தனியார் மருத்துவ முகாம்கள்
தனியார் மருத்துவ மனைகள் அறுவை சிகிச்சை செய்தாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசு நிதி உதவி வழங்கவும் நேரிடுகிறது.
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவ நிலையங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவ னங்கள் மாவட்டத்தில் மருத் துவ முகாம்கள், தடுப்பூசி முகாம்கள் போன்ற முகாம் களை நடத்துவதற்கு முன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முறையாக விண்ணப்பித்து அவரிடமிருந்து அனுமதி பெற்ற பின்னர்தான் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என் றும் மாவட்ட ஆட்சியர் அளிக்கும் அனுமதியின் நகல் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மற்ற துணை இயக்குநருக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அரசாணை (நிலை) எண். 164 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, நாள் 31-8-2006 இல் ஆணைகள் வெளியிடப்பட் டுள்ளன.
தனியார் மருத்துவ நிலை யங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒரு மாவட்டத் திற்கு மேல் பல மாவட்டங் களில் இத்தகைய முகாம்களை நடத்த முடிவு செய்தால், அவர்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநருக்கு விண்ணப்பம் செய்து அவரிடமிருந்து முன் அனுமதி பெற்று முகாம்களை நடத்த வேண்டும் என்றும் மேற்கண்ட அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட் டுள்ளது. ஆனால் பல தன்னார் வத் தொண்டு நிறுவனங்கள் மேற்கண்ட அரசாணையின் படி மாவட்ட ஆட்சித் தலை வர், பொது சுகாதாரத் துறை இயக்குநரிடமிருந்து முன் அனுமதி பெறாமல் மருத்துவ முகாம்கள் நடத்துகிறார்கள்.
இனி வரும் காலங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த மாவட்ட ஆட்சித் தலைவரிட மிருந்தும் பல மாவட்டங்களில் முகாம்கள் நடத்த பொது சுகாதாரத்துறை இயக்குநரிட மிருந்தும் முன் அனுமதி பெற் றுத் தான் முகாம்கள் நடத் தப்பட வேண்டும். அவ் வாறு அனுமதி பெறாமல் நடத்தப் பட்டால், அத்தகைய மருத்துவ நிலையங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்
0 comments:
Post a Comment