Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Tuesday, September 28, 2010

கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே

அன்புள்ள நண்பா

நலமாக இருக்கிறாயா?  நலம் என்றே நினைத்துக்கொண்டு நானும் எழுதுகிறேன். நீயும் தொடர்ந்து படி. நண்பா

உனக்கு மகிழ்ச்சியான செய்தி என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு செய்தியைப் பற்றி பகிர்ந்து கொள்ளத்தான் இந்தக் கடிதம். இந்திய மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்துவதற்காகவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப் படுத்துவதற்காகவும் தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு வருவதைப் பற்றி மகிழ்ச்சியாக அளாவினாயே, உன் மகிழ்ச்சியில் மண்ணைப் போட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இதை எழுதவில்லை. நண்பா..,


மருத்துவம் படித்துவிட்டாய். நமது ஊரிலேயே அரசுப் பணியிலும் சேர்ந்துவிட்டாய். என்று மகிழ்ச்சியோடு மார்தட்டினாயே . உன்னிடம்தான் சில செய்திகளை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் நண்பா..,  நம் கிராமத்து பள்ளியில் படித்த மாணவர்கள் எல்லாம் மருத்துவம் படிக்கிறார்கள் என்று பெருமையோடு பேசித் திரிகிறாயே நண்பா,  ஒரு காலத்தில் நீ தான் முதலில் போனாயு. இப்போதெல்லாம் நம் ஊரின் எல்லா முனைகளிலிருந்தும் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள் என்று மகிழ்வாயே நண்பா.,

நீங்களெல்லாம்  இங்கு பணிக்கு வந்த பின்புதான்  ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகளுக்கு செல்லும்போது ஒரு நெருக்கமான சூழல் இருக்கிறது என்றாயே நண்பா!

தந்தையாய் வாங்கிய கடன் முடிந்துவிட்டதாம்.  எனவே இந்த ஆண்டு மேல்படிப்புக்கு அரசு கோட்டாவிலேயே சென்று மீண்டும் நம் ஊருக்கே வந்து இங்கேயே மருத்துவமனை கட்டுவேன் என்று சொன்னானே அருந்தமிழ்ச் செல்வன். அவனுக்குத்தான்  இப்போது கெட்ட நேரம். 

இனிமேல்  மேல்படிப்புத் தேர்வுகள்  இந்திய அளவிலாம.  இந்திய அரசு கொள்கை முடிவு என்று அடிபடுகிறது நண்பா. அவனால் போட்டி போட முடியுமா என்று தெரியவில்லை நண்பா,

என்ன தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பதுதான் நியதி என்கிறாயா? உண்மைதான் நண்பா, தமிழ்நாட்டில் உள்ள இடங்கள் தமிழ்நாட்டிற்கே சொந்தம் என்றால்  அவனுக்கு கண்டிப்பாக கிடைக்கும் நண்பா. உலக அளவில் அந்த மேல் படிப்பு இடத்திற்கான அடிப்படைத் தகுதிகள் அவனுக்கு இருக்கின்றன நண்பா. பின் ஏன் அவனுக்கு கிடைப்பது சிரமம் என்கிறாயா?  திருச்சூரிலும் மும்மையிலும் டெல்லியிலும்  இளைஞர்கள் முழுநேரமும்  அந்த மேல் படிப்புப்பாக நாள் முழுவதும் படித்துவருகிறார்கள் நண்பா. இவனோ   நம் ஊர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகல் முழுக்க வேலை செய்து கொண்டிருக்கிறான். இரவிலும் பிரசவம் தொடர்பான தொலைப்பேசி அழைப்புகளில் பேசிக் கொண்டே இருப்பானே நண்பா,    இப்போதெல்லாம் நமது கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவங்கள் அதிகம் என்று பெருமையாக சொல்வாயே நண்பா. விதண்டாவாதம் செய்பவர்களுக்கு தமிழக அரசின் இணைய தளத்தை காட்டி பெருமையாக சொன்னாயே நண்பா, அதையும் மீறி பேசியவர்களிடம், பிறப்பு இறப்பு பதிவாளரின் முகவரிகளை வாங்கி அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நம்ம ஊர் பையன் நமக்காக உழைக்கிறான் என்றாயே நண்பா. அவனுக்குத்தான் இந்த அதிர்ச்சி நண்பா,

மாலை வேலையில் உங்கள் ஊரில் கிளினிக் வேறு போட்டிருக்கிறான். காசு வாங்கிக் கொண்டு வைத்தியம பார்த்தாலும் இந்த ஊரில் வைத்தியம் பார்க்க ஒருவன் வருகிறானே என்று இருமாந்து இருந்தாயே நண்பா,  அவன் அந்த கிராமத்தில் உட்காரமல் இருந்திருந்தால் ஒருவேளை அவனுக்கு மேல்படிப்பு கிடைக்குமோ என்னவோ?



சென்ற மாதம் புதிதாக சேர்ந்திருந்தானே செந்தமிழ்செல்வன். இங்கேயே இருந்து தந்தையின் கடன், தங்கையின் திருமணம் இரண்டையும் முடித்துவிட்டு  பின்னர் ஒரு வீட்டையும் கட்டும்வரை இங்கேயே இருப்பேன். பின்னர் மேற்படிப்பை முடித்துவிட்டு இங்கேயே திரும்பிவிடுவேன் என்றானே? இந்த செய்தியைக் கேட்டதும்  பெருநகரத்தில் ஒரு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தது மட்டுமல்லாமல் தனியாக கோச்சிங் வகுப்புகளுக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டானாம். இவனைப் போல் எத்தனை பேர் கிளம்பப் போகிரார்களோ தெரியவில்லையே நண்பா?


இவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நம் ஊரிலேயே தொடங்கு என்றெல்லாம் கனவுகளை ஊட்டினாயே நண்பா.  வெளியூரிலிருந்தெல்லாம் கூட அதிகப் பேர் பயன்பெருவார்கள் என்றாயே நண்பா,    கனவு கானல் நீர் ஆகிவிடும்போல இருக்கிறதே நண்பா..,


இது மட்டும் அல்ல நண்பா, இன்னும் இருக்கிறது.

மருத்துவம் சேரவே  இனி பொது நுழைவுத் தேர்வாம்.  ஆமாம் நண்பா இனிமேல் ஐ.ஏஎஸ் தேர்வு போலத்தான்.  மாநிலத்திலிருந்து 30 பேர் 40 பேர் எம் பி பிஎஸ் சேர்ந்து விட்டார்கள் என்று செய்திவந்தாலும் ஆச்சரிய படத் தேவையில்லை. அந்த ஐ, ஏ, எஸ்ஸிலும் முதல் முறையே சேருபவர்கள் குறைவுதான் நண்பா,  நம் கிராமத்திலிருந்து சென்றதால்தான் மேற்கண்டவர்கள் எல்லாம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலையாக இருந்தார்கள் என்று சொல்லி வருவாயே நண்பா, அந்த கிராமத்து மாண்வர்களுக்கு இந்த பழம் புளிக்கும் என்று ஆகி விடுமோ என்ற அச்சம் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறது நண்பா,   பெருநகர மாணவர்களாலேயே இந்த போட்டியில் பங்கெடுப்பதும் வெல்வதும் மிகக் கடிமாகவே இருக்கும் நண்பா,  எம்பிபிஎஸ் சேர தேவையாக அனைத்து தகுதிகளும் இருந்தும் போட்டித் தேர்வில்  வெல்ல முடியாமல் போய் ..   சே.......  நினைத்தாலே நெஞ்சம் பதருகிறது நண்பா,    வெளி மாநில மாணவர்கள் இங்கு வந்து படித்து பின்னர் நம் கிராமத்திற்கு வந்து  என்ன கொடுமைடா சாமி,   ஏனோ  பாரதிராஜாவின் சத்யஜித் நினைவிற்கு வந்து தொலைக்கிறார்,


நண்பா இந்த சூழலில் தமிழக மக்களின் நலனை கருத்தில்கொண்டு தமிழக முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் ஓரணியில் நின்று போராடி வருகிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றியடையவும், தமிழக மக்களின் நலன்களைக் காக்கவும் நண்பா, முடிந்த வரை பிராத்தனை செய் நண்பா,  உண் நண்பர்களையும் செய்யச் சொல் நண்பா,


நன்றி

உனது நண்பன்

மின்னஞ்சலில் படிப்பவர்கள் தளத்திற்கும் ஒரு முறை வந்து கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். நன்றி

Read more...

Wednesday, August 11, 2010

இதுக்குப்போயி அலட்டிக்கலாமா..?

அவர் அந்த ஊரின் பெரிய பணக்காரர். அவரின் மனைவிக்கு கடுமையான நெஞ்சுவழி. ஏறக்குறைய நேரம் இரவு 11ஐ தாண்டி விட்டது. நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கிலோமீட்டர் தாண்டியிருக்கும் கிராமம் அது. சற்று பெரிய கிராமம். (வாசு, ரவிக்குமார் படங்களில் காட்டப் படுவது போன்றது).

வழக்கமாக அந்த ஊரில் அந்த அம்மாவிற்கு ஊசி போடுபவர் எங்கோ வெளியூர் போய்விட்டார். இப்போது என்ன செய்வது என பண்ணையாரும் அவரது கைத்தடிகளும் மண்டையை பயங்கரமாக கசக்கிப் பிளிந்து கொண்டிருந்தனர். அப்போது கணக்குப் பிள்ளை ஒரு வழியைக் கூறினார். அந்த ஊரின் அருகிலுள்ள ஊரில் ஒரு ஆரம்ப சுகாரார நிலையம். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிதாக ஒரு மருத்துவர் வந்திருந்தார். அவரின் தந்தைதார் இதே ஊரில் ஏற்க்குறைய பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன் ஆசிரியாராய் பணியாற்றியிருந்தார். அதனால் இந்த ஊரில் இருந்த சில பெருந்தலைகள் அவருக்கு ஓரளவுக்குப் பழக்கம். அதனால் இதே ஊரில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்க ஏற்பாடு செய்திருந்தார்.

கணக்குப் பிள்ளை சொன்னவுடன் பணக்காரருக்கும் அதுவே சரியான யோசனையாகப் பட்டது. மருத்துவரை அழைக்க பணக்காரரின் கார் புறப்பட்டது. அங்கே மருத்துவரின் வீட்டுக் கதவு தட்டப் பட்டது. மருத்துவர் வந்தார். தான் இன்று மருத்துவ முகாமிற்கு சென்றிருந்ததாகவும் சற்றுமுந்தான் வந்ததாகவும் தெரிவித்தார்.

அவசியமென்றால் நோயாளியை இங்கு அழைத்துவாருங்கள் பார்க்கிறேன்
என்று மருத்துவர் தெரிவித்தார்.

தாய் அவுக இங்கெல்லாம் வரமாட்டாக.. அதுவும் நெஞ்சுவலின்னு சொல்றோம் . வா டாக்டர். இது கைத்தடிகள்.

மருத்துவர் தனக்கு முடியவில்லைஎன்று மறுக்க மருத்துவரின் தந்தைக்கு அலைபேசி பறந்தது. தந்தையார் மகனிடம் அலைபேசியில் பேசினார். சூழ்நிலைக்கு தகுந்தது போல் அனுசரித்துப் போகுமாறும் பெரிய குடும்பத்தினை பகைத்துக் கொள்ளவேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டது.

மருத்துவர் புறப்பட்டுப் போனார். அங்கே போய் பார்த்த போது பண்ணைக் காரின் மனைவி பெரிய சைஸ் கலர் டி.வி.யில் ஏதோ நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஈ. சி. ஜி. பரிசோதனை எடுக்க வேண்டுமே...

அதெல்லாம் எடுத்திருக்கிறோம். பல்வேறு பரிசோதனைகளும் செய்திருக்கிறோம். என்று பெரிய புத்தகத்தை எடுத்து கையில் கொடுத்தனர். மருத்துவர் பார்த்தார். அது நானூறு கி.மீ. தூரத்தில் இருக்கும் பெருநகரத்தில் பார்த்த மருத்துவ குறிப்புகளின் தொகுப்பு.

பயப்பட ஒன்றும் இல்லை. இது சாதாரண வலிதான்
இது மருத்துவர்.

நானும் இதைதான் டாக்டர் சொன்னேன். இதுக்குப் போய் டவுனுக்கு கூப்பிடறாங்க .. நான் தான் இங்கிருக்குறவரையே கூப்பிட்டு ஊசிப் போட்டுக்கலாம்னு சொன்னேன். இது பண்ணைக்காரர் மனைவி.

மருத்துவர் தான் வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பும்போது அவருக்கு ஃபீஸ் எவ்வளவு எனக் கேட்கப்பட்டது. மருத்துவரும் பெருந்தன்மையாக
அப்பாவுக்குத் தெரிஞ்சவர்ன்னு சொல்லறீங்க . என்க்கு ஃபீஸ் எதுவும் வேண்டாம். என்றார் மருத்துவர்.

டாக்டர் அப்படியெல்லாம் நீங்கள் மறுக்கக் கூடாது. கண்டிப்பாக நீங்க வாங்கிக் கொண்டே தீர வேண்டும். என்று கையில் பணத்தினை திணித்தனர். அது ஒரு பத்து ரூபாய். ( அப்போது அந்த ஊரில் ஒரு டீயின் விலை 2.50)

மருத்துவர் அதிர்ச்சியில் நின்றிருக்க அவர்களே தொடர்ந்தனர். டாக்டர் நாங்க எப்போதும் 5தான் கொடுப்போம். நீங்க நம்ம வாத்தியாரோட பையன் அப்படிங்கறதால 10 கொடுத்திருக்கிறோம்.

( அந்த ஊரில் அந்த அம்மாவுக்கு எப்போதும் ஊசி போடுபவர் ஒரு அனுபவரீதியில் ஆனவர். அவருக்குத்தெரிந்த நாலைந்து மருந்துகளை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருப்பவர். மக்கள் அவரையும் இவரையும் ஒரே தட்டில் வைத்து பார்த்திருக்கின்றனர்)

Read more...

Sunday, August 8, 2010

பத்து நோயாளிகளை வர வைக்கும் வழிகள்

புகுமுன்:-

டாக்டர் என்னும் தொழிலாளி   தொடர்ச்சியாகவே இந்த இடுகை அமைகிறது.  புதிதாக மருத்துவத் தொழிலில் இறங்கும் மருத்துவ பட்டதாரிக்கு எனக்கு என் மூத்தோர் சொன்ன வார்த்தைகளை தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கிறேன். மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்பார்கள்.

ஆனால் புதிதாக மருத்துவம் படித்த மாணவர்களில் பெரும்பாலானோருக்கு சுவை யெல்லாம் உணரக் கூடிய நிலை இருப்பதில்லை.  தமிழகத்தில் மருத்துவம் படித்து வரும், கடந்த சில பத்தாண்டுகளில் படித்து முடித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள்  பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் குவித்த ஒரே தகுதியில் உள்ளே வந்தவர்கள். அவர்களில் பலரின் பெற்றோர், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வசதிப்படைத்தவர்கள் என்பவர்கள் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பவர்கள்தான்.  வெகுசிலரே  பெரிய மருத்துவமனைக்குச் சொந்தக் காரர்களின் பிள்ளைகள்.

இந்த நடுத்தரக் குடும்பத்தை, மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாங்கள் செய்யப் போகும் தொழிலின்  மேன்மை தெரிந்திருந்தாலும்,  அவனது கடமை அவனை பயமுறுத்திக் கொண்டேதான் இருக்கும். அவர்கள் வாங்கிருக்கும் வங்கிக் கடன், அவர்களை மருத்துவக் கல்லூரில் சேர்த்ததால் அவர்களது சகோதர்களையும் தனியார் தொழிற்நுட்பக் கல்லூரிகளில் சேர்த்து பெற்றோர் வாங்கி வைத்த கடன்,  சில நேரங்களில் இவர்களைப் படிக்க வைப்பதால் இவர்களின் தங்கைகளுக்கு உள்ளூர் கலைக் கல்லூரி படிப்பை மட்டுமே தரக் கூடிய சூழல் அவர்களது பெற்றோருக்கு இருக்கும். எனவே  தங்கைக்கு வயதாகும் முன்பே திருமண ஏற்பாட்டை கவனிக்க வேண்டும். சில நேரங்களில் அக்கா வேறு இருப்பார். அவரது திருமணத்திற்கு பொருள்  ஈட்ட வேண்டு,   ( எம்.பி.பி.எஸ் முடிக்கும் போதே 17+6 = 23 வய்து குறைந்த பட்சம் ஆகியிருக்கும்.) .  எனது ஜூனியர் மாணவர் ஒருவரது படிப்புச் செலவுக்காக அவரது தம்பி  பனியன் கம்பெனியில் வேலை பார்த்து பணம் அனுப்புவார்.  செலவு என்பது குறைவுதான்., இருந்தாலும்  குடும்பத்தில் இன்னொருவரும் சம்பாதிக்க வேண்டிய சூழல் .   இவ்வாறாக பெரிய மனச்சுமையோடுதான்  பெரும்பாலான மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வெளியே வருகிறார்கள்.

இவர்களுக்கு நெல்லிக் கனியின் கசப்பு பெரும்பாலும் தெரிய வாய்ப்பு இல்லாத காரணத்தால்  மூத்தோர் சொற்கள் நன்றாகவே போய் சேருகின்றன.

======================================================================

சென்ற இடுகையில்  அனைத்து மருத்துவர்களும் (சில சிறப்பு மேல் படிப்புகளைத் தவிர ) தனியாக சிறிய அளவிளான கிளினிக் தொடங்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.  அனைவரின் வாழ்க்கையிலுமே இந்த கிளினிக் வாழ்க்கை மிக முக்கியமானது.   இந்த கிளினிக்கில்தான்  ஒவ்வொரு நோயாளியின் அருமையும் தென்படும்.  தினமும் பார்க்கும் நோயாளிகளைப் பற்றிய சிறுகுறிப்புக்களை ஒரு பதிவேட்டில் ஏற்றிக் கொண்டே வர வேண்டும்.   ஒவ்வொரு நாள் கிளினிக் முடிந்த உடனும்,  நோயாளிகளைப் பற்றி அசைப் போட வேண்டும்.  இதில்  கிளினிக் வழியில் இருந்ததால் வந்தவர்கள் எத்தனை பேர்? அருகிலுள்ள மருத்துவ மனையில் கூட்டமாக இருந்ததால் வந்தவர்கள் எத்தனை பேர்?  நம்மையே எதிர்பார்த்து வந்தவர்கள் எத்தனை பேர் ?  வந்தவர்களில் நாமே வைத்தியம் பார்க்கும் அளவில் இருந்தவர்கள் எத்தனை பேர்? பரிந்துரை செய்யப் பட்டவர்கள் எத்தனை பேர் என்பதையும்  வந்த நோயாளிகளுக்கு நாம் கொடுத்த மருத்துவம் சரியானதுதானா என்பதையும் ஏதாவது கூட்டி அல்லது குறைத்து இருக்கலாமா? என்பதையும்  யோசிக்க வேண்டும்.

குறிப்பாக முதல் நாளில் வந்து இரண்டாம் நாளும் வந்து எந்த முன்னேற்றமும் இல்லை என்று சொன்னால் ஏன் இல்லை, இதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும் போனற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.    இது போன்ற  விஷயங்களில் நன்கு கவனம் செலுத்தி வந்தால் முதல் இரண்டு மாதங்களில் தினமும் ஐந்து பேராவது வர தொடங்கி விடுவார்கள்.  

இரண்டாவது மாத முடிவில் ஐந்து என்பதே பெரிய எண்ணிக்கை . எனவே மனம் தளராமல் உழைக்க வேண்டியது தான்.  தொடர்ந்து உழைத்தால், ஓராண்டு முடிவில் 20 - 25 பேரைப் பார்க்க ஆரம்பிக்கலாம்.    இந்த கால கட்டத்தில்  வரும் நோயாளிகளின் பரிந்துரையில் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.  இந்த வகையான நோயாளிகள்தான் நமக்கு தனி வாடிக்கையாளர்களை உருவாக்குவார்கள். அவர்களது எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றை  தனியே உற்று நோக்கிவந்தால் மட்டும் நாமும் ஒரு நிலை பெற முடியும்.

இது போன்ற சிறு கிளினிக் தொடங்கும்போது ஊசி போடுதல், காயத்துக்கு மருந்து கட்டுதல்,  மருந்துகளை எப்படிச் சாப்பிடுவது என்று சொல்லிக் கொடுத்தல் போன்ற பணிகளை  ஒருத்தரே செய்வதுதான் நலம்.  தனியார் மருத்துவம்னையில் வேலைக்குச் சேர்ந்தாலோ அரசுப் பணியிலோ இந்த வாய்ப்புகள் கிடைக்காது.  இந்த வேலைகள் செய்து வந்தால் மட்டுமே நோயாளிக்கும் நமக்கும் ஒரு நெருக்கம் அமையும். சில காயங்களை தனி ஒரு ஆளாக சுத்தப் படுத்தி தையல் போட்டு பின்னர் கட்டும்போட்டு, ஊசி போட்டு அனுப்பும்போது    கிடைக்கும்     தொழில் திருப்தி என்பது ஒரு காகிதத்தில்  எல்லாவற்றையும் செய்யுமாறு ஆணைகளை எழுதித் தரும்போது கிடைக்காது.   பொதுவாக கிளினிக் ஆரம்பிக்கும்போது மிக ஆரம்ப கட்டத்தில் கூட்டுவது,  வரிசைப் படுத்தி அனுப்புவது போன்ற வேலைகளுக்கு மட்டும் ஒரே ஒரு வயதானவரை வேலைக்கு வைத்துக் கொள்ளுவது போதுமானது.

சில நப்ர்கள் காயங்களில் தண்ணீர் பட்டால் சீல் பிடித்துக் கொள்ளும் என்ற எண்ணத்தில் காயம் இருக்கும் பகுதி முழுவதும் மோசமாகப் பராமரித்து வருவார்கள். இதில் கிளம்பும் நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு சுத்தம் செய்து ஆற்றுவது என்பதே ஒரு சவாலாக இருக்கும்.  இதெல்லாம் செய்தால் மட்டுமே நமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்க முடியும்.  ஒவ்வொரு நோயாளியின் முக்கியத்துவத்தையும் உண்ரும்போதுதான் நாம் சம்பாதிக்கும் காசின் மதிப்பும் நமக்குத் தெரியும்.  இந்தக் கட்டத்தை தவர விடுவதுதான் பல பெரிய மருத்துவர்களின் மகன்கள் தந்தை அளவிற்கு சாதிக்க முடியாமல் போவதற்குக் காரணம்.   ஒரு ஆலமரத்தின் அடியில் சிறுபுல் பூண்டுகூட முளைக்காது என்பதற்கு உதாரணம் இவர்கள்தான்.    ஒவ்வொரு வாடிக்கையாளரையும் சம்பாதிப்பது எவ்வளவு சிரமம் என்பதையும் அதைத் தக்கவைப்பது அதைவிட எவ்வளவு சிரமம் என்பதும் தெரிந்தால் மட்டுமேதொழிலில் நிற்பது சாத்தியம். 


நோயாளியிடம் பீஸ் வாங்குவது என்பது நமது உரிமை.,  சராசரியாக அந்தப் பகுதியில் வாங்கப் படும் ஃபீஸை வாங்குங்கள்.  எந்த நேரத்திலும் குறைக்காதீர்கள்.  போட்டியாளர்களின் உள்ளாவீர்கள். தவிரவும் உங்களை கற்றுக்குட்டி டாக்டர் என்றும்  ஏமாந்த சோணகிரி என்றும் முடிவு செய்துவிட வாய்ப்பு இருக்கிறது.  அதே நோயாளியால்  அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்ற நேரத்தில்  இந்தத் தொகைதான் வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள்.  சில நேரங்களில் இலவசமாகப் பார்த்தால் கூட தவறில்லை.

================================================================

தொடரும்...................................................

Read more...

Wednesday, August 4, 2010

டாக்டர் என்னும் தொழிலாளி

புகுமுன்:-

இந்த இடுகை   மருத்துவப்  பட்டப் படிப்பு படித்துவிட்டு தொழில் தொடங்க இருக்கும் இளைஞர்களுக்கானது. நான் தொடங்கியபோது எனது மூத்த சகாக்கள் சொன்னதன் தொகுப்பு.  எனக்கு நினைவில் இருப்பவை மற்றும் என்னை நிலைநிறுத்திக் கொள்ள உதவிய வழிகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.
இதில் வாதம் செய்ய நினைப்பவர்கள் ஆக்க பூர்வமான வாதத்திற்கும் அல்லது அவர்களின் உள்ளத்தில் குடைந்து கொண்டிருக்கும் சந்தேகங்களை மட்டுமே கேட்கவும்.


1.மருத்துவப் படிப்பு முடித்தவுடன் நீங்கள் எதிர்கால வாழ்க்கை முறையை தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.
அ..மருத்துவத்தொழில் பிடித்திருக்கிறது. இதில் சாதிக்க வேண்டும்.
ஆ.மருத்துவத் தொழில் பிடிக்கவில்லை. மாறிவிட  நினைக்கலாம்

=======================================================================
மாறிவிட நினைக்கிறீர்கள் என்றால் உங்கள் முன் உள்ள வழிகள்:

1. இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி ஆகியவற்றிற்கு சென்று விடலாம்.
2.மருத்துவத் துறையிலேயே மருத்துவம் சார் படிப்புகளுக்கு ஆசிரியப் பணிக்குச் சென்றுவிடலாம்.
3.இன்னும் சில வழிகள் உள்ளன. இந்த இடுகையில் மருத்துவம் பற்றி மட்டும் பேச விருப்பம்.
======================================================================

மருத்துவத் துறையில் சம்பாதிக்க நினைக்கிறீர்கள். அனைவருக்குமே சம்பாதிப்பதுதான் முதல் நோக்கமாக இருக்கமுடியும்.  எந்த தொழிலுக்குமே  முதல் என்பது  நற்பெயர், நேர்மைதான்.  அதுவும் மருத்துவத் தொழிலில்  வருமானம் என்பது நற்பெயரினை வைத்துத்தான். எனவே நற்பெயருக்கு பங்கம் வராமல் தொழில் செய்ய வேண்டும்.

=================================================================

உங்களுக்கு வசதி இருந்தாலும், இல்லாவிட்டாலும்  முதலில் ஆலோசனை மட்டும் தரக்கூடிய சிறிய வகை கிளினிக் தொடங்குங்கள்.

உங்கள் தந்தை  மிகப் பெரிய மருத்துவ மனைக்குச் சொந்தக் காரராக இருந்தாலும்  முதலில் தனியாக கிளினிக் தொடங்குவதே நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.

இதில் சில வகை சிறப்பு மேல் படிப்பு முடித்தவர்களுக்கு விலக்குக் கொடுக்கலாம். ஆனால் மேல்படிப்பு படித்தவர்கள்கூட கிளினிக் தொடங்குவதுதான் நன்று.

உள் நோயாளியாகச் சேர்க்க வேண்டியவர்களை அருகிலுள்ள மருத்துவ மனையில் சேர்த்துக் கொள்ளலாம்.

=======================================================================
நீங்கள் அரசுப் பணியில் இருக்குறீர்கள் என்றால்  அந்த ஊரிலேயே மருத்துவமனை தொடங்கும் யோசனை இருந்தால் நல்ல போக்குவரத்து சிறப்பு மருத்துவர்கள் அழைத்தால் வர தயாராக இருக்கும் இடத்தில் கிளினிக் தொடங்குங்கள்.  அது நகரமாக இருந்தாலும் சரி, பெரிய கிராமமாக இருந்தாலும் சரி.

மேற்படிப்பு படிக்கப் போகும் எண்ணத்தில் இருந்தால் நல்ல மக்கள் தொகையும், மக்கள் வந்து போகும் வசதியும் உள்ள கிராமத்தில்  கிளினிக் தொடங்கலாம்.. அங்கே ஏற்கனவே ஓரிரு மருத்துவர்கள் இருந்தாலும் கவலைப் பட தேவையில்லை.   இந்தக் கிராமங்கள் நீங்கள் படிக்கச் செல்லும் வரையிலான சில ஆண்டுகளில் உங்களுக்கு நல்ல அளவிலான நோயாளிகளைத் தரவல்லன.

இங்கும் உங்கள் நற்பெயரைக் கட்டிக் காக்க வேண்டியது அவசியம். காலந்தவறாமை மிக அவசியம்.  கிளினிக்கில்  பலகையில் எழுதிய நேரத்தில் வந்து அமரவேண்டும்.  அதேபோல் நீங்கள் அரசு மருத்துவமனையிலும் நல்ல பெயரை சேர்க்க வேண்டும்.  நீங்கள் சொந்தக் கிளினிக்கில் கொடுக்கும் தரமே அரசு மருத்துவமனையிலும் இருக்கும் என்ற எண்ணம் தேவை. நாட்டில் அரசு மருத்துவமனையில் கூட்டத்தோடு கூட்ட்மாக வர விருப்பம் இல்லாத நிறையப் பேர் இருக்கிறார்கள். தவிரவும் பகலில் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால் விடுப்பு எடுக்க வேண்டிய அவசியம் உள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள்.  அவர்கள் உங்கள் கிளினிக்கைத் தேடி வருவார்கள்.


எந்தக் கால கட்டத்திலும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை உங்கள் கிளினிக்கிற்கு வரச் சொல்லாதீர்கள்.  அது உங்கள் நேர்மையான நற்பெயரைக் கெடுத்துவிடும்.  அதே போல நாளை அரசு மருத்துவமனைக்கு வருகிறேன். இந்த மருந்துகளை தாருங்கள் என்று சொல்பவர்களுக்கு முகம் கோணாமல் பதில் தாருங்கள்.


======================================================================

அரசுப் பணியில் இல்லை என்றாலும் காலந்தவறாமை, பொறுமை, நேர்மை ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும்.  அரசுப் பணியில் இல்லாதவர்கள்  முழு நேரமும் அமர்ந்தால் இங்கு வந்தால் நல்ல தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கும். அருகிலுள்ள மருத்துவமனைகளில் உள்ளவர்களுடன் நல்ல உறவினை வளர்த்துக் கொண்டு உங்கள் சிபாரிசுக் கடிதங்களுக்கு நல்லதொரு மதிப்பினைக் கொடுக்கும் வகையில் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.


======================================================================

எந்தக் காலத்திலும் நோயாளிக்கு மருந்துக்கள் எழுதுவதில் உங்கள் சொந்த முடிவை எடுங்கள். சில மருந்து நிறுவனங்கள் கொடுக்கும் பரிசுப் பொருள்களுக்கு  ஆசைப் படாதீர்கள். நோய் குணமடையவில்லை என்றால் நோயாளிகள் நிரந்தரமாக வேறொரு மருத்துவரைப் பார்க்கச் சென்றுவிடக் கூடும்.  பிராண்ட் X எழுதினால் அதே  பிராண்ட் X  தான் நோயாளிக்கு கிடைக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் சில நிறுவனங்களின் தரம் சில நிறுவனங்களில் இருக்காது,   தரமான மருந்துகள் எந்த நிறுவனத்தால் குறைந்தவிலைக்கு வழங்குகிறதோ அந்த மருந்துகளையே  தேர்வு செய்யுங்கள்.  உங்கள் நோயாளிகளுக்கு த்ரமான மருந்துகள் கிடைப்பதற்கு நீங்களே பொறுப்பு.


நோயாளி வெளியூர் சென்றால் கூட அந்த மருந்து அங்கே கிடைக்கும் வகையிலான மருந்துகளையே தேர்வு செய்யுங்கள்.

==============================================================

உங்களுக்கு அவசியம் என்று தோன்றும் பரிசோதனைகளை செய்ய, செய்யச் சொல்ல தயங்காதீர்கள்.  அவசியமில்லை என்றால் எந்த ஒரு காரணத்திற்காகவும் செய்யாதீர்கள்.

================================================================

அடுத்த அடுத்த கட்ட மருந்து பிரயோகங்களைப் ப்ற்றி நன்கு தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.  உங்கள் பாடப் புத்தகங்களில் உள்ள வழிமுறைகளை உங்கள் பகுதி ஏற்றாற்போல உபயோகிக்க பழ்கிக் கொள்ளுங்கள். எந்த சூழலிலும்  புத்தகங்களும் , துறைத்தலைவர்களும் உங்களுக்கு சொல்லிக் கொடுத்த வழிமுறைகளை மீறாதீர்கள்.

===============================================================
எந்தச் சூழலிலும் உங்களுக்குத் தெரியாத மற்றும் உங்கள் பாடத்திட்டத்தில் இல்லாத மருந்துக்களை உபயோகப் படுத்தாதீர்கள்.  உங்கள் ஊரில் இருக்கும் பயிற்சி இல்லாத மருத்துவராக அழைக்கப் படும் நபரைப் பார்த்து உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள் . உங்களிடம் திறமை இருக்கும்போது மக்கள்  கண்டிப்பாக திறமையாளரின் பக்கமே வருவார்கள்.



================================================================
இந்திய மருத்துவக் கழகம் போன்ற அமைப்புக்களில் உறுப்பினராகிக் கொள்ளுங்கள். அவர்கள் நடத்தும் தொடர்கல்வி உட்பட அனைத்துச் செயல்பாடுகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அதில் உள்ள திட்டங்களில் உங்களை உறுப்பினராக்கிக் கொள்ளுங்கள்.

==================================================================
இண்ட்லியில் வாக்களிக்க இங்கு அழுத்திச் செல்லவும்


இதன் அடுத்த பகுதி விரைவில் வரும்.

Read more...

Thursday, July 1, 2010

இதயமே.., இதயமே...,


=========================================================

=========================================================


பகிர்ந்து கொள்வதற்காக யூ ட்யூப்பில் ஏற்றிய கணவான்கள் வாழ்க

தமிழீஷில் ஓட்டுக்காக இரண்டு முறை குத்தவும்

Read more...

Wednesday, June 30, 2010

உயிரோடு விளையாடி....., ஒரு கிராமப் புற மருத்துவம்

B R M S

Bachelor of Rural Medicine and Surgery

மத்திய அரசால் புதிதாக அறிமுகப் படுத்தப் பட இருக்கிற மருத்துவப் படிப்பு. இந்தப் படிப்பு 3 1/2 ஆண்டுகள் இருக்கும் என்றும் இதை முடிப்பவர்கள் கிராமங்களில் ஊசி போட்டு மருத்துவம் பார்க்கலாம் என்று செய்திகள் சொல்லுகின்றன. ஆனால் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்றும் சொல்லுகிறார்கள்.  இவர்கள் கிராமங்களில் மட்டுமே மருத்துவம் செய்ய அனுமதி என்று சொல்லுகிறார்கள்.

கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நீக்க இந்த ஏற்பாடு என்று சொல்லுகிறார்கள்.
===================================================================

இந்திய அளவில் நிலமை எப்படி இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான கிராமப் புற மருத்துவமனைகளில் (அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ) மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள்.  வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிக்காக நிறையப் பேர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசும் தேவைக்கேற்ப கடந்த சில ஆண்டுகளில் மூன்று, ஆறு மாத இடைவெளிகளில் காலி இடங்களை நிரப்பிக் கொண்டும் புதிய பணியிடங்களை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.

=====================================================================

இப்போது பி. ஆர். எம். எஸ் படிப்பு பற்றி எனக்கு சில சந்தேகங்கள். யாராவது இது பற்றிய சுட்டிகள் கிடைத்தால்  பின்னூட்டத்தில் கொடுங்கள். தெளிவு பெற உதவியாக இருக்கும்.

1. எம்.பி.பி.எஸ் க்கு சமமான கல்வியாக் பி.ஆர். எம் .எஸ் இருக்க முடியுமா?
கண்டிப்பாக முடியாது எனபதால்தான் இது வேறொரு படிப்பாக அமைகிறது.
அப்படியென்றால் கிராமப் புறத்தான் உயிர் நகரவாசிகளின் உயிரை விட மட்டமானதா? ( இந்தக் கேள்வியைப் பலரும் கேட்டாலும் எனது முதல் கேள்வியும் அதுதான்)

2. பல நகரங்களை ஒட்டி கிராமப் பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன. அந்த கிராமப் பஞ்சாயத்துக்களை பொதுவாக நகரம் என்றே பொதுமக்கள் சொல்லுவார்கள். ஆனால் நிர்வாகம் கிராமப் பஞ்சாயத்து, நகரப் பஞ்சாயத்துகளில் வரும். அதாவது ஆங்கிலத்தில் ரூரல் ஏரியா.  அவைகளில் இவர்கள் தொழில் செய்ய குவிய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?


ஒருவேளை இப்படி ஒரு படிப்பு வந்தால் இந்த விஷயத்தில் இரண்டு வகையினருக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது  

3.இவர்கள் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது என்று சொல்லுகிறார்கள். ஆனால் 3 1/2 ஆண்டுகள் படிக்கும் நர்சுகள் மருத்துவருக்கு அறுவை சிகிச்சையின் போது உதவி செய்கிறார்கள். மருத்துவரின் கட்டளைக்கேற்ப அறுவை அரங்கில் செவிலியர்கள் செயல்பட்டால் மிக விரைவில் வெற்றிகரமாக அறுவை சிசிக்கை முடிவடையும். அதுபோன்ற திறமைவாய்ந்த  செவிலியருக்கு அறுவை சிகிச்சை நேரத்தையே மாற்றி அமைக்கக் கூடிய நிகழ்ச்சிகளும் இருக்கின்றன.

இந்த பி. ஆர். எம். எஸ் மருத்துவர் அவரை விட மேம் பட்டவரா?  இவர் அறுவை சிகிச்சைப் பக்கமே போகக் கூடாது என்பதால் செவிலியரே மேம்பட்டவர் என்பதாகத்தான் தோன்றுகிறது.

இப்படி ஒரு அரைகுறை படிப்பு ஆரம்பிப்பதற்கு பேசாமல் செவிலியருக்கே தனியாக தொழில் பார்க்கும் உரிமை வழங்கிவிடலாமே.

4. பி. ஆர். எம். எஸ் படிக்கும் மருத்துவர்  மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால்  அவருக்கு திறமையும் இருந்தால் அவருக்கு என்ன வழி காட்டப் போகிறார்கள்?

எம்.பி.பி.எஸ் ஸின் மேல்படிப்புகளுக்கு அனுப்பலாம் என்றால் மாணவர்கள் பி. ஆர். எம். எஸ்ஸை ஒரு குறுக்கு வழியாக கருத மாட்டார்களா?

அல்லது  அவர்களுக்கே தனி மேல் படிப்புகள் உருவாக்கப் பட்டால் அப்போது பாடத்திட்டங்கள் மற்றும் செலவுகள் எம்.பி.பி.எஸ் போன்றே ஆகிவிடாதா?

5. 12ஆம் வகுப்பு முடித்த தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பி. ஆர், எம்.எஸ் படிப்பில் சேர்க்கப் படுவார்கள் என்றால்

எம்.பி.பி.எஸ் படிக்க வேறு ஏதாவது தகுதி கொண்டு வரப் போகிறார்களா?

ஏற்கனவே ஆறு ஆண்டுகள். இன்னும் வேறு எம்.பி.பி.எஸ். முடிக்க காலம் கூட்டப் போகிறார்களா?

5 1/2 ஆண்டுகள் என்று சொன்னாலும். ஜூலை, ஆகஸ்டில் ஆரம்பிக்கும் கல்வியாண்டு 4 1/2 ஆண்டுகள் ஜனவரியில் முடிந்து பிப்ரவரியில் தேர்வு எழுத தேர்வு முடிவுகள் வந்த பின் தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சிகள் காலத்திற்குள் நுழைவார்கள் எனவே  முடிக்க ஆறு ஆண்டுகள் ஆகிவிடும்.


எம்.பி.பி.எஸ் படிப்பின் காலத்தைக் குறைக்க ஒரு எளிமையான வழி இருக்கிறது. எம்.பி.பி.எஸ் மாணவர்களின் படிப்பின்போது ஞாயிறு, மற்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை விடுப்புகள் உள்ளன. அந்த நாட்களில் வகுப்புகள் வைத்தால்  ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மிஞ்சும். 4 1/2 ஆண்டுகளில் ஓராண்டை அழகாக மிச்சப் படுத்தி விடலாம்.

இந்த யோசனையைக் கண்டு சிரிக்க வேண்டாம். ஏற்கனவே முதுகலை பயிலும் மாணவர்கள் ஞாயிறு,  ரம்ஜான், பொங்கல் விடுப்பு இல்லாமல்தான் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

6.கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மூலமாக தமிழ் நாட்டில் கடைக்கோடி கிராமத்திற்கு பெரிய பெரிய மருத்துவமனைகள் வந்து நோயாளிகளை அழைத்துச் செல்லும் நிலை தமிழ்நாட்டில் உள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக அந்த சிகிச்சையையும் அதே கிராமத்தில் செய்யும் நிலை கொண்டு வர வேண்டாமா?  அதற்குப் பதிலாக ஏற்கனவே இருப்பவரை விட வல்லமை குறைந்தவரையா அனுப்ப வேண்டும்?

==============================================================

இந்த இடுகை நிறையப் பேரைச் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே நீங்கள் உங்களால் முடிந்த வழிகளில் மற்றவர்களுக்கு இதை பரப்புங்கள்.

தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

Read more...

Thursday, June 17, 2010

பாம்புக்கடி மருத்துவர் பாகம் ஒன்று

போலி மருத்துவர் என்பவர் சமுதாயத்தில் ஒரு அங்கமாகவே மாறியிருக்கிறார். இங்கு நான் போலி மருத்துவர் என்று கூறுவது என்ற அடிப்படையுமே இல்லாமல் மருத்துவம் செய்பவர்களைப் பற்றியது. மாற்றுமுறை மருத்துவம் செய்பவர்களைப் பற்றியது அல்ல. தேவையில்லாமல் மாற்று முறை மருத்துவ அறிஞர்களுடன் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

முதல் கட்டமாக பாம்புக் கடி.

நாட்டில் உள்ள பாம்புகளில் 80 சதவீதம் பாம்புகள் விஷத்தன்மை அற்ற பாம்புக்களே.., அதில் விஷத் தன்மையுள்ள பாம்புகளிலும்கூட விஷத்துடன் கூடிய கடி என்பது அதிலும் பாதியே.. அப்படியென்றால் விஷ பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவு என்பது மிகக் குறைந்த அளவே..,

பாம்பு கடித்தால்

பாம்புக் கடித்தால் நமது ரத்த மணடலமும் நரம்பு மண்டலும் பாதிப்புக்கு உள்ளாகி மரணம் சம்பவிக்கிறது.ரத்த மண்டலத்தில் ரத்தம் உறையாத் தன்மை ஏற்படுவதன் மூலம் தொடர் உதிரப் போக்கும், திசுக்களிடையே கசிவு ஏற்படுவதன் மூலம் வீக்கம், வீக்கம் அழுத்துவதன் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகள் ( மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு வாதத் தன்மையாகக் கூட வெளிப்பட வாய்ப்பு உண்டு. அந்தச் சூழலில் பாம்பு கடித்தது என்ற தகவல் மருத்தவரை அடைந்திருக்க வேண்டும். அல்லது அந்த மருத்துவர் இதுபோன்ற நோயாளியை தன்வாழ்நாளில் பார்த்திருக்க வேண்டும். அப்போதும் கூட 20நிமி. ரத்த உறைவுச் சோதனை செய்யப் பணித்து விஷமுறிவு மருந்து போடும்போது உறவினர்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்ட சம்பவங்கள் உண்டு.) அதிகமான ரத்த இழப்பு காரணமாக மரணம் ஏற்படவும் வாய்ப்புண்டு

நரம்பு மண்டலம் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளாக நாக்கில் உள்ள சுவை அரும்புகள் பாதிக்கப் படுதல், மற்றும் மேல் இமை பாதிக்கப் படுதல் போன்றவை நிகழும் தொடர்ச்சியாக மற்ற நரம்புகள் பாதிப்பு ஏற்படுகிறது. சுவாச செயலிழப்பு, மூளை இயக்கமின்மை போன்றவற்றால் மரணம் நிகழ வாய்ப்புண்டு.


இவ்வாறான சூழலில் ஒரு பாதிக்கப் பட்டவர் மருத்துவரை அணுகினால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

பொதுவாக மேற்கண்ட ரத்த மண்டலம் அல்லது நரம்ப்பு மண்டலம் அல்லது இரண்டுமண்டலங்களுமே பாதிப்பு ஏற்படும் முன் விஷமுறிவு மருந்து செலுத்துதலே பாதுகாப்புத் தன்மையை அதிகரிக்கும்

கிராமப் பகுதிகளில்தான் பெரும்பாலான பாம்புக்கடிகள் நடக்கின்றன. கிராமங்களில் பெரும்பாலும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் நான்கு அல்லது ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. அந்த நிலையங்களுக்கு ஏதாவது ஒரு வாகனம் பிடித்துத்தான் செல்ல வேண்டும். தற்போது 108 ஆம்புலன்ஸ் இருப்பதால் இது போன்ற சூழல்கள் ஓரளவு சமாளிக்கப் படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போக்குவரத்து என்பதே குதிரைக் கொம்பாக இருந்தது.

பாம்பு கடிபட்டவருக்கு ரத்தத்தில் விஷத்தன்மை பரவியுள்ளதை கண்காணிக்க 20நிமி. ரத்த உரைதல் பரிசொதனை செய்யவேண்டும். அது உரையும் தன்மை சாராசரியாக இருந்தால் கூட மீண்டும் ஒருமுறை ஆறுமணிநேரம் கழித்துச் செய்யவேண்டும். கடைசிக் கட்டத்தில் கடிபட்டவருக்கு செயற்கை சுவாசம் வைக்கும் வரை கூடப் போலாம் என்ற சூழல் இருப்பதால் முதலுதவி மருத்தினைக் கொடுத்து அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலைதான் இருக்கிறது. அங்கு தேவையான பரிசோதனைகளைச் செய்து தகுந்த சிகிச்சையும் செய்கிறார்கள்.


இவ்வாறு அனுப்புவது என்பது பாதிக்கப் பட்ட ஒரு நபர்கூட பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது, அனைவரையுமே காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்.


போலி மருத்துவரிடம் சென்றால்

போலி பாம்புக்கடி மருத்துவர்கள் ஒரு செடியை வைத்திருக்கிறார்கள். அந்த செடி மிகக் கசப்புத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதை சராசரி மனிதர்களால் சாப்பிட முடியாத அளவு கடும் கசப்புசுவையுடன் இருக்கும். அதை கடி பட்டவரிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லும்போது அவர் சுலபமாக மெல்ல முடிந்தால் அந்த நபரின் உடலில் விஷம் வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டதென்று அறிந்துகொள்ளமுடியும். (சுவை அரும்புகள் பாதிப்படைந்துவிட்டன அல்லவா)

அடுத்ததாக தூங்கக் கூடாது என்று கூறுவார்கள். மேல் இமை செயல் இழந்துவிட்டால் தானாகவே இமைகள் மூடிக்கொள்ளூம். பாதிக்கப் பட்டவரை தூங்கக்கூடாது என்று பணிக்கும்போது விஷத்தால் பாதிப்பு ஏற்பட்டவர் தன்னையும்மீறி கண்களை மூடிவிடுவார். கடி பட்டவர் கண்களை மூடிவிட்டால் இனி தனது மருத்துவம் ( போலி தான்) பயனளிக்காது என்று கூறி அவரை அனுப்பிவிடுவார். ரத்த இழப்பு அதிகமாக இருந்தாலும் கண்கள் மயக்கத்தில் சுழற்றிக் கொண்டுவரும்.


அதாவது இந்த போலி ஆட்கள் என்ன செய்கிறார்கள் என்றால் விஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் என்று தெரிந்து கொண்டுவிட்டால் அவரை நகரத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள். பொதுவாக இவ்வாறு விஷத்தால் பாதிப்பு ஏற்பட்டபின் நோயாளியை காப்பாற்றுவது என்பது மிக மிக மிக கடினம். விஷத்தால் பாதிக்கப் படாதவரை காப்பாற்றியதாக பெருமையடித்துக் கொண்டிருப்பார். அதை அந்த ஊர் மக்களும் பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்.


அதாவது விஷத்தால் துளி கூட பாதிக்கப் படாத நபரை அவர் காப்பாற்றியதாக பெயர் வாங்கிக் கொள்கிறார். விஷத்தால் பாதிக்கப் பட்டவரை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மரணமடையவிட்டுவிடுகிறார்.

இந்த போலிநபர் கைவிட்டுவிட்டால் அந்த அந்த நபரை எவராலும் காப்பாற்ற முடியாது என்ற வகையில் ஒரு விளம்பரவாக்கியத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள்.


ஆனால் உண்மையில் அவர் அந்த கடிபட்டவரை முதலிலேயே விஷமுறிவு மையத்திற்கு அனுப்பி இருந்தால் காப்பாற்றி யிருக்க முடியும்.

உண்மையான மருத்த்வரிடம் சென்றால் அவர் முதலுதவிகொடுத்தபின் அவரை அருகிலுள்ள விஷ்முறிவு மைய்த்திற்கு அனுப்பிவிடுவார் எந்த நேரமாக இருந்தாலும். அவருக்கு கிடைக்கும்பெயர் இதெல்லாம் பார்க்கத் தெரியாது அவரிடம் ஏன் போக வேண்டும்?

நமக்கு இன்னொரு கேள்வியும் எழலாம். ஏன் இதுபோன்ற வசதிகளை ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தக்கூடாது என்று சிலர் கேட்கலாம். அடிப்படை முதலுதவிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் செய்துவிட்டு மேற்கொண்டு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அருகிலுள்ள விஷமுறிவு மையத்திற்கு மிக வேகமாக அனுப்பிவிடுகிறார்கள்.

இதன்காரணம் எந்த கடிபட்டவருமே ஆபத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்ற எண்ணமே.

ஆனால் மக்களுக்கு அதிகமான திருப்தியைக் கொடுக்கவல்லவராக போலி வைத்தியரே இருக்கிறார்.

எனது தனித் தனிப்பட்ட கருத்து:

உண்மையிலேயே ஒரு மூலிகை எந்தவித கொடிய விஷத்தையும் முறிக்க வல்லதாக இருந்தால் அதை அரசிடம்தெரிவித்து அந்த மூலிகைகளை மிக அதிகமான அளவு தயாரித்து நாட்டில் பாம்பு கடி பட்ட யாருமே உயிரிழக்காச்சூழலை ஏற்படுத்தலாமே

தனித் தனிப்பட்ட கருத்து 2:-

சிலரிடம் அவ்வாறு மூலிகைகள் இருப்பதாகக்கூடத் தோன்றுகிறது. அதை அவர்கள் தங்கள் பரம்பரை ரகசியமாக வைத்துக் கொண்டு தங்கள் பரம்பரை மட்டும் சம்பாதிக்க உபயோகப் படுத்திக் கொண்டு இருக்கிறார்களோ என்ற சந்தேகமும் சில நேரங்களில் எழுகிறது.

அடுத்தடுத்த பகுதிகளில் நாய்க்கடி, நெஞ்சுவலி போலி மருத்துவர்கள் பற்றிப் பார்க்கலாம்.

தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்

Read more...

Saturday, June 12, 2010

உங்கள் நண்பர் சிகரெட் பிடிப்பது ஏன்?

அமெரிக்காவுக்கும் இது பொருந்தும், இந்தியாவுக்கும் இது பொருந்தும்








தமிழீஷில் ஓட்டுக் குத்த இந்த இடம்

Read more...

Monday, June 7, 2010

நண்பர் முகிலனின் நட்சத்திரப் பதிவுக்கு ஒரு மறுமொழி

டிஸ்கி:- இது முழுக்க முழுக்க ஒரு பின்னூட்டமே,இதனை எதிர்விளைவு என்பதைவிட விளைவு என்றே கொள்ளலாம். இதில் சண்டை போட நினைப்பவர்கள் ஆக்க பூர்வமான விஷய்ஙகளை மட்டுமே விவாதத்திற்கு கொண்டுவரவும். (சில நபர்களை என்றும் திருத்தவே முடியாது. அவர்களை திருத்துவதைவிட பெறும்பான்மையானவர்களுக்கு சரியான கோணத்தைக் காட்டிவிட்டால் போதும் என்று  எனது ஆசிரியர் கூறுவதுண்டு. எனவே பிரச்சனை சரிசெய்வதைப் பற்றி மட்டுமே பேசவும்.)

இந்திய மருத்துவர்களே!!! ஏன் இப்படி?



என்ற நண்பர் முகிலனின் தமிழ்நட்சத்திர பதிவுக்கு பதிலாக என்பதைவிட பின்னூட்டமாகவே இந்த இடுகைத் தருகிறேன்.

எனக்கு வெளிநாடுகளில் எப்படி என்றெல்லாம் தெரியவில்லை. நமது பகுதியில் நடைபெறும் சில விஷயங்களில் நிகழும் சில தவறான புரிதல்களுக்காக இதை எழுதுகிறேன்.

  அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முதல் அடிப்படைக்காரணம் மருத்துவருக்கும் அவருக்கும் நடுவில் உள்ள ஒரு திரை. 
//“you should trust us"//  இந்த வாக்கியம் அவரைக் கோபப் படுத்தி இருக்கும். ஆனால் முதலில் அதுதான் உண்மையும் கூட.

குடும்ப மருத்துவர் என்ற ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போனதுதான். இதற்கான அடிப்படைக் காரணம்.  ஒரு பொது மருத்துவரை மட்டுமே நாம் எப்போதும் அணுக வேண்டும். அவரது வழிகாட்டுதலின் பேரிலேயே  சிறப்பு மருத்துவர்களை அணுக வேண்டும்.  பெரும்பாலான நோய்களுக்கு M.B.B.S மட்டுமே படித்த மருத்துவரே போதும். அவரை எந்த சூழலிலும் அணுகும் நிலை இருக்கவேண்டும். சிறப்பு மருத்துவர்கள் தேவையான சூழலில் அவரது ஆலோசனைக்குப் பின்னர் சென்று ஆரம்ப கட்ட தொடர்சிகிச்சைக்குப் பின்னர் தொடர்சிகிச்சைக்கு நமது குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். சில பல ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பதில் உள்ள ஒவ்வொருவரின் உடல் நிலை அவர்களின் எதிர்பார்ப்பு போன்ற விஷயங்கள் அவரது மனதில் நன்கு பதிந்து இருக்கும். உங்கள் சந்தேகங்களுக்கு  தெளிவான பதிலை அவர் தருவார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சிகிச்சைக்கும் ஒரு மருத்துவரை அணுகும்போது  அவருக்கு உங்கள் கேள்விக்கான பொருளை அவர் உங்களுக்கு சொல்வதிலும் நீங்கள் புரிந்து கொள்வதிலும் இடைவெளி ஏற்பட்டு தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்திவிடும்.

குறிப்பிட்ட சிறப்பு மருத்துவர் தேவையில்லாத அறுவை சிகிச்சைகளை ஏற்படுத்திவந்தால் உங்கள் குடும்ப மருத்துவர் அந்த குறிப்பிட்ட மருத்துவருக்கு எந்த நோயாளியையும் பரிந்துரைக்க மாட்டார். சில பல ஆண்டுகள் நீங்களும் அவரோடு பழகிவிட்டால்  அவரது நம்பகத்தன்மையும் உங்களுக்கு புரிந்து விடும்.   எனவே தைரியமாக அவர் சொல்வதைக் கேட்கலாம். நம்பலாம்.


சில நோயாளிகள் காய்ச்சல் என்று வருவார்கள். கூட தலைவலி, சளி, இருமல் போன்ற தொந்தரவுகளை சொல்லிவிட்டு  மருத்துவரிடம் எனக்கு என்ன வியாதி டாக்டர் என்று கேட்பார்கள். இந்தக் கேள்விக்கு நேரடியாக பொருள் எடுத்துக்கொண்டு நீங்கதான சொன்னீங்க சளி, காய்ச்சல் என்று அவரிடம் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.   நோயாளி எதிர்பார்ப்பது  தனக்கு வந்திருக்கும் சளிக்காய்ச்சல் என்பது சாதாரண வகையா? அல்லது ஃப்ளூ, காச நோய் வகையா? என்பதான கேள்வி.  இது போன்ற புரிதல்களில் ஏற்படும் இடைவெளி குடும்ப மருத்துவரை அணுகும்போது மட்டுமே சரி செய்ய முடியும்.


Infectious diseaseகளில் ஒன்று  வயிற்றுப் போக்கு அதற்கு நோயாளியைத் தனிமைப் படுத்துதல் அவசியம் அதனால் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது உண்டு. இப்போதெல்லாம் பிரசவ அறைகளுக்குக் கூட துணைக்கு ஒருவரை அனுமதிக்கிறார்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த நிலை நடைமுறைக்கு வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன.  தவிரவும்  மருத்துவரின் பரிசோதனை என்பதுதான் இங்கு நோயாளியின் சிகிச்சையை நிர்ணயிக்கும். கண்களைச் சுற்றி உள்ள சுருக்கங்களின் தன்மை, வயிற்றுத் தோல் எடுத்துவிட்டால் பழைய நிலைக்கு போக ஆக் எடுத்துக் கொள்ளும் நேரம். நாக்குவறட்சி, நாடித்துடிப்பு போன்றவையே உடனடி சிகிச்சையை தீர்மானிக்க முடியும்.

இப்`போதெல்லாம் broad spectrum antibiotics பல உபயோகத்திற்கு வந்துவிட்டன. சில மருந்துகளை கொடுத்தாலே அனைத்துவகையான  பாக்டீரியா, வைரஸ் ஆகியவை எதிர்க்கும் சக்தி கிடைத்துவிடும்.  மலத்தை எடுத்து staining, culture and sensitivity  செய்வதால் ஆகும் கால தாமதம் மற்றும் வீண் செலவுகளை  மருத்துவரின் அனுபவம் தவிர்த்து விடும்.  எனவே மருத்துவரை நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கு அவரோடு நீண்ட காலப் பழக்கம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

நோயாளிக்கு அளிக்கப் படும் சிகிச்சையை அவருக்கோ அவரது உறவினருக்கோ சொல்லிவிட்டுத்தான் சிகிச்சையை செய்வார்கள். ஆனால்  நோயாளியின் ஒவ்வொரு உறவினரும் வந்து கேட்டுக் கொண்டே இருக்க திரும்பவும் முதலில் இருந்து சொல்ல வேண்டிய சூழல் சிகிச்சை அளிப்பதை கால தாமதப் படுத்திவிடும்.  தவிர நமது ஊரில் ஒவ்வொரு நோயாளிக்கும் பலர் துணைக்கு வருவார்கள்.  உள்நோயாளி என்றால்  பெரிய கூட்டமே வந்து நிற்கும்.

ஒவ்வொரு நோயாளியும் வீட்டிற்குத் திரும்பும்போது தனக்கு அளிக்கப் பட்ட சிகிச்சைக்கான சுருக்கத்தையும்,  கட்டிய பணத்திற்கான ரசீதினையும் கேட்டுப் பெற வேண்டும். இது அவர்களது அடிப்படை உரிமை. மற்றும்  சமூகத்திற்கு ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமை அப்போது மட்டுமே தரத்தினை நன்கு உயர்த்த முடியும்.



//அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குழந்தைகள் பலர் மருத்துவம் படிப்பது என்பதை ஆசையாக, குறிக்கோளாகக் கொண்டிருப்பர். நான் பல குழந்தைகளிடம் ஏன் என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்களின் பதில் - “அப்போது தான் நிறைய சம்பாதிக்க முடியும்” என்பதாகவே இருக்கும்//


இந்த வரியைத் தொடர்ந்து எழுதப்பட்ட வரிகள் மிகவும் உண்மை. அப்படியே இந்த இடுகை நண்பரால் எழுதப் பட்ட ஒன்று அதையும் படித்துவிட்டு மீண்டும்  மேலே உள்ள வரிகளை கவனியுங்கள்.

உண்மையில் மருத்துவம் படித்த பலரும் பலவகைப் பொறியியில் துறைகளில் பணிபுரியும் பலரையும் விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.


//பின்னோக்கி said... அப்புறம் இந்த ஸ்பெஷலிஸ்ட்கள் தொல்லை தாங்கலை.

அவர்கள் நம்மை மனிதனாக பார்ப்பதில்லை. கண் டாக்டர், கண்னை மட்டுமே கவனிக்கிறார்.///

குடும்ப மருத்துவர்   உங்களைத் தெளிவாக அறிவார்.  அவர் சொல்லும் கண்மருத்துவரிடம் சென்றுவிட்டு பின்னர் முடிவு செய்யும் உரிமையை அவருக்கு தரும்போது பிரச்சனை வராது.

//அமுதா கிருஷ்ணா said... ( யார் சார் 5 முதல் 8 வருடம் கஷ்டப் பட்டு படித்து விட்டு கிராமத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஒத்துக் கொள்வர்)//

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பணிநியமணம் செய்யப் பாட்ட 3000க்கும் மேற்பட்ட மருத்துவர்களில் கிராமங்களுக்கு செல்ல மறுத்தவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்னும் பணிநியமணத்திற்காக காத்துக் கொண்டு இருப்பர்கள் எண்ணிக்கை 2000க்கும் மேல்.


//கண்ணா.. said... நமக்கான விளக்கங்கள் தர பொறுமை இல்லாத டாக்டர்கள்தான் நானும் அதிகம் சந்தித்தது. அவர்கள் விளக்கங்கள்தான் தரவில்லையே தவிர சிகிச்சை நல்ல முறையில் அளித்தனர்.//

குடும்ப மருத்துவர் என்று வந்து விட்டால் உங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப பதில் தந்து இருப்பார்.
//கோவி.கண்ணன் said...
இந்தியாவில் மருத்துவர்களுக்கு பொதுமக்கள் மீது என்றுமே அலட்சியம் தான். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு //
சிலர் இருக்கிறார்கள் ஆனால் ஒட்டுமொத்தமாக தவறான புரிதல். நோயாளிகளை அலட்சியப் படுத்தியவர்களை நோயாளிகள் அலட்சியப் படுத்தி விடுவார்கள். பின்னர் அவர் வீட்டில் சும்மா அமர்ந்திருக்க வேண்டியதுதான். ஊரில் மருத்துவர்களுக்கா பஞ்சம்.
======================================================

எனது நோயாளி ஒருவர். அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி வருவதுண்டு. அவருக்கு பல விதமான பரிசோதனைகள் செய்து பார்த்து விட்டோம். இருதய மருத்துவர்கள் சிலரிடமும் காட்டிவிட்டோம். நெஞ்சக நோய் மருத்துவரிடமும் காட்டிவிட்டோம். சில காலங்களுக்குப் பின் அவருக்கு சில மாதங்களுக்கு ஒருமுறை நெஞ்சுவலி வரும். வலிநிவாரணி ஊசி ஒன்று பத்துரூபாய்க்குள் வரும். அதைப் போட்டால் சரியாகிவிடும். அவ்வப்போது போட்டுவிடுவேன். (இந்த முடிவு பல சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி எடுக்கப் பட்டது).அந்த ஊசி மருந்தால் பொதுவான நெஞ்சுவலிகள் கேட்காது. வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு அதிகமாக போடக்கூடாது. இருதய நோய் காரர்களுக்கும் அதிகமாக போடக்கூடாது. 



ஒருமுறை நான் எனது கிளினிக்கில் பிறிதொரு நபருக்கு தையல் போட்டுக் கொண்டு இருந்தபோது அவரை நெஞ்சுவலியோடு அழைத்துவந்தனர். உடனடியாக நான் கையுறைகளை களைந்துவிட்டு அவருக்கு போட வேண்டிய மருந்தினைப் போட்டுவிட்டு அவரைப் படுக்க சொல்லிவிட்டு நான் தையல் போட கையுறைகளை அணிந்து கொண்டிருந்தபோது அவரது சம்மந்தி வந்து அவருக்கு என்ன வியாதி என்று கேட்டார். சாதாரண நெஞ்சு வலிதான். சிறிது நேரத்திற்குப் பின் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு தையல்போடும் இடத்திற்கு சென்றேன். மீண்டும் மீண்டும் கேள்விகள் வந்து கொண்டிருந்தன.
அங்கு பாதித் தையல். ரத்தக் கசிவு இல்லாமல் இருக்க தற்காலிகமாக பஞ்சுமுதலியவை வைத்து இருந்தேன். அவசரம் காரணமாக அவரது மகனிடம் கேளுங்கள் அல்லது சில நிமிடங்களில் இவரே சரியாகிவிடுவார். அவரே சொல்லுவார் என்று சொல்லிவிட்டு தையல் போட ஆரம்பித்துவிட்டேன். போகும்போது சொல்லிக்கொண்டுதான் போனார்கள்.



சில மாதங்கள் களித்து அவருக்கு நெஞ்சு வலி வந்தபோது 
நான் சொன்ன பதிலால் கொதிப்படைந்த சம்பந்தி புதிய ஒருவரிடம் அழைத்துச் சென்று பின்னர் முதலில் இருந்து எல்லாம் தொடங்கி சில மாதங்கள் வரை தொடர்ச்சியாக அவ்வப்போது வலியுடனே இருந்தார். பின்னர் என்னிடமே திரும்பிவந்தனர். 


அதில் ஏற்கனவே உள்ள பரிசோதனைகளை மீண்டும் செய்து கொண்டே இருந்திருக்கின்றனர். சிறப்பு மருத்துவராக இருக்கும்போது அவரது துறையில் சிறப்பிடம் பிடித்துவிட்டால் மற்ற துறைகளில் அவர்கவனம் செலுத்த போதிய கால அவகாசம் இல்லை என்ற சூழல் வந்து விடுகிறது. பல துறைகளையும் சந்தித்து நோயாளிக்கு முழுமையான சிகிச்சை கிடைக்க பொது மருத்துவர் குடும்ப மருத்துவரால் மட்டுமே முடியும்.


குடும்ப மருத்துவரான  நான் இருதய தொந்தரவோடு, நெஞ்சக நிபுநர், எலும்பு மருத்துவர், மற்றும் மனநல மருத்துவரையும் அணுகி இருந்தேன். நோயாளிக்கும் அவரது மகனும் இது தெரியும்.  


இருதய மருத்துவரை அணுகி அவர்கள் இருதய தொந்தரவு ஏதும் இல்லை என்று உறுதி அடையும் வரையிலான அதிகப் படியான பரிசோதனைகளை செய்து கொண்டே இருந்திருக்கிறார்கள். இந்த மருந்துகள் போதும் என்று இருதய நிபுநர் சொல்லியும்கூட  வலி குறைய வில்லை என்பதற்காக மேலும் மேலும் பரிசோதனைகள் போய் கொண்டே இருந்திருக்கின்றன.  பின்னர் இருதய நிபுநரே  அனுப்பிய பின்னர் திரும்பவும் என்னிடம் வந்திருக்கின்றனர். அவர்கள் செய்திருந்த முதலில் செய்த பரிசோதனைக் காகிதங்களில் பாதியை த் தொலைத்து வேறு இருந்தனர்.


தமிழீஷ் ஓட்டுக்கு

Read more...

Sunday, May 16, 2010

உங்கள் மகனை /ளை மருத்துவராக்கப் போகிறீர்களா?

//“செய்யும் தொழிலே தெய்வம்; அதில் ஏற்றத் தாழ்வு கிடையாது; தொழிலை வைத்து மனிதரை எடைபோடுவது தவறு” என்பதெல்லாம் மேலுக்குப் பேசப்படும் நிஜமான நீதி என்றாலும் தனி மனித அனுபவங்களும் புழுக்கங்களும் அவரவர் மாத்திரமே அறிந்தவை.


//

தொடர்ந்து படிக்க இங்கே செல்லுங்கள்

=====================================================

விவாதங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் இந்த வலைப்பூவையும் வலம்வாருங்கள். ஒரு முடிவு எடுங்கள்

Read more...

Saturday, May 1, 2010

கூட்டு உழைப்பு - இருதயக் குறைபாடு - தொடர் சிகிச்சை










சென்ற ஆண்டில் திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் சத்தம் இல்லாமல் ஒரு புரட்சி நடந்தது.  அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அங்குள்ள மருத்துவகுழுவினர் ஆய்வு செய்து  அங்குள்ள பள்ளிக்குழந்தைகளில் பிறவி இருதய நோயால் பாதிக்கப் பட்டவர்கள்., மற்றும் ருமாட்டிக் இருதய நோயால் பாதிக்கப் பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப் பட்டது, இதில் கிடைத்த முடிவானது ஏறக்குறைய அங்கீரம் பெற்ற முக்கியப் பாடப் புத்தகங்களில் உள்ள சராசரியை ஒத்து வந்திருப்பதால் அவர்கள் மிகச் சரியான வழிவகைகளைப் பின்பற்றி இந்தச் சாதனையை செய்ததாகச் சொல்லலாம்.

பள்ளிக் குழந்தைகளுக்கான வாழ்வொளித் திட்டம்:-  இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள மருத்துவ குழுவினர் வியாழக் கிழமைகளிலில் தங்கள் பகுதியைச் சேர்ந்த பள்ளிகளை பார்வையிட்டு குழந்தைகளின் சிறுவியாதிகளுக்கு மருத்துவம் பார்த்தல், மற்றும் பெரிய வியாதிகளை முளையிலேயே கிள்ளி எரிதல் மற்றும் சுகாதார கல்வியினை வழங்குவார்கள்.  இது அனைத்து வியாழக்கிழமைகளிலும் நடைபெறும்.  மே மாதத்தில் வரும் வியாழன்கள் தவிர அனைத்து வியாழன்களிலும் மருத்துவக் குழுவினர் பள்ளிக் குழந்தைகளை ஆய்வு செய்து கொண்டு இருப்பார்கள்.   இதற்கான முன்பயணத்திட்டம் அந்த அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தாரால் தயாரிக்கப் பட்டு அதன் ஒரு பிரதி  அந்த மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அவர்களுக்கும்,. பள்ளிக் கல்வி அலுவலர் அவர்களுக்கும் அனுப்பப்படும்.  அந்த முன் பயணத்திட்டம் எந்த இடர்பாடுகள் வந்தாலும் கண்டிப்பாக நிறைவேற்றப் படும். அப்படித்தான் நடந்து வருகிறது.

சில பள்ளிகளில் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் இருப்பார்கள். வெகுசில பள்ளிகளில் சில ஆயிரம் மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரின் இதயத்தையும் ஸ்டெத்தாஸ் கோப் வைத்துப் பார்ப்பது என்பது முழு அர்பணிப்பு உள்ளவர்களாலேயே முடியும்.  காதில் அந்த ''கிளிப்'' பகுதியை வைத்து எடுத்து வைத்து எடுத்து கொஞ்சம் அந்த சிரமத்தை யோசித்துப் பாருங்கள்.  வேகமாகவும் செய்ய வேண்டும். அதே நேரத்தில்  எந்த குழந்தையையும் தவரவிடுதல் கூடாது.  இது கம்பிமேல் நடப்பது மாதிரி என்று சொன்னாலும் என்னைக் கேட்டால் கம்பி மேல் ஓடுவது போன்ற ஒரு செயல். 


முதல்நாளே பள்ளித் தலைமை ஆசிரியரின் நினைவு படுத்திவிட்டு உயரம் எடை பார்த்துவைத்து மறுநாள் பள்ளிகளில் அனைத்துக் குழந்தைகளையும் பரிசோதனை செய்ய வேண்டும். பல கிராமப் புறப்பள்ளிகளில் சரியான அறைவசதி இருக்காது, பெண்களை மறைவிடத்தில் வைத்து செய்ய வேண்டிய பரிசோதனைக்கும், வளரிளம் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய சுகாதார கல்விக்கும் தனியறையை கொடுத்துவிட்டு பெரும்பாலும் மரத்தடியில்தான் மருத்துவர்கள் அமர்ந்து தங்கள் பணியைச் செய்ய வேண்டிய சூழல் இருக்கும்.  அதிலும் சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இதற்கு வசதி ஏற்படுத்தித் தருவதில் பெரிய சிரத்தை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சிலர் செய்ய நினைத்தாலும் அங்கு வசதிகள் இருக்காது.  அதையும் தாண்டித்தான் பரிசோதனைகள் செய்து வருகிறார்கள்.


இது தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தார் மூலமாக நடைபெறுகிறது. நகரங்களில் குழந்தைகள் நலத்திற்கு தனி மருத்துவர் இருப்பார். ஆரம்ப சுகாதார நிலையங்களில்  அங்குள்ள மருத்துவரே இந்தப் பணியையும்  அந்தப் பகுதிக்கு உட்பட்ட பள்ளிக்கு நேரிடையாகச் சென்று செய்வார்.  சில பள்ளிகள் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வெகுதூரத்தில் இருப்பதுண்டு, பேருந்து வசதிகளும் சொல்லிக் கொள்ளும் வகையில் இருக்காது, புற நோயாளிகள் பிரிவினைப் பார்த்து விட்டு பள்ளிக்குச் செல்வார் மருத்துவர்.

எல்லாப் பகுதிகளிலும் செய்திருந்தாலும் திண்டுக்கல்லில் செய்தது மிகவும் திட்டமிட்டு ஒரு குழந்தையைக் கூட தவற விடாவண்ணம் மிக அழகாகச் செய்து முடிக்கப் பட்ட செயல் . 2,24,089 குழந்தைகளை பரிசோதனை செய்ததில்
495 குழந்தைகள் பிறவி இருதயக் கோளாறுகளால் பாதிக்கப் பட்டு இருப்பது தெரிய வந்தது.

அந்த பரிசோதனையில் முடிவில் கண்டறியப் பட்ட குழந்தைகள் அனைவரையும் தகுந்த மேல் பரிசோதனைக்கு அனுப்பி அறுவைச் சிகிச்சை தேவைப்படும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இளஞ்சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம் மூலமாகவும் விடுபட்ட சில குழந்தைகளுக்கு கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மூலமாகவும் சிறிதும் செலவில்லாமல் அறுவை சிகிச்சைகள் செய்யப் பட்டுவிட்டன.  மருத்துவ சிகிச்சை மட்டும் தேவைப் படும் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகள் மூலம் தொடர் சிகிச்சை தரப் பட்டு வருகிறது.


ஒவ்வொரு மாதாந்திர ஆய்வுக் கூட்டத்திலும்  ஆரம்ப சுகாதார நிலைய அளவிலும் வட்டார அளவிலலும் இந்தக் குழந்தைகளின் உடல் நிலை ப் பற்றிய தகவலகள் விவாதிக்கப் படுகின்றன. களப் பணியாளர்கள் அந்தக் குழந்தைகள் குடியிருக்கும் பகுதிகளுக்குச் செல்லும்போது சிறப்புக் கவனத்தினை அந்தக் குழந்தைகளுக்கு வழங்கி வருகின்றனர். இடைப்பட்ட காலத்தில் எந்தத் தொந்தரவு ஏற்பட்டாலும் தொலைபேசி வழியிலும், நேரடியாகவும்  அந்தக் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை எளிதில் அணுகும் வகையில் வசதி ஏற்படுத்தப் பட்டிருக்கிறது,. இந்த வசதியாகப் பட்டது தமிழக அளவில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதாரநிலையங்கள் மூலமாகவும் நடைபெற்று வருகிறது.


இந்த வசதிகளை மிகத் துல்லியமாக செய்து வருகின்ற திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தினைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுதல்களை தெரிவியுங்களேன்.  தமிழக சுகாதார அமைப்பின் மூலம் நடைபெற்ற கருத்தரங்கில் வெளியிட்ட மலரில் திண்டுக்கல் துணை இயக்குநரின் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் மேலே தரப் பட்டுள்ளது. அந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் அவரது கட்டுரை முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்

Read more...

Saturday, April 24, 2010

கருத்தரங்குத் துளிகள்

ஏபரல்9 மற்றும் 10 தினங்களில் ஏலகிரியில் தமிழ்நாடு சுகாதார அமைப்பின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்களில் சில காட்சிகள். தொடர்புடைய இடுகை இங்கே

மேலும் இடுகைகள் தொடரும்

தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்

Read more...

Thursday, April 22, 2010

மருத்துவரை மணந்து கொள்ள பத்துக் காரணங்கள்

ஒரு மருத்துவரை மணந்து கொள்ள அருமையான சில காரணங்கள்

Read more...

Thursday, April 15, 2010

தமிழகத்தில் முதன் முறையாக..,

 
 தமிழ் நாடு சுகாதார அமைப்பின் சார்பில் ஏலகிரி யில்  ஏப்ரல் 9, 10 ல் நடைபெற்ற கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப் பட்ட சில நிகழ்வுகள். ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமீபக காலத்தில் நிகழ்த்தப் பட்ட சாதனைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் இங்கு விவாதிக்கப் பட்டன.

 அந்த நிகழ்வுகளின் சுருக்கங்கள் சில புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்தக் கருத்தரங்கு மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்பசுகாதார நிலையங்களுக்கும் அந்தசாதனைகள் விஸ்தரிப்பு செய்வது பற்றியும் ஆலோசிக்கப் பட்டது.  படத்தின் மீது அழுத்தி பெரிது படுத்திப் பாருங்கள்.

தமிழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்

இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கு பற்றிய இடுகைகள் தொடரும்.

Read more...

Thursday, February 18, 2010

மாமன் மகள் சிறுநீரோடு......,

நாட்டு மருத்துவச்சி:

வயதுப் பெண் மயங்கிவிழுந்தால்  நாடி பிடித்துப்பார்ப்பார். அவருக்கு இரட்டை நாடி இருப்பதாகவும் எனவே கர்ப்பமாக இருப்பதாக கூறுவார். இது பல திரைப்படங்களில் வரும் காட்சி.

ஹைப்பர் டைனமிக் பல்ஸ் கர்ப்ப காலத்தில் தோன்றுவது தான் ஆனால் அதற்கான பல காரணங்களில் கர்ப்பம் முக்கிய இடத்தில் கிடையாது.  ஆண்களுக்கும் அவ்வகை நாடித் துடிப்பு கிடைக்கும்.

நிகழ்வு: சில மாதங்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போய் இருப்பதையும் வாந்தி மயக்கம் மற்றும் திருமணம் ( அது காந்தர்வ முறையாக கூட இருக்கலாம்) பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு குத்து மதிப்பாய் கொடுக்கும் வாக்கியம் அது

ஆங்கில மருத்துவரை அனுகினால்

இதே போன்று கேள்விகள் கேட்டுவிட்டு

கர்ப்பம் என்றால் அதற்குரிய அட்டைப- சிறுநீர்ப் பரிசோதனை செய்யச் சொல்வார்

பொதுவாக ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின், சர்க்கரை மற்றும் நீரில் உப்பு சர்க்கரை பரிசோதனைகள் செய்யச் சொல்வார்.

----------------------------------------------------

அவருக்கு கர்ப்பம் என்பதை உறுதியாகச் சொல்லவேண்டும். தேவையில்லாமல் கர்ப்பம் என்பதை சொல்லி மனதை காயப் படுத்திவிடக்கூடாது. கர்ப்பம் என்றால் ஆரோக்கியமாக குழந்தை வளர வழிவகைகளை ஆயாயும் அவசியத்தை உணர்ந்தவராக இருப்பார்.

கர்ப்பம் இல்லாத மயக்கம் என்றால்   மயக்கத்திற்கான காரணத்தை கண்டறிந்தே தீரவேண்டும் என்ற கட்டாயங்கள் இருக்கின்றன. அதனால் இந்தப் பரிசோதனைகள் அவசியமாகின்றன


சில நேரங்களில்
இருதயப் படம் எடுக்கச் சொல்வார்.

சிலருக்கு தைராய்டு பரிசோதனைச் செய்யச் சொல்வார்.

மொத்தத்தில் கிராம மக்களின் மனதில் செலவு வைக்கும் நபராக நினைவில் பதிக்கப் பட்டுவிடுவார்.

========================================================

உடலில் ஏதாவது அரிப்பு, தடிப்பு ஏற்பட்டால்  எம்பிபிஎஸ் மருத்துவர் , ஊசி மாத்திரைகள் போடுவார். பல் நேரங்களில் சரி ஆகிவிடும். சில நேரங்களில் அது மீண்டும் மீண்டும் தொடர் அரிப்பாக மாறிவிடுவது உண்டு.  அதற்கு சிறப்பு மருத்துவரின் பார்வை, மற்றும் பல ரத்தப் பரிசோதனைகள் செய்யச் சொல்லுவார்..

கிராம மருத்துவரிடன் சென்றால்   மிகச் சுலபமான மருத்துவம் சொல்வார். மாமன் மகளின் ( பெண்களுக்கு மாமன் மகனுடயது) சிறுநீரைப் பிடித்து  அதில் அடுப்புச் சாம்பலை பூசி விட பெரும்பாலும் திரும்ப வராது.

நிகழ்வது. அரிப்பு பெரும்பாலும் ஒவ்வாமை மற்றும் அலர்ச்சி வகையறாகவே அமையும். தீவிர பக்க விளைவாக இருக்கும் வாய்ப்பும் மறுக்க இயலாது

நடப்பது:-

ஒவ்வாமை மற்றும் தீவிர எதிர்விளைவு ஆகியவையின் போது சுரக்கும் சுரப்புகள் தானியங்கி மண்டலம் மூலம் நடக்கின்றன.  அதனால் மருந்துகள் சாப்பிட்டாலும்கூட அரிப்பு, எரிச்சல் போன்றவை இருப்பதாக நினைத்தால் இருப்படு போலவே தென்படும்

அதாவது பூஜையின்போது குரங்கை நினைக்காதே என்று சொன்னால் அதுதான் நினைவுக்கு வரும் அல்லவா அதுபோல. பல நாட்டுவைத்தியர்களும் மருந்தைச் சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே என்று சொல்வதுண்டு.

அரிப்பு போல எரிச்சல் போல இருக்கும் நிகழ்வுகளுக்கு இதுபோன்ற மாமன் மகளின் சிறுநிரைத் தடவுதல் என்பதில் உள்ளூர வெறுத்து அரிப்பே இல்லை என்ற உள்மனநிலை எடுக்கப் பட்டு அரிப்பு குணமடைந்துவிடும். மற்ற தீவிர வகை எரிச்சல் அரிப்பு போன்றவை இவ்வாறு குணமடைவது இல்லை..

===================================================================
ஒரு அடி குழல் ஒன்று

ஒரு நுனி நோயாளியின் வாயை ஒட்டி,  மறுநுணி கிராமத்து ஹீரோவின் வாயில்  சில மந்திரங்கள் ஒரு உறுஞ்சு

குழாயிலிரூந்து தக்காளித் தோல் முதல்  குரங்கு குடல் வரை ஏதாவது வரும். அதன் காரணமாகவே வயிற்று வலி , இனிமேல் வயிற்று வலி இருக்காது என்று உறுதி கொடுக்கப் பட்டு அனுப்பப் படுவார்.

அறிவியல் பிண்ணனி:  உணவுக்குழலில் தொடர்ச்சியாக இடம் பெற்றிருப்பது இரைப்பை.  இரைப்பையிலிருந்து ஒரு பொருள் திரும்பவும் உணவுக்குழாய்க்கு வர மிகக் கடுமையான அழுத்தம் இரைப்பையிலிருந்து கொடுக்கப் பட வேண்டும். உதட்டை ஒட்டி லேசாக உறிஞ்சினால் எதுவும் வர இயலாது.  இது  முழுக்க முழுக்க நடைமுறையில் சாத்தியமில்லாதது.  ஆனால் எப்படி எடுக்கிறார்கள் என்பது அறிய வேண்டுமானால் முப்பது நாட்களில் மேஜிக் புத்தகம் வாங்கிப் படியுங்கள். அந்த அரிய பொக்கிஷம் அனைத்து மாரியம்மன் கோவில் திருவிழாக்களிலும் பொருட்காட்சிகளிலும் கிடைக்கும்.

நோயாளி குணமடைய காரணம்.: பொதுவாக வயிற்று வலிக்கு நோய் தொற்றும் வயிற்றுப் புண் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. திரவ ஆகாரமும் சில நாள் உணவுக் கட்டுப் பாடும் இது போன்ற வியாதிகளிலிருந்து விடுதலை அளிக்கக் கூடும்.


இதுவே எம்பிபிஸ் மருத்துவர் என்றால் அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப் படும் வியாதிகள் அல்லது தொடர்சிகிச்சை செய்யும் வியாதிகள் இல்லை என்பதை  முதலிலேயே உறுதி படுத்தும் கடமை இருக்கிறது. ( நகர் பகுதியில் முதலிலேயே சொல்லவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றம் செல்லும் காட்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. கிராமத்தில் கட்டைப் பஞ்சாயத்து ).

எனவே  அவர் சில நாள் மருத்துவ சிகிச்சையில் கட்டுப்படவில்லை என்றால் அவர் ஸ்கேன் முதலான பரிசோதனைகள் செய்யச் சொல்வார். கிராம வாசிக்கு அலைச்சலும், பணச் செலவும் ஏற்படுத்தும்.

அதே குழல் வைத்தியருக்கு அவரது வைத்தியமுறை பலிக்கவில்லை என்றால் பெரிய இக்கட்டு ஏதும் ஏற்படாது.

================================================================


இந்த இடுகை புரியவில்லை என்றால்

மருத்துவருக்கு வேட்டு வைப்பது எப்படி?

 கிராமங்களுக்குச் செல்ல மருத்துவர்களுக்கு என்ன பயம்?

 

இடுகைகளை படித்துவிடுங்கள்


தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

இதன் அடுத்த பகுதி விரைவில் வெளிவரும்.

Read more...

Tuesday, February 9, 2010

மருத்துவருக்கு வேட்டு வைப்பது எப்படி?

எம்.பி.பி.எஸ் மருத்துவர் கிராமத்திற்குச் செல்லும்போது அவர் சந்திக்கக் கூடிய அடுத்த கட்ட பிரச்சனை சான்றிதழ்கள் வழங்குவது.  கடந்த சில ஆண்டுகள் அரசுப் பணிக்கு வந்த இளம் மருத்துவர்கள் கிராமத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல் பகுதி இங்கே.  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்னும்போது அவருக்கு உதவியாக எப்படியும் சிலர் அங்கே இருப்பார்கள். சமாளிக்க முடியாமல் போகும்போது காவல்துறையை உடனடியாக அழைத்துக் கொள்ளலாம். அரசு மருத்துவமனையில் பிரச்சனை செய்தால் கிடைக்கக்கூடிய தண்டனைகள் பற்றி அரசல்புரசலாக தெரியும் என்பதால் பிரச்சனை செய்பவர்கள் யாராவது சமாதானம் செய்யவந்தாலே அமைதியாகிச் சென்று விடுவார்கள்.

தனியாக கிளினிக் கிராமத்தில் ஆரம்பித்தால் இந்த பிரச்சனைகளை அந்த ஒரே ஒரு மனிதர்( எம்.பி.பி.எஸ் மருத்துவர்) மட்டுமே  சந்தித்தாக வேண்டும். காவல்துறையினரை அழைக்க நினைத்தாலும் அதற்கு நேரம் கிடைக்காது.  எல்லாம் முடிந்த பின்னர் காவல்துறையை அழைப்பதற்கு கிளினிக்கை இழுத்து மூடிவிட்டு வேறிடம் சென்று விடலாம் அல்லது அரசுப் பணியை மட்டும் பார்த்துக் கொண்டு அமைதியாக காலம் தள்ளிக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்து விடுவார்.


சான்றிதழ்களில் விடுப்புச் சான்றிதழ்கள் பெரிய பிரச்ச்னையாக இருக்காது.   பணிகளில் இருப்பவர் லேசான வயிற்று வலி என்று சொல்லிவிட்டு ஒருவாரம் விடுப்பு வேண்டும் என்று கேட்பார். பொதுவாக விடுப்பு வழங்கும் அலுவலர் விடுப்புவழங்க தயாராக இருப்பதால் இந்த சான்றிதல் அடிப்படையில் விடுப்பு வழங்கி விடுவதால் பெரும்பாலும் பிரச்சனை வராது. மாணவர்களும் அதே நிலைதான்.

ஆனால் நோயாளியைப் பார்க்காமல் மருத்துவ சான்றிதழ் வழங்கி தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்ட மருத்துவர்களும் இருக்கிறார்கள். இந்த சான்றிதழ்கள் பற்றி பிறிதொரு இடுகையில் பார்க்கலாம்.

கிராமத்து மருத்துவர்களின் பிரச்சனைகளை மட்டும் இங்கு பார்க்கலாம்.  பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள்.

பிறப்புச் சான்றிதழ்கள்: இவை பிரசவம் பார்த்த மருத்துவர் பதிவு செய்ய வேண்டியது அவரின் கடமை என்பதால் இது ஒரு பிரச்சனை அல்ல.

இறப்புச் சான்றிதல்:

இயற்கை மரணத்திற்கு அந்த கிராமத்தில் இருக்கும் பிறப்பு இறப்பு பதிவாளர் பதிந்து விட்டால் அவரே கொடுத்துவிடுவார். ஆனால் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தால், அல்லது இளம் வயதில் மரணம் அடைந்துவிட்டால் மருத்துவ சான்றிதழுடன் வந்தால் தான் உடனே கொடுப்பதாக சொல்லிவிடுவார். ( மருத்துவர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பிறப்பு இறப்பு பதிவாளர் சந்திக்கும் பிரச்சனைகளும் சளைத்தவை அல்ல).

நோயாளி இறந்தால் இறப்பிற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு மருத்துவருக்கு உண்டு.  இதில் தவறான தகவல் கொடுப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால்  நோயாளியைப் பார்க்காமல் இறந்து போனவரை பற்றி அதுவும் அடக்கம் செய்யபின் எப்படி சான்றிதழ் கொடுக்க முடியும்? ஆனால் நிர்பந்தம் கடுமையாக இருக்கும்.

சில நோயாளிகளை இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் மருத்துவர் பார்த்திருப்பார்.  மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்திருப்பார். அழைத்து சென்றிருந்தால்  நோயாளி பிழைத்திருக்கக் கூடும்.  ஆனால் நோயாளியை அழைத்துச் செல்ல சூலம் பார்த்து , கிழமை பார்த்து - திங்கள் பயணம் திரும்பாப் பயணம்- காலம் தாழ்த்த நோயாளி இறந்திருப்பார்.

இப்போது சான்றிதழ் கேட்டு நிற்பார்கள். மருத்துவ சான்றிதழில் உடனடிக் காரணம் என்று என்ன போட முடியும்? அந்த நேரத்தில் என்ன நடந்திருக்கக்கூடும் என்று மருத்துவரால யூகித்தத்தான் முடியுமா? நீங்கள்தானே நோயாளியைப் ( சில நிமிடங்கள்தான் பார்த்திருப்பார்) பார்த்திருக்குறீர்கள் .அதனால் கொடுத்தே தீர வேண்டும் என்று நிர்பந்தப் படுத்துவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.    சில நேரங்களில் வெகு நாட்களாக படுத்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிக்கு குளிர்ந்த நீரால் குளிப்பாட்டுதல் நடக்கும். மிக்குளிர்ந்த நீர் தலைவழியாக வேகமாக ஊற்றப் படும்போது படுத்த படுக்கையில் இருக்கும் நோயாளி மரணம் அடைந்துவிடுவார்.( பிரேதப் பரிசோதனை செய்தால் இதை கண்டறிய முடியும்) இதில் தப்பி விட்டால்  நோயாளிக்கு நூறு ஆயுசாம்.

இதற்கும் அடக்கம் செய்து சில நாட்கள் கழித்து வந்து கேட்டால் என்ன செய்ய முடியும்.

சில நேரங்களில் காதல் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு ஓடியவர்களுக்கு கரும காரியங்களை முடித்துவிட்டு ஊரின் முக்கிய சில வெள்ளை வேட்டிகளுடன் இறந்து போனதாக பதிவு செய்யச் செல்லும்போது அவர் மருத்துவ சான்றிதழ் கேட்டு அனுப்பி விடுவார். (சொத்துப் பிரச்சனைகளுக்கு உதவும் ) இங்கு கிராமத்தில் கிளினிக் வைத்திருக்கும் எம்.பி.பி.எஸ் மருத்துவர்தான் மாட்டுவார். இது போன்ற பிரச்சனைகளில் சாம பேத தான தண்ட வழிகள் பிரயோகம் ஆவது உண்டு.

கிராமத்து ஆட்களிடம் அடிவாங்க  யார்தான் தயாராக இருப்பார்கள்.

வயதுச் சான்றிதழ் 

முதியோர் உதவித் தொகை மாநில அரசால் வழங்கப் பட்டு வருகிறது. வயதானவர்களை சிரமப் படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தோடு  அவரது வாய்மொழியாகச் சொல்லும்  வயதும் உடல் தோற்றமும் ஒத்திருப்பதாக மருத்துவர் சான்றழித்தால் போதும் என்ற நடைமுறை இருக்கிறது.

கிராமத்தில் சில புரோக்கர்கள் இருப்பார்கள். அறியாமையால் இருக்கும் மக்களிடம் அரசு அலுவலகங்களில் வேலைகளை முடித்துத் தருவதாகக் கூறி, சில நேரங்களில் முடித்தும் கொடுத்து காசு பார்த்துவருவார்கள். கிராம மக்களுக்கு நகரங்களில் சுற்றுவதற்கு இவரது உதவி மிகவும் அத்தியாவசியமாக இருக்கும்.  இவர்களில் சிலருக்கு பணத் தேவை என்று வந்து விட்டால்  அந்த ஊரில் உள்ள முதியவர்களுக்கு   விண்ணப்பங்களை வழங்கி விட்டு வயதுச் சான்றிதழ்களுக்காக மருத்துவரிடம் அனுப்பி விடுவார்கள் .   அதில் தகுதி உள்ளவர்களுக்கு சில மாதங்கள் கழித்துவரும். சிலர் காத்திருப்பு பட்டியலுக்குச் செல்வார்கள். சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டிருக்கும். ஆனால் புரோக்கருக்கு பணத்தேவை வரும்போதெல்லாம் விண்ணப்பங்கள் வழங்கப் படும்.  கையெழுத்திட்ட காரணத்தால் அந்த வயதானவர்கள் மருத்துவரிடம் வந்து திட்டிக் கொண்டே செல்வார்கள்.  மக்களின் அறியாமையே அயோக்கியர்களின் பலம். தினமும் திட்டு வாங்குவதற்கு பயந்து கொண்டே அந்த மருத்துவர் கிராமத்திலிருந்து எஸ்கேப்..,

அதே போல பதினெட்டு வயது ஆகாத பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு  பதிவு செய்வதற்காகவும்.  அரசின் நலத்திட்டங்களில் உதவித் தொகை பெறுவதற்காகவும் பதினெட்டு வயது நிரம்பியதாக சான்று கேட்டும் மிரட்டல்களைச் சந்திக்க வேண்டி வரும்.  மருத்துவர் கொடுத்துவிட்டால் அவர் மேல் மைனர் பெண் கடத்தலுக்கு உதவியது, கற்பழிப்புக்கு உதவியது, குழந்தை திருமணத்தை ஆதரித்தது போன்ற பிரிவுகளில் வழக்குத் தொடர முடியும். 

அப்புறம் எங்கே அவர் அந்த ஊர் பக்கம் தலைவைத்துப் படுக்கப் போகிறார்?

இதையெல்லாம் சமாளித்து அந்த மருத்துவர் கிராமத்தில் தொடர்ச்சியாக கிளினிக் நடத்தி வருகிறாரா? அவருக்கு அடுத்து வரும் பிரச்சனைகள் அடுத்த இடுகையில்..,


தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

Read more...

Monday, February 8, 2010

கிராமங்களுக்குச் செல்ல மருத்துவர்களுக்கு என்ன பயம்?

கிராமங்களுக்கு மருத்துவர்கள் செல்ல மறுக்கிறார்கள் என்ற வாதம் தற்போது குறைந்து கொண்டு இருந்தாலும் இன்னும் சிலர் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அரசுப் பணியில் செல்ல எந்த ஒரு மருத்துவரும் கடந்த சில ஆண்டுகளில் மறுக்கவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் கிராமங்களில் எத்தனை என்பதில்தான் தற்போது இதுபோன்ற கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன.

குக்கிராமங்களுக்கு மருத்துவர்கள் ஏன் சென்று சொந்தமாக கிளினிக் நடத்துவதில்லை என்ற கேள்விக்கு பதில் எல்லோருக்கும் தெரியும் என்பதால் அதை தனியாக பின்னர் பார்ப்போம்.

ஓரளவு ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறையாவது பேருந்து வரும் கிராமங்களுக்கு தனியாக கிளினிக் துவங்க நினைக்கும் மருத்துவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி நாம் பார்க்கலாம்.

( ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் இதே போன்ற ஒரு கிராமத்தில் எனது கிளினிக் இருப்பதால் எனக்கு இதில் நல்ல அனுபவம் உண்டு. )

இந்த பிரச்சனை பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து வரக்கூடிய கிராமங்களிலும் உண்டு.  நகரத்தை மிக ஒட்டி இருக்கும் கிராமங்களை நகரத்தோடே சேர்த்துக் கொள்ளலாம்.

தற்போதைய சூழலில் கடந்த சில ஆண்டுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கிராமங்களில் பணியாற்ற தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதால் பல இளம் மருத்துவர்களும் இந்தப் பிரச்சனைகளை சந்தித்து பின்னர் அரசுப் பணி மட்டும் போதும் என்ற சூழலில் இருக்கிறார்கள்.

கட்டாயமாக கிராமங்களில் பணியாற்ற அரசு உத்தரவிட்டு இருப்பதால் அவருக்கு பணி மாறுதல் பொதுவாக கிடையாது. நகரத்தில் ஏற்கனவே வளர்ந்த நிலையில் இருக்கும் மருத்துவமனைகளுடன் போட்டி போட முடியாது என்ற சூழலில்

இந்த இளம் மருத்துவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஓரளவு பெரிய  கிராமத்தில் கிளினிக் ஆரம்பித்து பின்னர் பல பிரச்ச்னைகளை சந்தித்து கிளினிக்கை மூடிவிட்டு அரசுப் பணியை மட்டும் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பிரச்சனைகளை சரி செய்தாலே  மாலைவேளைகளில் அவர்களை அந்த கிராமங்களில் அமர வைக்க முடியும். 

அந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசவே இந்த இடுகை



================================================================


முதல் பிரச்சனை


அந்த ஊரில் ஏற்கனவே இருக்கும் போலி மருத்துவர். பொதுவான வியாதிகளுக்கு பொதுவான சில வைத்திய முறைகளைப் பின்பற்றி குணப் படுத்தி வாழ்வை ஓட்டி வருபவர்கள் இவர்கள். ஆனால் மிக நுணுக்கமான சில அறிகுறிகள் மருத்துவர்களால் பார்க்கப் பட்டிருந்தால் உயிர் பிழைத்திருக்கக் கூடிய பல நோயாளிகளை பரலோகம் அனுப்பிய பெருமை இவர்களுக்கு உண்டு.


எங்கள் பாடப் புத்தகத்தில் ஒரு பொன்மொழி போட்டிருப்பார்கள்.


உன் அறிவுக்குத் தெரிந்தவைதான் உன் கண்களுக்குப் புலப் படும்.


போலிக்கு அதெல்லாம் தேவையில்லையே...


ஆனால் அந்த ஊரில் வீட்டிற்கே வந்து அவர் வைத்தியம் பார்ப்பதால் அவர் அந்த ஊரில் ஒரு ஹீரோ போல இருப்பார்.


அந்த ஊரில் உள்ள பெரும் புள்ளிகளுக்கு வீட்டிற்கே சென்று காத்திருந்து சத்து ஊசி போட்டு விடுவதால்  அந்த ஊர் பெரும் புள்ளிகளின் அன்புக்கு பாத்திரமாக இருப்பார்.


நமது எம்.பி.பி.எஸ் மருத்துவர் அந்த ஊருக்குப் போனால் ஓரளவு படித்தவர்கள், ஓரளவு நல்ல வேலையில் இருப்பவர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் புதிதாக கிராமத்திற்கு வந்த எம்.பி.பி.எஸ் மருத்துவரிடம் வரத்தொடங்குவார்கள். ( ஆனால் அவர்களும், அவர்கள் குழந்தைகளும் வழக்கப் போல நகரத்திற்குத்தான் செல்வார்கள், அவர்கள் இந்தப் பக்கம் திரும்ப சில ஆண்டுகள் பிடிக்கும் ).


இது போன்ற வருவாய்தரத்தக்க முக்கிய வாடிக்கையாளர்கள் இடம் மாறுவதால் நமது போலி ( அரைகுறை என்று சொல்லலாமா? என்று தெரியவில்லை)  அவருக்கு செல்வாக்கு உள்ள பெருந்தலைகள் உதவியுடன் மறைமுகமாக தொல்லைகள் கொடுக்க ஆரம்பிப்பார்.




கருக்கலைப்பு



இன்றைய சூழலில் கருக்கலைப்பு என்பது கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம்தான். நகருக்குச் சென்று கருக்கலைப்பு செய்தல என்பது பிறருக்குத் தெரிந்து விடும் என்பதால் உள்ளூரிலேயே கருக்கலைப்பு செய்யும் ஆட்கள் சிலர் இருப்பார்கள். இவர்களுக்கு இருக்கும் சில வாடிக்கையாளர்கள் நட்பிற்காக எதையும் செய்வார்கள். ( போலிகளின் கருக்கலைப்பு எவ்வாறு மிகக்குறைந்த செலவில் நடக்கிறது என்பதை இந்த சுட்டி மூலம் தெரிந்து கொள்ளலாம்).


நமது எம்.பி.பி.எஸ் மருத்துவரை மட்டம் தட்டுவதில் முதல் கவனம் செலுத்துவார். நமது மருத்துவர் டிஸ்போசபிள் சிரிஞ்ச் உபயோகப் படுத்துவதில் ஆரம்பிப்பார். தேவையில்லாமல் மக்களுக்கு செலவு வைப்பதாகச் சொல்லுவார்.   தான் எப்போதும் சொந்த ஊசி மற்றும் குழல் கொண்டுவருவதாக பெருமை அடித்துக் கொள்வார். எனக்குத்தெரிந்த ஒரு போலி திருமலை படம் வெளிவந்த நேரத்தில்  விஜய் சட்டைக் காலரிலிருந்து வாயால் கவ்வி சிகரெட் எடுப்பது போல ஊசியை எடுப்பார்.

அடுத்ததாக ஊசியை வெந்நீரில் கழுவாமல் உபயோகப் படுத்துவதாக சொல்லிக் கொண்டு சுற்றுவார்.( சுத்திகரிக்கப் பட்ட ஊசி மற்றும் குழாயை கவர் உடைத்ததும் அப்படியே உபயோகப் படுத்த வேண்டும் என்பது கிராம மக்களுக்கு தெரியாதல்லவா)

அடுத்ததாக அதிக டோஸ் மருந்துகள் உபயோகப் படுத்துவதாகவும்  அதனால்தான் ஊரில் உள்ள அவருக்கு அந்த தொந்தரவு வந்தது இவரூக்கு இந்த தொந்தரவு வந்தது என்று சொல்லுவார்.

அடுத்ததாக் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது நண்பர்களை அனுப்பி சண்டை செய்யச் சொல்லுவார். பின்னர் அவரே வந்து சமாதானப் படுத்துவார். பின்னர் இந்த ஊர் பசங்க ரொம்ப கெட்டவங்க சார். உங்க அறுமை இவனுகளுக்குத் தெரியல இவனுகளோடு உங்களுக்கு என்னப் பேச்சு என்று அழகாகப் பேசி  மருத்துவரை மூட்டைக்கட்ட வைத்து விடுவார்.




இந்த அரைகுறைகளை பற்றி அரசுக்குத் தெரியப் படுத்தி கலைய வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. அப்படியே இவர்களை கைது செய்ய வந்தாலும் இவர்கள் தனியாக போர்டு எதுவும் வைக்காத காரணத்தாலும், அந்த ஊருக்கு ஒரே ஒரு வழி மட்டும் இருக்கும் காரணத்தாலும் கிராமத்தில் உள்ளவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இருப்பதாலும் போலியை கைது செய்ய முடியாது. அப்படியே உள்ளே போனாலும் அவரது வாடிக்கையாளர்கள் அவரது மகனை அடுத்த வாரிசாக உருவாக்கி விடுவார்கள்.





தொடரும்.

தமிழீஷில் ஓட்டுக் குத்த இங்கு அழுத்தவும்

Read more...

மூன்றரை வருடத்திய மருத்துவப் படிப்பு.

மூன்றரை வருடத்திய மருத்துவப் படிப்பு பற்றி தி டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிக்கை வெளியிட்ட செய்தி மேலே உள்ளது.

=================================================================

தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

Read more...

Sunday, February 7, 2010

கிராமப் புற மருத்துவம் பாகம் 2

Bachelor of Rural Medicine and Surgery பற்றி

Dr Ketan Desai, president of the Medical Council of India  சொல்லுவது


மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதத் தேவையில்லை.அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இயற்பியல், வேதியல், உயிரியல் பாடங்களில் 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். கிராமத்தில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படும். தகுதிப் பட்டியல் இந்தப் பள்ளி மாணவர்களிடமிருந்தே தயாரிக்கப் படும். பெருநகரங்களில் படித்த மாணவர்கள்சேர்த்துக் கொள்ள படமாட்டார்கள்.


முதல் ஆண்டில் இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி பெறுவார்கள். இரண்டாம் ஆண்டில் மாவட்ட மருத்துவ மனைகளிலும், மூன்றாம் ஆண்டுகளில் மூன்றாம் நிலை கவனிப்பு மருத்துவமனைகளிலும் பயிற்சி பெறுவார்கள். முதலில் ஐம்பது மாணவர்களைக் கொண்டு துவக்கப் படும்.


முதலில் 50,000க்கும் குறைவான மக்கள் தொகை இருக்கும் பகுதிகளில் மட்டுமே பயிற்சி செய்ய ( தொழில் செய்ய) அனுமதிக்கப் படுவார்கள். முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இவர்களுக்கு முதுகலைப் படிப்புக்கு அனுமதிக்க கிடையாது.  பின்னர் இவர்கள்  பெரு நகரங்களுக்கு சென்றுவிடலாம்

மற்ற மருத்துவர்களைப் போல முதுகலைப் படிப்புக்கு அனுமதிக்கப் படுவார்கள்.

மூலம்   http://readerszone.com/india/what-is-bachelor-of-rural-medicine-and-surgery.html

==========================================================================

இதைப் படிக்கும் போது உங்களுக்கே சில கேள்விகள் தோன்றலாம். இதைவிடச் சிறந்த தீர்வு  தமிழக அரசு மூலம் நடந்துவருகிறது.  மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி துவங்கி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சில மருத்துவ கல்லூரிகள் அரசின் சார்பில் துவக்கப் பட்டு வருகின்றன. அங்கு முழுவதும்  மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுவருகிறார்கள். அனைவரின் மதிப்பெண்களும்  பொதுப் பார்வைக்கு வைக்கப் படுகின்றன. தகுதிவாய்ந்த நபர்களை யாரும் ஏமாற்றிவிட முடியாது.படிப்புச் செலவு எனபது மிக குறைவான செலவு வைக்கும் தனியார் பள்ளியில் ஆகும் செலவைவிட குறைவு.  அங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஸ்காலர்ஷிப் பெற தகுதி உள்ளவர்களாக வேறு இருப்பார்கள்.

===================================================================

மீண்டும்   B R M S பற்றி யோசிப்போம்.

//  அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் //

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் மூன்று முதல் ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பார்களா? இவ்வாறு தேசிய அளவில் முக்கியப் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கும் தகுதி அவர்களுக்கு இருக்கிறதா? அல்லது பரிந்துரை செய்யவாவது தகுதியோடு இருப்பார்களா?

உதாரணமாக  ஐ.ஏ.எஸ் படிக்க ஊக்கப் படுத்துவது வழிகாட்டுவது யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஐ.ஏ.எஸ் மாணவரைத் தேர்ந்தெடுக்க அந்த மாவட்ட ஆட்சித்த்லைவர் மட்டும் போதுமா?

=================================================================

//கிராமத்தில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படும்.//

முன்னுரிமை என்றால் அடுத்த உரிமை யாருக்கு?

=================================================================

//பெருநகரங்களில் படித்த மாணவர்கள்சேர்த்துக் கொள்ள படமாட்டார்கள்.

//The merit list will be drawn from these schools and not from metropolitan cities.//

பழனி, தேனி மாணவர்களை என்ன செய்வது?

=====================================================
//For five years after finishing training, these doctors will practice only in areas which have a population of less than 50,000.//

//முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 50,000க்கும் குறைவான மக்கள் தொகை இருக்கும் பகுதிகளில் மட்டுமே பயிற்சி செய்ய ( தொழில் செய்ய) அனுமதிக்கப் படுவார்கள்//

பழனி நகராட்சிக்கு அடுத்துள்ள கிராம பஞ்சாயத்தில் மக்கள் தொகை 50000க்குள் தான் இருக்கும். அங்கேதான்  பழனியின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனைகள், முக்கியப் பள்ளிகள் பழனி கோவில் பக்தர்கள் குவியும் இடங்கள் உள்ளன.   இந்த நபர் அங்கே போய் அமர்ந்து கொண்டால் என்ன செய்வது.   சென்னைக்கு அருகில் நாற்கரச் சாலையில் இதேபோல பல கிராமப் பஞ்சாய்த்துக்கள் இருக்க வாய்ப்பு உள்ளன.

============================================================

//"For five years, they will not be eligible for post-graduate courses. After that, they will be at par with other doctors. Then they can go to the city and pursue PG studies//

ஐந்து வருடம் பலன் தருவதற்கு இவ்வளவு கூத்தா?  இதைவிட தமிழக அரசின் முயற்சி மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி மிகச் சிறப்பு வாய்ந்தது.

தவிரவும் பி.ஆர். எம். எஸ் மூலமாக பின் வாசல் வழியாக சிறப்பு மருத்துவரை மிகச் சுலபமாக உருவாக்கிவிடலாம்.

 தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

Read more...

Saturday, January 9, 2010

இந்திய பாராளுமன்ற தேர்தலைவிட பெரிய நிகழ்ச்சி

உலகின் மிகப் பெரிய் ஜனநாயக நாடான இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல்கள் நடந்து கிண்டிருக்கின்றன. ஓட்டுப் போட வேண்டும். என்றும் ஓட்டளிக்கவிரும்பவில்லையென்றால் 49-0 பயன்படுத்த வேண்டும் என்றும் படித்தவர்கள் பலரும் பலவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். கிராமத்து மக்களும் தங்களுக்கு யார் மிகவும் தோதானவர்கள் என்பதைப் பார்த்து ஓட்டளித்துவிடுகிறார்கள். இந்த நாட்டில் இந்திய பாராளுமன்ற தேர்தலைவிட மிகப் பெரிய ஒரு நிகழ்வு மிகப் பெரிய திட்டமிடுதலுடன் கொஞ்சமும் தவறு நிகழாமல் கட்டுக் கோப்புடன் நடக்கும் ஒரு நிகழ்வு பற்றித்தான் இங்கு பதிய விரும்புகிறேன்.


அதுதான் போலியோ சொட்டு மருந்து முகாம். இந்தியா முழுவதும் ஆண்டுக்கு இருமுறை ஒரே நாளில் கொடுக்கப் படுகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நாளில் கொடுக்கப் படுகிறது. போலியோ நோய் காணப் படும் ஒரு சில மாநிலங்களில் கூடுதலாக இரண்டு முறை என நான்கு முறை கொடுக்கப் படுகிறது.

தமிழகத்தில் இதற்கான ஏற்பாட்டை தமிழக சுகாதாரத்துறை மேற்கொள்கிறது. களத்தில் செயல்படுத்துபவர்களாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் விளங்குகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் குழந்தை வளர்ச்சித்திட்டத்தைச் சார்ந்த அலுவலர்களும் பணியாளர்களும் இதில் களம் இறங்குகின்றனர்.

பயனாளிகள் எண்ணிக்கையை முதலிலேயே கணக்கெடுத்து ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு மருந்துகள் தேவைப் படும் என்ற உத்தேசக் கண்க்குப் போட்டு தேவையான மருந்துகள் இருப்பில் வைத்துக் கொள்ளப் படுகின்றன. மருந்து வைக்கப் படவேண்டிய வெப்பநிலை(குளிர்நிலை) சரியான அளவில் காப்பதற்காக குளிர்சங்கிலி குளிர்பதனிகள் பயன்படுத்தப் படுகின்றன. அந்த இடங்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதற்கு வழிவகைகள் செய்யப் படுகின்றன. தவிர்க்க முடியாத சூழலில் மிந்தடை ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மற்றொரு சுகாதார நிலையத்திற்கு போலியோ சொட்டு மருந்துகள் இடமாற்றம் செய்யப் படுகின்றன.

சொட்டு மருந்து கொடுக்கும் அலுவலர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன. குழந்தைகளின் அலைச்சலைத்தடுப்பதற்காக நூறு குழந்தைகளுக்கு ஒரு பூத் என்ற அளவிலும் குழந்தைகள் குறைவாக இருந்தால் கூட ஒரு கிராமத்திற்கு ஒரு சொட்டு மருந்து நிலையமும் அமைக்கப் படுகின்றன. சில கிராமங்களில் மூன்று நிலையங்கள் கூட அமைக்கப் படுவது உண்டு. ஒவ்வொரு மருந்து குப்பியிலும் கண்காணிப்பான் இணைக்கப் பட்டுள்ளது. அதில் ஏற்படும் நிறமாறுதல்களைக் கொண்டு மருந்தின் தனமையை உணரமுடியும்.

இந்த நிலையங்களில் ஒரு கூடுதல் வசதியும் உண்டு. எந்த குழந்தை எந்த சொட்டு மருந்து நிலையத்தில் வேண்டுமானாலும் மருந்து கொடுத்துக் கொள்ளலாம். மறுப்பு ஏதும் இல்லாமல் கொடுத்துவிடுவார்கள் . குழந்தையின் இடது கைச் சுட்டு விரலில் அடையாளமை வைத்துவிடுவார்கள்.

அதிகாலை ஏழுமணி அளவில் அனைத்து சொட்டு மருந்து நிலையங்களிலும் மருந்துகள் சென்றடையும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கும். ஏழுமணிக்கு சொட்டுமருந்துகள் அதற்குரிய குளிர்பதன பெட்டியில் வைத்து அந்த நிலையங்களைச் சென்றடைந்த உடன் மருந்துகள் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். பெரும்பாலும் தமிழகத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும்குளிர்நிலவும். இருந்தாலும் அலுவலர்கள் சரியாக ஏழுமணிக்கு மருந்து கொடுக்கும் பணியைத் துவக்கிவிடுவார்கள்.

மதியத்திற்குப் பிறகு சொட்டுமருந்து நிலையத்தில் இருக்கும் பணியாளர்களில் இருவர் அவர்களுக்குரிய பகுதிக்குள் சென்று ஏதேனும் குழந்தைகள் விடுபட்டி இருந்தால் அழைத்துவரும் பணியினைச் செய்வார்கள்.வெளியூரிலிருந்து வந்த குழந்தைகளுக்கும் கொடுத்துவிடுவார்கள்.

பொதுவாக முதல் நாள் அன்றே அனைத்து குழந்தைகளுக்கும் கொடுத்துவிடுவார்கள். அடுத்த நாளில் இந்தப் பணியாளர்கள் ஊருக்குள் சென்று ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து கொடுக்கப் பட்டுள்ளதா என்று விசாரிப்பார்கள். எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் விடுபட்டு இருந்தால் கொடுத்துவிடுவார்கள். கொடுக்கமுடியாத சூழலில் அந்த வீட்டில் xகுறியிட்டுவருவார்கள். கொடுக்கப் பட்ட வீடுகளில் Pகுறியிட்டு வரிசை எண் சொடுத்து வருவார்கள். அப்படி x குறியிட்ட வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க மருத்துவக்குழு வந்து கொடுப்பார்கள். மறுப்பவர்களுக்குத் தகுந்த விளக்கம் கொடுத்து அவசியத்தை உணரவைத்து சொட்டுமருந்து கொடுத்து விடுவார்கள்.

பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர் தனது கண்காணிப்பு பணியினைத் தொடர்வார். அவர் பத்து வீடுகளுக்கு ஒரு வீடு வீதம் சென்று கதவில் குறிப்பிட்டு இருக்கும் P மற்றும் அனைத்து x குறியீடுகளையும் ஆய்வு செய்வார். வழியில் தென்படும் அனைத்து குழந்தைகளையும் கண்காணித்து மருந்து கொடுக்கப் பட்டுள்ளதா மற்றும் விரலில் மை வைக்கப் பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வார். ( நம்புங்கள் மருத்துவர் கிராமங்களில் இறங்கி ஒவ்வொரு தெருவிலும் நடந்து சென்றுதான் இந்தப் பணியினைச் செய்வார்).

இவரது பணியினை வட்டார, மாவட்ட, மாநில அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். அனைவரது குறிக்கோளும் அனைத்து குழந்தைகளுக்கும் விடுபடாமல் மருந்து கொடுக்கப் பட வேண்டும் என்பதே.. அப்போது தானே போலியோ என்ற இளம்பிள்ளைவாதம் இல்லாத உலகத்தை உருவாக்க முடியும்.

========================================================

சென்ற ஆண்டுவரை எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் இந்த முகாம்கள் நடை பெற்று வந்தன. இளம்பிள்ளை வாதமும் ஏறக்குறைய தமிழகத்திலிருந்து விரட்டி அடிக்கப் பட்டுவிட்டது. கூடிய விரைவில் இந்தியாவிலிருந்தே விரட்டி அடிக்கப் படும் சூழல் இன்று இருக்கிறது.

சென்ற டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வதந்தியால் ஒரு அதிபயங்கர பதட்டம் ஏற்பட்டது. குழந்தைகளைப் பெற்றவர்கள் குழந்தைகளைத்தூக்கிக் கொண்டு அருகிலுள்ள நிலையங்களுக்கு பறந்து கொண்டிருந்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளவர்கள் பல இடங்களில் கடும் சொற்களால் அர்ச்சனை செய்யப் பட்டும் சில இடங்களில் தாக்குதல்களும் கூட நடைபெற்றன.பெரும்பாலான இடங்களில் காவலர்களின் துணையோடுதான் பணியாளர்களை மீட்க முடிந்தது.( ஒரு இடத்தில் பெட்ரோல் கேனுடன் ஒரு நபர் வந்து என் குழந்தைக்கு ஏதாவது நேர்ந்தால் உங்களைக் கொழுத்திவிடுவேன் என்ற மிரட்டலுடன் நின்று கொண்டார். பணியாளர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருப்பது தெரியாமல் அந்த நபரின் குழந்தை அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தது.)

மறுநாள் நாங்கள் களப்பணிக்குச் சென்ற போது மக்கள் ஓரளவு தெளிவடைந்து இருந்தனர். பெரும்பாலானோர் முதல் நாள் நடைபெற்ற சம்பவங்களுக்கு மிகப் பெரிய வருத்தத்தை தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் பாதிக்கப் பட்ட பணியாளர்களை களத்தினுள் இறக்குவது என்பது மிகப் பெரிய சவாலாக அமைந்தது. அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து வெளியே வரவே சில மாதங்களானது. நேற்றுவரை தங்களிடம் மிக மரியாதையுடன் நடந்து கொண்டிருந்த மக்கள் ஒரு வதந்தியை நம்பி மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டது அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்திருந்தது. ஒரு சிலர்தான் தரக்குறைவாக நடந்து கொண்டாலும் மற்றவர்கள் அதை வேடிக்கை பார்த்தார்கள் என்பதும் அவர்களால் ஜீரணீக்க முடியவில்லை. அந்த அதிர்ச்சி நிலையில் இருந்தவர்களை உடன் வைத்துக் கொண்டு மற்ற பணியாளர்களை வைத்து முகாமினை நடத்தி முடிக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டோம்.


அடுத்த பிப்ரவரி மாதத்தில் அடுத்த முகாம் நடைபெற்றது. அதற்கான பிரச்சார நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒருமாத கால அளவில் ஈடுபட்டிருந்தோம். மக்களோடு கலந்துரையாடல்களில் ஈடுபட்டபோது மக்கள் ஓரளவு தெளிவாக இருப்பதாகவே பட்டது.


இருந்தாலும் சொட்டுமருந்து முகாம் நடைபெற்றபோது ஒரு அதிர்ச்சி எங்களுக்குக் காத்திருந்தது. வழக்கமாக பதினொரு மணியளவில் 90சதவீதம் குழந்தைகளுக்கு மருந்து கள் கொடுக்கப் பட்டிருக்கும். ஆனால் அன்று மிகக்குறைந்த அளவு மட்டுமே கொடுக்கப் பட்டிருந்தது. மக்களை சந்தித்து பேசியதில் கொடுத்துவிடுகிறோம் என்ற பதிலே கிடைத்தது. இருந்தாலும் சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்ததில் ஒரு உண்மை வெளிப்பட்டது. அதாவது காலையில் மருந்து கொடுத்த குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தெரிந்தபின்னர்தான் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற என்ற எண்ணத்தில் பெரும்பாலோனோர் இருந்திருக்கின்றனர். ஒருவழியாக பெரும்பாலான குழந்தைகளுக்கு அன்று மாலை 5 மணிக்குள் கொடுத்து முடித்தோம். பிற்கு களத்தினுள் ஒருவாரகாலம் கடும் முயற்சிக்கு பின்னர் அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுத்தோம்.

இப்போது சொல்லுங்கள் பாராளுமன்ற தேர்தலைவிட இளம்பிள்ளைவாதச் சொட்டு மருந்து கொடுக்கும் பணி பெரியதுதானே..

=============================================================

பிப்ரவரி மாத முகாமில் அனைத்து குழந்தைகளுக்கும் மருந்து கொடுக்க நாங்கள் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர் வழக்கம்போல முற்பகலிலேயே பெரும்பகுதியை கொடுத்துவிட்டதாக சொன்னார். எப்படி நடத்தினீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..

வதந்தியைப் பரப்புபவர்களுக்கு சிறைத்தண்டனை என்பதை பெரிய அளவில் எழுதி வைத்திருந்தார். (நாங்களும் எழுதி வைத்திருந்தோம். அவர் மிகப் பெரிய அளவில் வைத்திருக்கிறார்) அப்படி மருந்தினைப் பற்றி அவதூறு பேச்சு பேசுபவர்களை உடனடியாக காவலர்களிடம் ஒப்படைத்தும் விட்டார்.

அரசு கொடுக்கும் மருந்து கொடுக்கவிருப்பம் இல்லாதவர்களிடம் இந்த மருந்து கொடுக்காவிட்டால் இளம்பிள்ளைவாதம் வரும்வாய்ப்பு இருக்கிறது. அப்படி வந்தால் அரசிடமிருந்து எந்த உதவிகளும் கிடைக்காது என்று எழுதப்பட்ட காகிதத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டால் பணியாளர்கள் யாரும் வந்து சொட்டுமருந்து போடுமாறு தொந்தரவு செய்யமாட்டார்கள் என்று கூறிவிட்டார்.ஆரம்பத்தில் கையெழுத்துப் போட்ட ஒரு சிலர்கூட மதியம் ஆனபிற்கு மருந்தினைக் கொடுத்துவிட்டோம் அந்த காகிதத்தினைக் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர். அதை நண்பர் அழித்தும் விட்டார்.

அவரது அணுகுமுறையின் காரணமாக அங்கு மற்ற இடங்களைவிட அங்கு ஆர்வமாக மக்கள் மருந்துகளை கொடுத்துவிட்டனர்.
==================================

Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP