திருவள்ளூர் மாவட்டம்
ஆரம்ப சுகாதார நிலையங்கள்ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகின்றன
சிகிச்சை பெற்ற கிராம மக்கள் கருத்து
சென்னை, டிச.5-
"ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் ஆஸ்பத்திரியாக விளங்குகிறது'' என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணைசுகாதார மையமும், 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையமும் உள்ளன. சுகாதார மையங்களில் உள்ள செயல்பாடுகளை நேரில் கண்டறிவதற்காக பத்திரிகையாளர்களை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அரசு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
செங்குன்றம் வட்டார ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று பார்த்தபோது நோயாளிகள் ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர். 3 பெண் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை பார்க்க முடிந்தது.
டாக்டர்கள் கூறியதாவது:-
கடந்த வருடம் இங்கு 410 பெண்கள் குழந்தை பெற்றனர். இந்த வருடம் இதுவரை 539 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. சராசரியாக தினமும் 2 பேருக்கு பிரசவம் பார்க்கிறோம். கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாதம் தோறும் பரிசோதனைக்கு வரச்செய்து உரிய ஆலோசனைகளை கூறுகிறோம். எச்.ஐ.வி. உள்ளிட்ட பால்வினை நோய் உள்ளதா? என்றும் ரத்த பரிசோதனை செய்கிறோம்.
பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை தேவைப்படின், முன்னதாக அவர்களை ஆம்புலன்ஸ் வேன் மூலம் பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம்.
24 மணிநேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு அவர்கள் அழைத்தால் உடனே ஆம்புலன்ஸ் வேனை அனுப்பி அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறோம்.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏழைகளின் ஆஸ்பத்திரி
அங்கு அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்றுள்ள தாய்கள் கூறியதாவது:-
தனியார் ஆஸ்பத்திரி போல நன்றாக எங்களை டாக்டர்களும், நர்சுகளும் கவனிக்கிறார்கள். அதுமட்டும் அல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திட்டத்தில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் ஜனனி சுரக்ஷா யோகாஜனம் திட்டத்தில் குழந்தை பெற்று வீடு திரும்பும் முன் எங்களிடம் ரூ.700 தருகிறார்கள். எனவே, இப்போது பல முன்னேற்றங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காண முடிகிறது. ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விளங்குகின்றன.
இவ்வாறு பெண்கள் தெரிவித்தனர்.
சத்துள்ள உணவு
பூதூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று மதியம் கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது. அவர்கள் வாழை இலையில் சோறு, சாம்பார், ரசம், மோர், முருங்கை இலை பொறியல், கூட்டு, அவித்த முட்டை, அவித்த கொண்டைக்கடலை ஆகியவற்றுடன் சாப்பிடுவதை பார்க்க முடிந்தது. வாரம் தோறும் இந்த சாப்பாடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் மாதம் ஒரு நாள் சாப்பிடுகிறார்கள். சத்துள்ள உணவு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த சாப்பாடு வழங்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், "ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் டாக்டர்களையும், கூடுதல் நர்சுகளையும் நியமிக்கவேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.
மாநில சுகாதார கழக மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் முருகன், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சம்பத் ஆகியோர் கூறியதாவது:-
தன்னிறைவு
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த மத்திய அரசுக்கு ரூ.431 கோடிக்கு திட்டம் அனுப்பினோம். அதற்கு ரூ.380 கோடி அனுமதிக்கப்பட்டது. அதில் ரூ.284 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களை, மத்திய அரசு நிர்ணயித்துள்ள சுகாதார தரத்திற்கு ஏற்ப தன்னிறைவு பெற்ற தரமானதாக மாற்ற முயற்சி நடக்கிறது. இந்த திட்டத்தில் முதல் பகுதியாக 30 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2009-ம் ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்றுவிடும். படிப்படியாக திட்டம் செயல்படுத்தப்பட்டு, போதிய கட்டிட வசதிகள்,போதிய கருவிகள் அனைத்தும் வாங்கப்பட்டு தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 2012-ம் ஆண்டுஇறுதிக்குள் இந்திய சுகாதார தரஅளவு பெற்ற தன்னிறைவு பெற்றவைகளாக விளங்கும்.

நன்றி: பொட்டல்புதூர்.காம்
0 comments:
Post a Comment