Sunday, November 1, 2009

எக்ஸ்பிரஸ் இளமதி

எக்ஸ்பிரஸ் இளமதி. எந்த வயதில் அந்தப் பெயர் அவளுக்கு வந்தது எப்படி என்று அவளுக்கே தெரியாது. இன்று அந்த மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவராக வந்து பணியில் அமர்ந்துவிட்டாள்ர்.

அவளுக்கு வேகம் என்பது இயல்பாக அமைந்த விஷயம்.  பள்ளியில் படிக்கும்போதே மிக வேகமாக ஓடுவாள். கல்லூரி காலத்தில் கூட கலப்புத் தொடர் ஓட்டத்தில் உடன் ஓடிய ஆண்களைவிட படுவேகத்தில் ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவள் அவள்.  பள்ளியில் அவள் படிக்கும் வேகத்திற்கு டபுள் புரமோசம் கொடுக்கலாம் என்று கூட சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஏனோ கொடுக்கப் படவில்லை. அவளது தந்தைதான் அந்த வயதொத்த குழந்தைகளுடன் படிக்கட்டும் என்று கூறிவிட்டதாக சொல்லுவார்கள்.

அவளது பாட்டி கூட எக்ஸ்பிரஸ் என்றுதான் கூப்பிடுவார்.

இன்று மருத்துவரான பின்பு கூட அந்த நிலை நீடிக்கிறது. மற்றவர்கள் ஒரு அறுவைசிகிச்சை செய்யும் நேரத்தில்  இவர் இரண்டு அறுவை செய்து விடுவார். குடும்ப நல சிகிச்சைகள் எல்லாம். மற்றவர் ஒன்று செய்யும் நேரத்தில் இவர் ஐந்து பேர் வரை செய்வார். படுவேகம்.

எம்.பி.பிஎஸ் சேரும்போது கூட பலரும் இம்ப்ப்ரூவ் மெண்ட் செய்து உள்ளே நுழைந்த போது இவர் நேரடியாக தேர்வு செய்யப் பட்டார்.  இவர் எம்.பி.பி.எஸ் படித்த கால கட்டத்தில் அரசுத்துறைக்கு மருத்துவர் தேர்வு என்பதே கிடையாது. ஆனால் இவள் முடித்த கால கட்டத்தில் நூறு பேரை தேர்வு செய்தார்கள். அதில் அவளும் ஒருத்தி. (கடந்த சில ஆண்டுகளில் நாலாயிரம் மருத்துவர்களுக்கு மேல் அரசுப் பணியில் நியமணம் செய்யப் பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு காலம்)  மிக குறைந்த வயதில் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக அமைந்த போது அவரது வேகத்தை கண்டு அவரது நண்பர் கூட்டமே அதிர்ந்தது.


மூன்றாண்டுகள் அங்கே பணி செய்த போது அவரது வேகம் கண்டு துறை சார்ந்தவர்களும் சரி. பொது மக்களும் சரி அதிர்ந்து தான் போனார்கள். பேருந்து நிலையத்திலிருந்து மிக வேகமாக நடந்து செல்வார். புற நோயாளிகள் பிரிவு, சிறப்பு மருத்துவம் போன்ற அனைத்தையும் மிக வேகமாகச் செய்வார். களப்பணிகளிலும் அவர் வந்தால் அனல் பறக்கும்.

கட்டாய கிராமப் புற பணிக்காலமாக மூன்று ஆண்டுகளை முடித்த உடனயே அவருக்கு மேல்படிப்பில் இடம் கிடைத்தது. இவ்வளவு தூரம் கிராமத்தில் கடும் உழைப்பில் நேரம் செலுத்தி இருந்தவருக்கு தேர்வில் முக்கிய இடம் கிடைத்ததில் எல்லோருமே அசந்துதான் போனார்கள்.

அந்த எக்ஸ்பிரஸ் இளமதிதான் இன்று அதே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மகப்பேறு மருத்துவராக வந்திருக்கிறார். அவர் வந்த பின் அந்த நிலையத்தில் பிரசவங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. தினமும் இரண்டு அறுவை சிகிச்சை யாவது செய்துவிடுவார். பெரும்பாலும் சுகப்பிரசவம்தான் முயற்சி செய்வார். இருந்தாலும் கூட நிறைய பிரசவங்கள் அவரது மருத்துவ மனைநோக்கி படையெடுத்து வருவதால் அவ்வாறு செய்துவந்தார்.எல்லைதாண்டி அடுத்த மாவட்டத்தில் இருந்த அருகில் உள்ள கிராமங்களிலிருந்து கூட அவர் பணி புரிந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள். அவரது தோழிகள் கூட அவரை கேலி செய்வதுண்டு. இப்படியே போனால் உன்ன ஆபரேசன் டாக்டர்ன்னே முடிவு செய்து விடுவார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் அவள் அசந்ததில்லை.

அவள் மகப்பேறு மருத்துவம் முடித்த உடனயே அவரது தந்தை அவருக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.  அவரது ஜாதகம் கொடுக்கும்போதே அவரது தந்தையை பார்த்து அவரது பாட்டி சொன்னார். எம்ப்பேத்தி எக்ஸ்பிரஸ் இளமதிடா..,  அவளுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் எல்லாம் நடக்கும்.  பாட்டி சொன்னது உண்மைதான் சில மாதங்களிலேயே அவளுக்கு திருமணம் நிச்சயமானது. அடுத்த மாதத்தில் அவருக்குத் திருமணம்.

அந்த நிலையில்தான் அன்று மகப்பேறு பிரிவில் பரிசோதனைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது  குழந்தை போன்ற முகத்துடன் ஒரு பெண்ணைப்பார்த்தார்.  எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே..,   அவளது பெயர், ஊர் மற்றும் பரிசோதனைகள் முடித்துவிட்டு அவளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்.  நீ சங்கீதாவுக்குச் சொந்தமா? பொதுவாகவே மருத்துவரை மிக மரியாதையோடு பார்க்கும் ஊர் அது. அதுவும் மிகச் சிறிய பெண்ணாக இருந்ததால் அந்தப் பெண்ணுக்கு பயத்திலோ, மரியாதையாலோ பேசவே தோன்றவில்லை. ஆமாம் என்பது போல தலையாட்டினாள்.. உங்க அக்காவா.., என்கிருக்கா? கூட வந்திருக்காளா...

படிக்கும்போது நாங்கெல்லாம் ஒரே கோஷ்டி. எனக்கு நிறைய கோலம் போட சொல்லிக் கொடுத்தவள் அவள்தான். மிகவும் மகிழ்ச்சியாக சொல்லிக் கொண்டிருந்தாள். கல்லூரியில் பல கோலப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியது நினைவுக்கு வந்தது.

மருத்துவரே விசாரித்ததால் அந்த பெண்மணியை மருத்துவர் பரிசோதனை அறைக்கு உள்ளே அனுமதித்தார்கள். அந்த சங்கீதா வந்தார்.

அம்மா நல்லாயிருக்கீங்களா? கொஞ்சம் மரியாதை , கொஞ்சம் பயம், கொஞ்சம் நெருக்கம், கொஞ்சம் கூச்சத்துடன் அந்த பெண்மணி மருத்துவரை விசாரித்தார்.

எம்பொண்ணுதாம்மா..,  டவுன்ல கட்டி கொடுத்திருந்தது. தலைப்பிரசவத்துக்கு நம்ம ஊருக்கு கூட்டிட்டு வந்திருக்கோம். நீங்க இருக்கீங்கல்ல.., அதுனால எங்களுக்கு ரொம்பவே தைரியம்மா!

ஏனுங்கம்மா.., நம்ம புள்ளைங்களும் டாக்டருக்குத்தான் படிக்கறாங்களா? சகஜமாக அந்த சங்கீதா அம்மையார் கேட்டார்.

எக்ஸ்பிரஸ் இளமதிக்கு எதுவோ நெஞ்சை அடைப்பது போல இருந்தது.

இது சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009க்காக எழுதப்பட்டது

தமிழீஷில் ஓட்டுப் போட இங்கு அழுத்துங்கள்

Read more...

Friday, October 16, 2009

தீபாவளியன்று உங்கள் கடமை

அப்போது நான் பயிற்சி மாணவன். பயிற்சி மருத்துவர் என்றும் சொல்வார்கள். தேர்வில் தேர்ச்சி அடைந்து இந்திய மருத்துவ கழகத்தில் ( medical council of india ) பதிவும் செய்துவிட்டிருந்தோம்.  எந்த நாட்டில் எவ்வளவு பெரிய மருத்துவப் படிப்புகள் படித்திருந்தாலும்  medical council of india பதிவு செய்திருக்கவில்லையென்றால் போலி மருத்துவராகவே கருதப் படுவார்.

தீபாவளிக்கு முதல்நாள். எலும்பு சிகிச்சைப் பிரிவில் பணி. எலும்பு சிகிச்சைப் பிரிவிலிருந்து விபத்து சிகிச்சைப் பகுதிக்கு அன்று எனக்கு 24 மணிநேர பணியாக அமைந்திருந்தது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மற்ற அனைத்து துறையினரும் கூடுதலாக விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்வது போல எங்களைப் போல சில துறைகள் முடியாது. அன்று எனக்கும் தீபாவளி அன்று விடுப்பு அனுமதித்து இருந்தார்கள். ஆனால் முதல் நாள் 24மணிநேர பணி. தீபாவளி காலையில் 8மணிஅளவில் விடுவிக்கப் படுவேன். அதற்குப் பிறகு புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்து...,   அதனால் விடுப்பு தேவையில்லை என்று சொல்லிவிட்டேன். அந்த விடுப்பு வேறொருவருக்கு வழங்கப் பட்டுவிட்டது.

நம்து ஊரில் எலுமிச்சை, அன்னாசி, பலாப் பழங்கள் கதை சொல்வார்களே அது போல இருந்திருந்தது. விபத்து சிகிச்சைப் பிரிவில் அன்றைய பொழுதில் பணிக்குச் சென்ற போது. என்னோடு அன்று பணியில் இருந்த முதுகலை பயிற்சி மருத்துவருக்கு மறுநாள் தலைதீபாவளி. அவரது அலகில் அவர் மட்டுமே முதுகலைப் பயிற்சி மருத்துவர் என்பதால் இந்த 24மணிநேரப் பணியினை அவரே ஏற்றுச் செய்ய வேண்டிய நிலை.  அவரை ஒப்பு நோக்க நமது நிலை எவ்வளவோ பரவாயில்லை.

மாலை நேரத்தில் அவர் பணியிலிருந்த உதவிப் பேராசிரியரைச் சந்தித்தார். உடன் என்னையும் வைத்துக் கொண்டுதான் பேசினார். மறுநாள் தனக்கு தலைதீபாவளி என்பதால் கொஞ்சம் முன்னதாகவே திரும்ப அனுமதி கேட்டார். பயிற்சி நிறைவை நோக்கியுள்ள பயிற்சி மருத்துவர் மற்றும் உதவிப் பேராசியர் , செவிலியர்கள் என்று ஒரு முழுமையான அணி இருந்த காரணத்தால் உதவிப் பேராசியரும் அவருக்கு காலை 3 மணி அளவில் செல்ல அனுமதி அளித்தார். 3 மணிக்கு மேல் வரும் நோயாளிகளை முதுகலை பயிற்சி மருத்துவருக்குப் பதிலாக உதவிப் பேராசியரே கவனித்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்.

இரவு நேரத்தில் உணவுக்காக கோயமுத்தூரின் மிக முக்கிய இடங்கள் எல்லாம் சென்றும் கூட உணவு என்பது மிகக் கடினமாகவே இருந்தது. பியூப்பில்'ச் பார்க் போன்ற மிகச் சில உணவகங்களே திற்ந்திருந்தன. மற்ற உணவங்கள் பெரும்பாலும் விடுப்பாக அமைந்திருந்தன. விடுதி உண்வகம் உட்பட..

பியூப்பில்'ஸ் பார்க்கில் சாப்பாட்டுக்காக காத்திருக்க மனமில்லாமல் ரொட்டித்துண்டுகளை வாங்கி அப்படியே விழுங்கிவிட்டு பணிக்கு திரும்பினோம்.  மருத்துவக் கல்லூரியில் நோயாளியைப் பார்ப்பதாக பெரும்பாலோனோர் வாங்குவதால் பன்ரொட்டிகள் தங்குதடையில்லாமல் கிடைக்கும்.

தீபாவளிக்கு முதல்நாள் இரவு பத்துமணிவரை பணி சராசரி அளவிலேயே வேலை இருந்தது. அதற்கடுத்து கொஞ்சம் பிஸி....,

குடித்துவிட்டு வண்டி ஓட்டிவிட்டு விழுந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தனர்.  விபத்துப் பதிவேடு, காவலர் அறிக்கை, மற்றும் நோயாளி பதிவேடு போன்றவைகளில் முதுகலை மருத்துவரும், காயங்களை சரிசெய்வது, தையல் போடுவது, போன்ற பணிகளை நானும், மற்றும் இன்னபிற வேலைகளை அவரவரும் செய்ய ஆரம்பித்தோம்.

மணி12ஐ நெருங்கும்போது கூட்டம் எல்லைமீர ஆரம்பித்தது. கூடுதல் மருத்துவர்களை அழைக்க விரும்பினோம். அழைத்தால் விடுப்பில் இருப்பவர்களின் திட்டுக்களை வாங்க வேண்டும் என்பதால் கூட்டத்தினை நாங்களே சமாளிக்கத் தீர்மாணித்தோம். முடிந்த அளவு மிக வேகமாக பணிகள் நடந்தன. அனைத்து பணிகளையும் உதவிப் பேராசிரியர் நேரடியாகக் கண்காணித்து எந்த தவறும் நேராமல் பார்த்துக் கொண்டிருந்தார். முதுகலை மருத்துவர் பயிற்சி மருத்துவர் தலைதீபாவளிக்காகச் சேலத்திற்குச் செல்ல வேண்டியவர்.

குறிப்பிட்ட கால கட்டத்தில் கூட்டம் குறையத் தொடங்கியது. எங்கள் பணிகளை நிறைவு செய்துவிட்டு, இருப்பிட செவிலியரை அழைத்தார் முதுகலை மருத்துவர். சிஸ்டர் நான் கொஞ்சம் முன்னாடியே புறப்படுகிறேன். கேஸ் வந்தால் தம்பிய பார்க்கச் சொல்லுங்க. கொஞ்சம் சிரமமான கேஸ் அப்படின்னா உதவிப் பேராசிரியர் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறார். அதனால் நான் புறப்படுகிறேன்.

அதற்கு செவிலியர்

சார் மணி இப்ப காலை 9,  என்னோட ரிலீவர் வந்து ஒருமணிநேரம் ஆச்சு. உங்க ரிலீவரும் எப்பவோ வந்துட்டாங்க , நீங்க பார்த்த கேஸ் லிஸ்ட் எல்லாம் ஒழுங்கு படுத்திக் கொடுத்தால் அவரவர் அடுத்த டூட்டி பார்ப்பவர்களிடம் பணியை ஒப்படைத்துவிட்டுப் போய் கொண்டே இருக்கலாம். (அதாவது அவரது பணிநேரம் முடிந்தும் பிறகும் அவர் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறார். அவரக்கு அடுத்த் பணிக்கு வருபவர் வந்துவிட்டதால் அவருக்கு நோயாளிகள் வருவது குறைந்திருக்கிறது)

என்று ஒரே போடாகப் போட்டார்.

அந்த முதுகலை பயிற்சி மருத்துவர் திருதிருவென்று விழித்தது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நின்று கொண்டு இருக்கிறது.

===================================================================

இந்த ஆண்டும் தீபாவளிக்கு முதல்நாள் அப்படித்தான். விடுப்பு விண்ணப்பம் கொடுத்த மருத்துவர், செவிலியர், மற்றும் பணியாளர்கள் அனைவரிடமும் ஒரு நாள் அரைநாள்தான் விடுப்புக் கொடுக்க முடியும் என்று கண்டிப்பாகச் சொல்லி அனைத்து நிலைகளிலும் பணீக்கு ஆள் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டுவந்து விட்டேன்.

நீங்கள் தீபாவளி கொண்டாடுபவரா.., அப்படியென்றால் உங்கள் ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு பணியில் இருப்பவர்களுக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்லி அவர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள். 

நீங்கள் தீபாவளி கொண்டாத நபர்களாக இருந்தால் இன்னும் வசதியாக போயிற்று. திராவிட, ஆரியக் கதைகளை விட்டு விடுங்கள். இன்று உங்களுக்காக தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு பணியில் உள்ள நபர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அவர்களுடன் கொண்டாடுங்கள்.

தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

Read more...

Sunday, October 4, 2009

சுலபமாய் கருக்கலைப்பு செய்ய..,

சென்ற இடுகையில் போலி பாம்புக் கடி மருத்துவத்தைப் பற்றிப் பார்த்தோம். இந்த இடுகையில் போலிக் கருக்கலைப்பு வைத்தியத்தைப் பற்றிப் பார்ப்போம்.

போலி பாம்புகடி வைத்தியர் என்ற பெயர் பொருந்துவது போல கருக்கலைப்பு வைத்தியருக்கு உபயோகப் படுத்துவது என்பது பொருந்தாது. போலி பாம்புக் கடி வைத்தியர் பாம்புக் கடியில் விஷப் பாம்பினால் கடி பட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல் இறக்க விட்டுவிடுகிறார் என்பதையும், விஷத்தால் துளிகூட பாதிக்கப் படாத மனிதரை காப்பாற்றி விடுகிறார் என்பதையும் எவ்வாறு அவருக்கு இது சாத்தியமாகிறது என்பதை சென்ற இடுகையில் பார்த்தோம். (ஏனோ தமிழ்மணம், தமிழீஷ் வாசகர்களிடம் பெருமளவு சென்றடையவில்லை)


ஆனால் போலிக் கருக்கலைப்பு வைத்தியர் என்பவர் கருக்கலைப்பினை செய்துவிடுகிறார். ஆனால் பாதுகாப்பில்லாமல் செய்கிறார். எனவே ஆபத்தான கருக்கலைப்பாளர் போன்ற பதங்களை உபயோகப் படுத்தலாமா என்று தோன்றுகிறது.

கருக்கலைப்பு என்பதை சில வகைகளாக பிரிக்க முடியும்.இது போலி கருக்கலைப்பு மருத்துவருக்காக தயாரிக்கப் பட்ட அட்டவணை.
1. கரு கர்ப்பப் பையில் ஒட்டும் முன் (முதல் சில நாட்கள்)
2.கரு கர்ப்பப்பையில் இடுப்பு எலும்பு தாண்டி வளரும் முன்(12 வாரங்கள் வரை)
3.கரு உயிர்பிடிக்கும் முன்(28வாரம் வரை)
4.உயிர்பிடித்தபின்( இந்த நிலையில் கலைப்பதை குறைப்பிரசவம் என்றே சொல்லலாம்)

சட்டபூர்வமான கருக்கலைப்பு என்பது 12 வாரங்கள் வரை மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. பெண்சிசுக்கள் கருக்கலைப்பைத் தடுப்பதற்காக பல நடைமுறைகள் தற்போது பின்பற்ற படுகின்றன.

முதல் சிலநாட்களில் கருக்கலைப்பு என்பது மாத்திரை மூலமாகவேச் செய்ய முடியும். அந்த மாத்திரையைக் கொடுக்கும் முன் கரு கர்ப்பப் பையில்தான் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த ஸ்கேன் சோதனை மற்ற ஸ்கேன் சோதனைகளிலிருந்து சிறிது மாறு பட்டது. கரு கர்ப்பப்பையில் இல்லாமல் கருக்குழாய்களில் இருந்தால் குழாய் உடைந்து மரணம் சில மணிநேரங்களில் நிகழும் வாய்ப்பு இருக்கிறது.மருத்துவர் கருவிகளை உபயோகப் படுத்தி கருக்கலைப்புச் செய்தல் சிலவார கர்ப்பங்களுக்கு உதவும். இது சுத்திகரிக்கப் பட்ட அறுவை அரங்குகளில் வைத்து மட்டுமே ஒரு வல்லுநரால் கருக்கலைப்பு செய்யப் பட வேண்டும். மயக்க மருந்து மருத்துவ நிபுநரும் துணைக்குத் தேவைப் படுவார். அதற்காக நவீன கருவிகள் உள்ளன. கருக் கலைப்பில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க பல பரிசோதனைகள் அவசியமாக உள்ளன. சில நேரங்களில் ரத்தம் கூட முனெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்க வேண்டியுள்ளது.

தரமற்ற கருவிகளையும் நோய் தொற்று ஏற்படக்கூடிய இடங்களிலும் வைத்து கருக்கலைப்பு செய்தால் கருப்பை ஓட்டை அல்லது நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து நிகழ நேரலாம். இந்த நிலையில் ஏற்படும் நோய்தொற்று பெரும்பாலும் அடுத்த குழந்தை பாக்கியத்தையும் தடுத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் வல்லுநர்களின் அவசியத்திற்கும், அறுவை அரங்கு மற்றும் நவீனக் கருவிகள் மற்றும் மருந்துகளுக்கும் ஆகும் செலவு பெரும்பாலான கருக்கலைப்பு விரும்பிகளுக்கு அதிகமாகத் தோன்றுவதால் செலவு குறைந்த கருக்கலைப்பாளர்களிடம் செல்ல நேரிடுகிறது.

போலி கருக்கலைப்பு செய்பவர்கள் என்ன செய்கிறார்கள்?

கரு கர்ப்பப்பையில் ஒட்டும் முன் கருக்கலைப்பு செய்வது என்பது சுலபம். ஆனால் இதில் உள்ள ஒரு சிக்கலை நோக்கவேண்டும்

கரு, கர்ப்பப் பையில் இல்லாமல் கருக்குழாய் போன்று வேறிடத்தில் இருந்தால் கொடுக்கும் மருந்து அல்லது கலைக்கும் முறையே எமனாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

பல தேவைகளுக்காக கிடைக்கும் ஹார்மோன் மருந்துகளை அதிக அளவில் கொடுப்பதன் மூலம் ஹார்மோன் ஏற்றத் தாழ்வினால் கரு கர்ப்பையில் ஒட்டாத தன்மை ஏற்பட்டு கரு இழப்பானது உருவாகலாம். சில உணவுகள் வைட்டமின் ஏ, ஈ போன்றவைகளை மிக அதிக அளவில் கொடுப்பதால் உடலில் ஒரு சமச்சீரற்ற தன்மை உருவாக்கி கரு இழப்பினை உருவாக்குகிறார்கள்.

இதிலெல்லாம் பல சிக்கல்கள் இருந்தாலும் கருக் கலைப்புக்காக பொறுத்துக் கொள்கிறார்கள்.

கரு கர்ப்பப் பையில் ஒட்டியபின்

பொதுவாக 12 வாரம் வரையில்தான் சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய முடியும். ஆனால் போலிகள் 40வாரம் வரை கூட கருக்கலைப்பு செய்வார்கள்.
(பெரும்பாலும் 40வாரத்திற்கு முன்பே குழந்தை முழு ஆரோக்கியமாக பிறந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்)(மொத்த கர்ப்ப காலம் 280 நாட்கள்)

போலிகளின் மருத்துவ முறைகள் மிக எளிமை யானவை. கிராமங்களில் இந்தப் போலிகள் வீட்டுக்கே வந்து வேலையைச் சுமுகமாக முடித்துக் கொடுத்துவிடுவார்கள்.

ஒரு சிலர் சில வேர்களை வைத்திருப்பார்கள் .சிலர் மகப்பேறு மருத்துவர்கள் வைத்திருப்பது போன்று சில கருவிகளையும் வைத்திருப்பார்கள்.

கருப்பையின் வாய்க்குள் வைத்திருக்கும் வேர்களை நுழைத்து விடுவார்கள். இது ஒன்றும் மிக கடினமான செயல் அல்ல. கொஞ்சம் பயிற்சி எடுத்தால் யாருமே கர்ப்பப்பை வாயினை தொட்டுப் பார்க்க முடியும். சற்று முரட்டுத் தனமாக இதை செய்து விட்டால் போதும்.

எந்த ஒரு வெளிப் பொருளையுமே நமது உடல் ஒத்துக் கொள்ளாது. வெளீயே தள்ளவே முயற்சி செய்யும். அந்த நிலையில் அது போலியால் நுழைக்கப் படும் பொருளினை வெளியே தள்ள உடல் மேற்கொள்ளும் முயற்சிகளால் கரு வெளியேற்றப் படும்

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உங்கள் காலில் ஒரு முள் குத்திவிட்டால் உள்ளே இருக்கும் முள் வெளியேற காலில் என்னென்ன செயல்கள் நடைபெறுகின்றன என்று யோசித்துப் பாருங்கள். சீல் கட்டி, நெரி கட்டி, காய்ச்சல் வந்து, வெறும் காலில் குத்திய முள் எடுக்கவே உடல் இவ்வளவு தற்காப்பு நடவடிக்கை எடுத்து இவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டால் கருப்பையில் உள்ள குழந்தை மற்றும் வெளிப் பொருட்கள் வெளியேற எவ்வளவு சிரமங்கள் ஏற்படும்.

ஆனால் கிராமங்களில் வீட்டில் உள்ள பிறருக்கு குறிப்பாக ஆண்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை , புரிவதில்லை. கருக்கலைத்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த வேதனைகளை தாங்கிக் கொண்டே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் இதை ஒத்துக் கொள்கிறார்கள்.

கரு முழுவதும் வெளியாகாமல் சில நேரங்களில் பிசிறு ஏதும் இருந்தால் அந்த பெண்ணுக்கு தொடர்ச்சியாக உதிரப் போக்கு இருந்து கொண்டே இருக்கும். உதிர இழப்பில் அந்தப் பெண்மணி மிகவும் பலவீனமாகப் போய்விடுவார்.

அந்த நேரத்தில் தொற்றும் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதால் தொற்றுக்கிருமிகளால் மிக மோசமான நிலைக்கு தள்ளப் படுகிறார்.

இது போன்ற தொற்றுக்களாலும், போலிகளின் செயலாலும் ஒரு கூடுதல் பலன் ஒன்று உண்டு. அது கர்ப்பப்பை மிக பலவீனமடைவதால் இனி கர்ப்பம் என்பதே இருக்காது என்பதே!

இதைக்கூட சில போலிகள் கூடுதல் தகுதிகளாக வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் கருக்கலைப்பு செய்து கொண்டால் எதிர்காலத்தில் கர்ப்பம் என்பதே இருக்காது என்று விளம்பரப் படுத்திக் கொண்டு இருப்பார்கள்.

போலிக் கருக்கலைப்பால் மிக பலவீனமான பெண் உடலுற்விற்கே தகுதி இல்லாமல் போனால் பிறகெப்படி கருவுறுவார்?

ஆனால் போலிகள் வீட்டுக்கே வந்து கருக்கலைப்பு செய்து விடுவதாலும் தொடர்சிகிச்சைக்காக வீட்டுக்கே வந்து செய்வதாலும் அவருக்கு நல்ல பெயரே கிடைக்கிறது.

கர்ப்பத்தின் பின்பகுதியில்

கர்ப்பப்பையின் வாயினுள் ஒரு வேற்றுப் பொருள் நுழையும் போது பனிக்குடம் உடைந்து போகும். பனிக் குடம் உடைந்தால் கண்டிப்பாக கர்ப்பப் பையில் இருப்பது வெளியேறியே தீரும். இது ஏறக்குறைய பிரசவம் போலத்தான். நன்கு வலியெடுத்து நடக்கும் பிரசவம் சில மணிநேரங்களில் முடிந்துவிடும் . ஒருசிலருக்கு மிகச் சீக்கிரமே நடந்துவிடும். ஆனால் இவ்வாறு கரு வளர்ச்சி அடையும் முன்னரே பனிக்குடம் உடைவதால் நடக்கும் நிகழ்வானது சில நேரங்களில் சில நாட்கள் கூட போக வாய்ப்புண்டு. கரு பெரும்பாலும் வயிற்றுக்குள் இறந்துவிடும். வயிற்றுக்குள் இறந்த பிண்டம் இருக்கும்போது அதனால் கூட ஒவ்வாமை வேறுவிதமாக ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் ரத்தம் உறையும் தண்மை இழந்து மரணம் ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு.

குழந்தை பாதி வெளீயேறி கையாள் இழுத்து அறுந்து அந்த நிகழ்வு தாங்காமல் தாய் மரணம் அடைந்த சம்பவங்கள் கூட பத்திரிக்கைகளில் வந்துள்ளன.

குழந்தை வெளியே வந்து சில துள்ளுதுள்ளி இறந்து போன சம்பவம் கூட நான் கேள்விப் பட்டதுண்டு.

பல நேரங்களில் ரணஜன்னி தடுப்பூசிகள் போடப் படுவதில்லை. ஒரு சில போலிகள் ரணஜன்னி தடுப்பூசி போட்டாலும் அந்த ஊசி சரியான வெப்பநிலையில் பராமரிக்க படுவதில்லை. நோய் தொற்றை தடுக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் ப்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த சில மருந்துகளை அவர்கள் தினமும் வீட்டுக்கே வந்து போட்டுவிட்டாலும் அந்த மருந்துகள் பெரும்பாலும் அவர்கள் செய்யும் கடுமையான வேலைக்கு போதாத அளவில்தான் இருக்கிறது.


கருக்கலைப்பு மற்றும் கருக்கலைப்பு பற்றிய உண்மைகள் பலருக்கும் தெரியாமல் இருக்கின்றன. போலிகளால் ஆகும் மொத்த செலவு தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவு எல்லாம் ஏற்க்குறைய சரிசமமாகவே இருக்கும். ஆனால் துவக்கத்தில் மட்டும் மிகக்குறைந்த செலவு போன்று தோன்றும்.

தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கும் வழிமுறைகள் தெரியாத நிலையில் மக்கள் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் வசதிகள்:

1.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், மேம்படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக கருக்கலைப்பும் குடும்ப நல சிகிச்சையும் செய்யப் படுகின்றன.

2. காப்பர்-டி, மற்றும் நிரோத் போன்ற ஆணுறைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக கிடைக்கின்றன. ஆணுறை மருத்துவமனையில் முக்கிய இடங்களில் தனி பெட்டிகளில் வைக்கப் பட்டுள்ளன. வேண்டியவர்கள் வேண்டுமளவு அவர்களாகவே எடுத்துப் போகலாம்.

3.எதிர்பாராத சூழலில் விபத்து போல நிகழ்வுகள் ஏதும் நிகழ்ந்து கர்ப்பம் ஏற்பட்டுவிடும் என்ற சந்தேகம் ஏற்பட்டால் கர்ப்பம் ஏற்படாமல் தடுக்கும் மாத்திரைகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் உள்ளன. இவற்றை சம்பட்ட மருத்துவரை அணுகி பெற்றுக் கொள்ளலாம். இந்த மாத்திரைகளை 72 மணிநேரத்திற்குள் உட்கொண்டால் கர்ப்பத்தை தடுத்துவிடலாம்.

தமிழீஷில் ஓட்டுப் போட இங்கு அழுத்தவும்

Read more...

Saturday, September 26, 2009

இதை இளநீரில் கலந்து குடி,அதை மோரில் கலந்து குடி.

அது ஒரு வியாழக் கிழமை, பள்ளிக் குழந்தைக்களுக்கான பரிசோதனைக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து அணியினர் தயாராகிக் கொண்டொருந்தனர். ஒவ்வொரு வியாழன் அன்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஒரு மருத்துவக் குழு அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பள்ளி ஒன்றில் மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்வார்கள். இதற்கான முன் பயணத்திட்டம் கல்வியாண்டு துவக்கத்திலெயே தயாரிக்கப் பட்டுவிடும். அதன் நகல் அந்தப் பள்ளிக்குமுதலியெயே கிடைத்துவிடும். ஆண்டு விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து வியாழன்களிலும் இது நடந்து வரும். முதல் நாளே குழுவினர் சென்று குழந்தைகளின் உயரம், எடை ஆகியவற்றை குறித்து வைத்துவிட்டனர். அடுத்த நாளில் சென்று குழந்தைகளுக்கான பரிசோதனைக்காக குழுவினர் சென்று கொண்டிருந்தனர். பரிசோதனை முடித்த உடன் குழந்தைகளுக்கான சுகாதாரக் கள்வியும் வழங்கப் படும். வளரிளம் பெண்களுக்கான சுகாதாரக் கல்வியும் வழங்கப் படும்.

அன்றைய திட்டப்படி செல்லவேண்டிய கிராமத்திற்கு பேருந்து வசதி அவ்வளவாகக் கிடையாது. எட்டுமணிக்கு செல்லும் பேருந்திலேயே கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர் சென்று விட்டனர். மருத்துவ அலுவலர் புறநோயாளிகள் பிரிவினைப் பார்த்துவிட்டு பள்ளிக் குழந்தைகளை பார்ப்பதற்காக கிளம்பினார். அந்த கிராமத்திற்குச் செல்லும் பிரிவில் இறங்கி பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கிருந்த மருந்துக் கடை உரிமையாளர், சார். பஸ் வர இன்னும் பத்து நிமிடம் ஆகும். அதுவரை கடையில் அமருங்கள் என்று அழைத்தார். மருத்துவரும் உள்ளே சென்று அமர்ந்தார். தவிர அந்தப் பகுதிக்கு அது ஒன்றுதான் மருந்துக் கடை.

வழக்கம்போல் தலைவலி மருந்து, ஹார்லிக்ஸ் வகை பானங்கள், மாட்டுக்கான மருந்துகள் வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் வந்தார். ஒரு பெரிய காகிதத்தை எடுத்தார். அதில் மெட்ரனிடஜோல், அமாக்ஸிசிலின், சிப்ரோபிளாக்ஸின், பாரசட்டமால் மாத்திரைகள் கணிசமான அளவுக்கு குறிப்பிடப் பட்டிருந்தது. வந்தவரும் வாங்கிச் சென்றுவிட்டார்.

யாருக்குங்க இவ்ளோ மாத்திரை.

பக்கத்தில் சாமியார் ஒருத்தர் இருக்கார். அவருக்குத்தான்.

அவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறார். தீராத வியாதியும் அவரிடம் வந்து மந்தரித்துச் சென்றால் உடனே சரியாகும் என்று சொல்வார்கள். பக்கத்து மாவட்டம், மாநிலங்களில் இருந்தாலெல்லாம் மக்கள் வருவார்களாம்.

பாவம் அவருக்கு பற்பல வியாதிகள் இருக்கும்போல மருத்துவர் வருத்தப் பட்டுக் கொண்டார்.

கடைக்காரர் சொன்னார். மருந்துகள் எல்லாம் அவருக்குத்தானுங்க.. ஆனால் அவருக்கு இல்லைங்க.....

???

இந்த மருந்தையெல்லாம் பொடிபண்ணி விபூதி(திருநீறு)யில் கல்ந்து வைச்சிருப்பாருங்க. அதை எல்லாம் பொட்டலம் போட்டு பூஜையில் வைத்திருப்பார். மக்கள் போய் கேட்டால் கொஞ்சம் நேரம் சம்பிரதாயங்கள் முடித்துவிட்டு விபூதி பொட்டலங்களைக் கொடுத்து இளநீர், பால், மோர் இப்படி எதிலாவது கலந்து கொடுக்க சொல்லுவார். இன்று அமாவாசை. பூசைக்கு நிறையப் பேர் வருவாங்க. அதற்குக்குத்தான் இவ்வளவும்..

GRRrrrrrr,
மருத்துவருக்கு மயக்கம் வராத குறைதான்.

Read more...

Saturday, August 15, 2009

சாமிக்கு ஆடுவெட்டுவது இப்படித்தான்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அந்த மருத்துவர் மாறுதல் வாங்கிக் கொண்டு வந்து பணியில் சேர்ந்தார். அந்தப் பேருந்து இறக்கிவிட்ட இடத்திலிருந்து பார்த்தார். ஊர் கண்ணில் தட்டுப் பட்டது. எப்படியும் ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும்.


நடந்து சென்று ஊரில் உள்ளவர்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை விசாரித்தார். அது ஊரின் இன்னொரு பகுதியில் இருக்கிறதாம். நடந்து சென்று இடத்தை கண்டுபிடித்தார். எப்படியும் இன்னொரு ஒரு கிலோமீட்டர் நடந்து இருப்பார். பேருந்து வரும் நேரங்களை விசாரித்தார். ஒரேஒரு பேருந்து மட்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வழியாக பக்கத்துக்கு ஊருக்குச் செல்கிறதாம். அது வரும் நேரம் வேலை நேரத்திற்கு ஒவ்வாததாக அமைந்திருந்தது.

தினமும் மருத்துவர் பேருந்தில் வருவார். இறங்கி ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் நடந்து பணிக்குச் சென்று திரும்பி வந்தார். இந்த சூழலில்தான் டரியல் பொன்னம்பலம் அறிமுகமாகிறார். உள்ளூரில் சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் டரியல் பொன்னம்பலம். எப்போதும் புல்லட் வாகனத்தில்தான் இருப்பார். வாரத்தின் சில நாட்கள் அவர் மருத்துவரை அழைத்து வந்தார். சில வாரங்கள் கழித்து அவர் வரமுடியாத சூழலில் வேலை ஆட்கள் யாரையாவது அனுப்பி மருத்துவரை கொண்டுவந்து விடச் செய்வார். எதற்கு உங்களுக்கு வீண்சிரமம் என்று கேட்டபோது எங்கள் ஊருக்கு சேவை செய்ய வந்தவர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பது தங்களது கடமை என்று கூறிவிட்டார். அதற்கு மேலும் மறுப்பதற்கு மருத்துவருக்கு மனம் இல்லை. இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டுமே.... சில மாதங்கள் இப்படியே சென்றது.


அடுத்த சில நாட்களில் வயதானவர்களுக்கு உதவித்தொகை வாங்க சிலரை அழைத்து வந்தார் டரியல் பொன்னம்பலம். நம்ம ஊர் தாத்தா பாட்டிகள்தான் சார். பாவம் யாரும் இல்லை. கொஞ்சம் போட்டுக் கொடுங்க சிபாரிசு செய்து வயது சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுத்தார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு நகல்களில் சான்றொப்பம் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தார். நெருக்கமான நண்பர் அல்லவா.. மருத்துவர் சான்றிதழ்களை கொடுத்துக் கொண்டே வந்தார். சில நாட்கள் மட்டுமே அவர் வந்தார். பின்னர் அவரது வேலை ஆட்கள் யாராவது கூட்டி வருவார்கள். மருத்துவரும் போட்டுக் கொடுத்துக் கொண்டே வந்தார். நிலையத்திலும் தண்ணீர் பிரச்சனை, மின்சார பிரச்சனை ஏதேனும் ஏற்பட்டால் டரியல் பொன்னம்பலத்திடம் சொன்னால் உடனே ஆளனுப்பி செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த ஊரில் மக்கள் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே.. இதுக்கு முன்னாடி வேலை செஞ்ச இடங்களைவிட நம்ம நண்பர்கள் வேலை செய்யற இடங்களை விட ரொம்ப நல்ல ஊரா இருக்கிறதே.. மருத்துவர் மகிழ்ச்சியுடன் நாட்களை கடத்தி வந்தார்.

உள்ளூரில் ஒரு திருவிழா. டரியல் பொன்னம்பலம் அவர்கள் மருத்துவரை சாப்பாட்டுக்கு கூப்பிட்டு இருந்தார். நெருங்கிய நண்பர் ஆயிற்றே.. மருத்துவரும் சென்றார். சாப்பிட்டுவிட்டு இளைப்பாறிய போது டரியல் ஆரம்பித்தார். சார். உங்களால ஒரு காரியம் ஆகணுமே..

சொல்லுங்க செய்துவிடலாம். ஏதாவது பாட்டிகளுக்கு வயது சான்றிதழ் கேட்பார். அல்லது ஏதாவது மருத்துவ மனைக்கு சிபாரிசு கடிதம் கேட்பார் என்ற எண்ணத்தில் இருந்தார் மருத்துவர்.

நம்ம அண்ணன் ஒருத்தர் இறந்திட்டாரு.. அவருக்கு மரணச்சான்றிதழ் வாங்கணும்

எப்பங்க.. சொல்லவே இல்ல.. கொஞ்சம் அதிர்ந்தார்போல் முகம் தெரிந்தது

அது இரண்டு வருஷத்து முன்னாடி


அப்பவே வாங்கி இருக்கலாமே...

இல்ல சார், அப்ப பதிவு பண்ணல...

ஆமா 21 நாளுக்குள்ள பதிவு பண்ணணும்.

அதுதான் சார் போனவாரத்தில் ஒருநாள் அவர் செத்துப் போனது மாதிரி ஒரு சான்றிதழ் கொடுத்தீங்கண்ணா அதை வச்சு இறப்புச் சான்றிதழ் வாங்கிடுவேன். அதுனால் சொத்துகள் கூட இன்னும் பேர் மாறாம இருக்கு.

அந்த மனிதர் எப்படி இருப்பார்? எப்படி இறந்தார்?. உண்மையிலேயே இறந்துதான் போனாரா என்ற குழப்பத்தில் மருத்துவர் சிலையாக மாறி நின்றார்.

பின் குறிப்பு:-

மருத்துவர் பேசுவது பச்சை நிறத்திலும்

டரியல் பொன்னம்பலம் பேசுவது சிவப்பு நிறத்திலும் இடம்பெற்றுள்ளது

தமிழீஷில் ஓட்டுப்போட இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள்

Read more...

Friday, August 14, 2009

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாப்பம்பட்டிபாப்பம்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எழிலான இந்த ஆண்டின் தோற்றத்தினை இந்த இடுகையின் மூலம் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.இந்தப் படங்கள் இந்த மாதத்தின் துவக்கத்தில் எடுக்கப் பட்டவை.ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முந்தைய தோற்றத்தினை இதே வலைப்பூவில் வழங்கி இருக்கிறோம். அந்தப் பகுதிக்குச் செல்ல இந்தச் சுட்டி.

தமிழீஷில் ஓட்டளிக்க இந்தச் சுட்டியைப் பயன் படுத்துங்கள்.

Read more...

Thursday, August 13, 2009

இவர் எங்க ஊரு அம்மா

அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் ஊசிமருந்தினை எடுத்துக் கொண்டு திரும்பும்மா. என்றார். கைக்குழந்தையுடன் வந்த பெண்மணியோ என் குழந்தைக்குப் போடுங்க ..

செவிலியர் சற்று அதிர்ச்சியுடன் இது பவரான மருந்துமா. என்றார்.

ஆமாங்க என் குழந்தைக்கு ரொம்ப சளி. அதுனால டாக்டர்கிட்ட நாந்தான் கேட்டு வாங்கிட்டு வந்தேன். இது தாயார்

சற்று குழப்பத்துடன் இல்லையே இத குழந்தைக்ளுக்கு எழுதியிருக்க மாட்டாங்களே. இல்லைம்மா. இது உனக்குத்தான்

ஏம்மா.பெத்தவ இவ்வளவுதூரம் சொல்றேன்.. ஊசியப் போடுமா. சின்னப் புள்ளைக்கு ஊசி போடக் கூட மாட்டியா..

செவிலியருக்கு ஒரு சந்தேகம்தான். வழக்கமாக இந்த மருந்தினைக் குழந்தைக்கு போட மாட்டார்களே. எதற்கும் மருத்துவரிடம் கேட்டுவிட்டு வந்து விடுவோம்.

மருத்துவரின் அறைக்கு வந்து கேட்டார். இல்லையே ஸிஸ்டர். இந்த மருந்த எப்பவுமே நான் குழந்தைக்கு எழுதுனது இல்லையே.. நல்ல வேளை செஞ்சீங்க.


செவிலியர் அந்த தாயையும் குழந்தையும் ஊசிபோடும் அறையிலிருந்து
அழைத்துவந்துவிட்டார். அந்தக் குழந்தையையும் தாயையும் பார்த்த மருத்துவர் ஏம்மா உன் குழந்தைக்குத்தான் ஊசி தேவையில்லை. மாத்திரையும் திரவ மருந்தும் போதும்ன்னு சொன்னேனே. அப்புறம் எந்த சீட்டைம்மா கொடுத்த.

அந்தத்தாய் தலை குனிந்து கொண்டே சொன்னார்.

நீங்க ஊசி வேண்டாம்னு சொன்னீங்க. ஆனால் குழந்தைக்கு சளி நெறயா இருந்தது அதுனால என்க்குக் கொடுத்த ஊசி சீட்டக் கொடுத்து குழந்தைக்குப் போடச் சொன்னேன்.

Read more...

Wednesday, July 29, 2009

கீரைகளின் பயன்கள்

* கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன

* இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அறக்கீரை, பாலக் கீரை தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்


* கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் பொதுவான உடல்நல அசெளகரியமாகும்


* கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்


* கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்


* இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 30000 சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைப்பாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது உடலில் வைட்டமின் ஏ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது

* கீரைகளிலுள்ள கரோடின்களை பாதுகாக்க, நீண்ட நேரம் வேகவைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரைகளில் உள்ள கரோடின் எனும் சத்துப்பொருள் இழப்பு ஏற்படுகிறது

* கீரைகள் பி-காம்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது

உணவில் உட்கொள்ள வேண்டிய கீரைகளின் பரிந்துரைக்கப்பட்ட அளவு

*
பெண்களுக்கு 100 கிராம் ஒரு நாளைக்கு
*
ஆண்களுக்கு 40 கிராம் ஒரு நாளைக்கு
*
பள்ளி செல்லும் சிறு பிள்ளைகள் (4-6 வயது) க்கு 50 கிராம் ஒரு நாளைக்கு
*
10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம் ஒரு நாளைக்கு* கீரை வகைகள் சிறுப் பிள்ளைகளில் வயிற்றுப்போக்கினை ஏற்படுத்துகின்றன என நம்பப்படுகிறது. எனவே பெரும்பாலான தாய்மார்கள் கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர். பாக்ட்டிரியாக்கள்/கிருமிகள்/சிறு பூச்சிகள் மற்றும் பிற மாசுப்பொருள்கள் தண்ணீர் அல்லது மண்ணின் மூலமோ கீரைகளை மாசுப்படுத்துகிறது. எனவே கீரைகளை நன்கு கழுவி சுத்தம் செயயாமல் உணவில் சேர்க்கும்போது வயிற்றுப்போக்கினை ஏற்படுத்துகிறது. எனவே வயிற்றுபோக்கு ஏற்படுவதை தடுக்க அணைத்து கீரைகளையும் சமைப்பதற்கு முன்பு நன்கு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்


* கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கின பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கீரையில் உள்ள சத்துக்கள் பயனுள்ளதாக அமைய, நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டி விடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடிவைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கீரைகளை வெய்யிலில் உளர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றில் உள்ள கராட்டீன்கள் வீனாகி விடும். கீரைகளை பொறிப்பதையும் தவிர்க்க வேண்டும்


* கீரைகளில் உள்ள சத்துக்களின் மதிப்பினை அவற்றின் விலைகளை கொண்டு நிர்ணயிக்க முடியாது. சில கீரைகள் மலிவான விலையில் கிடைப்பதனால், அவற்றில் உள்ள சத்துக்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட செய்து அவற்றை ஒதுப்கி விடுகின்றனர். எனவே சில கீரைகள் (உம், முருங்கை) விலை மலிந்து காணப்பட்டாலும், அவற்றில் உள்ள சத்துக்களின் மதிப்பு மிக அதிகம் மற்றும் அவை அனைவருக்கும் தேவை


* கீரை வளர்ப்பினை அவசியம் ஊக்கப்படுத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம், ஆண்டு முழுவதும் கீரைகள் கிடைக்கும் நிலை உருவாகும். வீட்டுத் தோட்டங்கள், வீட்டின் மாடியில் தோட்டங்கள் ஏற்படுத்துவது, பள்ளி தோட்டங்கள் போன்றவைகளில் கீரைகளை வளர்த்து பயன் பெறலாம். வீட்டின் பின்புறத்தில் முருங்கை மரம், அகத்தி கீரை செடிகள் போன்றவற்றை வளர்ப்பதின் மூலம் மரங்களிலிருந்து கிடைக்கும் கீரைகளை மிக சுலபமாக மற்றும் தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்

தகவல் : தேசிய ஊட்டச்சத்து மையம், ஐதராபாத் -500007 இந்திய


தமிழீஷில் ஓட்டுப் போட இங்கே க்ளிக்குங்கள்

Read more...

Thursday, July 23, 2009

துவைத்துக் காயப் போடப் பட்ட பெண்

பனிரெண்டு வய்து சின்னப் பெண் அவர். துவைத்துக் காயப் போட்டது போல இருந்தார். அவரை அவரது தாயார் மற்றும் சில உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர்.

சார், காலைல பாப்பா மயக்கம் போட்டிருச்சு. உறவினர் தான் சொன்னார். தாயார் கேவிக் கேவி அழுது கொண்டிருந்தார்.

மருத்துவர் பார்த்தார். வெறும் மயக்கம் மாதிரி தெரியவில்லை. தேவையான முதலுதவி செய்யப் பட்டன.ஆய்வகப் பரிசோதனைகளும் மருத்துவ பரிசோதனையும் செய்யப் பட்டன, அந்தப் பெண் ரத்தச் சோகையால் பாதிக்கப் பட்டிருந்தது கண்டறியப் பட்டது. மேலும் பலராலும் அடிக்கப் பட்டிருந்தது கண்டறியப் பட்டது.

மருத்துவர் சொன்னார். அம்மா, பாப்பாவை நெரயாப் பேர் அடிச்ச மாதிரி தெரியுது. இது போலீஸ் கேஸ் ஆகும். காலைலிருந்து என்ன நடந்ததுன்னு சொன்னீங்கன்னா, எங்களுக்கு உதவியாக இருக்கும்.

பெண்ணின் தாயார். இன்னும் கேவி கேவி அழ ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில் மூத்த மருத்துவரும் வந்து சேர்ந்தார்.

அவரும் குழந்தை மருத்துவரின் கருத்தினை ஆமோதித்தார்.

சார். பாப்பாவுக்கு பேய் பிடிச்சிருந்தது. பேய் விரட்டிட்டோம். நேத்தும் அந்த குணம் லேசா தெரிஞ்சது. அதனால எங்கவீட்டு பொம்பளங்க செருப்பால அடிச்சிருக்காங்க. அவங்கப்பன் செத்தப்ப் அபுடிச்ச போய் நேத்துத்தான் விலகியிடுக்கு. கஷ்டப் பட்டு விரட்டியிருக்கோம்.

நீங்க ஒண்ணுமே பண்ணாம சும்மா ரத்தம் எடுக்கறேன். படம் எடுக்கறேண்ணு போக்கு காட்டீட்டு இருக்கீங்க. குளுக்கோஸ் போட்டா தெம்பா இருக்கும்னும் பெரியவங்க சொன்னாங்க. அதுக்குத்தான் வந்தாம். நீங்க எண்ணடா


சொரக்காய்க்கு உப்பில்லேன்னு கதை பேசிட்டு இருக்கீங்க.

ஒரு இளம் பெரியமனிதர் ஆக்ரோசமாக பேசி முடித்தார். ஒரு கட்சியின் வேட்டி மற்றும் துண்டு அணிந்திருந்தார்.

இங்க பாருப்பா... பொண்ணுக்கு ரத்தச் சோகை இருக்கு. தவிரவும் தந்தை இழந்த சோகம் வேறு. அதனால் மனஅமைதி இன்மை டெப்ரெஷன் ஆகியவை வந்திருக்கு. சரியான முறையில் வைத்தியம் பார்த்தால் சரியாகிவிடும். நீங்க இப்படியெல்லாம் பண்ணிட்டு இருந்தால் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும்

முதிய மருத்துவர் மிக நீண்ட நேரம் பேசினார்.

பேச்சின் முடிவில் அவர் சொன்னதை பெரும்பாலோனோர் ஏற்றுக் கொண்டது போல இருந்தது. அந்த பெண்ணிற்கு ரத்தம் ஏற்றப்பட்ட்து. மன நல ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கப் பட்டது.

சார் சின்னப் பொண்ணப் போட்டு இப்படி அடிச்சிருக்காங்க. நீங்க அமைதியா பேசிட்டு இருக்கீங்க ஏ.ஆர். எண்ட்ரி போட்டுவிட்டு போலீசுக்கு தகவல் கொடுங்க சார். இதெல்லாம் அவங்க விசாரிச்சாத்தான் சரியா வரும்.

இளம் மருத்துவர். உணர்ச்சி வசப் பட்டு பேசிக் கொண்டிருந்தார்.

யாரு மேலப்ப்பா புகார் கொடுக்க முடியும். அந்தப் பொண்ணுக்கு ஆதரவு இவங்கதான். இவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துட்டா அந்த பெண் அனாதரவா மாறிடும்ப்பா . பாவம் அறியா ஜனங்க.., நாமதான் அவங்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
முதிய மருத்துவர் அதற்கும் ஒரு பதில் கொடுத்தார்.

அந்தப் பெண்ணுக்கு சில நாள் இடைவெளியில் மீண்டும் ரத்தம் போடப் பட்டது. சிலவாரங்கள் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சில மாதங்கள் கழித்து

அந்தப் பெண் அதே உடல் போல அரை மயக்க நிலையில் உடலெல்லாம காயமான நிலையில் அழைத்துவரப் பட்டார்.

ஏம்ப்பா அன்னைக்கு அவ்வளவு தூரம் சொல்லி சரி பண்ணி அனுப்புனா திரும்பவும் அப்படியே பண்ணி கூட்டிட்டு வந்திருக்கீங்களே..,

மருத்துவர் வருத்தத்துடன் கேட்டார்.

நீங்க சொன்னபடித்தான் டாக்டர் செஞ்சிருக்கோம்.

உடம்புல ரத்தமே இல்லை அப்படின்னும் ரத்தமெல்லாம் போட்டுவிட்டீங்க திரும்பவும் ரத்தச் சோகை ஆகிப்போச்சு.

(வீட்டுக்கு அனுப்பிய சில நாட்கள் கழித்து தொடர் சிகிச்சையை நிறுத்தி அவர்களாகவே நிறுத்தி விட்டிருந்தனர்)

நீங்கதான் ஒழுங்கா வைத்தியம் பார்க்கணும்னு சொன்னீங்க. அதுதான் கேரளா கூட்டிட்டு போய் அங்கிருக்கிற வைத்தியரிடம்(மாந்தீரகரிடம்) போய் பார்த்தோம். உடம்பில மூணு ரத்த காட்டேரி இருந்ததாம். அவரே சொன்னார். அம்பதாயிரம் செலவு பண்ணி அந்த ரத்தக் காட்டேரியெல்லாம் எடுத்துட்டோம். இப்ப நீங்க ரத்தம் போடுங்க டாக்டர் புள்ள நல்லாயிடும்.

-----------------------------------------------------------------------------

தமிழீஷில் ஓட்டுப் போட இங்கு அழுத்துங்கள்

Read more...

Monday, July 20, 2009

முகப் பரு

முகப்பரு எதனால் உண்டாகிறது ?

ஒவ்வொரு முடி அடிப்பகுதியும் (hair follicle) 'செபம்' (sebum) எனப்படும் எண்ணெய் பசையுள்ள பொருளைச் சுரக்கும் சுரப்பியுடன் உள்ளது
பருவ வயது வந்ததும் செபம் உற்பத்தி அதிகரிக்கும். மயிர்கால்களும், செபத்தாலும், தோல் செல்களாலும் நிரப்பப்படும். இது white head ஆக மாறும்
தடுக்கப்பட்ட பை திறந்ததும் தடுப்பு 'black head' ஆகக் காணப்படும்.
முடிப்பைகளிலுள்ள பேக்டீரியாக்கள் ஒருவித ரசாயணத்தை வெளியேற்றும். அது செபத்துடன் கலந்து அதை அழிக்கும். விளைவாக, சிவப்பான, எரிச்சலுடன் கூடிய முகப்பருக்கள் ஏற்படுகின்றன.
சில தீவிர சமயங்களில் கீழ் உண்டாகி, பெரும் வலியுடன் கூடிய வீக்கங்களாகும்.
இறுதி விளைவாக ஆழ்ந்த குழிகளோடு அல்லது கடித்த தடிப்புகளுடன் கூடிய வடுக்கள் உண்டாகும்.
முகப்பரு என்பது சிவந்த, எரிச்சலோடு கூடிய வடுக்களோடு அல்லது எரிச்சலற்ற கரியமுகடு (comedone) களோடு கூடியதாகும்.

யாருக்கு முகப்பருக்கள் வரும் ?
முகப் பருக்கள் 13-19 (டீன்ஏஜர்) வயதுக்குடப்பட்ட வாலிப வயதினரைப் பாதிக்கும். 12-18 வயதுட்குட்பட்ட வாலிப வயதினர்களில் 85%, ஏதோ ஒரு வித வகையில் முகப்பருக்களால் பாதிக்கப்ப படுகின்றனர்.
முகப்பருக்கள் இருபதுகளிலும், முப்பதுகளிலும் கூட தோன்றத் தொடங்கலாம். 10% முதல் 20% பெரியவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
முகப்பருக்கள், முகத்திலும், மார்பிலும், முதுகிலும் வரும்.

எந்தக் காரணக் கூறுகள் முகப்பருவை மேலும் மோசமாக்கும் ?
தொப்பி போன்ற தலைக் கவசங்கள், முகவாய்கட்டை தோல்பட்டைகள் முதலியவை உராய்ப்பையும், அதன் விளைவாக வெப்பத்தையும் உண்டாக்கி முடிப் பைகளை அடைக்கச்செய்து, முகப்பருக்களைத் திடீரென உண்டாக்கும்.
பசைபோன்ற அழகு சாதனங்கள், எண்ணெய் பாங்கான கூந்தல்பசைமுகப் பருக்களை மேலும் மோசமாக்கும். எனவே தண்ணீர் அடிப்படையான,எண்ணய் இல்லாத அழகு சாதனங்களையே பயன்படுத்துங்கள்.

சாக்லெட்டுக்கள், எண்ணெய் பாங்கான உணவுப்பொருட்கள் முகப்பருக்களை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் ஏதுமில்லை. உணவுக் கட்டுபாடுகளேதும் தேவையில்லை.

முகப்பருக்களுக்கு எந்த மருத்துவங்கள் கிடைக்கின்றன ?
கூடிய விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள். உடனடி மருத்துவம் முகப்பருக்களின் வடுக்கள் ஏற்படாவண்ணம் தடுத்து, உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும்.
துவக்க முகப்பருக்கள், வழக்கமான, தோலின்மேல் பூசும் கிரீம், லோஷன், ஜெல்களுக்கே அடங்கி விடும். உதாரணமாக துவக்க நிலையிலுள்ள முகப்பருக்கள், வழக்கமான, தோலின்மேல் பூசப்படும், 'பெஞ்சால் பெராக்ஸைடு ஜெல், முகப்பரு லோஷன், ஆண்ட்டிபயாடிக் லோஷன் 'ஏ' விட்டமின் தரும் ஜெல்' போன்ற கீரிம்கள், லோஷன்கள், ஜெல்களுக்கு அடங்கிவிடும். இந்தத் தயாரிப்புகள் தோலைச் செம்மை நிறமாகவும், ஈரப் பசையற்றதாகவும், மென்மையாக்கும். ஆனால் இந்தப் பலன்கள் தற்காலிகமானவை.
மிகவும் தீவிர நிலையிலுள்ள முகப்பருக்களைப் போக்க, டெட்ராசைக்ளின், எரித்ரோமைசின் போன்ற மருந்து வில்லைகள் உதவும். இந்த ஆண்ட்டி பயாடிக்குகள் மிகவும் பாதுகாப்பானவை. இவற்றைக் குறைந்தது 4-6 மாதங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஆண்ட்டி பயாடிக்குகளுக்கும் அடிபணியாத மிகவும் மோசமான முகப்பருக்களுக்கு ஐசோட்ரிடிநைன் எனும் மருந்து வில்லைகள் தரப்படலாம்.
அமைதியாக இருங்கள். எல்லாவித மருத்துவங்களும் சிறிது விளைவுகளைக் காட்ட குறைந்தது 4-6 வாரங்கள் பிடிக்கும். எனவே மருத்துவத்தை இடையிலேயே மனமுடைந்து நிறுத்தி விடாமல் தொடருங்கள்.

நன்றி:சங்கி மருத்துவமனை

தமிழீஷில் வாக்களிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Read more...

Friday, July 10, 2009

எண்ணச் சுழற்சி நோய்

தமிழீஷில் ஓட்டுப் போட இங்கே சுட்டுங்கள்

Read more...

Saturday, July 4, 2009

ஏன் டாக்டர் இப்படி செஞ்சீங்க?

அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் பிரசவ அறை கொஞ்சம் அதிகப் படியான பரபரப்பாகவே இருந்தது. பிரசவ அறையின் உள்ளே சென்ற மருத்துவரும் செவிலியரும் மிக அதிகப் படியான பரபரப்புடனேயே இருந்தனர். பிரசவத்திற்காக அனுமதிக்கப் பட்டிருந்த பெண்ணின் உறவுக்காரப் பெண்ணும் பிரசவ அறையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.( அவர்ப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்.) உறவுக் காரப் பெண்ணுக்கு ஓரளவு என்ன பிரச்சனை என்று தெரிந்துவிட்டது.

குழந்தை பிறக்க நேரமாகுமாம். என்று சொல்லி விட்டு காரணத்தையும் உறவுப் பெண்மணி வெளியே இருப்பவர்களிடம் வந்து சொல்லி விட்டார்.

கடவுளே......,

உறவினர்கள் கடும் அதிர்ச்சியுடன் தத்தம் கடவுள்களை வேண்டத் தொடங்கிவிட்டனர். அருகில் நடந்து கொண்டிருந்த மருத்துவ முகாமிற்கு வந்திருந்த சிசு நல சிறப்பு மருத்துவரையும் அழைத்தனர். அவரும் வந்திருந்து அவருக்கான அறையில் காத்திருந்தார்.

கொஞ்ச நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தை பிறந்தது


மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார். ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாய் சேய் இருவரும் மிக நலமாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்லிவிட்டு அருகிலிருந்த நாற்காலியில் மிக சோர்வாக அமர்ந்தார். பின்னே.. ஏறக்குறைய ஒரு நேரமே போராடியல்லவா, சுகப் பிரசவம் ஆக்கியிருக்கிறார்


தாயின் உறவுக்காரப் பெண்மணி முன்பகுதிக்கு வந்தார். மிகவும் முதிர்ந்த பெண்மணி அவர். அநேகமாக அந்த சுற்றுவட்டாரத்திலேயே மிகவும் வயதானவரான தோற்றத்துடன் இருந்தார்.

ஏன் டாக்டரம்மா இப்படி செஞ்சீங்க...,

மருத்துவர் சற்றும் புரியாமல் பார்த்தார்.

குழந்தை இரண்டுமுறை கொடி சுத்தியும் மாலையோடும் பிறந்திருக்கு.., அதப் போய் காப்பாத்தி இருக்கீங்க...

இருக்கற எல்லோரும் ரொம்ப கஷ்டப் படுவாங்க பாருங்க...

நீங்க ஒன்னும் பண்ணாமலே இருந்திருக்கலாம்..

==========================================

நல்லவேளை குழந்தையின் தாயும் தந்தையும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இல்லையென்றால் பிரசவம் பார்த்த மருத்துவர் வாழ்க்கையே வெறுத்துப் போயிருப்பார்.

தமிழீஷில் ஓட்டுப் போட இங்கே சொடுக்குங்கள்

Read more...

Sunday, June 21, 2009

பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள்

இப்பொதெல்லாம் அந்த மருந்துக்கு இந்த பக்க விளைவு. இந்த மருந்துக்கு அந்த பக்க விளைவு என்றெல்லாம் பேசுகிறார்கள்.
சில நபர்கள் (?மருத்துவர்கள்) தாங்கள் உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு (?மருந்துகளுக்கு) எந்தவித பக்க விளைவுகளுமே கிடையாது என்றெல்லாம் பேசுகிறார்கள். இந்த மருந்துகள் இறைவனால் கொடுக்கப்பட்டது. அதை எங்கள் தாத்தாவுக்கு தாத்தா நேரடியாக வாங்கி எங்களுக்கு கொடுத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
ஒரு மாணவன் என்ற முறையில் எனக்கு சில கேள்விகள் தோன்றுகின்றன.
இயற்கையாக கிடைக்கும் தண்ணீரை 5லிட்டர் குடித்தால் தலைவலி வருமே அதை பக்க விளைவு என்றுதானே கூறுவோம்
உப்பினை அரைகிலோ சாப்பிட முடியுமா? சாப்பிட்டால் என்ன நடக்கும். அது பக்க விளைவு அல்லவா?
பத்து பச்சை மிள்காயை சாப்பிட்டால் வயிறு புண்ணாகுமே அது பக்க விளைவு அல்லவா?
இந்த வாதங்களின் படி பார்த்தால் எல்லா பொருட்களுமே சரியான அளவில் உபயோகப் படுத்தாவிட்டால் கண்டிப்பாக பக்க விளைவுகள் தோன்றியே தீரும். மருந்துகளுக்கு கண்டிப்பாக கற்றறிந்த ஒருவரின் அறிவுரை மிக அவசியம்.
அதுவும் கொடிய வியாதிகளுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படும் மருந்துகள் இருபுறமும் கூரான கத்திதான்.
எல்லாம் சரிதான். கடவுள் நேரடியாகத் தோன்றி தாத்தாவுக்கு தாத்தாவிடம் கொடுத்த மருந்துக்கும் அதே நிலைதானா ......
இந்த விசயங்களெல்லாம் மதுரை தமிழ்சங்கத்தில் போட்டி வைத்து தருமி பாட்டோடு வந்து விளக்கினால்தான் புரியும்........... >
அது வரை வியாதியின் கஷ்டமா? அல்லது மருந்து தரும் கஷ்டமா?மருத்துவரிடம் ஆலோசித்து எதுவாயிருந்தாலும் அவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு போய்கொண்டே இருப்போம்
'Tamilish'

Read more...

Thursday, June 11, 2009

படிக்கும் போதே தூங்கி விழும் குழந்தைகள்

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் கண்ணொளி காப்போம் திட்டம் ஜூன்3ம்தேதி தமிழகத்தில் துவங்கப் பட்டது. குழந்தைகள் பரிசோதனை பற்றி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வட்டார மருத்துவர் விளக்கும் காட்சி .

பரிசோதனை செய்வதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிடுகிறார்.அருகில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
இருக்கிறார்.

பரிசோதனை செய்வதை துணை இயக்குநர் பார்வையிடுகிறார். இந்தப் பரிசோதனைக்கு பரிசோதகர்களுக்கு நவீனக் கருவிகள் புதிதாக வழங்கப் பட்டுள்ளன.குழந்தைகள் பரிசோதனைக்காக வரிசையாக அமர்ந்திருக்கும் காட்சி


இந்தத் திட்டத்தில் கண்பார்வையில் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு அதைச் சரிசெய்வதற்குத் தேவையான சிகிச்சைகள் அரசின் மூலம் இலவசமாகச் செய்யப் படும். தேவையான மருந்துகள் கொடுக்கப் படும். தேவைப் படும் குழந்தைகளுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப் படும்
கண்ணாடி அணிவது என்பது பார்வை குறைபாடுகள் காரணமாகவும், வெயியிப் கோரத்தைக் காக்கவும், ஸ்டைலாகத் தோன்றவும் என பல காரணங்களுக்கு அணியப் பட்டாலும் பார்வைக் குறைபாடுகளுக்கு அணிபவர்களுக்குத்தான் அதன் கொடுமை தெரியும்.

பெரிய அளவில் குறைபாடுகள் இருப்பவர்களுக்கு குறைபாடு என்பது எளிதில் கண்டறியப் பட்டுவிடுகிறது. சரி செய்ய எத்தனையோ நவீனக் கருவிகள் வந்து விட்டன.

ஆனாலும் மிகச் சிறிய அளவிலான பார்வைக் குறைபாடுகள் என்பது மிக அதிக அளவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. நமது கண்ணில் இருக்கும் லென்சு அமைப்பு நாம் பார்க்கும் காட்சிகளை விளித்திரையில் விழச்செய்து அதை மூளையில் உள்ள நரம்புகள் காட்சிகளாக உணர்த்துகின்றன.

மிகச் சிறிய அளவிலான 0.25 அளவிலான குறைபாடுகளை லென்சினைச் சுற்றியிருக்கும் தசைகள் தனது தகவமைப்பு மூலம் அதைச் சரிசெய்து கொள்ளமுடியும். அந்த நிலையில் உள்ளவர்கள் எளிதாக எந்தவகை எழுத்துக்களையும் படிக்க முடியும். ஆனால் லென்சு அமைப்பு விரைவில் சோர்வடையும் சூழல் ஏற்படும். எனவே தூக்கத்தினை தழுவுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

படிக்கும்போது தூக்கம் வந்துவிடுவதால் அந்த மாணவனின் படிக்கும் திறன் மற்றும் மதிப்பெண்கள் குறைய ஆரம்பிக்க நேரிடுகிறது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு அந்த அந்தப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தொடர் பரிசோதனைகள் மற்றும் பார்வை குறைபாடு பற்றிய அறிவுரைகள் வழங்கப் படுகின்றன. அந்த ஆசிரியர்கள் அவ்வப்போது மருத்துவர், மற்றும் கண்பரிசோதகர்களை அனுகுவார். அரசு ஆரம்பசுகாதார நிலையக் களப் பணியாளர்களும் பள்ளிகளை தொடர்ச்சியாக தங்கள் பயணத்திட்டப்படி அணுகுவார்கள். தேவைப் படும் குழந்தைகளுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப் படும். தேவைப் படுபவர்களுக்கு கண்ணாடி முதலான உபகரணங்கள் இலவசமாக வழங்கப் படும்.

Read more...

Saturday, June 6, 2009

டாக்டருக்கு சாதாரணக் காய்ச்சல்தான்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி பெண் மருத்துவருக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 11 பேர் சேர்க்கப்பட்டனர்.


இவர்களுக்குச் சிகிச்சை அளித்த 24 வயது பெண் பயிற்சி டாக்டருக்கும் அறிகுறி தென்பட்டது.


இதையடுத்து அவரது உடலில் இருந்து ரத்தம் மற்றும் தொண்டையில் எடுக்கப்பட்ட சளி ஆகியன ஆய்வகப் பரிசோதனைக்கு தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வியாழக்கிழமை கிடைத்த பரிசோதனை முடிவில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read more...

Thursday, May 7, 2009

கொஞ்சம் யோசிங்க.

மருத்துவர் தாக்கப் படுவதால் ஏற்படும் விளைவுகள்:-
1.மருத்துவருக்கு பயம் அதிகரிக்கும். நோயாளியை இன்னும் சிறப்பாக கவனம் செலுத்தப்படும் நவீன கருவிகள் கிடைக்கும் இடத்துக்கு அனுப்புவார். தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும்.
2.நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடைவெளி அதிகரிக்கும். இது என்றுமே நல்லதல்ல.
3.பாதுகாப்பு தேவைப்படும் இடத்திற்கு மருத்துவர் இடம் பெயர்வார். அப்போது சிறு நகரங்கள், கிராமங்களில் மருத்துவ செவை குறைவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.
4.மருத்துவமனையில் உள்ள விலையுயர்ந்த உபகரணங்கள் உடைபடும்போது (தனயார்துறையானாலும்) அது நாட்டிற்கு பொருளாதார நாசம்தான்.
5.பாதுகாப்பு காரணங்கள் அதிகரிக்கும்போது ஒரு எந்திரதனமான சூழ்ல் ஏற்படும். கருவிகளும் பரிசோதனையும் அதிகரிக்கும்போது செலவுகளும் அலைச்சலும் அதிகரிக்கும் நிலை ஏற்படும்.
6.பாதுகாப்பற்ற சூழல் எந்த வேலையையும் அதன் தரத்தினை மிக மோசமாக்கி விடும்.
7.அடுத்தவர் மேல் அதிகாரம் செய்யும் மனநிலையில் இருப்பவர்கள் செய்யும் இது போன்ற செயல்கள் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு பெரிய இழப்பாக அமைகிறது.
8.பெரும்பாலும் குடிபோதையிலேயே இருப்பவர்களும், உள்ளூர் ராஜா என்ற நினைப்பில் இருப்பவர்களுமே இது போன்ற அராஜக செயல்களில் ஈடுபடுகிறார்கள். கண்டிப்பாக சரிசெய்யப்பட வேண்டிய ஒன்று. உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலையில் நடப்பது என்பது அரிதாகவே இருக்கிறது.
9.இது போன்ற சூழ்நிலைகளீல் பெறுவாரியான மக்கள் மருத்துவருக்கு ஆதரவாகவே இருக்கின்றனர். ஆனால் சமூக விரோதிகளுக்கு பயந்துகொண்டு நிகழ்ச்சி நடக்கும்போது வேடிக்கை பார்ப்பார்கள். (பின்னர் வந்து வருத்தம் தெரிவிப்பார்கள்). அந்த மக்கள் அனைவரின் ஆதரவும் தனக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டு சமூக விரோதிகளின் ஆட்டம் அதிகரிக்கும். மருத்துவருக்கும் அனைவரிடமும் ஒரு அருவருப்பு உண்டாகும்.
10.மொத்தத்தில் மருத்துவர் அடுத்தநாள் நோயாளியைப் பார்க்கும்போது பயந்துகொண்டு சீக்கிரம் நோயாளியிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற என்னத்தில் பார்க்கும் நிலையே ஏற்படும்.

Read more...

Wednesday, April 15, 2009

"என் புருசனை ஒன்னும் பன்னிடாதிங்க"

அது ஒரு வெள்ளிக்கிழமை. ஒரு அரசு வாகனம் தன்னந்தனியே தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. வலது பக்கம் வானம் பார்த்த பூமியில் ஒரு உருவம் ஓடி வந்துகொண்டிருந்தது. ஆம், அரசு வாகனத்தை நோக்கித்தான்......... "அது நம்ம லட்சுமிதானே" வாகனத்தில் இருந்த பெண்மணி சொன்னதும் உள்ளே ஒரு பரபரப்பு."என் புருசனை ஒன்னும் பன்னிடாதிங்க" என்று கதறிக்கொண்டே வண்டியின் முன் மயங்கிச் சாய்ந்தாள் லட்சுமி

லட்சுமி 15 நாட்களுக்கு முன் குழந்தை பெற்ற பெண்மணி. மொத்தமே 25 கிலோ எடை மட்டுமே இருப்பார். ரத்தக்குறைபாடு காரணமாக குழந்தை பிறந்த உடன் 2யூனிட் ரத்தம் போட்டு இப்போது தான் வீடு திரும்பியவர். அவர் ஏன் ஓடி வர வேண்டும்? அவரது அன்பான கணவனுக்கு என்ன நேர்ந்தது.

இப்போது லட்சுமியின் மயக்கம் தெளிவிக்கப் பட்டிருந்தது. லட்சுமி உச்ச ஸ்தாயில் கதற ஆரம்பித்தார்." அக்கா என் புருசனை ஒன்னும் பன்னிடாதிங்க" "உங்க காலுக்கு செருப்பா இருப்பேன். அவர விட்டுடுங்க. என் உயிர காப்பத்தின நீங்களே என் வாழ்க்கைய கெடுக்க பார்க்கறீங்களே. எஞ்சாமி ஒரு பாவமும் பண்ணலயே. இப்படி குடும்பத்த வேரருக்க பார்க்கறீங்களே. ஆத்தா உனக்கு மொட்டையடிச்சு கெடாவெட்டி பூக்குழி இறங்குறேன்" எல்லா வகையான வேண்டுதலையும் சொல்லிவிட்டு மயங்கி சாய்ந்தார் லட்சுமி.

அப்படி என்னதான் நேர்ந்தது லட்சுமியின் கணவனுக்கு. ஏன் இப்படி? அவன் லட்சுமியின் உயிரையே வைத்திருந்தான். பிரசவத்தின் போது மிகவும் கஷ்டப்பட்டு லட்சுமியைக் காப்பாற்றிய போது இவனும் செத்துதான் பிழைத்தான். அப்போதுதான் அந்தப்பகுதி சுகாதார செவிலியர் சொன்னார் "லட்சுமி இன்னொருமுறை கருத்தறித்தால் அவள் உயிருக்கு ஆபத்து. அவளுக்கு கு.க.செய்யக்கூட உடல் நிலை ஒத்துக்காது".

அ.ஆ.சு.நி.ல் உள்ள வட்டார விரிவாக்க கல்வியாளர், வ.சு. புள்ளியாளர், ப.சு.செ. கி.சு.செ., சு.ஆ. ஆகியோர் நவீன ஆண் குடும்பநல சிகிச்சை முறை பற்றிச்சொல்லி அவனை சம்மதிக்க வைத்து அழைத்துச் சென்றபோது நடந்த சம்பவம்தான் இது. லட்சுமி கண்விழித்த உடன் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தார். "லட்சுமிட்ட சொன்னா சம்மதிக்க மாட்டா, அதுனால நான் அவகிட்ட சொல்லல"வாய் திறந்தார் லட்சுமியின் கணவர்.

நடந்த சம்பவங்களில் நாங்கள் உறைந்துவிட்டோம். சில வயதான பணியாளர்கள் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டனர். லட்சுமி சம்மதித்த பின் கு.ந.சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று அவர்களை வீட்டில் விட்டுவிட்டு திரும்பினோம்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நாங்கள் எங்கள் பிரச்சாரத்தை திருமணமான பெண்களீடமே ஆரம்பிக்கிறோம். நமது பெண்கள் கணவர் வீரியம் குறைந்தவர்(ஆண்மை நிறைந்திருந்தாலும்) என்பதை ஏற்றுக் கொள்ள தயங்குவதே ஆண் கு.ந. சிகிச்சை பரவாலாவதற்கு தடையாய் இருக்கிறது என்பதும் ஒரு உண்மைதான்.

இது ஒரு மீள்பதிவு

Read more...

Friday, March 6, 2009

தமிழக அரசு மருத்துவர்களின் வேலை நேரம் என்ன தெரியுமா

ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்


இவர்கள் இருவரும் காலை 8 முதல் மாலை 5 வரை பணியில் இருக்க வேண்டும்.

அதன் பிறகு ஒருவர் மாலை 5 மணி முதல் அடுத்த நாள் காலை 8 வரை பணியில் இருந்து விட்டு தொடர்ந்து மாலை 8 மணி வரை களப்பணி செய்ய வேண்டும்

அதாவது

மருத்துவர் 1, மருத்துவர் 2 என்று எடுத்துக்கொண்டால்

மருத்துவர் 1 பணி நேரம் - வாரத்திற்கு 99 மணி நேரம்
 • திங்கள் காலை 8 முதல் செவ்வாய் மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
 • புதன் காலை 8 முதல் வியாழன் மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
 • வெள்ளி காலை 8 முதல் சனி மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
மருத்துவர் 1 பணியில் இல்லாத நேரம் - வாரத்திற்கு - 69 மணி நேரம்
 • செவ்வாய் மாலை 5 முதல் புதன் காலை 8 வரை - 15 மணி நேரம்
 • வியாழன் மாலை 5 முதல் வெள்ளி காலை 8 வரை - 15 மணி நேரம்
 • சனி மாலை 5 முதல் திங்கள் காலை 8 வரை - 39 மணி நேரம்

மருத்துவர் 2 பணி நேரம் - வாரத்திற்கு 123 மணி நேரம்
 • செவ்வாய் காலை 8 முதல் புதன் மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
 • வியாழன் காலை 8 முதல் வெள்ளி மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
 • சனி காலை 8 முதல் திங்கள் மாலை 5 வரை - தொடர்ந்து 57 மணி நேரம்

மருத்துவர் 2 பணியில் இல்லாத நேரம் - வாரத்திற்கு - 45 மணி நேரம்
 • திங்கள் மாலை 5 முதல் செவ்வாய் காலை 8 வரை - 15 மணி நேரம்
 • புதன் மாலை 5 முதல் வியாழன் காலை 8 வரை - 15 மணி நேரம்
 • வெள்ளி மாலை 5 முதல் சனி காலை 8 வரை - 15 மணி நேரம்

இப்படி பணி செய்ய சொல்லிவிட்டு, மருத்துவமனைக்கு மருத்துவர்கள் வருவதில்லை என்று குற்றம் சொல்ல வேண்டியது தான் !!

பிற மாநிலங்களை ஒப்பிட்டால்

Name of Institutions

Duty timings

Kerala

9 am to 1 pm / 2 to 3 pm

Karnataka

9 am to 1 pm/ 2 to 4.30 pm

Central institutions

Working hours same as for other central govt. offices

Tamilnadu

8 am to 5 pm (5 pm to 8 am call duty on alternate day)


அதே நேரம் பிற மாநிலங்களின் ஊதியம்

Institution

Entry

Pay scale & Promotions

1

2

3

Andhra

Asst Surg 11250

Deputy Civil surg.

14300

in 8 years time bound

Civil surg

17035

in 16 years time bound

JD

18355

vacancy based

Karnataka

GDMO

14050

Sr MO/ Specialist 15200

in 6 years time bound

(Dy CMO)/ Sr Specialist)

18150

in 13 years time bound

23200

JD

Kerala

11910-19350

(Asst. Surg)

16650- 23200

(civil surgeon)

in 8 years time

bound

23200 – 31150

(DD)

in 16 years time bound

25400 – 33100

Addl Director

Vacancy based

Tamilnadu

Asst Surg

8000

Sr. Asst. surg.

9100 in average 17 years

Civil surg.

10000 in average 20 yr

Sr civil surg.

12000 in average 22 yr


Read more...

Thursday, February 26, 2009

பிளவு பட்ட உதடும் தமிழகமும்

பிளவுபட்ட உதட்டுடன் பிறந்த குழந்தையின் உணர்வுகளை வெளிப்படுத்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர்விருது வழங்கிப்பாராட்டி வருகின்றோம். இந்த நேரத்தில் தமிழகத்தில் நடைப் பெற்றுவரும் சப்தமில்லா சாதனை ஒன்றை பகிர்ந்துகொள்ளவிளைகின்றேன்.

தமிழ் அரசின் சார்பாக பிளவுபட்ட உதடு மற்றும் பிளவுபட்ட அன்னத்துடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளிலும் இலவசமாக செய்யப் பட்டுவருகின்றது. மருத்துவ கல்லூரில் அறுவைசிகிச்சை செய்வது என்பது எல்லோருக்கும் ஓரளவு தெரிந்திருக்கும். அதே நேரத்தில் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்புப் பணி தொடச்சியாக நடைப் பெற்றுவந்துகொண்டு இருகிறது.

வாராந்திர ஆய்வுக் கூடத்தில் அந்த வாரத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை (தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் ஆன மொத்த குழந்தைகள் ) , அதில் பிளவுப்பட்ட உதடு மற்றும் அன்னத்துடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக வாராந்திர அறிக்கையாகப் பெறப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அந்த ஊருக்கு புதிதாக வெளியூரிலிருந்து வந்த குழந்தைகளும் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது. அனைத்து சிக்கலான குழந்தைகளும் மருத்துவகல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப் படுகிறது.

தற்போது 15வயதுக்குட்ட குழந்தைகளில் பிளவுபட்ட உதடு மற்றும் அன்னத்துடன் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் பிளஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம். (அப்படி ஏதாவது குழந்தை அறுவை சிகிச்சை செய்யப்படாமல் இருந்தால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகினால் அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்வார்கள்).


சில தனியார் மருத்துவ மனைகளும் இந்த சேவையினை இலவசமாக தமிழகத்தில் செய்து வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்க செய்தியே ஆகும்.

Read more...

Monday, February 23, 2009

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எழிலான தோற்றம்

Read more...

Sunday, February 22, 2009

தகவல் அறியும் உரிமை

சுட்டியை க்ளிக் செய்யுங்கள். தகவல் அறியும் உரிமைநன்றி. சே.வே. சு. அவர்களுக்கு

Read more...

Friday, February 20, 2009

அரசு மருத்துவமனையில் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

அரசு மருத்துவமனையில் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.
முதலில் மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளிடம் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகளும், அதற்கு பின்னர் நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகளும்

நிர்வாகம் நோயாளிகளிடம் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகள்

 1. தனியார் மருத்துவமனைகளில் டோக்கன் வாங்கி பல மணி நேரம் காத்திருந்து மருத்துவரை பார்க்கிறீர்க்ளே. அரசு மருத்துவமனையில் மட்டும் ஏன் மருத்துவரின் நாற்காலியை சுற்றி 10 பேர் நின்று அனைவரும் ஒரே நேரத்தில் மருத்துவரின் முகத்திற்கு எதிராக உங்கள் சீட்டை நீட்டுகிறீர்கள்.

 2. உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துள்ளீர்கள். மருத்துவமனை என்றால் மட்டும் ஏன் கண்ட இடங்களில் எச்சில் துப்ப வேண்டும். படியில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு மீதி உணவை அங்கேயே போட வேண்டும்.

 3. பலமாத கால்புண்ணிற்கு இரவு 11 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து உள்நோயாளியாக சேர்ந்து விட்டு அந்த சமயம் இருக்கும் ஒரே பணி மருத்துவர் ஹார்ட் அட்டாக் நோயாளிகளையும், விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் பார்க்கும் நேரம் கால் புண்ணிற்கு மருந்து போடவில்லை என்று கூப்பாடு போடுவது நியாயமா.

 4. உடல் நிலை தேறிய பின்னர்தான் அறுவை சிகிச்சை என்று தனியார் மருத்துவமனை கூறினால் ஒழுங்காக பழங்களை / சத்து மாத்திரைகளை சாப்பிட்டு ஒரு மாதம் கழித்து வருகிறீர்கள். அதே போல் அரசு மருத்துவமனையில் கூறினால் மட்டும் ஏன் எம்.எல்.ஏவிடம் சிபாரிசு வாங்குகிறீர்கள்.

 5. மருத்துவர் சோதித்து பார்த்து ஒன்றும் இல்லை என்று கூறியபின்னர் இலவசம் என்ற ஒரே காரணத்திற்காக ஸ்கேன் / எக்ஸ்ரே இலவசமாக எடுக்க வேண்டும் என்று அடம் பிடிப்பது நியாயமா. அப்படி உங்களுக்கு தேவையில்லாமல் எடுக்கப்படுவதால் தேவைப்படும் மற்றொருவருக்கு எடுக்க முடியாமல ஆகிறது என்று உணர மாட்டீர்களா

நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகள்
 1. புற நோயாளி பிரிவின் வேலை நேரம் காலை 7:30 முதல் 9:30 என்றால் 7:15க்கு வந்து அனைத்து முன்னேற்பாடுகளை கவனித்து விட்டு 7:30க்கு முதல் நோயாளியை பரிசோதித்தால் என்ன

 2. மருந்து பொருட்கள் தீரும் முன்னரே அதை வாங்கி வைக்கலாமே. ஏன் தீரும் வரை காத்திருக்க வேண்டும்

 3. படுக்கை விரிப்புகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்றுகிறார்கள்.

 4. சீட்டு எழுதுபவர் ஏன் ரசீது அளிக்காமல் 1 ரூபாய் அல்லது 2 ரூபாய் வாங்குகிறார். அதை தடுக்க முடியாதா.

 5. ஆம்புலன்ஸ் கட்டணம் கிலோமீட்டருக்கு இத்தனை ரூபாய் என்று பெரிதாக போர்டு மாட்டியிருந்தும் டிரைவர் 2000, 3000 என்று ஏன் பேரம் பேசுகிறார்

Read more...

Saturday, February 14, 2009

கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சத்தான உணவு சமைத்து பரிமாற படுகிறது

முப்பது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வசதிகளைப் பெருக்குவதற்காக பணவசதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்தவைகள்.

குழந்தை மற்றும் தாய் சேய் நல ஆணையர் கூறியதாவது, கர்ப்பிணி பெண்கள் மருத்துவ உதவிக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதால் நவீன மருத்துவக் கருவிகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவக்கூடம் அத்துடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்குவது மற்றும் தொலைக்காட்சி தொடர்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் 35 லிருந்து இவ்வருடம் 65 ஆக உயர்நதுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புதூர் கிராம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏறத்தாழ தினமும் ஒரு குழந்தை பிறக்கின்றது.

பண்டிகாவனூர் கிராமத்தில் உள்ள ஒரு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில், அக்கிராம மக்கள் தொகை 2000 பேரில் சுமார் 110 பேர் வாராந்திர விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குத் வருகைத் தருகின்றனர். எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் குறித்த விளக்கம் மற்றும் பரிசோதனை செய்யப்படுகிறது.

தகவல் - ஹிந்து செய்தித்தாள், டிச 5, 2007.

Read more...

Saturday, January 3, 2009

நெகிழ்ச்சியான புத்தாண்டு

வழக்கமாக புத்தாண்டு தினத்தன்று அனுமதி விடுப்பு எடுக்கும் வழக்கமாக கொண்டிருந்த எனக்கு இந்த ஆண்டு புத்தாண்டு அன்று பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேறு வழியே தென்படாத சூழ்நிலையில் பணிக்குச் சென்றேன்.

புறநோயாளிகள் பிரிவில் அமர்ந்த சில நிமிடங்களில் முதல் நோயாளி வந்தார். வந்ததும் அவர் கையை நீட்டினார். கையில் சாமி பிரசாதம். புத்தாண்டு வாழ்த்துக்களுடன் பிரசாதத்தையும் கொடுத்துவிட்டு உடல் நன்றாகத்தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். அடுத்தடுத்து வந்த நோயாளிகளில் பெரும்பாலோனார் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிக் கொண்டே இருந்தனர். சிலர் இனிப்புகளும் சிலர் பிசாதங்களுடனும் வந்திருந்தனர். பல்ர் வாழ்த்துச் சொல்வதற்கு மட்டுமே வந்திருந்தனர். கொஞ்ச நேரத்தில் நானும் சுதாரித்துக் கொண்டு ஒரு இனிப்புப் பொட்டலம் வாங்கி வருபவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டேன்.

விடுப்பு எடுத்துக் கொண்டு பணிக்கு வரும் வாய்ப்பினை வழங்கிய சக மருத்துவருக்கு நன்றியைச் சொல்லிவிட்டு எனது புத்தாண்டு இனிதே தொடங்கியது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Read more...

Friday, January 2, 2009

அரிவாளோடு ஆஸ்பத்திரியில்

அந்த நாள். இப்படித்தான் அமையப் போகிறது என்று யார்தான் நினைத்துப் பார்த்திருக்க முடியும்.

ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வட்டார சு. நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. (கிராமங்களில் உள்ள மருத்துவ மனையை தமிழகத்தில் ஆ.சு.நி. என்று அழைப்பார்கள்)

சார். இங்க ஒரே கலாட்டாவா இருக்கு. கத்தி, குண்டாந்தடியோட நாலஞ்சு பேர் ஆசுபத்திரியை சுத்தி வந்து மிரட்டராங்க ஏதாச்சும் பண்ணுங்க சார்.
செவிலியர் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார்,

மீண்டும் முயற்சி செய்ததில் லைன் கிடைக்கவில்லை. கைபேசிகளும் எடுக்க வில்லை. வட்டார சுகாதார மேற்பார்வையாளரையும்., அந்த பகுதியில் அதிகமாக இருக்கும் சமுதாயத்தைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளரையும் கூட்டிக் கொண்டு ஜீப் பில் கிளம்பினார் வட்டார மருத்துவ அலுவலர்.


செல்லும்வழியில் மீண்டும் ஒரு அழைப்பு. என்னம்மா.. பிரச்சனை...?


சார்.. பத்தாங்கிளாஸ் படிக்கற பொண்ணு விஷம் சாப்பிட்டிருச்சு சார்.. அதுக்கு நாமதான் காரணம்னு சொல்லிட்டு எல்லாம் கத்தி கட்டையோடு வந்திருக்காணுக சார்.

என்னடா இது வம்பா போச்சு. யார் என்னடா பண்ணுனது? சும்மா ஓ.பி. டோக்கன் போட லேட் ஆனாலே தட்டி கட்டி வாய்கிளிய பேசற பசங்க. இப்ப எவன் என்னடா பண்ணுணீங்க
... வார்த்தைகள் சரமாரியாக வந்துகொண்டிருந்தது.


பொண்ணு எப்படிம்மா இருக்கு? பொண்ணு நல்லாஇருக்கு சார்... அப்பா.. ஒரு தொல்லை முடிஞ்சது...................

என்ன பிரச்சனை சிஸ்டர்.. நீங்க வாங்க சார். விரிவா சொல்ரேன்.

யார் பெரிய அதிகாரின்னே தெரியல வ.ம.அ. புலம்பிக்கொண்டே பயண்த்தை தொடர்ந்தார். வழியில் தென்பட்ட காவலர் ஒருவரையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தை வண்டி நெருங்கியது. சு. ஆ. சொன்னார். இவங்க எங்க ஆளுக இல்லை சார்

சரி. இன்னைக்கு டரியல்தான். முகத்தில் எதையும் காட்டாமல் வ.ம.அ.வும், வ.சு.மே.வும் உள்ளே சென்றனர். கூட்டத்தினர் அவரை நன்கு அடையாளம் கண்டுகொண்டனர். பின்னே அவர்தானே கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகைக்கு கையெழுத்து இடுகிறார்.

சார். வாங்க சார்.. உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம்.

இது என்னடா.. நாம வர்ரது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிட்டு வந்தோம்.

குழந்தை எப்படிங்க இருக்கு.

புள்ளைக்கு ஒன்னும் இல்லீங்க. இந்த டாக்டர் பண்ணுனது தான் சரியில்லைங்க.....

ஒரு நிமிஷம் இருங்க நான் பாப்பாவை பார்த்திட்டு வந்து விடுகிறேன்.சன்னமாக கூட்டத்தை ஒதுக்கிவிட்டு உள்நோயாளியைப் பார்க்கப் போனார்.

நோயாளியிடம் என்னம்மா சாப்பிட்ட.

உடனே செவிலியர் குறுக்கிட்டு சார் புள்ள ஒண்ணுமே சாப்புடுல.. பத்தாங்கிளாஸ் பரீட்சை எழுத ஸ்கூல்ல விட மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம், அதுனாலே வீட்ல திட்டியிருக்காங்க...


என்ன இந்த டாக்டர் பண்ணிணார், தேர்வுக்கு அனுமதிக்க மறுக்கும் அளவுக்கு

வ.ம.அ. குழம்பியபடியே அந்தப் பெண்ணைப் பார்த்தார்.

அந்தப் பெண்
சார், எங்கப்பாகிட்ட போனவாரமே சொன்னேன், அவர் கண்டு கொள்ளவே இல்லை. இப்ப தேர்வுக்கு அனுப்ப முடியாதுன்னு சொன்னபிறகு அடிக்க ஆரம்பிச்சார், அதுதான் விஷம் சாப்பிடலாம்னு எடுத்தேன் தட்டி விட்டுவிட்டு இங்கே கூட்டிடு வந்து இவ்வளவு ரகளை,
பத்தாம்வகுப்பு மாணவி ரொம்ப தெளிவாக பேசினார்.

என்ன என்னமோ பிரச்சனைகளை மனதில் போட்டு குழம்பிய வ.ம.அ.

அங்கிருந்த மருத்துவரின் அறைக்குச் சென்றார். யாருமே சரியான செய்திகளை கொடுக்காத சூழ்நிலையில் அவர் பெரிய கற்பனைகளை கொண்டிருந்ததாலும் அதனை பொது இடத்தில் கேட்க தயங்கினார்.

நேராக மருத்துவரின் அறைக்கு அவர் சென்றபிறகு என்னப்பா பண்ணின...

மருத்துவர் வாயை திறக்க .... கதவைத் திறந்து கொண்டு கூட்டம் உள்ளே நுழைந்தது. காவலர் இருந்ததால் ஓரளவு சமாளிக்க முடிந்தது என்றே சொல்லலாம்.

பெண்ணின் அப்பா. பேச ஆரம்பித்தார். சார் நேத்தே வந்தேனுங்க. இந்த ஆளு (மருத்துவர்தான்) தொரத்தி விட்டுட்டாரு. அதுனாலதாங்க நாம்பெத்தபச்ச மண்ணு இன்னைக்கு இப்படி நிக்குது.

இங்க பாருங்க இப்படியெல்லாம் பேசுனா.. வேலைக்கு ஆகாது ரெண்டுபேர் மட்டும் வாங்க பேசிமுடிவு பண்ணுவோம். காவலரின் உதவி மிகவும் உதவிகரமாக இருந்தது.

இப்போது அறையில் மருத்துவர், வ.ம.அ, வ.சு.மே, காவலர். ஊர்காரர்கள் ரெண்டுபேர்,

மருத்துவர் சொன்னார். சார் இவங்க சொல்றதெல்லாம் நாம கேட்க முடியுமா சார்... நீங்கதான சொன்னீங்க்..

எதையோ தூக்கி தந்தலையில் பழிபோட்டாலும் மருத்துவர் தைரியமாக பேசியது அவர் ஏதும் தப்பு செய்யவில்லை என்பதைக் காட்டியதால் வ.மருத்துவர் சற்று தைரியம் அடைந்தார்.

என்ன பிரச்சனை முதல் இருந்து சொல்லுப்பா...

சார் இவங்க பொண்ணு போன இரெண்டு மாசமா ஸ்கூலுக்கு போகல.. ஸ்கூல்ல் மருத்துவ விடுப்பு மட்டும்தான் தர முடியும் அப்படின்னு சொல்லீட்டாங்க

இவர் வந்து என்னிடம் மருத்துவ சான்றிதழ் கேட்டார். நோயாளியையே பார்க்காத நான் எப்படி மருத்துவ சான்றிதழ் கொடுக்க முடியும்
. மருத்துவர் சொல்லி முடித்ததும்

பாருங்க சார் நீங்க சொல்லியும் இந்த பையன் (டாக்டர்தான்) கேட்க மாட்டேங்கறத. இல்லாத ஏழைபாழைகளுக்கு தான சார் ஆசுபத்திரி கட்டி வைச்சிருக்காங்க. இவன் என்புள்ள படிப்பையே கெடுத்துருவான் போல இருக்கே
இப்ப கையெழுத்து போடல.. வகுந்துடுவொம். நீங்க இருக்கீங்கலேன்னு பாக்கறேன்.

ம்ப்பா உம்புள்ள பள்ளிக் கூடம் போகில...


அதெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க. இப்ப கையெழுத்து போட முடியுமா? முடியாதா?( மருத்துவ சான்றிதழைத்தான் அப்படிக்கேட்கிறார்) இல்லாத பட்டவன்னு நினைக்காதீங்க.. கலெக்டர் வரைக்கும் கொண்டு போயிருவேன்


இல்லப்பா, கையெழுத்து போடறதுக்கு முன்னாடி என்ன ஏதுண்ணு எழுதனுமில்ல அதுக்குத்தான் கேட்கறது....

அப்படி வாங்க வழிக்கு. இதோட அக்கா குழந்தை எடுத்திருந்ததுங்க அதுக்கு கூடமாட வேலை ஒத்தாசை பண்ணிட்டு இருந்ததுங்க.. பிரசவம் கூட இங்கதாங்க ஆச்சு. அதோ அந்த ரூமுலதான்..

இங்க பாருப்பா.. அக்கா குழந்தை எடுத்ததுக்கெல்லாம் தங்கச்சிக்கு லீவு தரமுடியாதுப்பா...

ஏங்க நான் என்ன உங்களையா லீவு கேக்கறேன்.. லீவு வாத்தியார் தரேனுட்டார்ங்க். நீங்க கையெழுத்து போட்டா போதும்ங்க.

மருத்துவமனை ஊழியர்கள் இமை திறக்காமல் நின்று கொண்டிருந்த போது காவலர்தான் உதவி செய்தார்.
இங்க பாருங்கப்பா... பாய்சன் சாப்பிட்டது போலீஸ் கேசு.. நாளைக்கு ஸ்டேசன் வந்துரு.. ஆஸ்பத்திரிக்குள்ள கத்தி கட்டையோட நின்னுட்டு இருந்திருக்க ஆஸ்பத்திரி ஆட்கள் போட்டோ எடுத்திட்டாங்க.. நீ பேசாமல் எடத்த காலிபண்ணிடு . இல்லேண்ணா உனக்கு உம்புள்ளைக்கு எல்லாருக்கும் ஜெயில்தான். ஏதாவது ரகளை பண்ணினே எப்ப பண்ணுனாலும் உனக்கு பிரச்சனைதான்...


ஒருவழியாய் ......... சுபம்

Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP