மருத்துவரை மணந்து கொள்ள பத்துக் காரணங்கள்
ஒரு மருத்துவரை மணந்து கொள்ள அருமையான சில காரணங்கள்
1.எப்போதும் கல்யாணத்துக்குச் செல்வதுபோன்ற ஆடைகளுடன் சுற்றிக் கொண்டிருப்பார்கள். சம்பாதிக்கிறார்களோ இல்லையோ பணக்காரவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
2.உங்களின் சுதந்திரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. எப்போதும் வேலை வேலை என்று சுற்றிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் நிம்மதியாக எந்தவித பிக்கல் பிடுங்கலும் இல்லாமல் இருக்கலாம்.
3.மனித உடல் பற்றி நன்கு தெரிந்துவைத்திருப்பார்கள். உடலில் எது,ஏன்,எப்படி போன்ற கேள்விக்கெல்லாம் நல்ல பதில் வைத்திருப்பார்கள்.
4.. நீங்கள் என்ன திட்டினாலும் அமைதியாக கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
எப்போதும் ஏதாவது ஒரு வித்தியாசமான கதை வைத்திருப்பார்கள்
5. தேவைப்பட்டால் இரவு நேரங்களிலும் உங்களுக்கு சேவை செய்ய தயாராக இருப்பார்கள்
6.உங்களுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் இலவச ஆலோசனை கிடைக்கும். அதே போல் சாம்பிள் மருந்துகளும் கிடைக்கும்.
7.எந்தவிதக் கஷ்டமான செய்தியையும் கண்ணாடியைத் துடைப்பதன் மூலம் மென்மையாகச் சொல்லிவிடுவார்கள்.
8.ஊரில் உள்ள கடைகளிலெல்லாம் உங்களுக்கு பொருட்களை இலவச டோர்டெலிவரி செய்வார்கள்
9.சொந்தக் காரர்களின் விசேசங்களுக்குத் தனியாகச் சென்றாலும் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள்.
10. விடுப்பு எடுப்பதானால் எந்தக் கட்டணமும் இல்லாமல் சான்றிதழ் பெற்றுக்கொள்ளமுடியும்
தமீழிஷில் வாக்களிக்க இங்கு அழுத்தவும்
10 comments:
:-)))
கலக்கல். இனி எத்தனை பத்து கிளம்பப் போகுதோ?
சம்பாதிக்கிறார்களோ இல்லையோ பணக்காரவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்
7.எந்தவிதக் கஷ்டமான செய்தியையும் கண்ணாடியைத் துடைப்பதன் மூலம் மென்மையாகச் சொல்லிவிடுவார்கள்
கண்ணாடி போடாத மருத்துவரா இருந்தா ?
கலக்கல்.யாராவது மருத்துவர் மாப்பிள்ளைக்கு பெண் தேவைப்படுதா ?
6 மட்டும் ரொம்பச் சரி.
1 இதெல்லாம் '50 களில் நோ ச்சான்ஸ்.
மருத்துவரைத் தாயாக அடைந்தவருக்கு வாழ்க்கைக் கொஞ்சம் கஷ்டம்தான்.
எ.கா: நான்
//நீங்கள் என்ன திட்டினாலும் அமைதியாக கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
எப்போதும் ஏதாவது ஒரு வித்தியாசமான கதை வைத்திருப்பார்கள்
//
நீங்க தானே இது...
:) :) :)
//7.எந்தவிதக் கஷ்டமான செய்தியையும் கண்ணாடியைத் துடைப்பதன் மூலம் மென்மையாகச் சொல்லிவிடுவார்கள்.//
இது கலக்கல்...
அதெல்லாம் சரி, புடவைக் கடைக்குப் போகும்பொழுது, "இந்தப் புடவை நல்லா இருக்கா" என்று கேட்கும் மனைவியிடம் "ஒரு இருபத்து நாலு மணி நேரம் கழிச்சுதான் எதுவும் சொல்லமுடியும்" என்று சொல்ல மாட்டாரே?
எல்லாம் சரி தான்.
டாக்டரை திருமணம் செய்து கொள்ள நான் ரெடி. நல்லதொரு லேடி டாக்டரா பார்த்து சொல்லுங்க தல.
Jokes apart, Good post.
உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகலையா?
ஏக்கம் தெரியுது. :-))
Post a Comment