட்டுப்போனானே, அப்பக்காரன், அவன் திரும்பி வந்து கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன். அய்யய்யோ, அய்யோ.

இப்போது பரபரப்பு பரபரபரபரப்பானது. குழந்தையின் தாத்தா பேச ஆரம்பித்தார். மாப்பிள்ளை வந்திட்டாரா அவர கூப்பிடுங்கப்பா, எங்க போனார் இந்த நேரத்தில. மாப்பிள்ளை(குழந்தையின் தந்தை)யின் நண்பர்களுக்கு தகவல் போனது.

சல்லடை போட்டு தேட ஆரம்பித்து கூட்டி வந்தனர்.
அவர் வந்தார் அவருடைய குழந்தையோடு.. முழு போதையில் இருந்த அவர் கூறினார். வாரிசு வந்திரிச்சில்ல..... குலதெய்வம் கோவிலுக்குப் போய்ட்டு வந்தோம்..............................பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு

Read more...

Sunday, March 7, 2010

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -1


மார்பகம் என்றால் என்ன?

ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்பு சதைகளானது. ஒவ்வொரு சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத்தொங்கு சதைகள், சதைகள், சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன. இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோலா (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்ப்கத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்ப்கத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றன.


ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப் (lymph) எனப்படும் வர்ணமற்ற நிணநீர் திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டங் கூட்டமாக அக்குகளின் மேழேயும் தோற்பட்டை எலும்புகளின் மேலும் மார்ப்கங்களிலும் உள்ளன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.


மார்பக புற்று நோய் என்றால் என்ன?

மார்பக புற்று நோய் என்றால், மார்பகத்தில் உள்ள சில செல்கள் அளவுக்கதிகமாக வளர்வதாகும். புற்று நோய் செல்கள் மற்ற செல்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள திசுக்களை
ஆக்கிரமிக்கும்

மார்பக புற்று நோயின் அறிகுறிகள் என்ன?

துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் அறிகுறியும் இருக்காது. புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.

1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும்.



2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்



3. முலைக் காம்பிலிருந்த இரத்தமோ வேறு திரவமோ கசியும்.


4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்)


5. சமீப காலமாக முலைக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும்.


மேற்கண்ட மாறுதல்களில் ஏதேனும் தென்பட்டால் உடஉனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
எவ்வாறு மார்பகப் புற்றுநோய் கண்டறியப் படுகிறது?


மார்பகப் புற்றுநோயைக் கீழ்க்கண்ட முறைகளில் கண்டறியலாம்.



மருத்துவ வரலாறு:-
உங்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவ வரலாறு உதவும். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்ததா? இருக்கிறதா என்று கேட்டறிவார். உங்களுடைய மாத விலக்கு விவரங்கள், உங்கள் மார்பகக் கட்டியின் புறத் தன்மைகள் குறித்து உங்களிடம் கேட்பார்.


மார்பகக் கட்டியைத் தொட்டுப் பார்த்தல்:-
உங்கள் மருத்துவர் உங்கள் மார்பகத்தைத் தொட்டுப் பரிசீலனை செய்து மார்பகக் கட்டியின் இருப்பிடம், அளவு, மார்பக லிம்ப் மற்றும் லிம்ப நோட்ஸ்களின் பொதுத்தன்மையைக் கண்டறிவார்.



மம்மோ கிராம் (mammo gram)
உங்கள் மருத்துவர் மம்மோகிராம் சோதனையைச் செய்து கொள்ளுமாறு உங்களிடம் கூறலாம். மார்பகக் கட்டிகளை, அதிலும் மிகச் சிறியவற்றைக் கண்டு பிடிக்க உதவும் ஒருவகை பயன்மிக்க மார்பகத்தை எக்ஸ்ரே பிடிக்கும் தொழில் நுட்பமாகும் இது. ஒரு தட்டு போன்ற கருவியால் உங்கள் மார்பகத்தைத் தட்டையாக அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும். உங்கள் மார்பகக் கட்டியின் முக்கிய விவரங்களை மம்மோகிராம் உங்கள் மருத்துவருக்கு அளிக்கம். மம்மோ கிராமில் ஏதேனும் ஒரு பகுதியில் ஐயம் உண்டாக்கினாலும், தெளிவாக இல்லாவிட்டாலும் மற்றொரு எக்ஸ்-ரே எடுக்க வேண்டியிருக்கும்.


அதிரொலி (Ultra sound)
அதிர்ரொலி என்பது அதிக அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்ப்கத்தின் மீது செலுத்தி மார்பகத்தின் கட்டி கெட்டியாக (திடமாக) உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா என்று கண்டறியலாம். மம்மோ கிராபியுடனும் இந்தப் பரிசீலனையைச் செய்யலாம்.



நீடில் பயோப்சி (Needle Biopsy)
உங்கள் மருத்துவர் ஒரு மெல்லிய ஊசியால் உங்கள் மார்பகக் கட்டியிலிருந்து ஒரு சில செல்களை எடுத்து நுண்ணோக்கியில் பரிசீலித்து மார்பக புற்றுநோய் உள்ளதா இல்லையா என்று கண்டறிவார். சில சமயங்களில் ஒரு பெரிய ஊசியை கெட்டியான கட்டியின் மைய செல்களை எடுக்கப் பயன் படுத்துவார்.
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2


நன்றி:- CHANGI GENERAL HOSPITAL




இது மீள் பதிவு, மிக ஆரம்ப கட்டத்தில் நான் இட்டது.

தமிழீஷில் இன்றுதான் சேர்த்துள்ளேன். எனவே தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள். 


தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்.

Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP