படிக்கும் போதே தூங்கி விழும் குழந்தைகள்
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் கண்ணொளி காப்போம் திட்டம் ஜூன்3ம்தேதி தமிழகத்தில் துவங்கப் பட்டது. குழந்தைகள் பரிசோதனை பற்றி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வட்டார மருத்துவர் விளக்கும் காட்சி .
பரிசோதனை செய்வதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிடுகிறார்.அருகில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
இருக்கிறார்.
பரிசோதனை செய்வதை துணை இயக்குநர் பார்வையிடுகிறார். இந்தப் பரிசோதனைக்கு பரிசோதகர்களுக்கு நவீனக் கருவிகள் புதிதாக வழங்கப் பட்டுள்ளன.
குழந்தைகள் பரிசோதனைக்காக வரிசையாக அமர்ந்திருக்கும் காட்சி
இந்தத் திட்டத்தில் கண்பார்வையில் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு அதைச் சரிசெய்வதற்குத் தேவையான சிகிச்சைகள் அரசின் மூலம் இலவசமாகச் செய்யப் படும். தேவையான மருந்துகள் கொடுக்கப் படும். தேவைப் படும் குழந்தைகளுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப் படும்
கண்ணாடி அணிவது என்பது பார்வை குறைபாடுகள் காரணமாகவும், வெயியிப் கோரத்தைக் காக்கவும், ஸ்டைலாகத் தோன்றவும் என பல காரணங்களுக்கு அணியப் பட்டாலும் பார்வைக் குறைபாடுகளுக்கு அணிபவர்களுக்குத்தான் அதன் கொடுமை தெரியும்.
பெரிய அளவில் குறைபாடுகள் இருப்பவர்களுக்கு குறைபாடு என்பது எளிதில் கண்டறியப் பட்டுவிடுகிறது. சரி செய்ய எத்தனையோ நவீனக் கருவிகள் வந்து விட்டன.
ஆனாலும் மிகச் சிறிய அளவிலான பார்வைக் குறைபாடுகள் என்பது மிக அதிக அளவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. நமது கண்ணில் இருக்கும் லென்சு அமைப்பு நாம் பார்க்கும் காட்சிகளை விளித்திரையில் விழச்செய்து அதை மூளையில் உள்ள நரம்புகள் காட்சிகளாக உணர்த்துகின்றன.
மிகச் சிறிய அளவிலான 0.25 அளவிலான குறைபாடுகளை லென்சினைச் சுற்றியிருக்கும் தசைகள் தனது தகவமைப்பு மூலம் அதைச் சரிசெய்து கொள்ளமுடியும். அந்த நிலையில் உள்ளவர்கள் எளிதாக எந்தவகை எழுத்துக்களையும் படிக்க முடியும். ஆனால் லென்சு அமைப்பு விரைவில் சோர்வடையும் சூழல் ஏற்படும். எனவே தூக்கத்தினை தழுவுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.
படிக்கும்போது தூக்கம் வந்துவிடுவதால் அந்த மாணவனின் படிக்கும் திறன் மற்றும் மதிப்பெண்கள் குறைய ஆரம்பிக்க நேரிடுகிறது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு அந்த அந்தப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தொடர் பரிசோதனைகள் மற்றும் பார்வை குறைபாடு பற்றிய அறிவுரைகள் வழங்கப் படுகின்றன. அந்த ஆசிரியர்கள் அவ்வப்போது மருத்துவர், மற்றும் கண்பரிசோதகர்களை அனுகுவார். அரசு ஆரம்பசுகாதார நிலையக் களப் பணியாளர்களும் பள்ளிகளை தொடர்ச்சியாக தங்கள் பயணத்திட்டப்படி அணுகுவார்கள். தேவைப் படும் குழந்தைகளுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப் படும். தேவைப் படுபவர்களுக்கு கண்ணாடி முதலான உபகரணங்கள் இலவசமாக வழங்கப் படும்.
3 comments:
நன்றிங்க!
கண்ணொளி காப்போம் திட்டம் தமிழக முத்ல்வர் அவர்களின் சிந்தனையில் உதித்த மிக சிறப்பான திட்டம். அத்திட்டத்தின் மூலம் இளம்சிறார்கள் பயன் பெற்று கண்ணொளி கிடைத்து வருங்காலத் தமிழகம் சிறப்புறட்டும்.
நல்லதொரு பதிவு சார்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
பழமைபேசி சார்,
தமிழ் ஓவியா சார்,
தமிழர்ஸ் அணியினர்..,
Post a Comment