குழந்தையும் குலதெய்வமும்
குழந்தைபிறந்த உடன் தாயின் அருகில் குழந்தையை கிடத்திவிட்டு செவிலியர் அடுத்த பிணியாளரை பார்க்கப் போன சைக்கிள் சந்தில் நடந்த கதை.
ஐந்து நிமிடம் கழித்து வந்த செவிலியர் தாயை பரிசோதித்தார். அடுத்து சேயை.............. ஐயோ, சேயைக்காணவில்லை.
செய்தி பரபரப்பானது. ஒரு கிராமத்தில், ஆஸ்பத்திரியில் அதுவும் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை காணவில்லை என்றால் நினைத்துப்பாருங்கள். அபூர்வ சகோதரர்கள் மனோரமா ஆச்சியிலிருந்து சூரிய வம்சம் சரத்குமார் வரை அனைவரும் ஆஜர்.
பலபல வதந்திகள். ஆஸ்பத்திரி ஊழியர் விற்றுவிட்டார் என்று ஒரு கூட்டம். பில்லி சூனியக் காரர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர் என்று ஒரு கூட்டம்.ஆண்குழந்தை அல்லவா! பங்காளிகள் சண்டையாம்.
அ.ஆ.சு.நி.ஊழியர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கின்றார்கள். போலிசுக்கு தகவல் சென்றது. விசாரணையும் தொடர்ந்தது.
இப்போது பரபரப்பு பரபரபரபரப்பானது. குழந்தையின் தாத்தா பேச ஆரம்பித்தார். மாப்பிள்ளை வந்திட்டாரா அவர கூப்பிடுங்கப்பா, எங்க போனார் இந்த நேரத்தில. மாப்பிள்ளை(குழந்தையின் தந்தை)யின் நண்பர்களுக்கு தகவல் போனது.
சல்லடை போட்டு தேட ஆரம்பித்து கூட்டி வந்தனர்.
அவர் வந்தார் அவருடைய குழந்தையோடு.. முழு போதையில் இருந்த அவர் கூறினார். வாரிசு வந்திரிச்சில்ல..... குலதெய்வம் கோவிலுக்குப் போய்ட்டு வந்தோம்..............................பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு

உள்கட்டமைப்புகளை முழுசா மாத்தி அமைக்குற வேலையை ஆரம்பிச்சோம். இதைப் பாத்துட்டு, 'சூப்பர்'னு பாராட்டுன பொது சுகாதாரத் துறை உயரதிகாரிங்க, தேவையான அளவுக்கு பணம் ஒதுக்கீடு பண்ணினாங்க.
கொடுத்திருக்காங்கன்னா பாருங்களேன். அதோட மதிப்பு மட்டும் 14 லட்சம் ரூபாய். இந்த மாதிரி நல்லவங்க உதவியும் சேர்ந்திருப்பதால்தான், தரமான சிகிச்சையை ஏழைகளுக்கும் கொடுக்க முடியுது.