ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்
இவர்கள் இருவரும் காலை 8 முதல் மாலை 5 வரை பணியில் இருக்க வேண்டும்.
அதன் பிறகு ஒருவர் மாலை 5 மணி முதல் அடுத்த நாள் காலை 8 வரை பணியில் இருந்து விட்டு தொடர்ந்து மாலை 8 மணி வரை களப்பணி செய்ய வேண்டும்
அதாவது
மருத்துவர் 1, மருத்துவர் 2 என்று எடுத்துக்கொண்டால்
மருத்துவர் 1 பணி நேரம் - வாரத்திற்கு 99 மணி நேரம்
- திங்கள் காலை 8 முதல் செவ்வாய் மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
- புதன் காலை 8 முதல் வியாழன் மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
- வெள்ளி காலை 8 முதல் சனி மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
மருத்துவர் 1 பணியில் இல்லாத நேரம் - வாரத்திற்கு - 69 மணி நேரம்
- செவ்வாய் மாலை 5 முதல் புதன் காலை 8 வரை - 15 மணி நேரம்
- வியாழன் மாலை 5 முதல் வெள்ளி காலை 8 வரை - 15 மணி நேரம்
- சனி மாலை 5 முதல் திங்கள் காலை 8 வரை - 39 மணி நேரம்
மருத்துவர் 2 பணி நேரம் - வாரத்திற்கு 123 மணி நேரம்
- செவ்வாய் காலை 8 முதல் புதன் மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
- வியாழன் காலை 8 முதல் வெள்ளி மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
- சனி காலை 8 முதல் திங்கள் மாலை 5 வரை - தொடர்ந்து 57 மணி நேரம்
மருத்துவர் 2 பணியில் இல்லாத நேரம் - வாரத்திற்கு - 45 மணி நேரம்
- திங்கள் மாலை 5 முதல் செவ்வாய் காலை 8 வரை - 15 மணி நேரம்
- புதன் மாலை 5 முதல் வியாழன் காலை 8 வரை - 15 மணி நேரம்
- வெள்ளி மாலை 5 முதல் சனி காலை 8 வரை - 15 மணி நேரம்
இப்படி பணி செய்ய சொல்லிவிட்டு, மருத்துவமனைக்கு மருத்துவர்கள் வருவதில்லை என்று குற்றம் சொல்ல வேண்டியது தான் !!
பிற மாநிலங்களை ஒப்பிட்டால்
Name of Institutions | Duty timings |
Kerala | 9 am to 1 pm / 2 to 3 pm |
Karnataka | 9 am to 1 pm/ 2 to 4.30 pm |
Central institutions | Working hours same as for other central govt. offices |
Tamilnadu | 8 am to 5 pm (5 pm to 8 am call duty on alternate day) |
அதே நேரம் பிற மாநிலங்களின் ஊதியம்
Institution | Entry | Pay scale & Promotions |
1 | 2 | 3 |
Andhra | Asst Surg 11250 | Deputy Civil surg. 14300 in 8 years time bound | Civil surg 17035 in 16 years time bound | JD 18355 vacancy based |
Karnataka | GDMO 14050 | Sr MO/ Specialist 15200 in 6 years time bound | (Dy CMO)/ Sr Specialist) 18150 in 13 years time bound | 23200 JD |
Kerala | 11910-19350 (Asst. Surg) | 16650- 23200 (civil surgeon) in 8 years time bound | 23200 – 31150 (DD) in 16 years time bound | 25400 – 33100 Addl Director Vacancy based |
Tamilnadu | Asst Surg 8000 | Sr. Asst. surg. 9100 in average 17 years | Civil surg. 10000 in average 20 yr | Sr civil surg. 12000 in average 22 yr |
1 comments:
நெசம்மாதான் சொல்லுரீங்களா சார்?
Post a Comment