ஆங்கிலம் தெரிந்தவர்கள் உதவிக்கு வாருங்கள் please
அகில இந்திய மருத்துவ மேல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் தங்கள் விருப்ப இடங்களை தேர்வு செய்ய கலந்தாய்வு 23ம் தேதி ஆரம்பிக்கிறது.
அதற்கான கால அட்டவணை கொடுத்து இருக்கிறார்கள்.
கால அட்டவணை காண இங்கே செல்லுங்கள்.
அதில் சில குறிப்புகள் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்கள்..
- SC/ST/PH candidates should report 3 counseling days in advance of their scheduled date of
- If SC, ST & PH candidates fail to report in advance, he/she will be marked absent and will not be considered for the counseling even on the specified date as mentioned in the counseling schedule.
இவ்வாறு சில நாட்களுக்கு முன்பே வந்திருந்து தனது வருகையை உறுதி படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
பிறகு ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?
PH மாணவர்களுக்கும் இந்த நிபந்தனை ஏனோ..,?
இந்த நடைமுறை துவக்கம் எப்படி, எவ்வாறு ஆரம்பித்தது என்பதை தெரிந்த யாராவது சொல்லுங்கள். அடிப்படைக் காரணம் இருந்தால் சொல்லுங்களேன்.
இது நுழைவுத்தேர்வு என்பதால் அனைத்து துறைகளுக்கும் இப்படித்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.
தமிழீஷில் வாக்களிக்க இங்கு அழுத்துங்கள்
4 comments:
இதற்கு பதிலளிக்க சரியானவர் டாக்டர் புருணோதான்.
ss enakum theriyala SURESH
சுரேஷ்
அந்த நுழைவுத்தேர்வில் கடைபிடிக்கப்படும் இடப்பங்கீடு ஒரு மோசடி முறை
அதாவது 68.5 சதம் இடங்களை முற்படுத்தப்பட்டவர்களுக்கு இடப்பங்கீடு செய்துள்ளார்கள்
அதை மறைப்பதற்கு இப்படி மேலும் ஒரு மோசடி விதி
இது குறித்து சென்ற ஆண்டே எழுதியிருந்தேன்
--
அதாவது 3200 புள்ளி முறைப் பட்டியல் முறை யில் நடத்துகிறார்கள்
அப்படி வரும் போது ஒரு அட்டவனை பிரிவு மாணவனோ அல்லது பழங்குடியின மாணவனோ வரவில்லை என்றால் அந்த இடத்தை நிரப்ப, அதற்கு அடுத்த இடத்தில் உள்ள மாணவனை தயாராக இருக்க சொல்கிறார்கள்.
---
அதாவது உங்களிடம் இருந்து பாலை திருடிக்கொண்டு உங்களுக்கு தண்ணீர் தருவது போல்
---
இது குறித்து ஒரு இடுகைத்தொடர் எழுத ஆரம்பித்தேன்
http://www.payanangal.in/2008/03/blog-post_8124.html
பாதியில் நிற்கிறது
http://www.payanangal.in/2008/03/blog-post_22.html
விரைவில் முடிக்க முயல்கிறேன் :) :)
//இது நுழைவுத்தேர்வு என்பதால் அனைத்து துறைகளுக்கும் இப்படித்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.
//
ஹி ஹி ஹி
அந்த பயம் எல்லாம் வேண்டாம்
உதாரணமாக தமிழக அரசு 69 % இட பங்கீடு வழங்கி வருகிறது. இதில் எந்த குழப்பமும் இல்லை தான். ஆனால்
1. ஒருவர் 12ஆவது வகுப்பு முடித்து தமிழக அரசு மருத்துவக்கல்லூரியில் சேரும் போது இந்த 69 சதவிகிதம் அளிக்கப்படும் முறை வேறு
2. அவர் மருத்துவக்கல்லூரி முடித்து தமிழக அரசு மருத்துவக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு (எம்.டி, எம்.எஸ்) சேரும் பொழுது இதே 69 சதவிகிதம் அளிக்கப்படும் முறை வேறு
3. அவர் மருத்துவக்கல்லூரி முடித்து தமிழக அரசு வேலையில் சேரும் பொழுது இதே 69 சதவிகிதம் அளிக்கப்படும் முறை வேறு
என்று கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் !!!
ஆனால் அது தான் உண்மை.
மேலும் விபரங்களுக்கு http://www.payanangal.in/2008/03/blog-post_8124.html
--
மத்திய தேர்வாணயம் 22.5 + 27 சதம் இடப்பங்கீடு வழங்குகிறது
--
ஏய்ம்சோ முற்பட்டவர்களுக்கு 68.5 சதம் இடப்பங்கீடு வழங்குகிறது.
வேனுகோபாலுக்கும் அன்புமணிக்கு பிரச்சனை வந்ததில் இந்த விஷயமும் ஒரு காரணம்
Post a Comment