Thursday, September 30, 2010

நகைச்சுவையே இல்லாமல் ஒரு ரஜினி படம் - சரியான நகைச்சுவை 1.10.10

பொது அறிவுக் கேள்வி:- இதுவரை வெளிவந்துள்ள படங்களில் ரஜினி டாக்டராக நடித்து வெளிவந்த கடைசிப் படம் எது?

ரஜினி கெழவிய வெச்சு காமெடி பண்ணியிருக்காருடா

பாட்ஷா (அதை பாஷா என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்) படம் வெளியானபோது எங்களால் அந்தப் படத்தை உடனடியாக பார்க்கமுடியாத சூழல். பொங்களுக்கு முந்தையநாள் படம் வெளியானது. மார்ச் மாதம் +2 தேர்வு.  இருந்தாலும் நகரத்தில்  இருக்கும் வகுப்புத் தோழர்கள் பார்த்துவிட்டிருந்தனர். அவர்கள் சொன்ன கமெண்ட்த்தான் இது. ரஜினியோட பிளஸ்ஸே காமெடிதான் ஆனால் படத்தில் ஆட்டோவில் துவக்க காட்சியில் நக்மாவை ஏற்றிக் கொண்டு ஜனகராஜ் செய்யும் பா......அய்.  என்பது மட்டுமே நகைச்சுவை என்ற கோணத்தில் நண்பர்கள் அந்தப் படத்தின் கதையை சொன்னார்கள்.

சற்று ஆறுதலாக இருந்தது.  ஆஹா.,   நல்லவேளை தப்பித்துவிட்டோம். தேர்வு முடிந்தபின் பார்த்துக் கொள்வோம். என்று ஒதுங்கி இருந்தோம்.  பின் நடந்தது நாடறியும். அதுவும் அறைத்தோழரும், சீனியருமான மல்டி கோவைச் சுற்று வட்டாரத்தில்  எந்த திரையரங்கில் பாட்ஷா போட்டாலும்  அங்கே சென்று பார்த்ததும், துணைக்கு ஆள்கிடைக்காத நிலையில் நம்மை அழைத்துக் கொண்டு சென்றதும், அது ஏறக்குறைய அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடந்ததும் ஏற்கனவே சரித்திரம் ஆகியிருந்தது.


இந்தக் கதைக்கும் இந்த வலைப்பூவுக்குமான தொடர்ப்பினைச் சொல்ல வருகிறேன். ஏறக்குறைய மருத்துவத் தொழிலும் அந்த விமர்சனம் போலத்தான். வருபவர்களின் எதிர்ப்பார்ப்புக்கேற்பத்தான் விமர்சனம் செய்வார்கள்.

சிலர் உள்நோயாளியாக சேர்ந்து பார்க்கவேண்டும் என்றுதான் வருவார்கள். சிலர் வெகுதொலைவில் இருந்துவருவார்கள். அவர்களை உள்நோயாளியாக சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் சேர்த்தான் பார்க்க வேண்டும். வெகுதொலைவில் இருந்து வருபவர். போய் திரும்புவதைவிட இங்கேயே தங்குவது  பெருமளவு உடல் அயர்ச்சியைக் குறைக்கும். சிலருக்கெல்லாம் (குறிப்பாக பெரும்பகுதி வயோதிகர்களுக்கு)  உள் நோயாளியாக தங்கி நெருங்கிய சில உறவினர்கள் வந்து பார்த்தால்தான் நலமான ஒரு உணர்வே வரும். அவர்களை உள்நோயாளியாச் சேர்த்துத்தான் பார்க்க வேண்டும்.

சிலர் மாரடைப்பு வந்திருந்தாலும் வீட்டிற்குப் போய்விட்டு வருகிறேன் என்பார்கள். இதுவெறும் கேஸ்ட்ரபுள் பலமுறை வந்திருக்கிறது. இதுவரை வெறும் தண்ணீர் குடித்தாலே சரியாகிவிடும். அல்லது மார்க்கெட்டில் கிடைக்கும் அண்டாசிட் மாத்திரைக்கு சரியாகிவிடும். உங்களிடம் வந்ததற்கு ஒரு படத்தையும் எடுத்து மாரடைப்பு என்று கதை கட்டுகிறீட்கள் என்று திட்டிவிட்டு போவார்கள்.   சிலர் திரும்பிவந்து அல்லது திரும்பி வேறொரு இடத்திற்கு போய் சரிசெய்து கொள்வார்கள்.  சிலர்  திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதும் உண்டு,


எப்படி இருந்தாலும் தொழில் தர்மம் என்று இருக்கிறது. முடிந்தவரை அதை மீறவே கூடாது.  ( இந்த வரிகள் யூனிட் 1 மருத்துவப் பிரிவில் உள்ளுறைவிட மருத்துவ மருத்துவராக பணியாற்றிய போது தினமும்  போதிக்கப் பட்டவை)

குறிப்பாக மூன்றாம் கட்ட மருத்துவ மனையில் பணியாற்றும்போது பெரும்பாலோனோர்,  ஏற்கனவே பார்த்து திருப்தி அடையாமல் வருவார்கள். கண்டிப்பாக அவர்களுக்கு மூன்றாம் கட்ட பரிசோதனைகளை செய்துதான் ஆகவேண்டும்.


நீங்கள் முதலில் ஒரு கிளினிசியன் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இயந்திரங்களை நம்புவதைவிட உங்களை முதலில் நம்ப வேண்டும்.  இரத்த அழுத்தமானியில் காட்ட படும் ரத்த அழுத்தம் நோயாளியின் உடற்கூறுக்கு ஏற்றவகையில் அமைந்துள்ளதா என்பதை நீங்கள் கற்ற கல்வி மற்றும் அனுப்வத்தினை உபயோகப் படுத்தி உறுதி படுத்த வேண்டும். தேவைப்பட்டால் மீண்டும் செய்ய தயங்கக் கூடாது.

முதற்கட்ட மருத்துவமனையில் இருந்தாலும்கூட அவசியமான பரிசோதனை என்றால் மீண்டும் செய்யலாம். தேவையில்லை என்று நீங்கள் கருதினால் இரத்த அழுத்தத்தைக்கூட மீண்டும் பார்க்க வேண்டிய அவசியமில்லை.  குறிப்பாக செலவு பிடிக்கும்  ( ரூ.10 என்பதுகூட மீண்டும் மீண்டும் செய்தால் அனாவசியம்தான் நண்பர்களே..,)  பரிசோதனைகளை மீண்டும் செய்யச் சொன்னால் நோயாளி எரிச்சல் அடைய வாய்ப்பு உண்டு. ஆனால் அவசியத்தை புரிய வைக்க வேண்டிய மருத்துவராகிய உங்கள் கடமைதான்.


( ஒரே பென்ச்சில் அமர்த்து ஒரே வாத பிரதிவாதத்தை கேட்டு ஒரே வகையான சாட்சிகளை ஆராய்ந்த மூன்று மனிதர்களில் இருவர் அங்கு பிறந்ததை ஒத்துக் கொள்கிறார்கள். ஒருவர் ஒத்துக் கொள்ளவில்லை.  அந்த மூவருமே அந்த துறையில் கற்றுத் தேர்ந்த பலவும் சாதித்த விற்பன்னர்கள்தான்)

அதுபோல  நோயாளி வந்திருக்கும் சூழலில் அந்தப் பரிசோதனைகளின் அவசியம், ஏற்கனவே பரிசோதித்து பார்த்திருந்தாலும் இப்போதைய அவசியம், மற்றும் முக்கியத்துவத்தை விளக்க வேண்டியது மருத்துவரின் கடமைதான்.   (ஏற்கனவே ஹைக்கோர்ட்டி தீர்ப்பளித்த விவகாரங்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு போனால் மீண்டும் சாட்சிகள் அழைக்கப் படுகிறார்களே அதுபோல )

 . ஆனால் விளக்கங்கள் மிகச் சுருக்கமாக இருக்க வேண்டியது மிக அவசியம். எந்த மனிதனுமே வகுப்பு எடுக்கப் படுவதை விரும்புவதே இல்லை.  அனைத்துக்கும் மேலே நீங்கள் கற்ற கல்வியின் மேல் நம்பிக்கை வையுங்கள்.  தேர்வில் நோயாளியை வெறும் கண்ணால் பார்த்தே என்னென்ன வியாதிகளுக்கு வாய்ப்புக்கள் , பேசிப் பார்த்து என்னென்ன வியாதிகள் என்பதைக் கண்டுபிடிக்கு முறைகளை கற்றிருப்பதை உபயோகப் படுத்துங்கள்

( வேற்றுத் துறை ந்ண்பர்களுக்காக :- லேப் பரிசோதனை முடிவுகளை வைத்து தேர்வுகளில் பதில் சொல்லும்போது ஏற்படும் ஏற்படக்கூடிய தவறுகளை மன்னிக்கும் தேர்வாளர்கள்,  நோயாளியைப் பார்த்தோ, பேசியோ , அல்லது அல்லது நமது மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு (லேப், ஸ்கேண் இல்லாமல்)  தேர்வில் பதில் சொல்லும்போது ஏற்படும் சிறு தவறுகளையோ தடுமாற்றங்களையோ மன்னிப்பதில்லை. கண்டிப்பாக ஃபெயில்தான்.  இது உலகம் முழுவதும் மருத்துவத் தேர்வுகளின் அடிப்படை )

நோயாளி உங்கள் அறைக்குள் வரும்ப்போதே அவரைப் பற்றி கணிக்க ஆரம்பிக்க வேண்டும். அவர் நடந்து வரும் வேகம். அப்போது அவர் மூச்சுவிடும் எண்ணிக்கை .  கண்கள் பகுதியில் ஏற்படும் சுருக்கம். தோலில் தென்படும் வறட்சி போன்ற விவரங்கள் மிக முக்கியமானவை, அவற்றை தெளிவாக புரிந்து கொள்ளும்ப்போதே பெரும்பாலான நோய்களை கணித்துவிடலாம்.   முக்கியமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுவது வேகத்தை அதிகரிக்க உதவும். அதுவும் நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலைய்த்தில நோயாளிகள் நுழையும் பகுதி உங்கள் பார்வையிலேயே இருந்தால் வரும் நோயாளிகளை அங்கிருந்தே கண்காணிக்க முடியும்.  பெரும்பாலான நோயாளிகள் வந்த உடன் வீடு திரும்பும் எண்ணத்தில்தான் இருப்பார்கள். அவர்களை முடிந்தவரை சீக்கிரம் பார்த்து அனுப்பும் வகையில் வேகத்தை வளர்க்க வேண்டும்,. அதே நேரத்தில் நோய் குறியீடுகள் எதுவும் நம் பார்வையில்         இருந்து தப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தொடர்ச்சியாக நோயாளிகளுடன் இருப்பதும் வெகுநேரம் பணியில் இருப்பதும் மிக முக்கியமானதாக அமையும்.


பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலைய நோயாளிகளில் வயோதிகத்தின் காரணமாக ஏற்படும் நோய்குறியீடுகளோடு வருவார்கள். அவர்களை வயோதிக மருத்துவத்தின்(geriatrics)  துணையோடி அணுகுதல் நலம்.  இல்லையென்றால் தினமும் வந்து இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் நோய் குறியிடுகளுக்காக வைத்தியம் பார்க்க வருவார்கள். நீங்கள் இல்லையென்று சொன்னால் உங்களிடம்தான் சண்டைக்கு வருவார்கள். வயோதிகர்களிடம் சண்டைப் போட்டால் உங்களுக்கு யாரும் துணைக்கு வரமாட்டார்கள்.   பலருக்கு ரத்தப் பரிசோதனை செய்யவே பயமாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு அவசியத்தை புரியவைக்க வேண்டும். சிலருக்கு தினமும் ரத்த அழுத்தத்தைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு  அதற்கான அவசியமின்மையை புரிய வைக்க வேண்டும்.



தொடரும்...,

இந்த இடுகைகளின் தொடர்ச்சியாக இந்த இடுகை எழுதப் பட்டுள்ளது.


http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/THGGQJMRn5I/AAAAAAAABqQ/pE3QVXIh48w/s1600/Chandramukhi_Rajni_Kanth_Movie_Stills_0112_28_08.jpg




துவக்கக் கேள்விக்கு பதில் இவர்தான்.

6 comments:

Anonymous,  November 15, 2010 at 9:26 AM  

Sir please visit the following sites .

www.govtdoctors.com

http://tn.govtdoctors.com

very usefull sites for govt doctors
write OR give link to this sites from your blog

Anonymous,  November 26, 2010 at 9:47 PM  

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் & ல் பணிபுரியும் இளம் மருத்துவர்கள் (Also service PGs)கவனிக்க ....

நாம் சில வருடங்களாக கிராமப்புறங்களில் பல சிரமங்களுக்கு இடையே பணிபுரிந்து வருகிறோம் .. தற்போது DME ல் Specialty seniority என விவாதிக்க பட்டு வருகிறது.

நாம் வரும் காலங்களில் கிராம பணி & முடித்து DME செல்லும் பொது அங்கு பதவி வுயர்விர்க்கு CML முன்னுரிமை கண்டிப்பாக இருக்க வேண்டும் .அப்போது தான் தற்போது செய்யும் பணிக்கு பலன் கிடைக்கும். Specialty seniority என்றால் தற்போதைய பணிக்கு எந்த பலனும் இல்லை .வெறும் கால விரயம் தான் .

நம் நிலையை கண்டிப்பாக TNGDA கவனிக்காது.அவர்கள் சுயநல வாதிகள் .
எனவே நாமும் அரசை அணுக வேண்டும்.தேவைபட்டால் நீதிமன்றத்தையும் அணுக வேண்டும்..

Anonymous,  December 2, 2010 at 9:55 PM  

POP 15 Yr re-fitment ( PB3 - GP: 6600)order( For qualified persons lacking Teaching experience 5/2 Yrs as on 23.10.2009 & MBBS/Diploma Candidates )

SAP re-fitment ( PB3 - GP: 6600) order ( For persons completed Teaching experience 3 Yrs as on 23.10.2009)



இந்த இரு ஆணைகள் மூலம் GO :354 ல் கிராமப்புற சேவை காலம் , CML சீனியாரிட்டி , மொத்த பணிகாலம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் இல்லை என்பதும் , நேரடியாக DME ல் பணியில் சேர்ந்தால் மட்டுமே அதிக பலன்களை (MCI ) பெறமுடியும் என்பதும் நிறுபனமாகி உள்ளது.

அதாவது July 2006 ல் பலர் நேரடியாக DME ல் சம்பந்தப்பட்ட துறையில் சேர்ந்தனர் . 3 1/2 வருடமே மொத்த பணிகாலம் உள்ள இவர்களது (23.10.2009 ல்) சம்பளம் (PB3 . GP : 6600 - i.e Civil Surgeon PAY).இவர்கள் அடுத்த 5 வருடத்தில் PB4 வாங்குவார்கள் (அதாவது 9 1/2 வருட மொத்த பணிகாலத்தில்)....

ஆனால் பல வருடம் DPH / DMS ல் பணி செய்து பின்பு DME க்கு வந்தவர்களின் சம்பளம்(GO:354 படி) பதவி என்ன ??? !!... இனி வரும் காலத்தில் DPHபணி/ Service PG முடித்து DME வருபவர்களின் நிலை / சம்பளம் என்ன??

REPLY ::

அய்யா !

2006 முதல் 2009 வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 3000 பேர்கள் பணியில் சேர்ந்தனர் ...
இனி வரும் காலங்களில் DPH பணி / Service PG முடித்து DME க்கு வரும்போது எந்த பெரிய பதவி உயர்வு வாய்ப்பும் இருக்காது.

ஏனென்றால் இதே சமயத்தில் சுமார் 1000 பேர்கள் நேரடியாக DME பணியில் சேர்ந்துள்ளனர் ... இவர்கள் ஒரு நாள் கூட கிராமபுரத்தில் பணியாற்ற வில்லை . இவர்களில் பலருக்கு இன்னும் CML எண் கூட தரப்படவில்லை ... ஆனால் GO:354 படி பலர் PB3-GP:6600 , Sr.AP - Civil Surgeon PAY பெற தகுயாகின்றனர். இவர்கள் இனி எல்லா பதவிக்கும் முன்னே சென்று கொண்டே இருப்பார் ( Sr.AP --> Associate --> Professor --> Dean/MS --> DME ).

இனி வரும் காலங்களில் DPH பணி / Service PG முடித்து DME க்கு வரும்போது CML சீனியாரிட்டி , மொத்த பனிகாலம் அதிகம் இருந்தாலும் சீனியர்கள் இவர்களுக்கு பின்னால்தான் எல்லா பதவிகளுக்கும் செல்ல வேண்டும் ...

Bharathi April 17, 2011 at 10:54 AM  

ஒரு நூறு வருடத்திற்கு முன் இல்லை ஆங்கில மருத்துவம், இல்லை பட்டப் படிப்பு....இல்லை டெஸ்ட் :) அந்த நிலை விரைவில் வரவே ஆசை...

புருனோ Bruno April 17, 2011 at 12:41 PM  

//ஒரு நூறு வருடத்திற்கு முன் இல்லை ஆங்கில மருத்துவம், இல்லை பட்டப் படிப்பு....இல்லை டெஸ்ட் :) அந்த நிலை விரைவில் வரவே ஆசை...//


பிறந்த குழந்தைகளில் பாதிக்கு மேற்பட்ட குழந்தைகள் கக்குவான் இருமல், சின்னம்மை, தட்டம்மை, பெரிய அம்மை ஆகியவற்றினால் 1 வயதை தாண்டியதில்லை

அப்படி தாண்டினாலும் இளம்பிள்ளை வாத்தினால் கால் முடம்

காச நோய்க்கு வைத்தியம் இல்லை

பாம்பு கடித்தால் மரணம்

இந்த நிலை மீண்டும் வர வேண்டுமா

என்ன கொடுமை சார் இது

chicha.in June 4, 2012 at 12:08 AM  

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

GRDA

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP