பிளவு பட்ட உதடும் தமிழகமும்
பிளவுபட்ட உதட்டுடன் பிறந்த குழந்தையின் உணர்வுகளை வெளிப்படுத்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர்விருது வழங்கிப்பாராட்டி வருகின்றோம். இந்த நேரத்தில் தமிழகத்தில் நடைப் பெற்றுவரும் சப்தமில்லா சாதனை ஒன்றை பகிர்ந்துகொள்ளவிளைகின்றேன்.
தமிழ் அரசின் சார்பாக பிளவுபட்ட உதடு மற்றும் பிளவுபட்ட அன்னத்துடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளிலும் இலவசமாக செய்யப் பட்டுவருகின்றது. மருத்துவ கல்லூரில் அறுவைசிகிச்சை செய்வது என்பது எல்லோருக்கும் ஓரளவு தெரிந்திருக்கும். அதே நேரத்தில் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்புப் பணி தொடச்சியாக நடைப் பெற்றுவந்துகொண்டு இருகிறது.
வாராந்திர ஆய்வுக் கூடத்தில் அந்த வாரத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை (தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் ஆன மொத்த குழந்தைகள் ) , அதில் பிளவுப்பட்ட உதடு மற்றும் அன்னத்துடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக வாராந்திர அறிக்கையாகப் பெறப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அந்த ஊருக்கு புதிதாக வெளியூரிலிருந்து வந்த குழந்தைகளும் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது. அனைத்து சிக்கலான குழந்தைகளும் மருத்துவகல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப் படுகிறது.
தற்போது 15வயதுக்குட்ட குழந்தைகளில் பிளவுபட்ட உதடு மற்றும் அன்னத்துடன் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் பிளஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம். (அப்படி ஏதாவது குழந்தை அறுவை சிகிச்சை செய்யப்படாமல் இருந்தால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகினால் அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்வார்கள்).
சில தனியார் மருத்துவ மனைகளும் இந்த சேவையினை இலவசமாக தமிழகத்தில் செய்து வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்க செய்தியே ஆகும்.
2 comments:
நிச்சயமாக மிக நல்ல ஒரு சேவை மக்களுக்காக!
///இந்த சேவையினை இலவசமாக தமிழகத்தில் செய்து வருகின்றன //
நல்லதொரு சேவை
///பிளவுபட்ட உதட்டுடன் பிறந்த குழந்தையின் உணர்வுகளை வெளிப்படுத்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர்விருது ///
வரவேற்கத்தக்க விடையம்...
Post a Comment