இவர் எங்க ஊரு அம்மா
அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் ஊசிமருந்தினை எடுத்துக் கொண்டு திரும்பும்மா. என்றார். கைக்குழந்தையுடன் வந்த பெண்மணியோ என் குழந்தைக்குப் போடுங்க ..
செவிலியர் சற்று அதிர்ச்சியுடன் இது பவரான மருந்துமா. என்றார்.
ஆமாங்க என் குழந்தைக்கு ரொம்ப சளி. அதுனால டாக்டர்கிட்ட நாந்தான் கேட்டு வாங்கிட்டு வந்தேன். இது தாயார்
சற்று குழப்பத்துடன் இல்லையே இத குழந்தைக்ளுக்கு எழுதியிருக்க மாட்டாங்களே. இல்லைம்மா. இது உனக்குத்தான்
ஏம்மா.பெத்தவ இவ்வளவுதூரம் சொல்றேன்.. ஊசியப் போடுமா. சின்னப் புள்ளைக்கு ஊசி போடக் கூட மாட்டியா..
செவிலியருக்கு ஒரு சந்தேகம்தான். வழக்கமாக இந்த மருந்தினைக் குழந்தைக்கு போட மாட்டார்களே. எதற்கும் மருத்துவரிடம் கேட்டுவிட்டு வந்து விடுவோம்.
மருத்துவரின் அறைக்கு வந்து கேட்டார். இல்லையே ஸிஸ்டர். இந்த மருந்த எப்பவுமே நான் குழந்தைக்கு எழுதுனது இல்லையே.. நல்ல வேளை செஞ்சீங்க.
செவிலியர் அந்த தாயையும் குழந்தையும் ஊசிபோடும் அறையிலிருந்து
அழைத்துவந்துவிட்டார். அந்தக் குழந்தையையும் தாயையும் பார்த்த மருத்துவர் ஏம்மா உன் குழந்தைக்குத்தான் ஊசி தேவையில்லை. மாத்திரையும் திரவ மருந்தும் போதும்ன்னு சொன்னேனே. அப்புறம் எந்த சீட்டைம்மா கொடுத்த.
அந்தத்தாய் தலை குனிந்து கொண்டே சொன்னார்.
நீங்க ஊசி வேண்டாம்னு சொன்னீங்க. ஆனால் குழந்தைக்கு சளி நெறயா இருந்தது அதுனால என்க்குக் கொடுத்த ஊசி சீட்டக் கொடுத்து குழந்தைக்குப் போடச் சொன்னேன்.
4 comments:
அறியாமையின் விளைவென்று தான் எண்ணத் தோன்றுகிறது.
அறியாமை. செவிலியர் பாராட்டுக்குரியவர்
பிள்ளை பாசம்
மருந்துச் சீட்டில் பேரேழுதுகிற வழக்கம் இதனால்தான் வந்தது. அதை டாக்டர் சரியாகச் செய்திருந்தால் குழப்பமே வந்திருக்காது.
http://kgjawarlal.wordpress.com
Post a Comment