உயிரோடு விளையாடி....., ஒரு கிராமப் புற மருத்துவம்
B R M S
Bachelor of Rural Medicine and Surgery
மத்திய அரசால் புதிதாக அறிமுகப் படுத்தப் பட இருக்கிற மருத்துவப் படிப்பு. இந்தப் படிப்பு 3 1/2 ஆண்டுகள் இருக்கும் என்றும் இதை முடிப்பவர்கள் கிராமங்களில் ஊசி போட்டு மருத்துவம் பார்க்கலாம் என்று செய்திகள் சொல்லுகின்றன. ஆனால் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்றும் சொல்லுகிறார்கள். இவர்கள் கிராமங்களில் மட்டுமே மருத்துவம் செய்ய அனுமதி என்று சொல்லுகிறார்கள்.
கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நீக்க இந்த ஏற்பாடு என்று சொல்லுகிறார்கள்.
===================================================================
இந்திய அளவில் நிலமை எப்படி இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான கிராமப் புற மருத்துவமனைகளில் (அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ) மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிக்காக நிறையப் பேர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசும் தேவைக்கேற்ப கடந்த சில ஆண்டுகளில் மூன்று, ஆறு மாத இடைவெளிகளில் காலி இடங்களை நிரப்பிக் கொண்டும் புதிய பணியிடங்களை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.
=====================================================================
இப்போது பி. ஆர். எம். எஸ் படிப்பு பற்றி எனக்கு சில சந்தேகங்கள். யாராவது இது பற்றிய சுட்டிகள் கிடைத்தால் பின்னூட்டத்தில் கொடுங்கள். தெளிவு பெற உதவியாக இருக்கும்.
1. எம்.பி.பி.எஸ் க்கு சமமான கல்வியாக் பி.ஆர். எம் .எஸ் இருக்க முடியுமா?
கண்டிப்பாக முடியாது எனபதால்தான் இது வேறொரு படிப்பாக அமைகிறது.
அப்படியென்றால் கிராமப் புறத்தான் உயிர் நகரவாசிகளின் உயிரை விட மட்டமானதா? ( இந்தக் கேள்வியைப் பலரும் கேட்டாலும் எனது முதல் கேள்வியும் அதுதான்)
2. பல நகரங்களை ஒட்டி கிராமப் பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன. அந்த கிராமப் பஞ்சாயத்துக்களை பொதுவாக நகரம் என்றே பொதுமக்கள் சொல்லுவார்கள். ஆனால் நிர்வாகம் கிராமப் பஞ்சாயத்து, நகரப் பஞ்சாயத்துகளில் வரும். அதாவது ஆங்கிலத்தில் ரூரல் ஏரியா. அவைகளில் இவர்கள் தொழில் செய்ய குவிய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
ஒருவேளை இப்படி ஒரு படிப்பு வந்தால் இந்த விஷயத்தில் இரண்டு வகையினருக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது
3.இவர்கள் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது என்று சொல்லுகிறார்கள். ஆனால் 3 1/2 ஆண்டுகள் படிக்கும் நர்சுகள் மருத்துவருக்கு அறுவை சிகிச்சையின் போது உதவி செய்கிறார்கள். மருத்துவரின் கட்டளைக்கேற்ப அறுவை அரங்கில் செவிலியர்கள் செயல்பட்டால் மிக விரைவில் வெற்றிகரமாக அறுவை சிசிக்கை முடிவடையும். அதுபோன்ற திறமைவாய்ந்த செவிலியருக்கு அறுவை சிகிச்சை நேரத்தையே மாற்றி அமைக்கக் கூடிய நிகழ்ச்சிகளும் இருக்கின்றன.
இந்த பி. ஆர். எம். எஸ் மருத்துவர் அவரை விட மேம் பட்டவரா? இவர் அறுவை சிகிச்சைப் பக்கமே போகக் கூடாது என்பதால் செவிலியரே மேம்பட்டவர் என்பதாகத்தான் தோன்றுகிறது.
இப்படி ஒரு அரைகுறை படிப்பு ஆரம்பிப்பதற்கு பேசாமல் செவிலியருக்கே தனியாக தொழில் பார்க்கும் உரிமை வழங்கிவிடலாமே.
4. பி. ஆர். எம். எஸ் படிக்கும் மருத்துவர் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவருக்கு திறமையும் இருந்தால் அவருக்கு என்ன வழி காட்டப் போகிறார்கள்?
எம்.பி.பி.எஸ் ஸின் மேல்படிப்புகளுக்கு அனுப்பலாம் என்றால் மாணவர்கள் பி. ஆர். எம். எஸ்ஸை ஒரு குறுக்கு வழியாக கருத மாட்டார்களா?
அல்லது அவர்களுக்கே தனி மேல் படிப்புகள் உருவாக்கப் பட்டால் அப்போது பாடத்திட்டங்கள் மற்றும் செலவுகள் எம்.பி.பி.எஸ் போன்றே ஆகிவிடாதா?
5. 12ஆம் வகுப்பு முடித்த தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பி. ஆர், எம்.எஸ் படிப்பில் சேர்க்கப் படுவார்கள் என்றால்
எம்.பி.பி.எஸ் படிக்க வேறு ஏதாவது தகுதி கொண்டு வரப் போகிறார்களா?
ஏற்கனவே ஆறு ஆண்டுகள். இன்னும் வேறு எம்.பி.பி.எஸ். முடிக்க காலம் கூட்டப் போகிறார்களா?
5 1/2 ஆண்டுகள் என்று சொன்னாலும். ஜூலை, ஆகஸ்டில் ஆரம்பிக்கும் கல்வியாண்டு 4 1/2 ஆண்டுகள் ஜனவரியில் முடிந்து பிப்ரவரியில் தேர்வு எழுத தேர்வு முடிவுகள் வந்த பின் தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சிகள் காலத்திற்குள் நுழைவார்கள் எனவே முடிக்க ஆறு ஆண்டுகள் ஆகிவிடும்.
எம்.பி.பி.எஸ் படிப்பின் காலத்தைக் குறைக்க ஒரு எளிமையான வழி இருக்கிறது. எம்.பி.பி.எஸ் மாணவர்களின் படிப்பின்போது ஞாயிறு, மற்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை விடுப்புகள் உள்ளன. அந்த நாட்களில் வகுப்புகள் வைத்தால் ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மிஞ்சும். 4 1/2 ஆண்டுகளில் ஓராண்டை அழகாக மிச்சப் படுத்தி விடலாம்.
இந்த யோசனையைக் கண்டு சிரிக்க வேண்டாம். ஏற்கனவே முதுகலை பயிலும் மாணவர்கள் ஞாயிறு, ரம்ஜான், பொங்கல் விடுப்பு இல்லாமல்தான் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
6.கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மூலமாக தமிழ் நாட்டில் கடைக்கோடி கிராமத்திற்கு பெரிய பெரிய மருத்துவமனைகள் வந்து நோயாளிகளை அழைத்துச் செல்லும் நிலை தமிழ்நாட்டில் உள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக அந்த சிகிச்சையையும் அதே கிராமத்தில் செய்யும் நிலை கொண்டு வர வேண்டாமா? அதற்குப் பதிலாக ஏற்கனவே இருப்பவரை விட வல்லமை குறைந்தவரையா அனுப்ப வேண்டும்?
==============================================================
இந்த இடுகை நிறையப் பேரைச் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே நீங்கள் உங்களால் முடிந்த வழிகளில் மற்றவர்களுக்கு இதை பரப்புங்கள்.
தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்
4 comments:
//ற்கனவே முதுகலை பயிலும் மாணவர்கள் ஞாயிறு, ரம்ஜான், பொங்கல் விடுப்பு இல்லாமல்தான்//
புதிய தகவல்.
//Bachelor of Rural Medicine and Surgery//
சர்ஜர் செய்யக்கூடாது என்றால், ஏன் பட்டத்தில் சர்ஜரி தருகிறார்கள்?
////Bachelor of Rural Medicine and Surgery//
சர்ஜர் செய்யக்கூடாது என்றால், ஏன் பட்டத்தில் சர்ஜரி தருகிறார்கள்?//
bachelor or rural medical system ,
medical service என்றும் கூட சொல்லுகிறார்கள். தெளிவான தகவல்களுக்கு கூகில் அண்ணாச்சி உதவ மறுக்கிறார்.
எனக்கு கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது இடுகைகள் தொடரும். உங்களுக்கு கிடைத்தால் சுட்டிகளைக் கொடுங்களேன்..,
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
// ஹுஸைனம்மா said...
//ற்கனவே முதுகலை பயிலும் மாணவர்கள் ஞாயிறு, ரம்ஜான், பொங்கல் விடுப்பு இல்லாமல்தான்//
புதிய தகவல். //
பொதுவாக முதுகலைப் படிப்பு என்பது பணியாற்றுவதுதான். முதல்நாள் முழுநேரபணி பார்த்தாலும் அடுத்த நாள் பணியைத் தொடர்ச்சியாக பார்க்க வேண்டும். பாடத்திட்டம் அவ்வாறு அமைக்கப் பட்டுள்ளது.
முதுகலை பட்டயம் இரண்டு ஆண்டுகளும், முதுகலை பட்டம் மூன்று ஆண்டுகளும் விடுப்பு இல்லாமல்தான் படிக்கிறார்கள்.
ஐந்தாண்டு சிறப்பு முதுகலைப் படிப்பு இருக்கிறது, அவர்களுக்கு ஐந்தாண்டும் இப்படித்தான்.
விளக்கங்களுக்கு நன்றி டாக்டர்.
Post a Comment