Monday, August 9, 2010

விக்ரம் திரைப்படமும், நள்ளிரவில் நாய் கடி வாங்கியவனும்

புகுமுன்:-

சினிமா தொடர்புடைய இடுகையாக இருந்தாலும் இது சினிமா  இடுகை அல்ல

=========================================================================

டாக்டர் என்னும் தொழிலாளி 


பத்து நோயாளிகளை வர வைக்கும் வழிகள் 


ஆகிய இடுகைகளின் தொடர்ச்சியாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.
வெகுநாட்களுக்கு முன் விக்ரம் நடித்த சமுராய் படத்தினைப் பார்த்திருப்பீர்கள். நானும் அப்போது பார்த்ததுதான். சமீபத்தில் தொலைக்காட்சியில் கூட அதைப் போட்டிருந்தார்கள்.  படம் எப்படியிருந்தாலும்., அந்தப் படத்தின் முதுகெலும்பாலான ஃபிளாஷ்பேக் காட்சியில் குளுக்கோஸ் உடன் திரவ மருந்து செலுத்துவார் நாயகி (அந்தப் பகுதியின் நாயகி). அந்தச் சிறுவன் இறந்து போய் விட தான் மிகவும் கஷ்டப் பட்டு பார்த்துவந்த சிறுவன் இறந்து விட்டதாகவும்  அந்த கலங்கிப் போன தூசுகள் படிந்த திரவ மருந்தை செலுத்தியதால்தான் இறந்து போனதாகவும் அந்த மருந்து வாங்கியவர்களை தட்டிக் கேட்பார். சில தட்டிக் கழித்தல்களுக்குப் பின் அவர் இறந்து விடுவார். விக்ரம் பழிவாங்க ஆரம்பிப்பார்.


=================================================================


உண்மையில் இந்த நிகழ்ச்சியில் தவறு என்பது குளுக்கோஸ் ஏற்றிய அந்த நாயகின் மீதுதான். எந்த மருத்துவர் எந்த மருந்தினைச் செலுத்தினாலும் அந்த பாட்டில் உடைந்து இருக்கிறதா?  மருந்தின் நிறம் மாறி இருக்கிறதா? அதில் ஏதாவது மிதக்கிறதா?  அதன் காலாவதி தேதி இன்னும் எத்தனை நாட்களுக்கு என்றெல்லாம் சரிபார்த்துவிட்டுத்தான் போட வேண்டும். 


ஆகவே புதிதாக கிளினிக் தொடங்கும் மருத்துவர்கள் இந்த நடைமுறைகளை ஒவ்வொரு முறையும் பின்பற்றியே தீர வேண்டும்,. இல்லையென்றால் விக்ரம் மாதிரி யாராவது வந்து கடத்திக் கொண்டு போக நேரிடலாம். 
=====================================================================


தொடரும்....,

 ====================================================================

அது ஒரு கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்.  

இரவு நேரம், பிரசவம் பார்ப்பதற்காக அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் காத்திருந்தனர். நள்ளிரவு தாண்டிய நேரம்  சில பல நபர்கள். டாக்டர் நாய் கடிச்சிடிச்சி என்று கூறிக் கொண்டே வந்தார்கள்.   


செவிலியர் பார்த்தார்.  சில முதலுதவிகள் மற்றும் தடுப்பூசி, தொற்றுப் பரவாமல் இருக்க ஊசி போட்டுவிட்டு  நாய்கடிக்கான சிறப்புத் தடுப்பூசி நாளைக் காலையில் மருத்துவர் முன்னிலையில் போட வேண்டும். காலையில் வாருங்கள் என்றிருக்கிறார்.  நண்பர்களுக்கு பயங்கர கோபம்.  கண்டபடி சண்டைப் போட்டுவிட்டு திரும்பி விடுகின்றனர்.  
காலையில் கிளம்பி மருத்துவமனைக்குப் போகிறார்கள்.  பயங்கரமாக பில்டப் மற்றும் அடிபொடிகளைச் சேர்த்துக் கொண்டு  சுகாதார நிலைய வாசலில் சண்டை போடுகிறார்கள். 


மருத்துவரின் அறை முன்னும் சத்தம் போட்டுக்கொண்டே உள்ளே போகிறார்கள்.  நள்ளிரவில் நாய் கடியோடு  வந்தால் செவிலியர் நீங்கள் வந்த உடந்தான் போடுவேன் என்கிறார்.  என்ன இது அநியாயம்? நீங்க வந்தது தெரிந்த பிந்தான் நாயைக் கடிக்க சொல்ல வேண்டுமா?  


மருத்துவர் பொறுமையாக நாய் க்டி ஊசி எத்தனை மணி நேரத்துக்குள் போட வேண்டும். உடனடியாக கொடுக்கப் பட வேண்டிய மருந்துகள் கொடுக்கப் பட்டு விட்டன் என்பது பற்றியெல்லாம் சொல்லு விட்டு அந்தக் கேள்வியைக் கேடிகிறார்.
நள்ளிரவுக்கு மேல் எங்கு போய் நாய் கடி வாங்கி வந்தாய்? உனக்கு அங்கே என்ன வேலை?  


உடன் வந்த நண்பர்கள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க நாய்கடி பட்ட நபர் ஊசி போடுமுன்பே எஸ்கேப்..............,

6 comments:

Anonymous,  August 9, 2010 at 10:05 AM  

ஆரம்ப சுகாதார நிலையம் = Primary Health Center

கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்= (கூடுதல்) How do you officially call this in English.

SUREஷ் (பழனியிலிருந்து) August 9, 2010 at 10:11 AM  

கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்

additional primary health centre

SUREஷ் (பழனியிலிருந்து) August 9, 2010 at 10:15 AM  

ஒரு வட்டாரத்தில் அதாவது block ஒரு பஞ்சாயத்து யூனியன் பகுதிக்குள் வரும் பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பஞ்சாயத்துக்களையும் உள்ளடக்கிய பகுதியில் தலையாயது வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றவை கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள். தற்போது இவை ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்ற பெயரிலேயே இயங்குகின்றன. இங்கு பணியாற்றும் மருத்துவர் உள்ளிட்ட அனைவருக்கும் வட்டார மருத்துவ அலுவலரே சம்பளம் பெற்றுத்தரும் அலுவலராக இருப்பார்.

================================

இந்தக் கேள்விக்குக்கூட அநாநியாகதத்தான் வர வேண்டுமா?

Baranee August 9, 2010 at 10:21 AM  

Thanks.
Sorry, accidentally selected Anonymous option.

சி.பி.செந்தில்குமார் August 9, 2010 at 11:18 AM  

நல்ல பதிவு. சாமார்த்தியமான டைட்டில்.

அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP