Tuesday, December 31, 2013

பிரசவ கால விபத்துக்கள்

பிரசவம்

மனிதனுக்கே உரித்தான சிறப்பான ஒரு செயல். மனிதனுக்கு மட்டுமே பிறரின் உதவி தேவைப் படுகிறது.

இந்த இடுகை யாரையும் பயமுறுத்துவதற்கோ அல்லது குழப்புவதற்கோ அல்ல., எனக்குத் தெரிந்த சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவே..,  விருப்பம் உள்ளவர்கள் தரமான புத்தகங்களின் உதவியோடு மேலும் இது தொடர்பான தங்கள் பார்வையை வளர்த்துக் கொள்ளலாம்.


அம்னியாட்டிக் ஃப்ளூயிட் எம்பாலிஸம்

Amniotic fluid embolism


பனிக்குடத்தில் உள்ள திரவமோ குழந்தையின் உடலில் உள்ள முடி முதலான ஏதாவது ஒரு பொருள் தாயின் ரத்த ஓட்டத்தில் கலந்து  தாயாருக்கு தீவிரமான ஒவ்வாமை விளைவுகளை  உருவாக்கி மிகவும் அவசரம் மற்றும் மோசமான உடல் நிலையை உருவாக்கும் நிலையாகும். இந்த நிலையை முன்கூட்டியே கண்டறிதல் இயலாது. உருவாகிய உடனே கண்டறிந்தால் தாயைக் காப்பாற்ற போர்க்கால அவசர சிகிச்சையைத் தொடங்கி நடத்த வேண்டும்.

இது  லட்சத்தில் 1 முதல் 12 தாய்மார்களுக்கு ஏற்படுகிறது, குழந்தை பிறப்பின்போதோ குழந்தை பிறந்த உடனே ஏற்படலாம்.

அறிகுறிகள்

திடீரென மூச்சிறைத்தல்

நுறையீரலில் நீர்கோர்த்தல்

ரத்தம் உறையாமல் போதல்

திடீரென ரத்த அழுத்தம் குறைதல்

இதயம் செயல் படாமல் போதல்

குமட்டல் , வாந்தி

பதட்டம்

மனநிலை தீடீரென மாறுதல்

நடுக்கம்

வலிப்பு

கோமா நிலை

இவை போன்ற அறிகுறிகள் தீடீரென அதி வேகமாக அதி தீவிரமாக உருவாகக்கூடும்.


காரணங்கள்

இந்த நிலை ஏன் ஏற்படுகிறது என இதுவரை முழுமையாக கண்டறியப் படவில்லை. கர்பப்பையில் இருக்கும் இரத்த நாளங்களில் ஏதேனும் சேதம் அடையும்போது  பனிக்குடத்தின் சவ்வுகள் கிழியும் போது பனிக்குடத்தில் உள்ள திரவமோ வேறு ஏதாவது பொருள்களோ தாயாரின் ரத்த ஓட்டத்தில் கலந்து விடுவதால் இது ஏற்படுகிறது.    பனிக்குடம் உடைவது, குழந்தை தள்ளப் படுவது, நஞ்சுக்கொடி பிரிவது போன்ற நிகழ்வுகள் பிரசவத்தின்போது இயற்கையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா நேரங்களிலும் அதி தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு விடுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படுகிறது.  அதுவே நிலைமையை மோசமானதாகவும் சிக்கலானதாகவும் மாற்றி விடுகிறது.

இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தாயார்ருக்கு இருக்கக்கூடிய உயர் ரத்த அழுத்தம், அதிக எடை, சர்க்கரை, விபத்து, பரம்பரைத் தன்மை ஆகியவை இந்நிலை உருவாகக் கூடுதல் காரணங்களாக இருக்கக்கூடும்.


விளைவுகள்.

பனிக்குடத்தில் இருக்கும் பொருட்கள் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் மெக்கானிக்கல் இஞ்சூரி என்று சொல்லப் படக் கூடிய அடைப்புக்கள் ஏற்ப்டலாம். இதனால் முக்கிய உறுப்புகளுக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டம் நின்று போகலாம். பல நேரங்களில் மூளை, இதயத்திற்கு போகும் ரத்த ஓட்டம் நின்று உயிருக்கு ஆபத்து நேரிடலாம்.

அதி தீவிர ஒவ்வாமை காரணமாக இதய் நுரையீரல் செயலிழப்பு ஏற்படலாம்.


பரிசோதனைகள்:

முழுக்க முழக்க நோய்குறியீடுகளின் அடிப்படையிலேயே நோய் கண்டறியப் படுகிறது.பல நேரங்களில் நோயானது தாயாரின் மரணத்திற்குப் பிறகே உண்ரப் படும் சூழலே நிலவுகிறது.  சில வேளைகளில் போஸ்ட் மார்ட்டம் பரிசோதனையின் போது சிசு தொடர்பான பொருட்கள் நுரையீரலில் காணப் பட்டிருக்கின்றன.

சிகிச்சை

தீவிர மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும்

உடனடியாக சுவாசம் நன்கு நடைபெற செயற்கை முறையில் உதவிடல் வேண்டும். பல நேரங்களில் செயற்கை சுவாசம், வெண்டிலேட்டர் போன்றவை தேவைப்படலாம்.

இரத்த அழுத்தம், இதயத்துடிப்புகளை கூட்டும் மருந்து தேவைப்படலாம்

உதிரப் போக்கு அதிகமாக இருப்பதால் ரத்தம் நிறையவே ஏற்றவேண்டி வரும்.

ஒருவேளை குழந்தை பிறப்பதற்கு முன் இந்த நிலை ஏற்பட்டால் அவசர அறுவை சிகிச்சை தேவைப் படலாம்.  இது வெகு அபூர்வமே..,


Sunday, December 29, 2013

மருத்துவ அறிவும் திரைப்படத் துறையும்

மருத்துவத் துறையைப் பற்றி திரைப் படம் எடுத்தாலே அந்தக் காட்சிகள் மக்களிடம் சிறப்பான வரவேற்பு பெற்று விடும் என்ற நிலையில் இருக்கீறது.

1980களில் வந்த திரைப்படங்களில் ஒரு பெரிய போலிஸ்காரர் , ஒரு வக்கீல்/நீதிபதி, ஒரு டாக்டர் கூட்டணி முக்கிய வில்லன் கூட்டமாகவோ, முக்கிய வில்லனின் நண்பர்களாகவோ இருப்பார்கள். அது சிட்டிசன், சாமுராயில் கூட வந்ததாக நினைவு . அதை நான் தொட போவதில்லை, அவைப் பாத்திரப் படைப்பாக விட்டுவிடலாம்.  மேலும் சில திரைப்படங்கள் மருத்துவத் துறை எப்படி செயல் படுகிறது என்பதே தெரியாமல் அதைப் பற்றி ஹோம் வொர்க் செய்யாமல் எடுக்கப் பட்ட பட்ங்களாக, படத்தின் வெற்றிக்கு இப்படி ஒரு காட்சி தேவை என்பதால் வைக்கப் பட்ட காட்சிகளாக வந்திருக்கும் அந்தப் படங்களில் சிலவற்றை அதுவும் பெருங்குற்றமாக உள்ள படங்களில் சில மட்டும் எடுத்து தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன்.


பம்மல் கே. சம்பந்தம்.

