Tuesday, September 28, 2010

கூட்டுப் பிராத்தனை செய்யுங்கள் தோழர்களே

அன்புள்ள நண்பா

நலமாக இருக்கிறாயா?  நலம் என்றே நினைத்துக்கொண்டு நானும் எழுதுகிறேன். நீயும் தொடர்ந்து படி. நண்பா

உனக்கு மகிழ்ச்சியான செய்தி என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு செய்தியைப் பற்றி பகிர்ந்து கொள்ளத்தான் இந்தக் கடிதம். இந்திய மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்துவதற்காகவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப் படுத்துவதற்காகவும் தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு வருவதைப் பற்றி மகிழ்ச்சியாக அளாவினாயே, உன் மகிழ்ச்சியில் மண்ணைப் போட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இதை எழுதவில்லை. நண்பா..,


மருத்துவம் படித்துவிட்டாய். நமது ஊரிலேயே அரசுப் பணியிலும் சேர்ந்துவிட்டாய். என்று மகிழ்ச்சியோடு மார்தட்டினாயே . உன்னிடம்தான் சில செய்திகளை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் நண்பா..,  நம் கிராமத்து பள்ளியில் படித்த மாணவர்கள் எல்லாம் மருத்துவம் படிக்கிறார்கள் என்று பெருமையோடு பேசித் திரிகிறாயே நண்பா,  ஒரு காலத்தில் நீ தான் முதலில் போனாயு. இப்போதெல்லாம் நம் ஊரின் எல்லா முனைகளிலிருந்தும் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள் என்று மகிழ்வாயே நண்பா.,

நீங்களெல்லாம்  இங்கு பணிக்கு வந்த பின்புதான்  ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகளுக்கு செல்லும்போது ஒரு நெருக்கமான சூழல் இருக்கிறது என்றாயே நண்பா!

தந்தையாய் வாங்கிய கடன் முடிந்துவிட்டதாம்.  எனவே இந்த ஆண்டு மேல்படிப்புக்கு அரசு கோட்டாவிலேயே சென்று மீண்டும் நம் ஊருக்கே வந்து இங்கேயே மருத்துவமனை கட்டுவேன் என்று சொன்னானே அருந்தமிழ்ச் செல்வன். அவனுக்குத்தான்  இப்போது கெட்ட நேரம். 

இனிமேல்  மேல்படிப்புத் தேர்வுகள்  இந்திய அளவிலாம.  இந்திய அரசு கொள்கை முடிவு என்று அடிபடுகிறது நண்பா. அவனால் போட்டி போட முடியுமா என்று தெரியவில்லை நண்பா,

என்ன தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பதுதான் நியதி என்கிறாயா? உண்மைதான் நண்பா, தமிழ்நாட்டில் உள்ள இடங்கள் தமிழ்நாட்டிற்கே சொந்தம் என்றால்  அவனுக்கு கண்டிப்பாக கிடைக்கும் நண்பா. உலக அளவில் அந்த மேல் படிப்பு இடத்திற்கான அடிப்படைத் தகுதிகள் அவனுக்கு இருக்கின்றன நண்பா. பின் ஏன் அவனுக்கு கிடைப்பது சிரமம் என்கிறாயா?  திருச்சூரிலும் மும்மையிலும் டெல்லியிலும்  இளைஞர்கள் முழுநேரமும்  அந்த மேல் படிப்புப்பாக நாள் முழுவதும் படித்துவருகிறார்கள் நண்பா. இவனோ   நம் ஊர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகல் முழுக்க வேலை செய்து கொண்டிருக்கிறான். இரவிலும் பிரசவம் தொடர்பான தொலைப்பேசி அழைப்புகளில் பேசிக் கொண்டே இருப்பானே நண்பா,    இப்போதெல்லாம் நமது கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவங்கள் அதிகம் என்று பெருமையாக சொல்வாயே நண்பா. விதண்டாவாதம் செய்பவர்களுக்கு தமிழக அரசின் இணைய தளத்தை காட்டி பெருமையாக சொன்னாயே நண்பா, அதையும் மீறி பேசியவர்களிடம், பிறப்பு இறப்பு பதிவாளரின் முகவரிகளை வாங்கி அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நம்ம ஊர் பையன் நமக்காக உழைக்கிறான் என்றாயே நண்பா. அவனுக்குத்தான் இந்த அதிர்ச்சி நண்பா,

மாலை வேலையில் உங்கள் ஊரில் கிளினிக் வேறு போட்டிருக்கிறான். காசு வாங்கிக் கொண்டு வைத்தியம பார்த்தாலும் இந்த ஊரில் வைத்தியம் பார்க்க ஒருவன் வருகிறானே என்று இருமாந்து இருந்தாயே நண்பா,  அவன் அந்த கிராமத்தில் உட்காரமல் இருந்திருந்தால் ஒருவேளை அவனுக்கு மேல்படிப்பு கிடைக்குமோ என்னவோ?சென்ற மாதம் புதிதாக சேர்ந்திருந்தானே செந்தமிழ்செல்வன். இங்கேயே இருந்து தந்தையின் கடன், தங்கையின் திருமணம் இரண்டையும் முடித்துவிட்டு  பின்னர் ஒரு வீட்டையும் கட்டும்வரை இங்கேயே இருப்பேன். பின்னர் மேற்படிப்பை முடித்துவிட்டு இங்கேயே திரும்பிவிடுவேன் என்றானே? இந்த செய்தியைக் கேட்டதும்  பெருநகரத்தில் ஒரு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தது மட்டுமல்லாமல் தனியாக கோச்சிங் வகுப்புகளுக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டானாம். இவனைப் போல் எத்தனை பேர் கிளம்பப் போகிரார்களோ தெரியவில்லையே நண்பா?


இவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நம் ஊரிலேயே தொடங்கு என்றெல்லாம் கனவுகளை ஊட்டினாயே நண்பா.  வெளியூரிலிருந்தெல்லாம் கூட அதிகப் பேர் பயன்பெருவார்கள் என்றாயே நண்பா,    கனவு கானல் நீர் ஆகிவிடும்போல இருக்கிறதே நண்பா..,


இது மட்டும் அல்ல நண்பா, இன்னும் இருக்கிறது.

மருத்துவம் சேரவே  இனி பொது நுழைவுத் தேர்வாம்.  ஆமாம் நண்பா இனிமேல் ஐ.ஏஎஸ் தேர்வு போலத்தான்.  மாநிலத்திலிருந்து 30 பேர் 40 பேர் எம் பி பிஎஸ் சேர்ந்து விட்டார்கள் என்று செய்திவந்தாலும் ஆச்சரிய படத் தேவையில்லை. அந்த ஐ, ஏ, எஸ்ஸிலும் முதல் முறையே சேருபவர்கள் குறைவுதான் நண்பா,  நம் கிராமத்திலிருந்து சென்றதால்தான் மேற்கண்டவர்கள் எல்லாம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலையாக இருந்தார்கள் என்று சொல்லி வருவாயே நண்பா, அந்த கிராமத்து மாண்வர்களுக்கு இந்த பழம் புளிக்கும் என்று ஆகி விடுமோ என்ற அச்சம் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறது நண்பா,   பெருநகர மாணவர்களாலேயே இந்த போட்டியில் பங்கெடுப்பதும் வெல்வதும் மிகக் கடிமாகவே இருக்கும் நண்பா,  எம்பிபிஎஸ் சேர தேவையாக அனைத்து தகுதிகளும் இருந்தும் போட்டித் தேர்வில்  வெல்ல முடியாமல் போய் ..   சே.......  நினைத்தாலே நெஞ்சம் பதருகிறது நண்பா,    வெளி மாநில மாணவர்கள் இங்கு வந்து படித்து பின்னர் நம் கிராமத்திற்கு வந்து  என்ன கொடுமைடா சாமி,   ஏனோ  பாரதிராஜாவின் சத்யஜித் நினைவிற்கு வந்து தொலைக்கிறார்,


நண்பா இந்த சூழலில் தமிழக மக்களின் நலனை கருத்தில்கொண்டு தமிழக முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் ஓரணியில் நின்று போராடி வருகிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றியடையவும், தமிழக மக்களின் நலன்களைக் காக்கவும் நண்பா, முடிந்த வரை பிராத்தனை செய் நண்பா,  உண் நண்பர்களையும் செய்யச் சொல் நண்பா,


நன்றி

உனது நண்பன்

மின்னஞ்சலில் படிப்பவர்கள் தளத்திற்கும் ஒரு முறை வந்து கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். நன்றி

9 comments:

மதுரை சரவணன் September 28, 2010 at 11:24 AM  

sir , ur view is worng. common exam brings only talented students for higher studies. and it is good for all . its not stop our village students quoto, don't underestimate our student's talent. and in common exam stream their is only fifteen percentage only aloted for other state sutdents. all other seats are given to our students only. any how thanks for sharing.

SUREஷ் (பழனியிலிருந்து) September 28, 2010 at 4:28 PM  

//in common exam stream their is only fifteen percentage only aloted for other state sutdents//

i dont thing so.

you r telling what is going on now. if CET comes, i am afraid 100% goes to chennai and trissur like students

SUREஷ் (பழனியிலிருந்து) September 28, 2010 at 4:30 PM  

//don't underestimate our student's talent//

if we give the same exposure, our students defnitely win the race.

but when is it possible?

SUREஷ் (பழனியிலிருந்து) September 28, 2010 at 4:32 PM  

//sir , ur view is worng.//

my wishes also the same. my view must be wrong. but what could be the real?

Anand,  September 29, 2010 at 7:34 AM  

ரயில்வே துறையை பார்த்தாலே தெரியும், தமிழகம் எவ்வளவு ஏமாற்ற படுகிறது. கபில் சிபல் நடவடிக்கை ஒவ்வொன்றும் சாதாரண மக்களுக்கு எதிரானவை.

புருனோ Bruno September 29, 2010 at 8:24 PM  

I prefer Transparency First and One Exam next
Not the way it is proposed now :) :) :

புருனோ Bruno September 29, 2010 at 8:24 PM  

PMPD / AIIMS are plaqued by question leaks, and malpractices Let them first conduct one exam for all Central govt institutes

If their contention that this common exam is for student's benefit is true, why can't they have CET for Cent Govt

W...hy is that they are having seperate exams for each Cent Govt instiutes, but try abolish State Admission

One Advantage is that students need to give only one exam

I will also support one exam, but not AT THIS TIME
Right now, we need to have more transparency and accountability.
Introducing one exam & abolishing will only help increase corruption and shadow deals

Not conducting a CET for Central Govt Insitutes, but asking CET for all states is ???? you fill in the blanks yourself

புருனோ Bruno September 29, 2010 at 8:25 PM  

AIPG is Only Exam in India for Medicos with corruption, paper leaks , brokers for seats,under table acts. If Central Govt is so concerned, why don’t they first conduct ONE Common exam for AIIMS, JIPMER, PGI etc. As of now they have seperate... exams for AFMC, JIPMER, AIIMS< SGPGI etc.

If Central Govt is so concerned, why don’t they first conduct ONE Common exam for AIIMS,JIPMER,PGIet Let them first conduct one common exam for all central govt institutes and prove their ability to conduct exams without leaks

More Entertainment June 4, 2012 at 12:08 AM  

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP