சார். .. குளுக்கோஸ் போடுங்க....
தடதட வென்ற ஓசையோடு ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் அந்த புல்லட் வாகனம் வந்து நின்றது. வழக்கமாய் உலக விஷயங்களை கலந்தாய்வு செய்து கொண்டிருக்கும் பொதுமக்கள், தங்களது உடல் நலக் குறைவுகளை மறந்துவிட்டு வண்டியில் வந்திறங்கிய 22 வயது அண்ணன் புலிப் பாண்டியையே பார்த்தனர்,
புலிப் பாண்டி நேராக மருத்துவர் அறைக்குச் சென்றார். அவர் வரிசையில் எல்லாம் நிற்கவில்லை. நேராகச் சென்றார். வழிவிடுவதற்கு யாரும் தயாராக இல்லாத சூழ்நிலையிலும் தடுக்கவும் யாரும் தயாராக இல்லை. அவருக்குப் பின்னால் அவரது நண்பர் குலாமும் வந்து சேர்ந்தது. மருத்துவரைப் பார்த்ததும் அந்தக் கேள்வியைக் கேட்டார்.
சார், குளுக்கோஸ் போடுங்க...
சரி போட்டுடுவோம் இது மருத்துவர்,
குடுங்க சார், சீட்டை எனக்கு நேரமாச்சு, இது புலிப் பாண்டி
நோயாளியக் காட்டுங்க . ஓ.பி, சீட்டு பதிவு பண்ணிட்டு வாங்க, மீண்டும் மருத்துவர்.
டாக்டர் அவசரம் புரியாம பேசாதீங்க, எனக்கு நெறைய வேலை இருக்கு.
மருத்துவர் சற்று எரிச்சல் அடைந்தார்.
அப்ப வேலையை முடிச்சிட்டு வாங்க,
வரும்போது நோயாளியக் கூட்டிட்டு வாங்க்..........
புலிப் பாண்டி அதற்குமேல் கோபம் அடைந்தார்.
சார், எனக்குத்தான் குளுக்கோஸ் போடனும்..
நல்லத்தான இருக்கீங்க.....
என்ன டாக்டர், நக்கலா... நல்லாயிருக்கரவங்க ஆஸ்பத்திரிக்கு வருவாங்க.. எனக்குத்தான் உடம்பு சரியில்லை...
அப்படியா உங்களுக்கு என்ன?
பக்கத்தில் இருக்கும் பாதுகாவலர் [உள்ளூர் பாஷையில் அல்லக்கை] அதுதான் அண்ணன் உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டே இருக்காருல்ல.. மொதல்ல குளுக்கோஸ் போடு சாரு...
மருத்துவருக்கு ஓரளவு நிலைமை புரிந்து விட்டது. இப்போதைய தேவை ஒரு குளுக்கோஸ் அதற்காக கதை அளக்கத் தொடங்கிவிட்டனர்.
உடம்பு முடியல அப்படின்னா.. உங்களுக்கு என்ன கஷ்டம் அதை சொல்லுங்க...
டாகடர், சீக்கிரம் அனுப்புங்க எனக்கு டைம் ஆச்சு...
குளுக்கோஸ் எல்லாம் போடமுடியாதுங்க.. அது ரொம்ப முடியாதவங்களுக்கு போடறது, நீங்க நல்லாத்தானே இருக்கீங்க.. இது மருத்துவர்.
டாக்டர் அண்ணன் ரொம்ப சோர்வா இருக்காஅர், அதுக்கு ஒரு குளுக்கோஸ் போடுங்க.. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், நாங்க முடியாமத்தான் வந்திருக்கோம் சீக்கிரம் போடுங்க...
மருத்துவரின் மூளை வேகமாக வேலை செய்கிறது, [பின்னே.. அவருக்கு தடயவியல் மருத்துவத்திலும் சேர்த்துத்தானே படிக்கச் சொல்லி பயிர்ச்சி அளித்து அனுப்பி இருக்கிறார்கள்]
இந்தாங்க.. போய் ரத்த டெஸ்ட் எடுத்திட்டு வாங்க..
டாக்டர். அந்த டெஸ்ட் நான் மூணு மாசத்துக்கு ஒருமுறை பண்ணிட்டேதான் இருக்கிறேன். இப்ப அவசரத்துக்கு ப் பருங்கள்
அது எச்,ஐ,வி, டெஸ்ட் டுப்பா. இப்ப செய்யறது சர்க்கரை இருக்கான்னு பார்க்குற டெஸ்ட்.
டாக்டர், உங்களுக்கு மூளை கீளை அவிஞ்சு போச்சா... என் வயசுக்கு சர்க்கரை எல்லாம் எப்படி வரும். நீங்க பாட்டுக்கு ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்லரீங்க.
அதுக்குத்தான் இந்த பரிசோதனையே.. உங்களோட சோர்வுக்கு அது கூட காரணமாய் இருக்கலாம்.
டாக்டர் எனக்கு வேலை அதிகம், அதுனாலதான் சோர்வு, எனக்கு ஒரு குளுக்கோஸ் போடுங்க.
அப்படியெல்லாம் போடமுடியாது. நீங்க பரிசோதனை செய்து வந்தால் மட்டுமே அதனடிப்படையில் குளுக்கோஸ் போடமுடியும். மருத்துவர் திட்டவட்டமாக சொல்லிவிட்டு மற்ற நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
புலிப்பாண்டி நேராக ரத்த ப்ரிசோதனைக்குப் போனார். அங்கு பணிபுரியும் ஆய்வகர் பெரிய ஊசியுடன்[அது சராசரியாக பயன்படுத்தப் படும் சாதாரண ஊசிதான்] புலிப் பாண்டியை நெருங்கினர்ர். ஊசியைப்பார்த்த புலிப் பாண்டி நாலைக்கு செய்துக் கொள்கிறேன் என்று சொல்லி தன் அவசர வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.
மறுநாள் காலை
மருத்துவர் வரும் நேரம்
சுகாதார நிலையத்தின் முன் ஒரே கூட்டம், அனைவரும் புலிப் பாண்டியின் ஆட்கள். கோபத்தில் தங்களுக்குள் காச்மூச் என்று கத்திக் கொண்டிருந்தனர்.
எல்லாம் உங்களால்தான் டாக்டர். புலிப் பாண்டிக்கு இப்படி ஆகிவிட்டது. வழக்கமாய் ரணகளமாக மாறுமே.. இவ்வளவு அமைதியாக பேசுகிறார்களே..
மருத்துவர் குழப்பத்துடன் உள்ளே சென்றார்.
உள்ளே புலிப் பாண்டி தலையில் பெரிய காயத்துடன் உட்கார்ந்திருந்தார். அந்த ஊரில் கபடிபோட்டி நடத்தியிருக்கிறார்கள். அதற்காகத்தான் புலிப்பாண்டி குளுக்கோஸ் கேட்டிருக்கிறார். குளுக்கோஸ் போடாமல் ஆடியதில் அவருக்கு மண்டை உடைந்து போனது. இன்று நிஜமாக நோயாளியாக நின்று கொண்டிருந்தார்.
பின்குறிப்பு:-
வழக்கம்போல் பச்சை நிறத்தில் இருப்பவை மருத்துவர் பேசுவது.
சிவப்பு நிறத்தில் இருப்பது பிறதிவாதி பேசுவது
13 comments:
இப்படி செய்துட்டீங்களே மருத்துவர் ஐயா! நீங்க போட்டு இருந்தீங்கன்னா, அண்ணன் நின்னு வலுவா ஆடியிருப்பாரில்ல...இஃகிஃகி!
நாளைக்கு
பிரதிவாதி
வாங்க பழமை பேசி ஐயா,
மேட்டர புரிஞ்சிதில்ல உங்களுக்கு... நன்றி
பரவாயில்லையே!!
ஏண்டா தொல்லைன்னு எல்லோரும் போட்டு விட்டுருப்பாங்க!
GH லெ நம்ம போடலைன்னா வேறு யாராவது கொஞ்ச நேரத்தில் பொட்டு விட்டுருவாங்க!!
தேவா>>>
ஆமா.. தேவா சார்
மிகவும் இயலாதவர்கள் போல் வந்து .... தங்களுக்கு குளுக்கோஸ் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அழுது அடம்பிடிப்பவர்களுக்கு என்ன வைத்தியம் செய்தாலும் சரிவராது......
வேறுவழியில்லாமல் ஒரு குளுக்கோஸ் போட அவர்களாகவே எழுந்து வீடுசென்று விடுகிறார்கள்
எண்ணம் போல் வாழ்வென்பது இதுதானோ??
SUREஷ்,மார்பகப் புற்று நோய் பற்றிய ஆக்கம் முழுதும் வாசித்தேன்.மனதில் ஆழமாகப் பதித்தும் கொண்டேன்.பிரயோசனமான பதிவு.நன்றி சுரேஷ்.
வாருங்கள் தங்கராசா ஜீவராஜ்.
//குளுக்கோஸ் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அழுது அடம்பிடிப்பவர்களுக்கு என்ன வைத்தியம் செய்தாலும் சரிவராது......//
ஆமாம் ஐயா, உடல்நிலை சரியில்லாதவர்கள் பெரும்பாலும் அடம் பிடிப்பதில்லை.
ஊக்கத்திற்கு நன்றி ஹேமா, அவர்களே...........
/
பழமைபேசி said...
இப்படி செய்துட்டீங்களே மருத்துவர் ஐயா! நீங்க போட்டு இருந்தீங்கன்னா, அண்ணன் நின்னு வலுவா ஆடியிருப்பாரில்ல...
/
:))))))))))
ROTFL
//வழக்கமாய் ரணகளமாக மாறுமே.. இவ்வளவு அமைதியாக பேசுகிறார்களே..//
அப்ப அடிக்கடி நடந்திருக்கு போல...
வாங்க மங்களூர் சிவா,
நான் ஆதவன் அவர்களே.
// நான் ஆதவன் said...
//வழக்கமாய் ரணகளமாக மாறுமே.. இவ்வளவு அமைதியாக பேசுகிறார்களே..//
அப்ப அடிக்கடி நடந்திருக்கு போல...//
அதுதான் வாழ்க்கையே ஐயா.......
hello doctor
nice story
sikiram enakum glucose podunga dr sir
nangalum vilayada poganum
போங்க டாக்டர் , நீங்க மோசம்
முதல்லே நம்ம அஞ்சாநெஞ்சனுக்கு
குளுக்கோஸ் போட்டுருந்தீங்கன்னா இவ்வளோ வந்திருக்குமா என்ன
Post a Comment