பிரசவகால துணை
பிரசவகால துணை என்பது பிரசவ நேரத்தின்போது உடன் இருப்பவரைக் குறிக்கும் சொல்லாகும். சில வளர்ச்சியடைந்த நாடுகளில் கணவனை உடன் இருக்க அனுமதிக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் அரசுத்துறையில் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள்.
இதற்கான பயிற்சி அ.ஆ.சு.நிலையத்தில் உள்ளே நுழைந்த உடனே தொடங்குகிறது. கர்ப்பிணியின் நம்பிக்கைக்குரிய பெண்தோழி ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவர் ஓரளவு எழுதுப் படிக்கத்தெரிந்தவராகவும் ஓரளவு உலக அனுபவம் படைத்தவராகவும் இருத்தல் அவசியம்.அவர் குழந்தை பெற்றவராய் இருத்தல் அவசியம். பெரும்பாலும் அக்கா, அத்தை அல்லது பக்கத்து வீட்டுப் பெண் அமைகிறார். இவருக்கு அடையளா அட்டை கூட வழங்கப்படுகிறது.
மருத்துவ அலுவலர், ச.சு.செ.,ப.சு.செ.,கி.சு.செ.மற்றும் இருப்பிட செவிலியர்களால் இந்தப் பயிற்சி வழங்கப் படுகிறது.
இது பிரசவ நேரத்தில் கர்ப்பிணியின் மன அழுத்தத்தை பெரிதும் குறைக்கிறது. ஆ.சு.நி.பணியாளர்களின் சுமையும் பெரிதும் குறைகிறது. பிரசவ அறையில் என்ன ந்டக்கிறது என்பதை தோழி உடனிருந்து பார்ப்பதால் பலவிதமான தவறான புரிதல்கள் தவிர்க்கப் படுகின்றன.
இவருக்கு பயிற்சி என்பது வீட்டில் இருப்பவர்கள் எப்படி பராமரிப்பது. என்ன உடற்பயிற்சி (வீட்டு வேலை?) செய்யலாம் எப்படி மாத்திரைகள் விழுங்குவது, அதன் பயன்கள் என்ன என்பது பற்றியும் மருத்துவர் கூறும் அறிவுரைகள் எப்படி பின்பற்றுவது என்பது, பிரசவம் பற்றிய பயம் நீக்குவது பற்றியும் அமைகிறது.
இந்த ஒரு நபர் அ.ஆ.சு.நி.யில் சிலரின் வேலை சுமையை குறைப்பதோடு, கர்ப்பிணிக்கு ஆயிரம் பேர்களின் பலத்தை கொடுக்கிறார் என்பதே உண்மை.
1 comments:
can you please give me your email.?I am a psychiatrist planning to return to india sometime end of the year.I am particulalry interested in working with children and women who are pregnant in govt setup.
I dont have tamil fonts , so i am sorry
Post a Comment