இந்தப் படம் மௌலி, கமல்ஹாசன், கிரேஸி மோகன் கூட்டணியில் உருவான படம். இவர்களின் நெருங்கிய நண்பர்கள் , உறவினர்கள் பலரும் பெரிய மருத்துவர்கள். இவர்கள் ஒரு திரைப் படம் எடுக்க விரும்பினால் அதைப் பற்றிய புத்தகங்கள் பல படிப்பதாகவும், அந்த காட்சி நடைபெற்ற இடங்களுக்குச் சென்று சில நாட்கள் தங்குவதாகவும் சொல்லிக் கொள்பவர்கள். ஹேராம் படம் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தந்த கதாபாத்திரங்கள் அவரவர் மொழியிலேயே பேச வைத்தவர். (ஒரு வேளை அவர் கிளியோபாட்ரா படத்தை எடுத்திருந்தால் கதாபாத்திரங்கள் என்ன மொழி பேசுவார்கள் என்று அப்போது பேச்சு அடிபட்டது).  கதாபாத்திரம் எப்படி சிரிக்கும் அழும் என்றெல்லாம் ஹோம் செய்வார் என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் எடுக்கும்போது மருத்துவத் துறை நண்பர்களுடன் கலந்தாலோசித்திருப்பாரா என்பது மிகப் பெரிய கேள்வி கேட்டே இருக்க மாட்டார் என்றுதான் நினைக்கிறேன். 


அந்தப் படத்தில் சிம்ரன் ஒரு அறுவை சிகிச்சை செய்வார். கையில் கையுறை மாட்டிக் கொண்டு வருவார். மயக்க மருத்துவரிடம் புரப்பஃபால் கொடுத்துவிட்டீர்களா என்று கேட்டுக் கொண்டே தனது முகமூடியைக் கட்டுவார். அறுவை அரங்கில் கையுரை அணிந்த பின் இந்த வேலைகள் செய்வது என்பது முழுக்க முழுக்க தடை செய்யப் பட்ட ஒன்று.  இந்த ஒரே ஒரு காரணத்துக்காகவே அந்த அறுவை மருத்துவரை அறுவை அரங்கைவிட்டே துரத்திவிடலாம்.  பல பல ஹோம்வொர்க் செய்யும் கமல் ஹாசன் படத்தில் இடம் பெற்ற காட்சி. அது.

அதற்கடுத்ததாக புரப்பஃபால் கொடுத்துவிட்டீர்களா என்று எந்த ஒரு பெரிய அறுவை சிகிச்சை மருத்துவருமே மயக்க மருத்துவரை பார்த்து கேட்க மாட்டார்கள். சார் ஆரம்பிக்கலாமா என்பது மட்டுமே அவர்கள் கேள்வியாக இருக்கும். தவிரவும் அவர் செய்யும் சிகிச்சைக்கு அந்த மருந்து தேவையும் இல்லை.
.



https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/q71/s720x720/562320_4861310389951_1957702810_n.jpg

அடுத்ததாக அவர் செய்யும் அறுவை சிகிச்சையின்போது அவர் கையில் இருக்கும் வாட்ச் அல்லது மோதிரத்தை நோயாளியின் வயிற்றில் வைத்து தைத்து விடுகிறார். அறுவை அரங்கிற்குள் செல்லும் ஒருவர் தனது மோதிரம் வாட்ச் போன்ற எல்லாவற்றையும் அது திருமண மோதிரமாக இருந்தாலும் கலட்டி வைத்து விட்டுத்தான் கைகழுவ வேண்டும். கைகழுவது என்பதே ஐந்து நிமிடங்கள் நடக்கும் வேலை. அதற்கு பின் கையுறை அணிதல் வேண்டும்.  இந்தக் கையுறையை  அறுவை சிகிச்சை முடிந்து தையல் வேலைகள் எல்லாம் முடிந்த பின்னரே கழட்ட முடியும். அப்படி இருக்கையில் எப்படி அந்தப் பொருள் தவறி விழ முடியும்.  திரையில் காணப் படும் மருத்துவர் மருத்த்வத்தை தனது வாழ்க்கையாக ஸ்டெத்தை தாலியாக நினைத்து வாழும் மருத்துவர் . அவர் எப்படி இது போன்ற பற்பல தவறுகள் செய்யும் மருத்துவராக இருக்க முடியும்.? இது போன்ற காட்சிகள் மிகவும் முட்டாள் தனமாக எடுக்கப் பட்டவை. 

இது எப்படி என்றால் பஸ் ஓட்டுவதை பார்க்கும் குழந்தைகள் சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஸ்டரிங்கைப் பிடித்துக் கொண்டிருந்தால் வண்டி ஓடும் என்று நினைப்பது போல .., சில அறிவாளி குழந்தைகள் கியர் போடுவதை கண்டுபிடித்திருக்கும்.  ஆனால் க்ளட்ச், ஆக்ஸிலேட்டர் போன்றவைகள் பார்வைக்கே வராது . அது போல தான் மிக மிக மோசமாக நுணிப் புல் மேயப் பட்ட காட்சிகள் இவை.


ரமணா

ரமணா படத்தில் இறந்து போன ஒருவரின் சடலத்தை வைத்திருந்து ஒரு மருத்துவமனையில் வைத்திருந்து மோசடி செய்வதாக காட்டியிருப்பார்கள். அவ்வளவு நேரம் வைத்திருந்தால் பிணம் விரைத்துப் போய் விடும். அதுவும் பிணத்தை கட்டிலில் படுக்க வைத்திருப்பதாக வேறு காட்டுவார்கள். ஒரு பிணத்தை அவ்வளவு நேரம் அப்படியே வைத்திருந்தால் என்னென்ன நடக்கும் என்பது ந்கரவாசிகளுக்கு தெரியாவிட்டாலும் கிராம வாசிகளுக்கு நன்கு தெரியும்.   சராசரி ஆக்சன் படங்களில் கண்டுகொள்ளப்படாமல் விடப் படும் லாஜிக் காட்சிபோல இது வும் ஆகிவிட்டது.


இன்னொரு விஜயகாந்த் படம்.



இதுவும் விஜய்காந்தின் புத்திசாலித்தனத்தை காட்ட எடுக்கப் பட்ட காட்சிகள். பொதுவாக அறுவை அரங்கிற்கு தடையற்ற மின்சாரம் கிடைக்கும் வகையில்தான் ஏற்பாடு செய்யப் ப்ட்டிருக்கும். வெகு வெகு அபூர்வமாக மின்சாரம் கிடைக்காத வகையில் ஒரு விபத்து ஏற்பட்டதாக ஒரு பேச்சுக்கு (பேச்சுக்காக மட்டுமே) வைத்துக் கொண்டாலும். ஒரு மயக்க மருத்துவர் அதை சமாளிக்கும் திறமையானவராகவே இருப்பார். மின்சாரம் போனாலும் நோயாளியை உயிருடன் வைத்திருக்க வேண்டியது அவர் பொறுப்பு, மயக்கம் தெளியாமலும் பார்த்துக் கொள்வார். .

அவர் கத்தி போடும் இடத்தைப் பார்த்தால் நோயாளியின் முகத்தில் வைத்திருக்கும் முகமூடி சம்மந்தமே இல்லாத ஒன்று.

அரங்கில் இருக்கும் மானிட்டர் மிகவும் பரிதாபமாக காட்சி அளிக்கிறது.

அதைவிட கையுறையுடன் மொபைல் ஃபோன் ,  அறுவை அரங்கில் சுத்தம் என்பது மிகவும் கடுமையாக பின்பற்ற பட வேண்டிய நடைமுறை. அதை அப்படியே காற்றில் பறக்க விட்டு இருக்கிறார்கள்.


பிரியாணி;-

பல நாள் ஃபிரிட்ஜில் இருக்கும் நாசரை இப்போதுதான் இறந்ததாக ராம்கி சொல்ல போலீஸ் ஏற்றுக்கொள்கிறது. அதன் பின் சில நாட்கள் கழித்து காட்சிகள் வருகின்றன. இந்த இடைப்பட்ட நாட்களில் போஸ்ட்மார்ட்டம் நடந்திருக்கும். அதில் கண்டுபிடித்திருப்பார்கள் . போஸ்ட்மார்ட்டம் நடந்ததா? அதில் கண்டுபிடித்தார்களே என்பதே கண்டறியப்படாமல் அப்படியே தொங்கலில் விட்டு இருப்பார்கள்.

அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

  •  - 10/22/2016
  •  - 11/2/2012
  •  - 11/2/2012
  •  - 10/14/2012
  •  - 7/28/2012

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP