Thursday, December 25, 2008

சார். .. குளுக்கோஸ் போடுங்க....

தடதட வென்ற ஓசையோடு ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் அந்த புல்லட் வாகனம் வந்து நின்றது. வழக்கமாய் உலக விஷயங்களை கலந்தாய்வு செய்து கொண்டிருக்கும் பொதுமக்கள், தங்களது உடல் நலக் குறைவுகளை மறந்துவிட்டு வண்டியில் வந்திறங்கிய 22 வயது அண்ணன் புலிப் பாண்டியையே பார்த்தனர்,


புலிப் பாண்டி நேராக மருத்துவர் அறைக்குச் சென்றார். அவர் வரிசையில் எல்லாம் நிற்கவில்லை. நேராகச் சென்றார். வழிவிடுவதற்கு யாரும் தயாராக இல்லாத சூழ்நிலையிலும் தடுக்கவும் யாரும் தயாராக இல்லை. அவருக்குப் பின்னால் அவரது நண்பர் குலாமும் வந்து சேர்ந்தது. மருத்துவரைப் பார்த்ததும் அந்தக் கேள்வியைக் கேட்டார்.

சார், குளுக்கோஸ் போடுங்க...

சரி போட்டுடுவோம் இது மருத்துவர்,

குடுங்க சார், சீட்டை எனக்கு நேரமாச்சு, இது புலிப் பாண்டி

நோயாளியக் காட்டுங்க . ஓ.பி, சீட்டு பதிவு பண்ணிட்டு வாங்க, மீண்டும் மருத்துவர்.

டாக்டர் அவசரம் புரியாம பேசாதீங்க, எனக்கு நெறைய வேலை இருக்கு.

மருத்துவர் சற்று எரிச்சல் அடைந்தார்.

அப்ப வேலையை முடிச்சிட்டு வாங்க,
வரும்போது நோயாளியக் கூட்டிட்டு வாங்க்..........

புலிப் பாண்டி அதற்குமேல் கோபம் அடைந்தார்.
சார், எனக்குத்தான் குளுக்கோஸ் போடனும்..

நல்லத்தான இருக்கீங்க.....

என்ன டாக்டர், நக்கலா... நல்லாயிருக்கரவங்க ஆஸ்பத்திரிக்கு வருவாங்க.. எனக்குத்தான் உடம்பு சரியில்லை...

அப்படியா உங்களுக்கு என்ன?

பக்கத்தில் இருக்கும் பாதுகாவலர் [உள்ளூர் பாஷையில் அல்லக்கை] அதுதான் அண்ணன் உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டே இருக்காருல்ல.. மொதல்ல குளுக்கோஸ் போடு சாரு...

மருத்துவருக்கு ஓரளவு நிலைமை புரிந்து விட்டது. இப்போதைய தேவை ஒரு குளுக்கோஸ் அதற்காக கதை அளக்கத் தொடங்கிவிட்டனர்.

உடம்பு முடியல அப்படின்னா.. உங்களுக்கு என்ன கஷ்டம் அதை சொல்லுங்க...


டாகடர், சீக்கிரம் அனுப்புங்க எனக்கு டைம் ஆச்சு...


குளுக்கோஸ் எல்லாம் போடமுடியாதுங்க.. அது ரொம்ப முடியாதவங்களுக்கு போடறது, நீங்க நல்லாத்தானே இருக்கீங்க.. இது மருத்துவர்.

டாக்டர் அண்ணன் ரொம்ப சோர்வா இருக்காஅர், அதுக்கு ஒரு குளுக்கோஸ் போடுங்க.. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், நாங்க முடியாமத்தான் வந்திருக்கோம் சீக்கிரம் போடுங்க...

மருத்துவரின் மூளை வேகமாக வேலை செய்கிறது, [பின்னே.. அவருக்கு தடயவியல் மருத்துவத்திலும் சேர்த்துத்தானே படிக்கச் சொல்லி பயிர்ச்சி அளித்து அனுப்பி இருக்கிறார்கள்]

இந்தாங்க.. போய் ரத்த டெஸ்ட் எடுத்திட்டு வாங்க..

டாக்டர். அந்த டெஸ்ட் நான் மூணு மாசத்துக்கு ஒருமுறை பண்ணிட்டேதான் இருக்கிறேன். இப்ப அவசரத்துக்கு ப் பருங்கள்

அது எச்,ஐ,வி, டெஸ்ட் டுப்பா. இப்ப செய்யறது சர்க்கரை இருக்கான்னு பார்க்குற டெஸ்ட்.

டாக்டர், உங்களுக்கு மூளை கீளை அவிஞ்சு போச்சா... என் வயசுக்கு சர்க்கரை எல்லாம் எப்படி வரும். நீங்க பாட்டுக்கு ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்லரீங்க.

அதுக்குத்தான் இந்த பரிசோதனையே.. உங்களோட சோர்வுக்கு அது கூட காரணமாய் இருக்கலாம்.

டாக்டர் எனக்கு வேலை அதிகம், அதுனாலதான் சோர்வு, எனக்கு ஒரு குளுக்கோஸ் போடுங்க.

அப்படியெல்லாம் போடமுடியாது. நீங்க பரிசோதனை செய்து வந்தால் மட்டுமே அதனடிப்படையில் குளுக்கோஸ் போடமுடியும். மருத்துவர் திட்டவட்டமாக சொல்லிவிட்டு மற்ற நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

புலிப்பாண்டி நேராக ரத்த ப்ரிசோதனைக்குப் போனார். அங்கு பணிபுரியும் ஆய்வகர் பெரிய ஊசியுடன்[அது சராசரியாக பயன்படுத்தப் படும் சாதாரண ஊசிதான்] புலிப் பாண்டியை நெருங்கினர்ர். ஊசியைப்பார்த்த புலிப் பாண்டி நாலைக்கு செய்துக் கொள்கிறேன் என்று சொல்லி தன் அவசர வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.

மறுநாள் காலை

மருத்துவர் வரும் நேரம்

சுகாதார நிலையத்தின் முன் ஒரே கூட்டம், அனைவரும் புலிப் பாண்டியின் ஆட்கள். கோபத்தில் தங்களுக்குள் காச்மூச் என்று கத்திக் கொண்டிருந்தனர்.

எல்லாம் உங்களால்தான் டாக்டர். புலிப் பாண்டிக்கு இப்படி ஆகிவிட்டது. வழக்கமாய் ரணகளமாக மாறுமே.. இவ்வளவு அமைதியாக பேசுகிறார்களே..
மருத்துவர் குழப்பத்துடன் உள்ளே சென்றார்.

உள்ளே புலிப் பாண்டி தலையில் பெரிய காயத்துடன் உட்கார்ந்திருந்தார். அந்த ஊரில் கபடிபோட்டி நடத்தியிருக்கிறார்கள். அதற்காகத்தான் புலிப்பாண்டி குளுக்கோஸ் கேட்டிருக்கிறார். குளுக்கோஸ் போடாமல் ஆடியதில் அவருக்கு மண்டை உடைந்து போனது. இன்று நிஜமாக நோயாளியாக நின்று கொண்டிருந்தார்.

பின்குறிப்பு:-

வழக்கம்போல் பச்சை நிறத்தில் இருப்பவை மருத்துவர் பேசுவது.


சிவப்பு நிறத்தில் இருப்பது பிறதிவாதி பேசுவது

Read more...

Wednesday, December 10, 2008

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -3

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -1


மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2மார்பகப் புற்று நோய்க்கு மருத்துவம் எது ?


மார்பகப் புற்று நோயின் மருத்துவம், கட்டியின் அளவு, இருப்பிடத்தைப் பொறுத்து, பரிசோதனை சாலையின் பரிசோதனை முடிவுகளையும், நோயுள்ள படி நிலையையும், நோயீன் தன்மையைப் பொறுத்தும் அமையும் மருத்தும் என்பது தணிப்பட்டது அல்லது முழு உடல் சார்ந்தது

மார்பு பகுதிக்கு மட்டும் மருத்துவம்:-

ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள புற்றுநோய் அணுக்களை நீக்கவோ, அழிததலோ கட்டுபடுத்துதலோ இந்த வகை மருத்துவத்தின் தன்மையாகும். அறுவை மருத்துவம், அதிரொலி பாய்ச்ச மருத்துவங்கள் இந்த வகை மருத்துவத்துக்குட்பட்ட மருத்துவமாகும்.


அறுவை மருத்துவம்
அறுவை மருத்துவம் என்பது மார்பகக் புற்று நோய்க்கான மிகச் சாதாரணமான மருத்துவ முறையாகும்.


அறுவை மருத்துவத்தின் வகைகள்:-

அ. லம்பாக்டமி (
Lumpectomy)
இந்த வகை அறுவை மருத்துவத்தில் மார்பகம் அப்படியே இருக்கும் மார்பகக் கட்டியும், அதைச் சுற்றியுள்ள சாதாரண இழைமங்கள் சிலவும் அறுத்து அகற்றப்படும்.

ஆ. மாஸ்டெக்லொமி (Mastectomy)
இதில் பல வகைகள் உள்ளன. அவை யாவன.

சாதாரண மாஸ்டெக்டமி (Simple mastectomy)
இந்த முறையில் அக்குளிலுள்ள லிம்ப் நோட்களைச் சுத்தப்படுத்தி, பத்திரப்படுத்தி விட்டு மார்பகத்தை அறுத்து முழுதும் அகற்றப்படும்.


ரேடிகல் மாஸ்டெக்டமி:-

இந்த முறையில் மார்பகம் முழுவதும் அக்குளுக்குரிய லிம்ப் நோட்களும் சிறிது மார்பக சுற்று சதையும் அறத்து அகற்றப்படும். புற்றுநோய் மார்பக சுற்றுச்சதையில் பரவியிருந்தால் மட்டுமே இந்த அறுவை நடத்தப்படும். பெரும்பாலான மாஸ்டெக்டமி நோயாளிகளுக்கு அந்த அறுவை மருத்துவத்தின் போதோ அல்லது சில மாதங்களுக்குப் பிறகோ மார்பக மீட்டுரு வாக்கம் (re constriction) செய்யப்படும்.

மாடிபைட் ரேடிகல் மாஸ்டெக்டமி (Modified)

இந்த முறையில் மார்பகமும் கை அக்குளின் கீழுள்ள சில லிம்ப் நோட்களும் அறுத்து அகற்றப் படும். மார்பு சைதைகளும், அப்படியே பத்திரமாக விட்டு வைக்கப் படுவதால் மார்பகச் சுவற்று வெளித் தோற்றமும், கையின் ஆற்றலும் பாதிக்கப் படாது. எளிதில் சீராகி விடும். இதுதான் தரமான மாஸ்டெக்டமி முறையாகும். இதில் அக்குளின் கீழுள்ள லிம்ப் நோட்கள் அகற்றுவதுடன் கூடிய சாதாரண மாஸ்டெக்டமியும் அடங்கும்.


கதிர்பாய்ச்சு மருத்துவ முறை (Radiation thoraphy)
ரேடியேஷன் தெரபியில் (இதை ரேடியோ தெரபி என்றும் கூறுவார்கள்) புற்றுநோய் அணுக்களை அழித்து அவை மேலும் வளராமல் தடுப்பதற்கு ஆற்றல் வாய்ந்த எக்ஸ்-ரேக்களைப் பயன் படுத்துவார்கள். இந்தக் கதிர்கள் சாதாரணமாக வெளியிலுள்ள ரேடியோ பொருட்களிலிருந்து வெளிவந்து இயந்திரத்தின் உதவியால் மார்பகத்தை நோக்கிப் பாய்ச்சப் படுவதால் வெளிபுற கதிர்வீச்சு (
External rerdiction) என்று கூறப்படும்.


சிஸ்டமிக் டிரீட்மெண்ட்:-

உடலமைப்பு முழுதும் சார்ந்த இந்த மருத்துவத்தில் கீழ்க்கண்டவை அடங்கும்.


1. கீமோ தெரபி
புற்று அணுக்களை அழிக்க மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறை மருத்துவமாகும். இது வழக்கமாக மருந்துகளின் கலவையாகும். இம்மருந்துகளின் வாய் வழியாகவோ, ஊசியின் மூலமோ தரப்படும். கீமோ தெரபி உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாகும். ஏனென்றால் தரப்படும் மருந்துகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுதும் பயணம் செய்யும். இது சுழற்சியாக தரப்படும். அதாவது மருத்துவ காலம், தேறும் காலம் மீண்டும் மருத்துவ காலம் என்று விட்டு விட்டு ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும்.


2. ஹார்மோனல் தெரபி
புற்றுநோய் அணுக்கள் தாங்கள் வளர தேவையான ஹார்மோன்களிடமிருந்து தள்ளி வைக்கும் மருத்துவ முறையாகும். இந்த மருத்துவத்தில் ஹார்மோன்கள் பணி செய்யும் முறையை மாற்றும் மருந்துகள் பயன் படுத்தப்படும். இதில் பெண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவமும் அடங்கும். அது உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாதலால் உடல் முழுதுமுள்ள புற்று நோய் அணுக்களை பாதிக்கும்.

மருத்துவ மனையில் என்ன நடக்கும்?


கீழ்க்கண்டவை நீங்கள் மாஸ்டெக்டமி செய்து கொள்ளப் கொள்ளபவராக இருப்பின் நீங்கள் பெறப் போகும் குறிப்புகள் விவரம்


 • உங்களுடைய மருத்துவர் உங்கள் நோய் வரலாற்றைக் கேட்டறிவார். அறுவை மருத்துவத்தின் தன்மையையும் அதிலுள்ள சிக்கல்களையும் உங்களுக்கு விளக்குவார்.

 • நீங்கள் அறுவை மருத்துவத்திற்குத் தகுதியானவர் தானா என்பதைக் கண்டறிய உங்களின் இரத்தம் சிறிது பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

 • நீங்கள் 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருப்பின் கிழ்க்கண்ட பரிசோதனைகள் நடைபெறும். உங்கள் இதயத்துடிப்பைப் பரிசீலிக்க எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈ.சி.ஜி.) பரிசோதனையும், உங்களுடைய நுரையீரல், சரியாக உள்ளனவா என்பதை உறுதிப் படுத்த மார்புற எக்ஸ்-ரேவும் எடுக்கப்படும்.

அனுமதி பெறும் நாளில்

 • நீங்கள் படுக்கைத் தொகுதிக்குள் (Ward) வந்ததும் வசதியாக தங்க செவிலியர் ஏற்பாடுகள் செய்து தருவார். பின்னர் உங்களுடைய எடை, உடல் வெப்பநிலை, நாடித் துடிப்பு, சுவாசிக்கும் அளவு, இரத்த அழுத்தம் முதலியவற்றைப் பரிசீலிப்பார்.
 • மருத்துவர் உங்கள் நோய் வரலாற்றைக் கேட்டறிந்து உங்களைப் பரிசோதிப்பார். அவர் உங்களுக்குச் செய்ய வேண்டிய சிகிச்சையின் தன்மை, சிக்கல்களை விளக்கி உங்கள் அனுமதியைப் பெறுவார்.
 • மயக்க மருந்து வல்லுநர் நீங்கள் அறுவை மருத்துவத்திற்கு தகதியானவர் தானா என்று மதிப்பீடு செய்வார்.
 • பொதுவாக இரவு 12 மணிக்குமேல் நீங்கள் எதையும் உண்ணவோ, குடிக்கவோ கூடாது என அறிவுறுத்தப் படுவீர்கள்.

அறுவை பெறும் நாள்

அறுவை மருத்துவத்திற்கு முன்னர்

 • நீங்கள் உணவோ, நீரோ எடுத்துக் கொள்ளக் கூடாதென்று நினைவுறுத்தப் படுவீர்கள.

 • அறுவை மருத்துவ அறைக்குள் நீங்கள் போகுமுன்னர் அதற்குரிய கவுனை எடுத்து அணியுமாறு கேட்டுக் கொகள்ளப் படுவீர்கள்.
 • மருத்துவ பணியாளர் உங்களை உங்கள் படுக்கையிலிருந்து ஒரு தள்ளுவண்டியில் படுக்க வைத்து அறவை மருத்துவ அறைக்குள் தள்ளிச்செல்வார்

அறுவை மருத்துவத்திப் பின்னால்

 • படுக்கை பகுதியில் நீங்கள் கூர்ந்து கவனிக்கப் படுவீர்கள்.
 • அதிகமாக வடியும் இரத்தத்தை அல்லது நிணநீரை வடிக்க அறுவை நடக்கும் இடத்தில் ஒரு குழல் (Tube) உள்ளே வைக்கப்படும்.
 • மயக்க மருந்தின் பக்க விளைவாக நீங்கள் வாந்தியெடுக்கலாம் அல்லது அந்த் இடத்தில் வலியை உணரலாம். அவற்றை உங்கள் செவிலியரிடம் தெரிவியுங்கள்.
 • மயக்க மருந்து தீருவதற்காக அறுவை மருத்துவம் நடந்து முடிந்த 6 மணி நேரம் வரை நீங்கள் படுக்கையில் படுத்திருக்க வேண்டும். எனினும் நீங்கள் நன்கு இருப்பதாக உணர்ந்தால் எழுந்து உட்காரவோ படுக்கையைச் சுற்றி மெல்ல நடக்கவோ நீங்கள் ஊக்கிவிக்கப்படுவீர்கள்.
 • உங்கள் மருத்துவரின் குறிப்பின் படி உங்களுக்கு பானமோ, உணவோ தரப்படும்.

அறுவை மருத்துவம் நடந்து முடிந்த 1-6 நாட்களில்

 • அறவை மருத்துவம் நடந்த இடத்தில் அளவான இயக்கம் இருப்பதை உணர்வீர்கள்.
 • குப்பியில் 20 மி,லி,க்கும் குறைவான அளவு வடிநீர் இருந்தால் அது அகற்றப்படும்.
 • அறுவை நடந்த பக்கத்தில் உள்ள தோளும், கையும் ஆற்றலைப் பெறவும், அசைவைப் பெறவும் மார்பக ஆலோசகரோ அல்லது பிசியோ தெரபிஸ்டோ உங்களுக்குச் சில எளிய பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பார்.
 • அறுவை நடந்த இடத்தில் வலியிருந்தால் உங்கள் செவிலியர்க்கு சொல்லுங்கள். அந்த வலிக்கு காரணம் அறிந்து உங்களுக்கு ஊசி போடக் கூடும்.இல்லையென்றால் மருத்துவரை அழைக்க கூடும்
 • புற்று அணுக்கள் பரவியுள்ளனவா எனப்பதைப் பரிசீலிக்கக ஒரு எலும்பு ஸ்கேன் எடுக்கவும், ஈரலில் அதிரொலி பரிசோதனைக்கும் நீங்கள் அனுப்பபடுவீர்கள்.

மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பும் நாள்

 • உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசீலித்து நீங்கள் நலமாக இருந்தால் வீட்டிற்கு அனப்புவார்.
 • உங்களுக்குத் தேவையான மருந்துகளை மருத்துவர் எழுதித்தருவார். அம்மருந்துகளை எப்படி பயன் படுத்த வேண்டுமென்பதை மருத்துவமனையில் விளக்குவார்.
 • உங்கள் செவிலியர் மருத்துவ சான்றிதழும், மறுமுறை மருத்துவரை எந்த நாளில் சந்திக்க வேண்டும் என்ற விவரத்தையும், மருத்துவ மனையிலிருந்து நீங்கள் போகுமுன்னர் தருவார்.
 • நீங்கள் மருத்துவ மனையில் இருக்கம் போது செய்யப்படாததிருந்தால் ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டிய நாளையும் பிற விவரங்களையும் உங்களுக்குத் தெரிவிப்பார்
 • அறுவை மருத்துவரை நீங்கள் காண வேண்டிய நாள் விவரமும் தரப்படும்.

குறிப்பு:
வடிகால் குப்பி விலக்கப் படுவதைப் பொறுத்து நீங்கள் மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்படும் நாள் அமையும். நீங்கள் நலமாக இருந்தால் நீங்கள் வடிகால் குப்பியுடனேயே நீங்கள் வீட்டிற்குப் போகலாம். அதை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பது குறித்து செவிலியர் உங்களுக்கு கற்றுக் கொடுப்பார். சிறப்பு மருத்துவர் அவற்றை நீக்கலாமா என்பதையும் நிர்ணயிப்பார்.

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4

நன்றி:- CHANGI GENERAL HOSPITAL


Read more...

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -1


மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2


மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -3


1. மார்பக இழப்பு காலப் போக்கில் பின் சமாளிக்க முடியும்.

இந்தச் சிக்கல்களைச் சமாளிக்க உதவும்.

சில கருத்துரைகள் கீழே தரப்பட்டுள்ளன:

a. யாரோடாவது பேசுங்கள் உங்கள் உணர்ச்சி காலப்போக்கில் தணியும். உங்கள் உணர்ச்சிகளை உங்களுடைய கணவர், குடும்ப உறுப்பினர் அல்லது நெருங்கிய நண்பரிடம் பேசித் தீருங்கள்.

b. காயம் ஆறுதலில் கவனம் செலுத்துங்கள், உங்கள் ஆலோசகர் அறிவித்துள்ள உடற்பயிற்சிகனை தொடறுங்கள்.


2. அறுவை நடந்த இடம் ஆற கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்
அறுக்கப்பட்ட இடத்தில் கட்டுபோட்டிருக்கும் அந்தக் கட்டு ஈரமாகாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்பாஞ்ச் குளியல் எடுத்துக்கொண்டு அப்பகுதி ஈரமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தையல் பிரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் வழக்கம்போலக் குளிக்கலாம்.


3. பந்து பிழிதல்

 • ஒரு ரப்பர் பந்தைக் கையில் பிடித்துக் கொண்டு படுக்கையில் படுங்கள்.
 • கைகளை மேலே நேராக உயர்த்தி பந்தை மாறி மாறி பிசைந்து விடவும்.
 • பரிந்துரைத்த முறையில் இந்தப் பயிற்சியைச் செய்யவும்.

4. இராட்டினம் சுழுற்றல்

 • ஒரு நூற் கயிறின் இரு முனைகளில் முடிச்சுகளைப் போடவும். பாதிக்கப்படாத கையின் உதவியால் நூற் கயிற்றினை ஒரு கதவின் மீது வீசி கதவின் இருபுறங்களிலும் ஒவ்வொரு முடிச்சுடன் கூடிய ணுனை இருக்கும்படி செய்யவும்.
 • கதவினை இரு கால்களின் இடுக்கில் வைத்து அழுத்திப் படித்துக் கொண்டு குதிகால்கள் நிலத்தில் நன்கு ஊன்றுமாறு அமரவும்.
 • நூற்கயிற்றின் முடிச்சுகளை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு மேலும் கீழமாக கைகள் மாற்றி இழுக்கவும்.

5. கைகளால் சுவற்றில் ஏறுதல்

 • சுவற்றிற்கு 6-12 அங்குல தூரத்தில் சுவற்றைப் பார்த்தபடி கால் விரல்களின்மேல் நிற்கவும்.
 • முழுங்கைகளை மடக்கி, தோல் மட்டத்திற்கு உள்ளங்கைகளைச் சுவற்றில் பதிக்கவும்
  வடுவில் அடுத்தமோ வலியோ உண்டாகும் வரை மெல்லமெல்ல உள்ளங்கைகளைச் சுவற்றில் மேல் நோக்கி சீராக ஒரே அளவில் மெல்ல நகர்க்கவும். வலிஎடுக்கும். உள்ளங்கைகள் உள்ள உயரத்தை கோடிட்டுக் குறித்துக் கொள்ளவும்.
 • காலப்போக்கில் உங்களுடைய முன்னெற்றத்தை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம்.


6. பின்புற வருடல்

 • பாதிக்கப்பட்ட கையின் முழுங்கையை மடித்து கைவிரல்களின் பின்புறம் முதுகின் மேல்புறத்தில் தொடுமாறு வைக்கவும்
  மெல்ல உங்கள் விரல்கள் முதுகின் மறுபுற விளீம்புக்குச் செல்லுமாறு மெல்ல நகர்த்தவ
  ும்.

7. முழுங்கை மூட்டுக்களை ஒருங்கே இழுத்தல்
 • முழுங்கைகளை மடித்து கழுத்தின் பின்புறம் கொண்டு வந்து கைவிரல்களைப் பிணைத்துக் கொள்ளவும்.
 • இரண்டு முழுங்கை மூட்டுக்களையும் ஒன்றோடு ஒன்று தொடுமாறு பக்கமாக மெல்ல கெர்த்தவும்.

அடிக்கடி கேட்க்ப்படும் வினாக்கள்


1. மாஸ்டக்டமி செய்வதிலுள்ள இடர்பாடுகள் என்ன ?


எந்த அறுவை மருத்துவம் என்றாலும் அதில் வர வாய்ப்புள்ள சில இடர்பாடுகள் உள்ளன. அவையாவன:

 • தொற்றுநோய், இரத்தக்கசிவு போன்ற காயம் ஆறுதலில் உள்ள இடர்பாடுகள்.
 • தோள் விரைத்துப்போதல்.
 • மரத்துப் போதல். மாஸ்டக்டமி செய்த பிறகு வழக்கமாக ஏற்படுவதைப்போல. அறுவை நடந்த இடத்திலுள்ள தோலும் அக்குள் பகுதியிலும் சிறிது மரத்துப்போகும்.
 • லிம்ஃபெடீமா: என்பது 10-20 சதவீத நோயாளிகளுக்கு ஏற்படும் நீண்டகால லேசான வீக்கம்
 • தோல் அழுகல் - (Skin necrosis) : சில சமயங்களில் தோல் முனையில் சில பகுதி நன்றாக ஆறாமல் அழுகுவதைப்போல ஈரமாக இருக்கும். எனினும் தினமும் சுத்தப்படுத்தி, மருந்திட்டு, கட்டுவதின் மூலம் அதைக் குணமாக்க முடியும்.

2. எனக்கு மாஸ்டெக்டமி நடைபெற்ற பிறகு அடுத்த மார்பகத்தில் புற்று நோய் வரும் வாய்ப்புள்ளதா ?

ஆமாம். அடுத்தடுத்த நீங்கள் மருத்துவரை சந்திக்கும் போது வழக்கமான பரிசோதனைகளும், மம்மோகிரம் களும் நடத்தப்படும். மாதந்தோறும் நீங்களே சுயமாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். இரு புறங்களையும் உற்றுப் பாருங்கள். மாதத்திற்கு மாதம் ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள்.

3. அறுவை நடைபெற்ற கை மரத்துப்போதலோ, வலியையோ வீக்கமோ இருப்பதை உணர்ந்தாலோ, மூன்று நாட்கள் காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலோ நானென்ன செய்ய வேண்டும் ?

இயன்ற விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள்.


நன்றி:- CHANGI GENERAL HOSPITALRead more...

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-2

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள்-1ஐ படித்துவிட்டீர்கள் அல்லவா.இனி


மார்பகப் புற்று நோயின் வகைகள்:-


மார்பகப் புற்று நோயில் பல வகைகளுண்டு. எளிய வகைகள் கிழே தரப்பட்டுள்ளன.

1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
இது மிகச் சாதாரணமாக வரும் மார்பகப் புற்றுநோய் வகையாகும். நாளங்கள் தடிப்பதின் வழி இது துவங்கும்.

2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)
இது மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் உண்டாகும்.

3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
மார்பகத்தின் வெளிப்பகுதியில் புற்றுநோய் முற்றிலும் பரவிய பின்னர் புற்றுநோய் அணுக்கள் அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் அதிகமாகப் பரவும். எப்போது இத்தகைய முடிச்சுகளில் புற்று நோய் பரவுகிறதோ, புற்றுநோய் அணுக்கள் உடலின் மற்ற எல்லா பாகங்களிலும் பரவும் அபாயம் உருவாகிறது.

மார்பகப் புற்றுநோயின் படி நிலைகள் (stages)


மார்பகப் புற்று நோயில் நான்கு படி நிலைகள் உள்ளன.

1. முதல் படி நிலை:-

முதல்படிநிலை என்றால் புற்று நோய் அணுக்கள் இன்னம் மார்பகத்தைத் தவிர வேறெங்கும் பரவில்லை என்றம், கட்டியின் சுற்றளவு 2,5 செ,மீட்டரைக் காட்டிலும் அதிகமில்லை என்று பொருள்.

2. இரண்டாம் படி நிலை:-

அக்குளின் கீழேயுள்ள நெரிக்கட்டி (நிணநீர்கட்டி) களில் புற்று நோய் பரவி விட்டது என்றம் மார்பகக் கட்டியின் சற்றளவு 2..5 செ.மீட்டரைக் கடந்து விட்டது என்றும் பொருள்.

3. மூன்றாம் படி நிலை:-

பொதுவாக மூன்றாம் படிநிலையை முதிர்ந்த புற்றுநோய் என்பார்கள். மார்பகக் கட்டியின் சுற்றளவு 5 செ.மீட்டரை கடந்து விட்டது என்றும் மார்பகச் சுவர் அல்லது மேல் தோலில் இதில் ஈடுபட்டுள்ளது என்றம் பொருள். இந்நிலையில் அக்குளின் கீழே உள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவி விடும்.

.

4. நான்காம் படி நிலை:-

இந்த நான்காம் படி நிலை முற்றிலும் பரவி விட்ட புற்றுநோயாகும். புற்றுநோநய் மார்பகத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களான நுரையீரல், ஈரல், மூளை, எலும்புகள் மற்ற எல்லா லிம்ப் நோட்(நெரிகட்டிகள்)கள் அனைத்திலும் பரவி விட்டது என்று பொருள்.மீண்டும் வரும் புற்று நோய் (
Recurrent Cancer)

மீண்டும் வரும் புற்றுநோய் என்றால் துவக்க மருத்துவத்திற்குப் பின்னரும் மீண்டு வரும் நோயாகும். மார்பகத்தில் உள்ள கட்டி முற்றிலும் அறுத்து அகற்றப் பட்ட பின்னரும் அல்லது அழிக்கப் பட்ட பின்னரும் சில நேரங்களில் கண்டு பிடிக்க முடியாத சில சிறு புற்றுநோயணுக்கள் மருத்துவத்திற்குப் பின்னரும் உடலில் விடுபட்டு இருந்தால் அல்லது மருத்துவத்திற்கு முன்னரே புற்றுநோய் பரவி விட்டிருந்தால் புற்றுநோய் மீண்டும் வரும்.


அறுவை மருத்துவம் என்றால் என்ன?


கட்டியின் அளவு, இருப்பிடம், பரிசோதனை காலையில் நடந்த பரிசோதனையின் முடிவுகள், நோய் உள்ள படி நிலை அல்லது அளவு இவற்றைப் பொறுத்து மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவம் நடைபெறம். இந்த மருத்துவம் மார்பகத்தில்ம்ட்டும் அல்லது சிஸ்டமிக்( முழு உடலுக்கும்) கொடுக்கும் முறையில் இருக்கும். ஒருவர் ஒன்று அல்லது பல மருத்துவங்களை பெறுவார்.

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -3

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4நன்றி:- CHANGI GENERAL HOSPITAL
Read more...

Monday, December 1, 2008

அ.ஆ.சுகாதார நிலையம் அமரபூண்டி
Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP