இதை இளநீரில் கலந்து குடி,அதை மோரில் கலந்து குடி.
அது ஒரு வியாழக் கிழமை, பள்ளிக் குழந்தைக்களுக்கான பரிசோதனைக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து அணியினர் தயாராகிக் கொண்டொருந்தனர். ஒவ்வொரு வியாழன் அன்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஒரு மருத்துவக் குழு அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பள்ளி ஒன்றில் மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்வார்கள். இதற்கான முன் பயணத்திட்டம் கல்வியாண்டு துவக்கத்திலெயே தயாரிக்கப் பட்டுவிடும். அதன் நகல் அந்தப் பள்ளிக்குமுதலியெயே கிடைத்துவிடும். ஆண்டு விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து வியாழன்களிலும் இது நடந்து வரும். முதல் நாளே குழுவினர் சென்று குழந்தைகளின் உயரம், எடை ஆகியவற்றை குறித்து வைத்துவிட்டனர். அடுத்த நாளில் சென்று குழந்தைகளுக்கான பரிசோதனைக்காக குழுவினர் சென்று கொண்டிருந்தனர். பரிசோதனை முடித்த உடன் குழந்தைகளுக்கான சுகாதாரக் கள்வியும் வழங்கப் படும். வளரிளம் பெண்களுக்கான சுகாதாரக் கல்வியும் வழங்கப் படும்.
அன்றைய திட்டப்படி செல்லவேண்டிய கிராமத்திற்கு பேருந்து வசதி அவ்வளவாகக் கிடையாது. எட்டுமணிக்கு செல்லும் பேருந்திலேயே கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர் சென்று விட்டனர். மருத்துவ அலுவலர் புறநோயாளிகள் பிரிவினைப் பார்த்துவிட்டு பள்ளிக் குழந்தைகளை பார்ப்பதற்காக கிளம்பினார். அந்த கிராமத்திற்குச் செல்லும் பிரிவில் இறங்கி பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கிருந்த மருந்துக் கடை உரிமையாளர், சார். பஸ் வர இன்னும் பத்து நிமிடம் ஆகும். அதுவரை கடையில் அமருங்கள் என்று அழைத்தார். மருத்துவரும் உள்ளே சென்று அமர்ந்தார். தவிர அந்தப் பகுதிக்கு அது ஒன்றுதான் மருந்துக் கடை.
வழக்கம்போல் தலைவலி மருந்து, ஹார்லிக்ஸ் வகை பானங்கள், மாட்டுக்கான மருந்துகள் வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் வந்தார். ஒரு பெரிய காகிதத்தை எடுத்தார். அதில் மெட்ரனிடஜோல், அமாக்ஸிசிலின், சிப்ரோபிளாக்ஸின், பாரசட்டமால் மாத்திரைகள் கணிசமான அளவுக்கு குறிப்பிடப் பட்டிருந்தது. வந்தவரும் வாங்கிச் சென்றுவிட்டார்.
யாருக்குங்க இவ்ளோ மாத்திரை.
பக்கத்தில் சாமியார் ஒருத்தர் இருக்கார். அவருக்குத்தான்.
அவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறார். தீராத வியாதியும் அவரிடம் வந்து மந்தரித்துச் சென்றால் உடனே சரியாகும் என்று சொல்வார்கள். பக்கத்து மாவட்டம், மாநிலங்களில் இருந்தாலெல்லாம் மக்கள் வருவார்களாம்.
பாவம் அவருக்கு பற்பல வியாதிகள் இருக்கும்போல மருத்துவர் வருத்தப் பட்டுக் கொண்டார்.
கடைக்காரர் சொன்னார். மருந்துகள் எல்லாம் அவருக்குத்தானுங்க.. ஆனால் அவருக்கு இல்லைங்க.....
???
இந்த மருந்தையெல்லாம் பொடிபண்ணி விபூதி(திருநீறு)யில் கல்ந்து வைச்சிருப்பாருங்க. அதை எல்லாம் பொட்டலம் போட்டு பூஜையில் வைத்திருப்பார். மக்கள் போய் கேட்டால் கொஞ்சம் நேரம் சம்பிரதாயங்கள் முடித்துவிட்டு விபூதி பொட்டலங்களைக் கொடுத்து இளநீர், பால், மோர் இப்படி எதிலாவது கலந்து கொடுக்க சொல்லுவார். இன்று அமாவாசை. பூசைக்கு நிறையப் பேர் வருவாங்க. அதற்குக்குத்தான் இவ்வளவும்..
GRRrrrrrr,
மருத்துவருக்கு மயக்கம் வராத குறைதான்.
9 comments:
:-))))))))))) awesome :-)))))))
இப்படி கூட நடக்குதா? இனி கோவில் பக்கம் போனால் ,,,,ம்ம்ம்ம்
கிழிஞ்சுது போ!!!, ஆனால் அந்த சாமியாரை மருந்துகளை திறம்பட உபயோகிப்பதற்காக பாராட்டலாம் என்றால், மக்களிடம் நம்பிக்கை மோசடி செய்பவருக்கா உங்களின் பாராட்டு என சமூகம் என்னை திட்டுமே? நான் என்ன செய்ய?
ஆனாலும் அந்த சாமியாரின் செயல் சரியான முறை அல்ல. காரணம் சில வியாதிகள் இந்த எளிய மருந்துகளுக்கு கட்டுபடமால் அந்த நோயாளியை இன்னும் நோய் முற்ற வாய்ப்பகிவிடும். பிறகு விலையற்ற உயிரானது உடலற்றதாகிவிடும்.
with care and love,
Muhammad Ismail .H, PHD,
கிழிஞ்சுது போ!!!, ஆனால் அந்த சாமியாரை மருந்துகளை திறம்பட உபயோகிப்பதற்காக பாராட்டலாம் என்றால், மக்களிடம் நம்பிக்கை மோசடி செய்பவருக்கா உங்களின் பாராட்டு என சமூகம் என்னை திட்டுமே? நான் என்ன செய்ய?
ஆனாலும் அந்த சாமியாரின் செயல் சரியான முறை அல்ல. காரணம் சில வியாதிகள் இந்த எளிய மருந்துகளுக்கு கட்டுபடமால் அந்த நோயாளியை இன்னும் நோய் முற்ற வாய்ப்பகிவிடும். பிறகு விலையற்ற உயிரானது உடலற்றதாகிவிடும்.
with care and love,
Muhammad Ismail .H, PHD,
வாங்க யாத்ரீகன்...
எல்லாம் அவன் செயல்
//kirukkupaiyannaan said...
இப்படி கூட நடக்குதா? இனி கோவில் பக்கம் போனால் ,,,,ம்ம்ம்ம்//
அது கோயில் அல்ல தல.... மந்தரித்து விடுபவரின் வீடு, குடில், ஆசிரமம் இப்படி ஏதாவது சொல்லலாம்
// Muhammad Ismail .H, PHD, said...
கிழிஞ்சுது போ!!!, ஆனால் அந்த சாமியாரை மருந்துகளை திறம்பட உபயோகிப்பதற்காக பாராட்டலாம் என்றால், //
வாங்க சார், பெரும்பாலான் வியாதிகள் மிகவும் எளிமையானவை...
சில மருந்துகளை வைத்தே குணப்படுத்தலாம்....
அதைத்தான் பல போலி மருத்துவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். மருந்தினை சரியான அளவில் கொடுக்க வேண்டும்.. அதிகமாகக் கொடுத்தால் டாக்ஸிஸிட்டி என்று சொல்லக் கூடிய விஷத்தன்மை வருவதற்கான வாய்ப்புகளும் குறைவாகக் கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்பட்டு நோய்கிருமிகளின் மிக வேகமான வளர்ச்சிக்கு வழிவகுத்துவிடும்.
இதுபோன்ற போலிகள் அவ்வப்போது குணப்படுத்தலாம். ஆனால் பின்விளைவுகள்... ?
எனவே திறம்பட மருந்துகளை உபயோகப் படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை....
திறமையாக ஏமாற்றுகிறார் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்
இதை யூனியர் விகடன்;நக்கீரன் கவனத்துக்குக் கொண்டுவாருங்கள்.
இவர் சரியான வகையில் இதை செய்கிறாரா? ஏமாற்றுகிறார்.
இது நிறுத்தப்படவேண்டும்.
உயிர்கள் காக்கப் படவேண்டும்.
:-)))))
இப்படி கூட நடக்குதா?
Post a Comment