Monday, November 17, 2008

HIV பற்றி சில தகவல்கள்

1.1986ல் தமிழகத்தில் முதல் HIV positive case கண்டறியப் பட்டது.அதன் பிறகு சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரியிலும் தகவல்கள் திரட்டப் பட ஆரம்பிக்கப் பட்டது.
2. தமிழகத்தின் மொத்த மக்கள்தொகை 2002ல் 558.59 லட்சங்கள். அதில் 22,826 பேருக்கு எய்ட்ஸ் இருப்பதாக அறியப் படுகிறது.
3.ஒருவருக்கு பால் வியாதி இருந்தால் அவருக்கு எய்ட்ஸ் வருமா?
படக்காட்சிக்கு இங்கு சுட்டவும்
4. HIVஆல் பாதிக்கப்பட்ட என் நண்பனுக்கு எவ்வாறு உதவுவது?
படக்காட்சிக்கு இங்கு சுட்டவும்
5.HIV எவ்வாறு பரவுகிறது?
படக்காட்சிக்கு இங்கு சுட்டவும்
6.HIV பாதிக்கப்பட்டவருடன் நட்பாக இருப்பதால் HIV வருமா?
படக்காட்சிக்கு இங்கு சுட்டவும்
7. எய்ட்ஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் அமைப்புகள்
படக்காட்சிக்கு சுட்டவும்
8.ஒருவரைப் பார்த்த உடன் ஒருவருக்கு HIV இருப்பதை அறிய முடியுமா?
படக்காட்சிக்கு சுட்டவும்

HIV பற்றி சில தகவல்கள் ஆங்கிலத்தில் அறிய இங்கு சுட்டவும்

Read more...

Sunday, November 2, 2008

கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர் தாக்கப்பட்டார்

Read more...

மலேரியா என்றால் என்ன?

உலகின் மிக முக்கியமான ஒட்டுண்ணி நோய் மலேரியா ஆகும். ஒவ்வோராண்டும் ஏறத்தாழ 30 லட்சம் மக்கள் மலேரியாவால் பீடிக்கப் படுவதாகவும் இதில் 15 முதல் 27 லட்சம் மக்கள் இந்நோயால் மரணமடைவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள், வெப்பமண்டல, ஏறத்தாழ வெப்ப மண்டல நிலை சார்ந்த நாடுகளில் பயணம் செய்யும்போது மலேரியா நோய் வாய்ப்படுகின்றனர். மலேரியா நோயானது சஹாரா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான ஆப்பிரிக்க பகுதிகளிலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மெக்ஸிகோ, ஹைதி, மத்திய, தென், அமெரிக்காவிலும், பாபுவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
பயணிகள் மலேரியாவால் பீடிக்கப்படும் அபாயம், பெரும்பாலும் கீழ்க்கண்டவற்றின் மீது ஆதாரப்பட்டிருக்கும்.
குறிப்பிடப்பட்ட அபாயத்தன்மை. உதாரணமாக கிராமப் புறப் பயணம், இரவுநேர மறைப்பற்ற நிலை, மறைப்பு ஏற்பாடுகளற்ற குடியிருப்புகள்.
அழிப்பு மருந்தின் எதிர்ப்புச் சக்தியைப் பெற்ற மலேரியா கிருமிகள் உள்ள இடங்களில் பயணம்.
பயணமாகும் காலம் (அதிக, அல்லது குறைந்த நோய் பரப்புப் பருவம்)
குறிப்பு :ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் நகரங்கள் மலேரியா அற்ற நகரங்கள் அல்ல. கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் மலேரியா பரவுவது மிகவும் அரிது.

மலேரியாவின் நோய் அறிகுறிகள்:
தொற்று நோய் வாய்ப்பட்ட 'அனாபிளஸ்' எனும் ஒரு வகை பெண் கொசுவினால், ஒரு மனிதனைக் கடித்து அவனது இரத்தத்திற்குள் மலேரியாவை உண்டுசெய்யும் ஒட்டுண்ணியைச் செலுத்தும்போது அவனுக்கு மலேரியா நோய் உண்டாகிறது. நான்கு வகை மலேரியா ஒட்டுண்ணிகள் மனிதனுக்குள் மலேரியாவைப் பரப்பவல்லது. (பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபரும், பி. விவாக்ஸ், பி.ஒவேல் மற்றும் பி. மலேரியா) பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபரும் உண்டாக்கும் தொற்று நோய் மிக வேகமாகப் பரவி உயிருக்கே ஊறு விளைவிக்கும். ஃபால்ஸ்பரும் மலேரியாவால் பீடிக்கப்படும் நோயாளிகளில் ஏறத்தாழ 1 %-2% மக்கள் மரணமடைகின்றனர்.
மலேரியாவின் நோய்அறிகுறிகள்:-காய்ச்சல், குளிர் எடுத்தல் , வியர்த்துக் கொட்டுதல், தசை வலிகள், தலைவலி, சில நேரங்களில் வாந்தியும் பேதியுமாதல் ஃபால்ஸிபரும் மலேரியா நோயாளிகளுக்குச் சிறு நீரகம் செயலிழத்தல், வலிப்பு, உணர்ச் சி இழந்த ஆழ்ந்தஉறக்க நிலை(கோமா) ஏற்படக்கூடும். பி. விவாக்ஸ், பி. ஒவேல் நோய்க் கிருமிகள் ஈரலில் (Liver) பல மாதங்கள், ஆண்டுகள் செயலற்று இருக்க வல்லவை. இதனால் பல மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நோய் அறிகுறிகள் மீண்டும் ஏற்படக்கூடும்.
கொசு கடிப்புக்கும், மலேரியா நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடையே பொதுவாக 7-முதல் 21 நாட்கள் இடைவெளி இருக்கும். ஆனால் முழுமையான, தேவையான அளவு மலேரியா தடுப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாத பயணிகளில் இந்தக் கால இடைவெளி இன்னும் சற்று அதிகமாக இருக்கும்.
மலேரியா உள்ள இடங்களில் பயணம் செய்யும் போதும், பயணம் செய்த பின்னரும் ஒரு பயணிக்குக் காய்ச்சல் வந்தால் அதற்குக் காரணம் மலேரியாதானா? என்று தெரிந்துகொள்ள உடனே மருத்துவ உதவியை நாடவேண்டும். மலேரியா ஒட்டுண்ணிகள் உள்ளனவா? என்று ஆராய்ந்து பார்க்க இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மலேரியாவின் தடுப்பு முறைகள்:

கொசுக்களைத் தடுக்கும் ஏற்பாடுகளையும், மலேரியாவைத் தடுக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்வதின் மூலம் பயணிகள் மலேரியாவிலிருந்து தங்களைச் காப்பற்றிக் கொள்ள இயலும்.
1. கொசுக்கடியைத் தவிர்த்தல்: மாலை, இரவு நேரங்களில் மறைப்பற்று இருந்து அனாபிளஸ் பெண் கொசுக்களின் கடிக்கு உட்படாத முயற்சிகளும், செயல்பாடுகளும் மலேரியா வருவதைத் தடை செய்ய வல்ல சிறந்த வழிபாடுகளாகும்.
கீழ்க்கண்ட முறைகள் சொசுக்கடியிலிருந்து நம்மைத் தடுக்கவல்லன:
இரவு நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் நீண்ட, கைகளுள்ள ஆடைகளையும், பெரிய முழுகாற் சட்டையையும் அணிதல் வேண்டும்.
வெளியே தென்படும் தோலின் மீது கொசுக்களை விரட்டியடிக்கவல்ல மருந்துகளை தடவிக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய அறை காற்று வறையருக்கப்பட்டதாக இல்லாதிருப்பினும் தக்க தடுப்பு வசதியற்றதாக இல்லாதிருப்பினும், உங்கள் படுக்கையைச் சுற்றிலும் கொசு வலையைப் பயன் படுத்த வேண்டும். கூடுதல் பாதுகாப்பிற்காக பெர்மித்ரின் எனும் பூச்சிக் கொல்லி மருந்தைக்கொசு வலையின்மீது பூசவேண்டும்.
பெர்மித்ரின் அல்லது அதுபோன்ற பூச்சிகொல்லி மருந்தை உங்கள் வீட்டின் பெரிய முகப்பு அறை அல்லது படுக்கும் அறையில் தெளிக்கலாம். அல்லது 'பைரித்ரம்' வெளிப்படுத்தும் கொசுவத்தியை ஏற்றி வைக்கலாம்.
2. மலேரியாதடுப்பு மருந்துகளைப் பயண்படுத்துதல்:
மலேரியா உள்ள பகுதிகளுக்குப் பயணம் செல்ல நேரிடும் பயணிகள் புறப்படுவதற்கு முன்னர் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். அத்தகையபயணிகளுக்கு மலேரியா தடுப்பு மருந்துகள் வழக்கமாகப் பரிந்துரைக்கப் படும். தேவையான பாதுகாப்பு அளவை உறுதிப்படுத்த பயணம் செய்யும் சரியான வழியைத் (route)தெரிந்து கொள்ளது மிகவும் இன்றியமையாததாகும்.
செம்மையான நோய்தடுப்புக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்து அளவையையும், உண்ண வேண்டிய காலத்தையும் கண்டிப்பாகப் பின்பற்றுவது மிகவும் இன்றியமையாததாகும்.
ஒவ்வொரு வாரமும் அதே குறிப்பிட்டகிழமைகளில் அல்லது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
உணவுக்குப் பின்னர் மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டும்.
பயணம் மேற்கொள்வதற்கு 1-2 வாரங்களுக்கு முன்பும் பயணம் மேற்கொள்ளும் சமயத்திலும், மலேரியா பீடித்துள்ள பகுதிகளில் பயணம் செய்து முடித்த பின் 4 வாரங்கள் வரையிலும் பரிந்துரைக்கப்பட்ட அளவு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
வீடு திரும்பிய உடனே மாத்திரைகளை உட்கொள்வதை நிறுத்திவிடக்கூடாது. முழு அளவு மருந்துகளையும் உண்டு முடிப்பது இன்றியமையாததாகும்.
மலேரியா தடுப்பு மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள்: எல்லா மருந்துகளுமே பக்க விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. லேசான குமட்டல், அவ்வப்போது வாந்தி, தலைச்சுற்றல் முதலிய காரணங்களைக் கொண்டு மலேரியா தடுப்பு மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தி விடக்கூடாது. மலேரியாவின் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள தற்காலிக பக்கவிளைவுகளைப் பொறுத்துதான் தீர வேண்டும். எனினும் பக்க விளைவுகள் மிகவும் அதிகமாக ஏற்பட்டால், உடனடியாக மருத்துவர் உதவியை நாட வேண்டும். மலேரியா தடுப்பு மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தி விட வேண்டும்

Read more...

டெங்கு (Dengue) என்றால் என்ன ?

டெங்கு என்றால் என்ன ?


டெங்கு என்பது கொசுக்களால் உண்டாகும் ஒரு வகை நச்சுத் தன்மை சார்பான (Viral)நோயாகும். டெங்கு காய்ச்சல் இளஞ்சிறார்களையும், பெரிய குழுந்தைகளையும், பெரியவர்களையும் தாக்கும் ஒரு கடுமையான, 'ப்ளூ காய்ச்சல்'போன்ற நோயாகும். அரிதாக இது மரணத்தை உண்டு பண்ணும். 'டெங்கு'இரண்டு கொடிய வகைகளாவன:(1) டெங்கு ஹேமோர்ரஜிக் காய்ச்சல் (Dengue haemorrhagic Fever - DHF)(2) டெங்கு ஷாக் ஸிண்ட்ரோம் (Dengue Shock Syndrome - DSS).

இது எவ்வாறு பரவுகிறது ?
இந்த டெங்கு 'வைரஸ்' ஸானது ஏடெஸ் (Aedes) எனும் பெண் கொசுக்களின் கடியால் மனிதர்களில் பரவுகிறது. இந்தக் கொசுக்கள் தொற்று நோயால் பீடிக்கப்பட்ட மனிதனின் இரத்தத்தை உறிஞ்சுவதின் மூலம் இந்த வைரஸ்களைப் பொதுவாகப் பெறுகிறது. அவற்றால் பாதிக்கப்பட்டதும் அந்தக் கொசு தனது மீதி வாழ் நாள் முழுவதும் அந்த 'வைரஸ்' களை மற்ற, மனிதர்களுக்குப் பரப்ப வல்லது. இந்த டெங்குவைரஸ், தாக்கப்பட்ட மனிதனின் இரத்ததில் 3-4 நாட்கள் (பெதுவாக 4-6 நாட்கள்) சுற்றி வரும். அந்த மனிதன் உடனே, இனம் புரியாத நோயறிகுறிகளுடன் கூடிய, கடுமையான காய்ச்சலால் தாக்கப்பட்ட உணர்வினைப் பெறுவான்.

டெங்கு நோய் அறிகுறிகள் என்னென்ன ?

டெங்கு காய்ச்சலின் அடையாளங்களும் நோயின் அறிகுறிகளும், நோயாளியின் வயதுக்கேற்ப வேறுபடும். .
இளஞ்சிறார்கள், குழந்தைகள் :
இளஞ்சிறார்களுக்கும், சற்றுப்பெரிய குழந்தைகளுக்கு காய்ச்சலும் சூடு கட்டிகளும் உண்டாகும்.
பரிய குழந்தைகள், பெரியவர்கள் :
பெரிய குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் லேசான காய்ச்சலோ அல்லது திடீரென கடுமையான அதிக காய்ச்சலோ ஏற்படும். தீவிர தலைவலி, கண்களுக்குக் கீழே வலி, கைகால் மூட்டுக்களிலும், தசையிலும் வலி சலிப்பு, சூடுகட்டிகள் உண்டாகும்.
டெங்கு ஹோமோர்ரஜிக் காய்ச்சல் மற்றும் டெங்கு ஷாக் ஸிண்ட் ரோம் இடையே வேறுபாடுகள்.
டெங்குஹோமோர்ரஜிக் பீவர் (DHF)மற்றும் டெங்கு ஷாக் ஸிண்ட்ரோம் (DSS) இரண்டுக்குமே, இனந்தெரியாத அடையாளங்களும் நோயறிகுறிகளுடன் திடீர் கடுங் காய்ச்சல் வந்து 2-7 நாட்கள் வரை இருப்பது தனிச் சிறப்பாகும். 'டெங்' கின் கடுமையான காலகட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கும் DHF/DSS க்கும் பிற நச்சத்
தன்மை சார்ந்த நோய்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளைப் பிரித்துப் பார்ப்பது கடினம். உடல் வெப்ப நிலை வழக்கமாக இருப்பதைக் காட்டிலும் குறைந்து போகும் நிலைக்கு 24 மணி நேரத்திற்கு முன்பும் 24 மணி நேரத்திற்குப் பிறகும் இடையேயுள்ள காலகட்டத்தில் DHF/DSSஇன் நெருக்கடி நிலை அடிக்கடி ஏற்படும்.
DHF-நோயறிகுறிகள்
காய்ச்சல்
தீவிர தலைவலி
கண்களுககுக் கீழே வலி
கைகால் மூட்டுவலி மற்றும் உடலில் வலி
குமட்டல், வாந்தி
தோல் வெடிப்புகள், சூடுகட்டிகள் பெரும்பாலும் நோயுற்ற 2-6 நாட்களுக் கிடையே தோன்றும்.
சாதாரணமாக இந்த நோயாளிகள் ஏழு நாட்கள் வரை நோயுற்று இருப்பார்கள். அதன் பின்னர் பல வாரங்கள் மிகவும் பலவீனமாக இருப்பார்கள். நோயுற்ற 2-8 நாட்களுக்கிடையே இரத்த அணுக்களின்எண்ணிக்கை 1,00,000/mm3 க்கும் குறைவாகக் காணப்படும். DHF காய்ச்சல், இருமல், தலைவலி, வாந்தி, வயிற்று வலி முதலியவற்றை உண்டு பண்ணும். இவை 2-4 நாட்கள் இருக்கும். இரத்த உறைவுச் சிக்கல் ஏற்பட்டு உள்ளூர ரத்தக் கசிவும் மரணமும் ஏற்படக்கூடும். DHF குணப்படுத்தா விட்டால் அது DSS--க மாறக்கூடும்.
தீவிர DHF அல்லது DSS மற்றும் காயச்சலும், இனம் காணமுடியாத அடையாளங்களும் நோயறிகுறிகளும் சில நாட்கள் உள்ள நோயாளியின் நிலைமை திடீரென்று படு மோசமடையும். நோயாளி முதலில் சோர்வாகக்காணப்பட்டு பின்னர் அமைதி குன்றி, வேகமாக, அதிர்ச்சியான மிக நெருக்கடி நிலையை அடையலாம். வழக்கமான, அதற்கும் குறைவாக உடல் வெப்ப நிலை வீழ்ந்து விடுவதைத் தொடர்ந்த 24 மணி நேரத்திற்குள் அடிக்கடி DHF/DSS - யின் நெருக்கடி நிலை ஏற்படலாம். இரத்தக் குழாய்களிலிருந்து இரத்த வெளிப்பாடு ஏற்படும். இரத்த ஒட்டம் நின்று விடுவதற்கான அறிகுறிகள் தோன்றக்கூடும். தோலுக்கு அடியில் இரத்தம் கசிவதும், (petechiae) மற்றும் தோலின்மேல் ஊதா நிறப் புள்ளிகள் தோன்றும் purpura எனும் நோயும் உண்டாகும் பல்லீறு களிலிருந்து இரத்தம் கசிவதும், மூக்கிலிருந்தும் அடிவயிற்றுக் குடல் குழாயிலும் இரத்தம் ஒழுகுவதும், மாத விடாய் பெருகுவதும் உட்பட்ட இரத்தக் குழாய்களிலிருந்து இரத்த வெளிப்பாடு சாதாரணமாக நிகழும். அதிர்ச்சியின் கடுந்தாக்குதலுக்குச் சற்று முன்னர் அவர்கள் அடிக்கடி கடும் வயிற்று வலியை அனுபவிப்பார்கள்.
ஆழ்ந்த மறைவு (வீஸீநீuதீணீtவீஷீஸீ) நிலை : (கொசுக்கடிக்கும் நோயறிகுறி கடுந்தாக்கம் காலத்திற்கும் இடைப்பட்டகாலம்)
டெங்கு ஹேமோர்ரிஜிக் காய்ச்சலின் ஆழ்ந்த துயில் நிலை/மறைவு நிலை 3-14
நாட்கள் வரை இருக்கும். சராசரி ஆழ்ந்த மறைவு காலம் 4-6 நாட்களாகும்.
நோயுற்ற மனிதன் ஒருவன், நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னரே வைரஸ்களைப் பிறருக்குப் பரப்ப இயலுமா ?
டெங்கு வைரஸ்கள் பரப்ப முடியாதவை ஆதலால் ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவனிடம் இவை பரவாது.

இது டெங்கு காய்ச்சல் தானா என்று எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது ?
டெங்கு வைரஸ்களைப் பிரித்தாய்ந்தும், நோயாளியின் நிணநீரில் உள்ள நோய் எதிர்ப்புப் பொருளைக் கண்டு பிடித்தும், பரிசோதனை சாலையில் டெங்கு தொற்று நோய் நோயுறுதி செய்யப்படுகிறது. நோய் எதிர்ப்புப் பொருளைப் பரிசோதிக்க, தேவையான இரத்தத்தை, தீவிர நோயறிகுறிகள் தோன்றிய உடனே, கூடிய விரைவில் அந்த நோயாளியிடமிருந்து எடுக்க வேண்டும். தேவையானால் இந்தப் பரிசோதனையை 2-3 வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் செய்ய வேண்டும். நிணநிரின் ஒரே மாதிரியின் (Sample)ஆதாரப்பட்ட பல்வேறு துரித பரிதோதனை கருவிப் பெட்டிகள் (Kit) வணிக அளவில் கிடைத்தபோதிலும் அவை மரபு வழி நிணநீர் பரிசோதனையைக் காட்டிலும் குறைந்த ஏற்பை உடையன போலும்.
டெங்கு காய்ச்சலுக்கு எத்தகைய மருத்துவம் கிடைக்கிறது ?
டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்த நச்சு நுண்ம எதிர்ப்பு (anti viral) மருந்து ஏதுமில்லை பெரும்பாலும் நோயறிகுறிகளை அடக்குவதின் மூலமும் தீவிர DHF மற்றும் DSS இவற்றால் தோன்றும் சிக்கல்களைத் தீர்ப்பதின் மூலமும் மருத்துவம் செய்யப்படுகிறது. இரத்த அணுக்களின் (Platelets) எண்ணிக்கையைத் தினமும் கூர்ந்து கவனித்து எச்சரிக்கை செய்வதை ஆதாரப்பட்டு முன்கூட்டிய செயலாட்சி இருக்கும். இதனால் தேவையானால் நோயாளிக்கு நிண நீர் மாற்றமும் இரத்த அணுக்களை ஏற்றுதலும் இயலும்.
உங்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக நினைத்தால், உடனே ஒரு மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். அல்லது உங்களுக்கு அருகாமையிலிருக்கும் மருத்துவ மனையிலுள்ள விபத்து மற்றும் நெருக்கடி (A & E)துறைக்குச் செல்லுங்கள். நோயறிகுறிகளை துவக்கத்திலேயே கண்டு கொண்டு மருத்துவம் செய்துகொள்ளுவது உயிரைக்காப்பாற்ற வல்லது.
மருத்துவர் டெங்கு ஹேமோர்ரஜிக் காயச்சல் இருப்பதாக ஐயுற்றால், நீங்கள் மருத்துவ மனையில் சேர்த்துக்கொள்ள படுவீர்கள். உங்களுடைய இரத்த அழுத்தமும், இரத்த அளவும் கூர்ந்து கவனித்து எச்சரிக்கை விடப்படும்.

நோயறிகுறிகள் கடுமையாகத் தோன்றிய பின்னர் தொற்று நோயாக எவ்வளவு காலம் பிடிக்கும் ?
நேரடி தொடர்பின் மூலம் ஒரு நோயுற்ற மனிதன் பிறர்க்கு நோயைப் பரப்ப மாட்டான். எனினும் டெங்கு காய்ச்சலின் துவக்க கால கட்டத்தில் நோயுற்ற மனிதனை ஒரு கொசு கடித்தால், அக்கொசு தொற்று நோயுற்ற அடுத்த மனிதனை கடிக்கும்போது டெங்கு வைரஸ்களை அவனுக்குப் பரப்புகிறது.

ஏற்கனவே ' டெங்கு ' தொற்று நோயால் பீடிக்கப்பட்டவனுக்கு மீண்டும் அது திரும்ப வரக் கூடுமா ?
டெங்கு வைரஸ§க்கு நான்கு மரபுக்கூறுகள் (Strains) உள்ளன. ஒரு மரபுக்கூறின் பீடிப்பு மற்ற மரபுக்கூறு களுக்கு எதிராக நீண்டகாலம் பாதுகாப்பைத் தரமாட்டாது. ஒரு மரபுக்கூறினால் ஏற்கனவே பீடிக்கப்பட்டவர்களுக்கு DHF/DSS வரக்கூடிய அபாயம் அதிகம் உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் :
நான் எவ்வாறு டெங்குவால் பீடிக்கப்படுவதைத் தவிர்க்க இயலும்?
ஏடெஸ் கொசுவால் கடிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்வதுதான் டெங்கு வராமல் தவிர்க்கும் சிறந்த வழியாகும். வீட்டினுள்ளும் வீட்டைச் சுற்றிலும் டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் வாழ்ந்து வளருகின்றன. எங்கெல்லாம் நீர் நிலையாகக் தேங்கி நிற்கிறதோ அங்கெல்லாம் இக்கொசுக்கள் உற்பத்தியாகின்றன. உதாரனம்:சிறு கொள்கலங்கள், பூந்தொட்டிகள்.
இவ்வைரஸ்களால் பீடிக்கப்பட்டுள்ள வெளி நாட்டவர்களாலும் டெங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. டெங்கு-நோயால் பீடிக்கப்பட்ட நாடுகளிலிருந்து நாடு திரும்பும் மக்களும் இதனால் பீடிக்கப்படுவர். இத்தகைய அதிக அபாயமுள்ள பகுதிகளில் கொசுக்களால் கடிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும். காற்று வரைகாப்புடைய (Air-Condition) மற்றும் மறைப்புடைய அறைகளில் தங்குவது, வீட்டினிலுள்ள கொசுக்களை மருந்தடங்கிய புகையின் மூலம் பெரிய கொசுக்களைக் கொல்வது, பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது முதலான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது. நீங்கள் பயணம் மேற்கொள்ள உள்ள நாட்டில் ஏதேனும் தொற்று நோய் பரவிவருகிறதா ?என்பதை எப்போதும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
' டெங்கு 'வுக்கு எதிராக தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள முடியுமா ?
டெங்குவை எதிர்க்கவல்ல எந்தத் திறமையான, பாதுகாப்பான தடுப்பூசியும் இல்லை. பீடிக்கப்பட்ட கொசுக்களின் கடியினைத் தவிர்க்க, தக்க முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொள்வதே சிறந்தது. டெங்குக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிக்க தற்போது தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
நாம் எவ்வாறு ' டெங்கு ' வை தடுத்து அடக்க இயலும் ?
தங்கள் வீட்டினுள்ளும், வீட்டைச் சுற்றிலும் ஆடெத் கொசுக்கள் வளர வாய்ப்புள்ள நீர் தேங்குமிடங்களையும், தாவரங்களையும், வழக்கமான பாதுகாப்பு முறைகளைப்
பயன்படுத்திப் பாதுகாத்து, தங்கள் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள மக்களுக்குத் தொடர்ந்து நினைவூட்ட வேண்டும். நீர்த்தேங்கும் இடங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளையும், குளிகைகளையும் போட வேண்டும்
வீடுகளில் வாழ்பவர்களைக் குறைபாடுகளுடைய கூரை வடிகால்களைப் பழுதுபார்க்கவோ அல்லது அகற்றவோ செய்து அவற்றிற்கும், பூந்தொட்டிகளுக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகள் அடங்கிய வண்ணப் பூச்சைப் பூசுமாறு கருத்துரை கூறவேண்டும்.

Read more...
அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP