Friday, February 20, 2009

அரசு மருத்துவமனையில் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

அரசு மருத்துவமனையில் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்.
முதலில் மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளிடம் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகளும், அதற்கு பின்னர் நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகளும்

நிர்வாகம் நோயாளிகளிடம் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகள்

  1. தனியார் மருத்துவமனைகளில் டோக்கன் வாங்கி பல மணி நேரம் காத்திருந்து மருத்துவரை பார்க்கிறீர்க்ளே. அரசு மருத்துவமனையில் மட்டும் ஏன் மருத்துவரின் நாற்காலியை சுற்றி 10 பேர் நின்று அனைவரும் ஒரே நேரத்தில் மருத்துவரின் முகத்திற்கு எதிராக உங்கள் சீட்டை நீட்டுகிறீர்கள்.

  2. உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துள்ளீர்கள். மருத்துவமனை என்றால் மட்டும் ஏன் கண்ட இடங்களில் எச்சில் துப்ப வேண்டும். படியில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு மீதி உணவை அங்கேயே போட வேண்டும்.

  3. பலமாத கால்புண்ணிற்கு இரவு 11 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து உள்நோயாளியாக சேர்ந்து விட்டு அந்த சமயம் இருக்கும் ஒரே பணி மருத்துவர் ஹார்ட் அட்டாக் நோயாளிகளையும், விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் பார்க்கும் நேரம் கால் புண்ணிற்கு மருந்து போடவில்லை என்று கூப்பாடு போடுவது நியாயமா.

  4. உடல் நிலை தேறிய பின்னர்தான் அறுவை சிகிச்சை என்று தனியார் மருத்துவமனை கூறினால் ஒழுங்காக பழங்களை / சத்து மாத்திரைகளை சாப்பிட்டு ஒரு மாதம் கழித்து வருகிறீர்கள். அதே போல் அரசு மருத்துவமனையில் கூறினால் மட்டும் ஏன் எம்.எல்.ஏவிடம் சிபாரிசு வாங்குகிறீர்கள்.

  5. மருத்துவர் சோதித்து பார்த்து ஒன்றும் இல்லை என்று கூறியபின்னர் இலவசம் என்ற ஒரே காரணத்திற்காக ஸ்கேன் / எக்ஸ்ரே இலவசமாக எடுக்க வேண்டும் என்று அடம் பிடிப்பது நியாயமா. அப்படி உங்களுக்கு தேவையில்லாமல் எடுக்கப்படுவதால் தேவைப்படும் மற்றொருவருக்கு எடுக்க முடியாமல ஆகிறது என்று உணர மாட்டீர்களா

நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகள்
  1. புற நோயாளி பிரிவின் வேலை நேரம் காலை 7:30 முதல் 9:30 என்றால் 7:15க்கு வந்து அனைத்து முன்னேற்பாடுகளை கவனித்து விட்டு 7:30க்கு முதல் நோயாளியை பரிசோதித்தால் என்ன

  2. மருந்து பொருட்கள் தீரும் முன்னரே அதை வாங்கி வைக்கலாமே. ஏன் தீரும் வரை காத்திருக்க வேண்டும்

  3. படுக்கை விரிப்புகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்றுகிறார்கள்.

  4. சீட்டு எழுதுபவர் ஏன் ரசீது அளிக்காமல் 1 ரூபாய் அல்லது 2 ரூபாய் வாங்குகிறார். அதை தடுக்க முடியாதா.

  5. ஆம்புலன்ஸ் கட்டணம் கிலோமீட்டருக்கு இத்தனை ரூபாய் என்று பெரிதாக போர்டு மாட்டியிருந்தும் டிரைவர் 2000, 3000 என்று ஏன் பேரம் பேசுகிறார்

15 comments:

MSATHIA February 20, 2009 at 6:25 AM  

நச். ஒரு அரசு மருத்துவரே இதை எழுதியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

புருனோ Bruno February 20, 2009 at 6:31 AM  

முதல் ஐந்து கேள்விகளும் உங்களுக்காக

✨முருகு தமிழ் அறிவன்✨ February 20, 2009 at 6:50 AM  

நல்ல கேள்விகள்.
ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்;மருத்துவமனையும் நிர்வாகமும் அரசு மருத்துவ மனைகளில் முதலில் சீர்பட்டால் மக்கள் ரெசிப்ரொகேட் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?

புருனோ Bruno February 20, 2009 at 6:55 AM  

//நல்ல கேள்விகள்.
ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்;மருத்துவமனையும் நிர்வாகமும் அரசு மருத்துவ மனைகளில் முதலில் சீர்பட்டால் மக்கள் ரெசிப்ரொகேட் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? //

கண்டிப்பாக செய்ய மாட்டார்கள்.

அரசு மருத்துவமனையில் பொது மக்கள் செய்யும் அட்டுழியங்களுக்கு நிர்வாகத்தை குற்றம் சுமத்துவது தவறு.

எவ்வளவு சீராக இருக்கும் மருத்துவமனைகளையும் கெடுத்து குட்டிசுவராக்குவது பொது மக்களின் சுயநலமே

கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக நீங்களே விடை அளியுங்கள். உண்மை உங்களுக்கு புரியும்.

கே.பழனிசாமி, அன்னூர் February 20, 2009 at 7:05 AM  

அரசு மருத்துவமனையில் பொது மக்கள் செய்யும் அட்டுழியங்களுக்கு நிர்வாகத்தை குற்றம் சுமத்துவது தவறு.

எவ்வளவு சீராக இருக்கும் மருத்துவமனைகளையும் கெடுத்து குட்டிசுவராக்குவது பொது மக்களின் சுயநலமே

புருனோ Bruno February 20, 2009 at 7:15 AM  

அரசு மருத்துவமனைகளில் இருக்கும் சில பிரச்சனைகளுக்கு காரணம் பொதுமக்களே.

அது தீர பொதுமக்களின் மனமாற்றம் தான் வழி

அதே போல் வேறு சில பிரச்சனைகள் தீர நிர்வாக கட்டமைப்பு மேப்படுத்தப்பட வேண்டும்.

புருனோ Bruno February 20, 2009 at 7:16 AM  

இரண்டும் வெவ்வேறு வகையான பிரச்சனைகள் என்ற புரிதல் முக்கியம்

உதாரணமாக ஆம்புலண்ஸ் பிரச்சனைக்கு பொதுமக்களை குற்றம் கூறுவது எவ்வளவு அபத்தமோ அதே போல் எச்சில் துப்புவதற்கு மருத்துவமனையை குற்றம் கூறுவதும் அபத்தம்தான்

Anonymous,  February 20, 2009 at 8:29 AM  

நீங்க நல்லவரா..........? கெட்டவரா.....?
(நாயகன் ஸ்டைலில் படிக்கவும்)-:)+

Indian February 24, 2009 at 4:02 AM  

//எவ்வளவு சீராக இருக்கும் மருத்துவமனைகளையும் கெடுத்து குட்டிசுவராக்குவது பொது மக்களின் சுயநலமே
//

It is their ignorance. Ignorance that they don't have a stake/responsibility in keeping the hospital clean.

Would it make the public responsible if a nominal charge of (say) Rs. 2 is charged and used for cleaning the hospital premises?

How about this treatment? Spit and get beaten up: Sanitation drive in Kolkata

வான்முகிலன் February 24, 2009 at 5:48 AM  

வணக்கம்.

1. மருத்துவர் அரசு மருத்துவமனைகளில் இருப்பது சில மணித்துளிகள் மட்டுமே என்கிற போது நோயாளிகள் மருத்துவர் வெளியில் சென்றுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரே நேரத்தில் சீட்டை நீட்டுகிறார்கள்.

2. எதற்காக இலவசமாகக் கொடுக்க வேண்டும்? இலவசம் என்றால் என்ன என்பதைக் கூட அவர்களுக்கு கட்டணத்துடன் எடுத்துக் கூறினால்தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை மருத்துவர்களோ அல்லது அதிகாரிகளோ ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?

3. தனியார் மருத்துவமனை என்ற ஒன்று ஏன் இருக்க வேண்டும்? அனைத்து மருத்துவ மனைகளையும் அரசு மருத்துவமனைகளாக மாற்றிவிடலாமே.

4. கிராமங்களில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நன்றாக இல்லாவிட்டாலும் சுமாராகச் செயல்பட்டாலே போதும் நிர்வாகம் நோயாளிகளிடம் கேட்க விரும்பும் கேள்விகளுக்கும் நோயாளிகள் மருத்துவரிடம் கேட்க விரும்பும் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.

புருனோ Bruno February 24, 2009 at 6:29 AM  

//Ignorance that they don't have a stake/responsibility in keeping the hospital clean.//

தெளிவாக கூறிவிட்டீர்கள். அது அவர்களின் மருத்துவமனை என்ற எண்ணம் அவர்களுக்கு வருவதில்லை

//Would it make the public responsible if a nominal charge of (say) Rs. 2 is charged and used for cleaning the hospital premises?//
கட்டாயம் பலன் இருக்கும்

புருனோ Bruno February 24, 2009 at 6:30 AM  

//1. மருத்துவர் அரசு மருத்துவமனைகளில் இருப்பது சில மணித்துளிகள் மட்டுமே என்கிற போது நோயாளிகள் மருத்துவர் வெளியில் சென்றுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரே நேரத்தில் சீட்டை நீட்டுகிறார்கள். //

இதற்கு பெயர் சப்பை கட்டு

புருனோ Bruno February 24, 2009 at 6:31 AM  

//3. தனியார் மருத்துவமனை என்ற ஒன்று ஏன் இருக்க வேண்டும்? அனைத்து மருத்துவ மனைகளையும் அரசு மருத்துவமனைகளாக மாற்றிவிடலாமே. //

கண்டிப்பாக செய்ய வேண்டும்.

புருனோ Bruno February 24, 2009 at 6:32 AM  

//4. கிராமங்களில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நன்றாக இல்லாவிட்டாலும் சுமாராகச் செயல்பட்டாலே போதும் நிர்வாகம் நோயாளிகளிடம் கேட்க விரும்பும் கேள்விகளுக்கும் நோயாளிகள் மருத்துவரிடம் கேட்க விரும்பும் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.//

கிராமங்களில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நன்றாகத்தான் செயல்படுகின்றன

அப்படி செயல்படுவதால் தான் நிர்வாகம் நோயாளியிடம் கேள்வி கேட்கிறது

அன்பு,  January 6, 2011 at 10:42 AM  

நானும் ஒரு அரசு மருத்துவர் தான்.என் மனதில் இருக்கும் கேள்விகள் 10 ஐயும் கேட்டுள்ளீர்கள்.மகிழ்ச்சி.
ஒரு அரசு மருத்துவர் சுமாராக எத்தனை நோயாளிகளைப்பார்க்கவேண்டும்? தனது பணி நேரத்தில்.
ஒரு அரசு மருத்துவர் சில நேரங்களில் 200, 300 ஏன் 500 நோயாளிகளைக்கூட பார்க்க நேரிடுகிறதே இது எந்த விதத்தில் நியாயம்?மாத்தில் 8முதல் 10 வரை 24 மணி நேர பணி செய்ய வேண்டி உள்ளதே இது போல் நிலமை உலகில் எங்காவது இருக்கிறதா?இது எல்லாம் நிர்வாகம் சம்மந்தப்பட்ட கேள்விகள்தான்.இதற்கு பதில் சொல்ல யார் இருக்கிறார்கள்?

அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP