Thursday, February 18, 2010

மாமன் மகள் சிறுநீரோடு......,

நாட்டு மருத்துவச்சி:

வயதுப் பெண் மயங்கிவிழுந்தால்  நாடி பிடித்துப்பார்ப்பார். அவருக்கு இரட்டை நாடி இருப்பதாகவும் எனவே கர்ப்பமாக இருப்பதாக கூறுவார். இது பல திரைப்படங்களில் வரும் காட்சி.

ஹைப்பர் டைனமிக் பல்ஸ் கர்ப்ப காலத்தில் தோன்றுவது தான் ஆனால் அதற்கான பல காரணங்களில் கர்ப்பம் முக்கிய இடத்தில் கிடையாது.  ஆண்களுக்கும் அவ்வகை நாடித் துடிப்பு கிடைக்கும்.

நிகழ்வு: சில மாதங்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போய் இருப்பதையும் வாந்தி மயக்கம் மற்றும் திருமணம் ( அது காந்தர்வ முறையாக கூட இருக்கலாம்) பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு குத்து மதிப்பாய் கொடுக்கும் வாக்கியம் அது

ஆங்கில மருத்துவரை அனுகினால்

இதே போன்று கேள்விகள் கேட்டுவிட்டு

கர்ப்பம் என்றால் அதற்குரிய அட்டைப- சிறுநீர்ப் பரிசோதனை செய்யச் சொல்வார்

பொதுவாக ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின், சர்க்கரை மற்றும் நீரில் உப்பு சர்க்கரை பரிசோதனைகள் செய்யச் சொல்வார்.

----------------------------------------------------

அவருக்கு கர்ப்பம் என்பதை உறுதியாகச் சொல்லவேண்டும். தேவையில்லாமல் கர்ப்பம் என்பதை சொல்லி மனதை காயப் படுத்திவிடக்கூடாது. கர்ப்பம் என்றால் ஆரோக்கியமாக குழந்தை வளர வழிவகைகளை ஆயாயும் அவசியத்தை உணர்ந்தவராக இருப்பார்.

கர்ப்பம் இல்லாத மயக்கம் என்றால்   மயக்கத்திற்கான காரணத்தை கண்டறிந்தே தீரவேண்டும் என்ற கட்டாயங்கள் இருக்கின்றன. அதனால் இந்தப் பரிசோதனைகள் அவசியமாகின்றன


சில நேரங்களில்
இருதயப் படம் எடுக்கச் சொல்வார்.

சிலருக்கு தைராய்டு பரிசோதனைச் செய்யச் சொல்வார்.

மொத்தத்தில் கிராம மக்களின் மனதில் செலவு வைக்கும் நபராக நினைவில் பதிக்கப் பட்டுவிடுவார்.

========================================================

உடலில் ஏதாவது அரிப்பு, தடிப்பு ஏற்பட்டால்  எம்பிபிஎஸ் மருத்துவர் , ஊசி மாத்திரைகள் போடுவார். பல் நேரங்களில் சரி ஆகிவிடும். சில நேரங்களில் அது மீண்டும் மீண்டும் தொடர் அரிப்பாக மாறிவிடுவது உண்டு.  அதற்கு சிறப்பு மருத்துவரின் பார்வை, மற்றும் பல ரத்தப் பரிசோதனைகள் செய்யச் சொல்லுவார்..

கிராம மருத்துவரிடன் சென்றால்   மிகச் சுலபமான மருத்துவம் சொல்வார். மாமன் மகளின் ( பெண்களுக்கு மாமன் மகனுடயது) சிறுநீரைப் பிடித்து  அதில் அடுப்புச் சாம்பலை பூசி விட பெரும்பாலும் திரும்ப வராது.

நிகழ்வது. அரிப்பு பெரும்பாலும் ஒவ்வாமை மற்றும் அலர்ச்சி வகையறாகவே அமையும். தீவிர பக்க விளைவாக இருக்கும் வாய்ப்பும் மறுக்க இயலாது

நடப்பது:-

ஒவ்வாமை மற்றும் தீவிர எதிர்விளைவு ஆகியவையின் போது சுரக்கும் சுரப்புகள் தானியங்கி மண்டலம் மூலம் நடக்கின்றன.  அதனால் மருந்துகள் சாப்பிட்டாலும்கூட அரிப்பு, எரிச்சல் போன்றவை இருப்பதாக நினைத்தால் இருப்படு போலவே தென்படும்

அதாவது பூஜையின்போது குரங்கை நினைக்காதே என்று சொன்னால் அதுதான் நினைவுக்கு வரும் அல்லவா அதுபோல. பல நாட்டுவைத்தியர்களும் மருந்தைச் சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே என்று சொல்வதுண்டு.

அரிப்பு போல எரிச்சல் போல இருக்கும் நிகழ்வுகளுக்கு இதுபோன்ற மாமன் மகளின் சிறுநிரைத் தடவுதல் என்பதில் உள்ளூர வெறுத்து அரிப்பே இல்லை என்ற உள்மனநிலை எடுக்கப் பட்டு அரிப்பு குணமடைந்துவிடும். மற்ற தீவிர வகை எரிச்சல் அரிப்பு போன்றவை இவ்வாறு குணமடைவது இல்லை..

===================================================================
ஒரு அடி குழல் ஒன்று

ஒரு நுனி நோயாளியின் வாயை ஒட்டி,  மறுநுணி கிராமத்து ஹீரோவின் வாயில்  சில மந்திரங்கள் ஒரு உறுஞ்சு

குழாயிலிரூந்து தக்காளித் தோல் முதல்  குரங்கு குடல் வரை ஏதாவது வரும். அதன் காரணமாகவே வயிற்று வலி , இனிமேல் வயிற்று வலி இருக்காது என்று உறுதி கொடுக்கப் பட்டு அனுப்பப் படுவார்.

அறிவியல் பிண்ணனி:  உணவுக்குழலில் தொடர்ச்சியாக இடம் பெற்றிருப்பது இரைப்பை.  இரைப்பையிலிருந்து ஒரு பொருள் திரும்பவும் உணவுக்குழாய்க்கு வர மிகக் கடுமையான அழுத்தம் இரைப்பையிலிருந்து கொடுக்கப் பட வேண்டும். உதட்டை ஒட்டி லேசாக உறிஞ்சினால் எதுவும் வர இயலாது.  இது  முழுக்க முழுக்க நடைமுறையில் சாத்தியமில்லாதது.  ஆனால் எப்படி எடுக்கிறார்கள் என்பது அறிய வேண்டுமானால் முப்பது நாட்களில் மேஜிக் புத்தகம் வாங்கிப் படியுங்கள். அந்த அரிய பொக்கிஷம் அனைத்து மாரியம்மன் கோவில் திருவிழாக்களிலும் பொருட்காட்சிகளிலும் கிடைக்கும்.

நோயாளி குணமடைய காரணம்.: பொதுவாக வயிற்று வலிக்கு நோய் தொற்றும் வயிற்றுப் புண் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. திரவ ஆகாரமும் சில நாள் உணவுக் கட்டுப் பாடும் இது போன்ற வியாதிகளிலிருந்து விடுதலை அளிக்கக் கூடும்.


இதுவே எம்பிபிஸ் மருத்துவர் என்றால் அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப் படும் வியாதிகள் அல்லது தொடர்சிகிச்சை செய்யும் வியாதிகள் இல்லை என்பதை  முதலிலேயே உறுதி படுத்தும் கடமை இருக்கிறது. ( நகர் பகுதியில் முதலிலேயே சொல்லவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றம் செல்லும் காட்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. கிராமத்தில் கட்டைப் பஞ்சாயத்து ).

எனவே  அவர் சில நாள் மருத்துவ சிகிச்சையில் கட்டுப்படவில்லை என்றால் அவர் ஸ்கேன் முதலான பரிசோதனைகள் செய்யச் சொல்வார். கிராம வாசிக்கு அலைச்சலும், பணச் செலவும் ஏற்படுத்தும்.

அதே குழல் வைத்தியருக்கு அவரது வைத்தியமுறை பலிக்கவில்லை என்றால் பெரிய இக்கட்டு ஏதும் ஏற்படாது.

================================================================


இந்த இடுகை புரியவில்லை என்றால்

மருத்துவருக்கு வேட்டு வைப்பது எப்படி?

 கிராமங்களுக்குச் செல்ல மருத்துவர்களுக்கு என்ன பயம்?

 

இடுகைகளை படித்துவிடுங்கள்


தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்

இதன் அடுத்த பகுதி விரைவில் வெளிவரும்.

9 comments:

தாராபுரத்தான் February 19, 2010 at 6:51 AM  

என்ன சொல்லதுன்னே தெரியிலேங்க டாக்டர்...நல்ல கல்வி ஒன்றே எங்களுக்கு முக்கியம்.அதுசரி தாயத்து எங்க கிடைக்கும்.

Jo February 19, 2010 at 9:53 AM  

continue pannunganga doctor :)

cheena (சீனா) February 19, 2010 at 10:06 AM  

அன்பின் சுரேஷ்

பரவால்ல - படிச்சுட்டேன் - இவ்வளவு விபரமாக வித்தியாசங்களைப் புட்டுப் புட்டு இதுவரை யாரும் வைக்க வில்லை

நல்வாழ்த்துகள்

thenammailakshmanan February 20, 2010 at 1:08 AM  

நல்ல இடுகை மருத்துவருக்கும் இவ்வளவு பிரச்சனை இருக்கா சுரேஷ்

Madurai Saravanan February 20, 2010 at 8:35 PM  

nalla maruththuva sikichchai. purinthavarkalukku puriyattum.

seenu March 11, 2010 at 8:49 AM  

very useful website
thank you
by G.SRINIVASAN

Barari March 21, 2010 at 3:48 AM  

நீங்கள் கூறுவது கிராம வைத்திய முறை அல்ல இது கிராம பூசாரி செய்வது.உங்கள் ஆங்கில வைத்தியததில் பக்க விளைவு (வேறொரு நோயை உருவக்குதல்)இல்லாத மருந்து ஏதாவது உண்டா சார்?

SUREஷ் (பழனியிலிருந்து) March 21, 2010 at 11:22 AM  

//ஆங்கில வைத்தியததில் பக்க விளைவு (வேறொரு நோயை உருவக்குதல்)இல்லாத மருந்து ஏதாவது உண்டா சார்?//

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. இந்த வார்த்தைகள் எல்லா மருத்துவமுறைக்கும் பொருந்தும்.

குடிநீரைக்கூட அளவுக்கு மீறிக் குடித்தால் தலைவலி வரும். இது அனைவரும் அறிந்த ஒன்று.

அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையின் பிற அலுவலர்களுக்கு உதவக்கூடிய தளங்களின் செய்தியோடைகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன

Target Your PG Seat

Target PG Google Group

டாக்டர்கள் தகவல் இணையம்...

Medical, Legal, Medicolegal Information for Doctors and Lawyers

MCQsOnline - Online Collection of MCQs of Medical PG Entrance Exams

After MBBS

TNGDA Library

Tamil Nadu Government Doctors Association (TNGDA) Helpline

Doctors' Association for Social Equality

  © Blogger template Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP