Saturday, January 3, 2009

நெகிழ்ச்சியான புத்தாண்டு

வழக்கமாக புத்தாண்டு தினத்தன்று அனுமதி விடுப்பு எடுக்கும் வழக்கமாக கொண்டிருந்த எனக்கு இந்த ஆண்டு புத்தாண்டு அன்று பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேறு வழியே தென்படாத சூழ்நிலையில் பணிக்குச் சென்றேன்.

புறநோயாளிகள் பிரிவில் அமர்ந்த சில நிமிடங்களில் முதல் நோயாளி வந்தார். வந்ததும் அவர் கையை நீட்டினார். கையில் சாமி பிரசாதம். புத்தாண்டு வாழ்த்துக்களுடன் பிரசாதத்தையும் கொடுத்துவிட்டு உடல் நன்றாகத்தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். அடுத்தடுத்து வந்த நோயாளிகளில் பெரும்பாலோனார் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிக் கொண்டே இருந்தனர். சிலர் இனிப்புகளும் சிலர் பிசாதங்களுடனும் வந்திருந்தனர். பல்ர் வாழ்த்துச் சொல்வதற்கு மட்டுமே வந்திருந்தனர். கொஞ்ச நேரத்தில் நானும் சுதாரித்துக் கொண்டு ஒரு இனிப்புப் பொட்டலம் வாங்கி வருபவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டேன்.

விடுப்பு எடுத்துக் கொண்டு பணிக்கு வரும் வாய்ப்பினை வழங்கிய சக மருத்துவருக்கு நன்றியைச் சொல்லிவிட்டு எனது புத்தாண்டு இனிதே தொடங்கியது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

8 comments:

geevanathy January 3, 2009 at 8:54 PM  

///எனது புத்தாண்டு இனிதே தொடங்கியது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.///

உங்களுக்கும் எனது மனம்நிறைந்த வாழ்த்துக்கள்...

சே.வேங்கடசுப்ரமணியன் January 3, 2009 at 9:27 PM  

நானும் வேலைக்கு வந்த புதிதில் புத்தாண்டு அன்று அலுவலர்களைப் பார்த்து வாழ்த்து கூறுவது என்கிற மரபினை வெறுத்து அன்றயதினம் எனது குடும்பத்துடன் மட்டுமே கழித்து வந்தேன்.காலம் செல்ல செல்ல அலுவலகமும் வீடு தான் அதிகாரிகளும் சக ஊழியர்களும் என் குடும்பத்தினர் தான் என்கிற உணர்வு மேலோங்கிவிட்டது.இப்போதெல்லாம் புத்தாண்டு பிறப்பன்று குடும்பத்துடன் அலுவலகம் சென்றுவிடுகிறேன்.என் நண்பர்களும் அப்படியே.

புருனோ Bruno January 3, 2009 at 9:33 PM  

நான் புதியம்புத்தூரில் பணி புரிந்த காலத்தில் எங்களுக்கு புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ஊர் கொடை போன்ற தினங்களில் காலை மதியம் உணவு பல வீடுகளிலிருந்தும் வந்து விடும் :) :) :)

--

அது தான் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் உள்ள வித்தியாசம்

--

இப்பத்தானே சனவரி பிறந்துள்ளது. அடுத்த வாரம் கரும்பும் கிழங்கும் கூட வரலாம் :) :)

மங்களூர் சிவா January 3, 2009 at 9:53 PM  

தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) January 4, 2009 at 12:52 AM  

வாருங்கள்

தங்கராசா ஜீவராஜ் அவ்ர்களே

சே.வேங்கடசுப்ரமணியன் அவ்ர்களே


புருனோ Bruno அவ்ர்களே

மங்களூர் சிவா அவ்ர்களே, வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பகிர்தலுக்கும் நன்றி

ஹேமா, January 4, 2009 at 1:55 AM  

உண்மையில் SUREஷ்,புத்தாண்டின் ஆரம்பத்தில மனநிறைவான நெகிழ்வான நிகழ்வுதான்.இதிலிருந்து ஒன்றும் புரிகிறது.நீங்கள் ஒரு அன்பான அக்கறையான் மருத்துவராக இருக்கிறீர்கள் என்று.உங்கள் நண்பருக்கும் நன்றி.இந்தப் புதிய ஆண்டில் உங்கள் சேவை இனிதே அமைய வாழ்த்துக்கள் SUREஷ்.

வடுவூர் குமார் January 5, 2009 at 2:26 AM  

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP