டாக்டருக்கு சாதாரணக் காய்ச்சல்தான்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி பெண் மருத்துவருக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 11 பேர் சேர்க்கப்பட்டனர்.
இவர்களுக்குச் சிகிச்சை அளித்த 24 வயது பெண் பயிற்சி டாக்டருக்கும் அறிகுறி தென்பட்டது.
இதையடுத்து அவரது உடலில் இருந்து ரத்தம் மற்றும் தொண்டையில் எடுக்கப்பட்ட சளி ஆகியன ஆய்வகப் பரிசோதனைக்கு தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வியாழக்கிழமை கிடைத்த பரிசோதனை முடிவில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 comments:
நான் ஊருக்குப் போற யோசனையில வேற இருக்கேன்?!
வாங்க தல.., தேவையான அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளன.
Post a Comment