அரசு மருத்துவமனையில் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்
அரசு மருத்துவமனையில் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.
முதலில் மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளிடம் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகளும், அதற்கு பின்னர் நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகளும்
நிர்வாகம் நோயாளிகளிடம் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகள்
- தனியார் மருத்துவமனைகளில் டோக்கன் வாங்கி பல மணி நேரம் காத்திருந்து மருத்துவரை பார்க்கிறீர்க்ளே. அரசு மருத்துவமனையில் மட்டும் ஏன் மருத்துவரின் நாற்காலியை சுற்றி 10 பேர் நின்று அனைவரும் ஒரே நேரத்தில் மருத்துவரின் முகத்திற்கு எதிராக உங்கள் சீட்டை நீட்டுகிறீர்கள்.
- உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துள்ளீர்கள். மருத்துவமனை என்றால் மட்டும் ஏன் கண்ட இடங்களில் எச்சில் துப்ப வேண்டும். படியில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு மீதி உணவை அங்கேயே போட வேண்டும்.
- பலமாத கால்புண்ணிற்கு இரவு 11 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து உள்நோயாளியாக சேர்ந்து விட்டு அந்த சமயம் இருக்கும் ஒரே பணி மருத்துவர் ஹார்ட் அட்டாக் நோயாளிகளையும், விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் பார்க்கும் நேரம் கால் புண்ணிற்கு மருந்து போடவில்லை என்று கூப்பாடு போடுவது நியாயமா.
- உடல் நிலை தேறிய பின்னர்தான் அறுவை சிகிச்சை என்று தனியார் மருத்துவமனை கூறினால் ஒழுங்காக பழங்களை / சத்து மாத்திரைகளை சாப்பிட்டு ஒரு மாதம் கழித்து வருகிறீர்கள். அதே போல் அரசு மருத்துவமனையில் கூறினால் மட்டும் ஏன் எம்.எல்.ஏவிடம் சிபாரிசு வாங்குகிறீர்கள்.
- மருத்துவர் சோதித்து பார்த்து ஒன்றும் இல்லை என்று கூறியபின்னர் இலவசம் என்ற ஒரே காரணத்திற்காக ஸ்கேன் / எக்ஸ்ரே இலவசமாக எடுக்க வேண்டும் என்று அடம் பிடிப்பது நியாயமா. அப்படி உங்களுக்கு தேவையில்லாமல் எடுக்கப்படுவதால் தேவைப்படும் மற்றொருவருக்கு எடுக்க முடியாமல ஆகிறது என்று உணர மாட்டீர்களா
- புற நோயாளி பிரிவின் வேலை நேரம் காலை 7:30 முதல் 9:30 என்றால் 7:15க்கு வந்து அனைத்து முன்னேற்பாடுகளை கவனித்து விட்டு 7:30க்கு முதல் நோயாளியை பரிசோதித்தால் என்ன
- மருந்து பொருட்கள் தீரும் முன்னரே அதை வாங்கி வைக்கலாமே. ஏன் தீரும் வரை காத்திருக்க வேண்டும்
- படுக்கை விரிப்புகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்றுகிறார்கள்.
- சீட்டு எழுதுபவர் ஏன் ரசீது அளிக்காமல் 1 ரூபாய் அல்லது 2 ரூபாய் வாங்குகிறார். அதை தடுக்க முடியாதா.
- ஆம்புலன்ஸ் கட்டணம் கிலோமீட்டருக்கு இத்தனை ரூபாய் என்று பெரிதாக போர்டு மாட்டியிருந்தும் டிரைவர் 2000, 3000 என்று ஏன் பேரம் பேசுகிறார்