ஏன் டாக்டர் இப்படி செஞ்சீங்க?
அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் பிரசவ அறை கொஞ்சம் அதிகப் படியான பரபரப்பாகவே இருந்தது. பிரசவ அறையின் உள்ளே சென்ற மருத்துவரும் செவிலியரும் மிக அதிகப் படியான பரபரப்புடனேயே இருந்தனர். பிரசவத்திற்காக அனுமதிக்கப் பட்டிருந்த பெண்ணின் உறவுக்காரப் பெண்ணும் பிரசவ அறையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.( அவர்ப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்.) உறவுக் காரப் பெண்ணுக்கு ஓரளவு என்ன பிரச்சனை என்று தெரிந்துவிட்டது.
குழந்தை பிறக்க நேரமாகுமாம். என்று சொல்லி விட்டு காரணத்தையும் உறவுப் பெண்மணி வெளியே இருப்பவர்களிடம் வந்து சொல்லி விட்டார்.
கடவுளே......,
உறவினர்கள் கடும் அதிர்ச்சியுடன் தத்தம் கடவுள்களை வேண்டத் தொடங்கிவிட்டனர். அருகில் நடந்து கொண்டிருந்த மருத்துவ முகாமிற்கு வந்திருந்த சிசு நல சிறப்பு மருத்துவரையும் அழைத்தனர். அவரும் வந்திருந்து அவருக்கான அறையில் காத்திருந்தார்.
கொஞ்ச நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தை பிறந்தது
மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார். ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாய் சேய் இருவரும் மிக நலமாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்லிவிட்டு அருகிலிருந்த நாற்காலியில் மிக சோர்வாக அமர்ந்தார். பின்னே.. ஏறக்குறைய ஒரு நேரமே போராடியல்லவா, சுகப் பிரசவம் ஆக்கியிருக்கிறார்
தாயின் உறவுக்காரப் பெண்மணி முன்பகுதிக்கு வந்தார். மிகவும் முதிர்ந்த பெண்மணி அவர். அநேகமாக அந்த சுற்றுவட்டாரத்திலேயே மிகவும் வயதானவரான தோற்றத்துடன் இருந்தார்.
ஏன் டாக்டரம்மா இப்படி செஞ்சீங்க...,
மருத்துவர் சற்றும் புரியாமல் பார்த்தார்.
குழந்தை இரண்டுமுறை கொடி சுத்தியும் மாலையோடும் பிறந்திருக்கு.., அதப் போய் காப்பாத்தி இருக்கீங்க...
இருக்கற எல்லோரும் ரொம்ப கஷ்டப் படுவாங்க பாருங்க...
நீங்க ஒன்னும் பண்ணாமலே இருந்திருக்கலாம்..
==========================================
நல்லவேளை குழந்தையின் தாயும் தந்தையும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இல்லையென்றால் பிரசவம் பார்த்த மருத்துவர் வாழ்க்கையே வெறுத்துப் போயிருப்பார்.
தமிழீஷில் ஓட்டுப் போட இங்கே சொடுக்குங்கள்
8 comments:
:-((
அடப்பாவிகளா(-:
ஒன்னும் அறியாத சிசு. அதைப்போய்.....
மாலை போட்டா மாமனுக்கு ஆகாதுன்னு கிளப்பிவிட்டவனைப் பிடிச்சு முதல்லே போட்டுத்தள்ளணும்.
எதுகை மோனையை எப்படிஎல்லாம் பயன்படுத்தியிருக்காங்க பாருங்க(-:
ஏந்தான் இப்படி இருக்காங்களோ ....
குழந்தை என்பது இறைவனால் கொடுப்பட்ட வரம்
எப்படி தான் மனசு வருதோ
ஒரு குழந்தையை கொல்லுற அளவுக்கு ...
என்ன அக்கிரமம்! இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் சுட்டுதள்ளுனாலும் தப்பில்லை..
மூட நம்பிக்கைக்கும் அளவே இல்லையா?
//குழந்தை இரண்டுமுறை கொடி சுத்தியும் மாலையோடும் பிறந்திருக்கு..//
அப்படினா என்னங்க?
@பதி
அதான் மாலை போட்டா மாமனுக்கு ஆவாதாமே..!!
கொடுமையான விஷயம்...!!
@ பதி
தொப்புள் குடி குழந்தையின் உடலைச் சுற்றி இருப்பதையும், கழுத்தைச் சுற்றி இருப்பதையும் சொல்வார்கள்
குழந்தை கருப்பையில் இருக்கும்போது குழந்தை கைகளையும் கால்களை ஆட்டுவதாலும், பனிக்குடத்தில் உள்ள நீர்மத்தில் மிதந்து கொண்டிருப்பதாலும் தொப்புள்கொடி சுற்றிக் கொள்வதுண்டு.
பிரசவத்தின்போது கர்ப்பப்பை சுருங்கி விரியும் கடைசி கால கட்டத்தில்தான் இது நிகழும்.
கருப்பையில் இருக்கும்போது பிரச்சனை இல்லாமல் இருந்தாலும் குழந்தை சுகப் பிரசவமாக தனது பாதையில் பயணம் செய்யும் போது குழந்தையை இறுக்கச் செய்யும்.
தொப்புள் கொடி வழியாகத்தான் ரத்தம் குழந்தைக்கு கிடைத்துக் கொண்டு இருக்கும் என்பதால் இவ்வாறு ஏற்படும் இறுக்கம் அந்தக்குழாய்கள் வழியாகச் செல்லும் ரத்தத்தின் அளவை குறைத்து விடும்.
சில நேரங்களில் கழுத்தைச் சுற்றி மாலையாக அமையும் தொப்புள் கொடி கழுத்தை நெரித்து விடும் வாய்ப்பும் உள்ளது. இந்த வகைப் பிரசவங்களில் குழந்தையை காப்பாற்றுவதற்கு மிகவும் சிரமப் பட வேண்டி இருக்கும்.
SUREஷ் (பழனியிலிருந்து),
தகவலுக்கு மிகவும் நன்றி....
Post a Comment