மலேரியா என்றால் என்ன?
உலகின் மிக முக்கியமான ஒட்டுண்ணி நோய் மலேரியா ஆகும். ஒவ்வோராண்டும் ஏறத்தாழ 30 லட்சம் மக்கள் மலேரியாவால் பீடிக்கப் படுவதாகவும் இதில் 15 முதல் 27 லட்சம் மக்கள் இந்நோயால் மரணமடைவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள், வெப்பமண்டல, ஏறத்தாழ வெப்ப மண்டல நிலை சார்ந்த நாடுகளில் பயணம் செய்யும்போது மலேரியா நோய் வாய்ப்படுகின்றனர். மலேரியா நோயானது சஹாரா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான ஆப்பிரிக்க பகுதிகளிலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மெக்ஸிகோ, ஹைதி, மத்திய, தென், அமெரிக்காவிலும், பாபுவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
பயணிகள் மலேரியாவால் பீடிக்கப்படும் அபாயம், பெரும்பாலும் கீழ்க்கண்டவற்றின் மீது ஆதாரப்பட்டிருக்கும்.
குறிப்பிடப்பட்ட அபாயத்தன்மை. உதாரணமாக கிராமப் புறப் பயணம், இரவுநேர மறைப்பற்ற நிலை, மறைப்பு ஏற்பாடுகளற்ற குடியிருப்புகள்.
அழிப்பு மருந்தின் எதிர்ப்புச் சக்தியைப் பெற்ற மலேரியா கிருமிகள் உள்ள இடங்களில் பயணம்.
பயணமாகும் காலம் (அதிக, அல்லது குறைந்த நோய் பரப்புப் பருவம்)
குறிப்பு :ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் நகரங்கள் மலேரியா அற்ற நகரங்கள் அல்ல. கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் மலேரியா பரவுவது மிகவும் அரிது.
மலேரியாவின் நோய் அறிகுறிகள்:
தொற்று நோய் வாய்ப்பட்ட 'அனாபிளஸ்' எனும் ஒரு வகை பெண் கொசுவினால், ஒரு மனிதனைக் கடித்து அவனது இரத்தத்திற்குள் மலேரியாவை உண்டுசெய்யும் ஒட்டுண்ணியைச் செலுத்தும்போது அவனுக்கு மலேரியா நோய் உண்டாகிறது. நான்கு வகை மலேரியா ஒட்டுண்ணிகள் மனிதனுக்குள் மலேரியாவைப் பரப்பவல்லது. (பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபரும், பி. விவாக்ஸ், பி.ஒவேல் மற்றும் பி. மலேரியா) பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபரும் உண்டாக்கும் தொற்று நோய் மிக வேகமாகப் பரவி உயிருக்கே ஊறு விளைவிக்கும். ஃபால்ஸ்பரும் மலேரியாவால் பீடிக்கப்படும் நோயாளிகளில் ஏறத்தாழ 1 %-2% மக்கள் மரணமடைகின்றனர்.
மலேரியாவின் நோய்அறிகுறிகள்:-காய்ச்சல், குளிர் எடுத்தல் , வியர்த்துக் கொட்டுதல், தசை வலிகள், தலைவலி, சில நேரங்களில் வாந்தியும் பேதியுமாதல் ஃபால்ஸிபரும் மலேரியா நோயாளிகளுக்குச் சிறு நீரகம் செயலிழத்தல், வலிப்பு, உணர்ச் சி இழந்த ஆழ்ந்தஉறக்க நிலை(கோமா) ஏற்படக்கூடும். பி. விவாக்ஸ், பி. ஒவேல் நோய்க் கிருமிகள் ஈரலில் (Liver) பல மாதங்கள், ஆண்டுகள் செயலற்று இருக்க வல்லவை. இதனால் பல மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நோய் அறிகுறிகள் மீண்டும் ஏற்படக்கூடும்.
கொசு கடிப்புக்கும், மலேரியா நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடையே பொதுவாக 7-முதல் 21 நாட்கள் இடைவெளி இருக்கும். ஆனால் முழுமையான, தேவையான அளவு மலேரியா தடுப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாத பயணிகளில் இந்தக் கால இடைவெளி இன்னும் சற்று அதிகமாக இருக்கும்.
மலேரியா உள்ள இடங்களில் பயணம் செய்யும் போதும், பயணம் செய்த பின்னரும் ஒரு பயணிக்குக் காய்ச்சல் வந்தால் அதற்குக் காரணம் மலேரியாதானா? என்று தெரிந்துகொள்ள உடனே மருத்துவ உதவியை நாடவேண்டும். மலேரியா ஒட்டுண்ணிகள் உள்ளனவா? என்று ஆராய்ந்து பார்க்க இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மலேரியாவின் தடுப்பு முறைகள்:
கொசுக்களைத் தடுக்கும் ஏற்பாடுகளையும், மலேரியாவைத் தடுக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்வதின் மூலம் பயணிகள் மலேரியாவிலிருந்து தங்களைச் காப்பற்றிக் கொள்ள இயலும்.
1. கொசுக்கடியைத் தவிர்த்தல்: மாலை, இரவு நேரங்களில் மறைப்பற்று இருந்து அனாபிளஸ் பெண் கொசுக்களின் கடிக்கு உட்படாத முயற்சிகளும், செயல்பாடுகளும் மலேரியா வருவதைத் தடை செய்ய வல்ல சிறந்த வழிபாடுகளாகும்.
கீழ்க்கண்ட முறைகள் சொசுக்கடியிலிருந்து நம்மைத் தடுக்கவல்லன:
இரவு நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் நீண்ட, கைகளுள்ள ஆடைகளையும், பெரிய முழுகாற் சட்டையையும் அணிதல் வேண்டும்.
வெளியே தென்படும் தோலின் மீது கொசுக்களை விரட்டியடிக்கவல்ல மருந்துகளை தடவிக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய அறை காற்று வறையருக்கப்பட்டதாக இல்லாதிருப்பினும் தக்க தடுப்பு வசதியற்றதாக இல்லாதிருப்பினும், உங்கள் படுக்கையைச் சுற்றிலும் கொசு வலையைப் பயன் படுத்த வேண்டும். கூடுதல் பாதுகாப்பிற்காக பெர்மித்ரின் எனும் பூச்சிக் கொல்லி மருந்தைக்கொசு வலையின்மீது பூசவேண்டும்.
பெர்மித்ரின் அல்லது அதுபோன்ற பூச்சிகொல்லி மருந்தை உங்கள் வீட்டின் பெரிய முகப்பு அறை அல்லது படுக்கும் அறையில் தெளிக்கலாம். அல்லது 'பைரித்ரம்' வெளிப்படுத்தும் கொசுவத்தியை ஏற்றி வைக்கலாம்.
2. மலேரியாதடுப்பு மருந்துகளைப் பயண்படுத்துதல்:
மலேரியா உள்ள பகுதிகளுக்குப் பயணம் செல்ல நேரிடும் பயணிகள் புறப்படுவதற்கு முன்னர் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். அத்தகையபயணிகளுக்கு மலேரியா தடுப்பு மருந்துகள் வழக்கமாகப் பரிந்துரைக்கப் படும். தேவையான பாதுகாப்பு அளவை உறுதிப்படுத்த பயணம் செய்யும் சரியான வழியைத் (route)தெரிந்து கொள்ளது மிகவும் இன்றியமையாததாகும்.
செம்மையான நோய்தடுப்புக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்து அளவையையும், உண்ண வேண்டிய காலத்தையும் கண்டிப்பாகப் பின்பற்றுவது மிகவும் இன்றியமையாததாகும்.
ஒவ்வொரு வாரமும் அதே குறிப்பிட்டகிழமைகளில் அல்லது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மருந்தை உட்கொள்ள வேண்டும்.
உணவுக்குப் பின்னர் மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டும்.
பயணம் மேற்கொள்வதற்கு 1-2 வாரங்களுக்கு முன்பும் பயணம் மேற்கொள்ளும் சமயத்திலும், மலேரியா பீடித்துள்ள பகுதிகளில் பயணம் செய்து முடித்த பின் 4 வாரங்கள் வரையிலும் பரிந்துரைக்கப்பட்ட அளவு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
வீடு திரும்பிய உடனே மாத்திரைகளை உட்கொள்வதை நிறுத்திவிடக்கூடாது. முழு அளவு மருந்துகளையும் உண்டு முடிப்பது இன்றியமையாததாகும்.
மலேரியா தடுப்பு மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள்: எல்லா மருந்துகளுமே பக்க விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. லேசான குமட்டல், அவ்வப்போது வாந்தி, தலைச்சுற்றல் முதலிய காரணங்களைக் கொண்டு மலேரியா தடுப்பு மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தி விடக்கூடாது. மலேரியாவின் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள தற்காலிக பக்கவிளைவுகளைப் பொறுத்துதான் தீர வேண்டும். எனினும் பக்க விளைவுகள் மிகவும் அதிகமாக ஏற்பட்டால், உடனடியாக மருத்துவர் உதவியை நாட வேண்டும். மலேரியா தடுப்பு மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தி விட வேண்டும்
1 comments:
பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மாபாளயம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளார்.இது கொடுஞ்செயல்,கண்டிக்கத்தக்கது.மருத்துவர் ரமேஷ் அவர்களை தாக்கியதாக குற்றம் சாற்றப்படும் முத்தையா அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.இவ் விஷயத்தில் ஒன்று பட்டு குரல் எழுப்பி போராடிவரும் பொது சுகதாரத்துறை சகோதர சகோதரிகள் அனைவரின் ஒற்றுமை பாராட்டப்பட வேண்டியஒன்று.
Post a Comment