பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள்
இப்பொதெல்லாம் அந்த மருந்துக்கு இந்த பக்க விளைவு. இந்த மருந்துக்கு அந்த பக்க விளைவு என்றெல்லாம் பேசுகிறார்கள்.
சில நபர்கள் (?மருத்துவர்கள்) தாங்கள் உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு (?மருந்துகளுக்கு) எந்தவித பக்க விளைவுகளுமே கிடையாது என்றெல்லாம் பேசுகிறார்கள். இந்த மருந்துகள் இறைவனால் கொடுக்கப்பட்டது. அதை எங்கள் தாத்தாவுக்கு தாத்தா நேரடியாக வாங்கி எங்களுக்கு கொடுத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
ஒரு மாணவன் என்ற முறையில் எனக்கு சில கேள்விகள் தோன்றுகின்றன.
இயற்கையாக கிடைக்கும் தண்ணீரை 5லிட்டர் குடித்தால் தலைவலி வருமே அதை பக்க விளைவு என்றுதானே கூறுவோம்
உப்பினை அரைகிலோ சாப்பிட முடியுமா? சாப்பிட்டால் என்ன நடக்கும். அது பக்க விளைவு அல்லவா?
பத்து பச்சை மிள்காயை சாப்பிட்டால் வயிறு புண்ணாகுமே அது பக்க விளைவு அல்லவா?
இந்த வாதங்களின் படி பார்த்தால் எல்லா பொருட்களுமே சரியான அளவில் உபயோகப் படுத்தாவிட்டால் கண்டிப்பாக பக்க விளைவுகள் தோன்றியே தீரும். மருந்துகளுக்கு கண்டிப்பாக கற்றறிந்த ஒருவரின் அறிவுரை மிக அவசியம்.
அதுவும் கொடிய வியாதிகளுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படும் மருந்துகள் இருபுறமும் கூரான கத்திதான்.
எல்லாம் சரிதான். கடவுள் நேரடியாகத் தோன்றி தாத்தாவுக்கு தாத்தாவிடம் கொடுத்த மருந்துக்கும் அதே நிலைதானா ......
இந்த விசயங்களெல்லாம் மதுரை தமிழ்சங்கத்தில் போட்டி வைத்து தருமி பாட்டோடு வந்து விளக்கினால்தான் புரியும்........... >
அது வரை வியாதியின் கஷ்டமா? அல்லது மருந்து தரும் கஷ்டமா?மருத்துவரிடம் ஆலோசித்து எதுவாயிருந்தாலும் அவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு போய்கொண்டே இருப்போம்
2 comments:
//கடவுள் நேரடியாகத் தோன்றி தாத்தாவுக்கு தாத்தாவிடம் கொடுத்த மருந்துக்கும் அதே நிலைதானா ......
இந்த விசயங்களெல்லாம் மதுரை தமிழ்சங்கத்தில் போட்டி வைத்து தருமி பாட்டோடு வந்து விளக்கினால்தான் புரியும்........... >
அது வரை வியாதியின் கஷ்டமா? அல்லது மருந்து தரும் கஷ்டமா?மருத்துவரிடம் ஆலோசித்து எதுவாயிருந்தாலும் அவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு போய்கொண்டே இருப்போம்//
எந்தக்கடவுளும் (இதில் எல்லா மதக் கடவுளும் அடங்கும்) மருந்து கண்டுபிடிக்கவில்லை.
மனிதன் தான் கண்டுபிடித்தான்.
இன்னும் சொல்லபோனால் கடவுளுக்கே மருந்து கண்டுபிடித்தவன் மனிதன்.
சான்றாக மாரியாத்தாவுக்கு (அம்மை) எதிராக, பிள்ளையாருக்கு (பிளேக் - எலி மூலம் பரவும் நோய்)எதிராக தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து ஒழித்தவன் மனிதன்.
இப்படி பல சான்றுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்ற உலகப் பொதுமறையாம் திருவள்ளுவரின் கருத்தே சரியானது.
உங்கள் தளம் மிகச் சிறப்பாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி தமிழ் ஓவியா அவர்களே........
கடவுளின் பெயரால் நடக்கும் விந்தைகளுக்கு பதில் கிடைக்கவாவது அந்த கடவுளை மனிதன் கண்டுபிடித்தே தீர வேண்டும்
Post a Comment